Latest Updates
-
பச்சை பயறு தேங்காய்ப்பால் அரிசி கஞ்சி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
நவம்பர் 06, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஅழுத்தம் நிறைந்த துயரமான நாளாக இருக்குமாம் -
தீபாவளிக்கு பின் நடக்கும் சூரிய பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறாங்க.. -
தீபாவளிக்கு பின் நிகழும் சுக்கிர பெயர்ச்சியால் உச்சத்தைத் தொடப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தீபாவளிக்கு இப்படி மசாலா அரைச்சு மட்டன் குழம்பு வையுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
1/4 கப் இஞ்சியும், தேங்காயும் வைச்சு இந்த வித்தியாசமான சட்னி அரைச்சு பாருங்க -இட்லி, தோசைக்கு டக்கரா இருக்கும் -
தீபாவளி அன்று பளபளன்னு ஜொலிக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்குளை போடுங்க.. -
இராவணனுக்கு தங்க நகரமான இலங்கை எப்படி கிடைத்தது? அதை இராவணனுக்கு கொடுத்தது யார் தெரியுமா? -
நாளைக்கு மறந்தும் இந்த பொருட்களை யாருக்கும் கொடுக்காதீங்க.. இல்ல வறுமை வாட்டி எடுத்துடும்! -
1 கப் பொட்டுக்கடலை இருந்தா தீபாவளிக்கு இந்த புது ஸ்வீட்டை செய்யுங்க - டேஸ்ட் அதிரிபுதிரியா இருக்கும்
தைராய்டு பிரச்சினைனால வெயிட் போடுதா? இந்த 4 விஷயத்த மட்டும் செய்ங்க... தானா குறைஞ்சிடும்
தைராய்டு இருப்பதானால் எடை அதிகரிப்பதை எப்படி எளிய பழக்கங்கள் வழியாக குறைக்கலாம் என்பது பற்றி இங்கு விளக்கப்பட்டுள்ளது. அதுபற்றிய ஒரு தொகுப்பு தான் இது. படித்துப் பார்த்து பயன்பெறுங்கள்.
கழுத்துப் பகுதியில் உள்ள இந்த தைராய்டு சுரப்பி தான் நமது உடல் செயல்பாடுகளுக்கு பெரிதும் உதவுகிறது. உடலின் வளர்சிதை மாற்றங்களுக்கும் உடலின் சத்துக்களைச் சீராக வைக்கவும் இது உதவுகிறது. உலகம் முழுவதும் 20 கோடிக்கு மேற்பட்ட மக்கள் இந்த தைராய்டு சுரப்பியால் பாதிப்படைந்துள்ளனர்.

தைராய்டு வகைகள்
இந்த தைராய்டு பிரச்சினை இரண்டு வகைப்படும். 1. ஹைப்போ தைராய்டு 2. ஹைப்பர் தைராய்டு என்று அழைக்கப்படுகிறது. இதில் ஹைப்போ தைராய்டிசத்தால் பாதிக்கப்பட்ட நபர்களின் உடல் எடை அதிகரிக்க ஆரம்பித்து விடும். இதற்கு காரணம் போதுமான தைராய்டு சுரப்பி சுரக்கப்படாதது தான் காரணம். எனவே ஹைப்போ தைராய்டிசம் கொண்ட நபர்கள் உடல் எடையை குறைக்க சில இயற்கை வழிகளை பின்பற்றி வரலாம். இந்த முறைகள் உங்கள் உடல் எடையை கட்டுக்குள் வைக்க உதவியாக இருக்கும்.

மருந்துகளை ஒழுங்காக சாப்பிடுங்கள்
மருத்துவரை அணுகி தைராய்டு செயல்பாடு சீராக இருக்க சிகச்சை பெற்றுக் கொள்ளுங்கள். மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகள் உங்களுக்கு உதவியாக இருக்கும். சரியான அளவில் நேர நேரத்துக்கு மருந்துகளை சாப்பிட்டு வந்தாலே போதும் தைராய்டு ஹார்மோன் சுரப்பு கட்டுக்குள் வந்து விடும்.

க்ளூட்டன் ப்ரீ உணவுகள்
நிறைய ஆராய்ச்சிகளின் படி க்ளூட்டன் வகை உணவுகள் தைராய்டு பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது. எனவே ஹைப்போ தைராய்டிசம் உள்ளவர்கள் கோதுமை போன்ற க்ளூட்டன் உணவுகளை தவிர்ப்பது நல்லது.

தண்ணீர் குடியுங்கள்
உடம்பில் நீர்ச்சத்துடன் இருப்பது மிகவும் முக்கியம். இதுவும் உங்கள் உடல் எடையை குறைக்க பெரிதும் பயன்படுகிறது. தண்ணீர் உங்கள் உடல் மெட்டா பாலிசத்தை அதிகரித்து உடல் எடையை குறைக்க உதவுகிறது. பசியை குறைத்து சீரண சக்தியை அதிகரிக்கிறது. உடம்பில் உள்ள நச்சுக்களையும் வெளியேற்றி விடும். சரும ஆரோக்கியத்திற்கும் போதுமான ஈரப்பதத்தை கொடுக்கும். எனவே முடிந்த வரை நிறைய தண்ணீர் குடியுங்கள்.

உடற்பயிற்சி
உணவுப் பழக்கம் மட்டும் உங்கள் உடல் எடையை குறைக்காது. அதனுடன் சேர்த்து உடற்பயிற்சியும் செய்யும் போது உடல் எடை வெகுவாக குறைய வாய்ப்புள்ளது. தினசரி உடற்பயிற்சிகள் உங்கள் மெட்டா பாலிசத்தை அதிகரித்து தேவையற்ற கொழுப்புகளை கரைக்கிறது. இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைத்து உடல் எடையை சீராக வைக்கிறது. உடற்பயிற்சி செய்யும் போது நாள் முழுவதும் உற்சாகமாக இருக்கலாம்.

கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிடுங்கள்
உணவை பிரித்து வைத்துக் கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிடுங்கள். 3 வேளையாக சாப்பிடாமல் 5 வேளையாக சாப்பிடுங்கள். ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஆரோக்கியமான உணவை எடுப்பதும் அவசியம். அதிகமாக இனிப்பை எடுக்காதீர்கள்.
பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்த்து ஆரோக்கியமான கொழுப்பு மற்றும் குறைந்த கார்போஹைட்ரேட் உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். பழங்கள் மற்றும் காய்கறிகளை சேர்த்து வாருங்கள்.
மேற்கண்ட எளிய முறைகள் உங்கள் உடல் எடையை குறைக்க உதவியாக இருக்கும் என நாங்கள் நம்புகிறோம்.



Click it and Unblock the Notifications
