For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வெறும் வயிற்றில் சூடான எலுமிச்சை சாறுடன் தேங்காய் எண்ணெய் சேர்த்து குடிங்க... ஏன் தெரியுமா?

காலையில் எழுந்ததும் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை மற்றும் தேங்காய் எண்ணெயை கலந்து குடிப்பதால் என்ன மாற்றங்கள் உண்டாகின்றன என்பது பற்றி இங்கே விளக்கியுள்ளோம்.

By Mahi Bala
|

காலையில் தூங்கி எழுந்ததும் பல் துலக்கியோ துலக்காமலோ ஸ்ட்ராங்கான ஒரு கப் காபி குடித்தால் தான் அன்றைய நாளே சுபமாகத் தொடங்கும்.

what are the benefits of warm lemon juice with coconut oil in empty stomach

ஆனால் உண்மை என்ன தெரியுமா? காலையில் எழுந்ததும் சுடசுட காபி குடிப்பதை நிறுத்தினால் தான் உங்களுக்கு அந்த நாள் நல்ல நாளாக இருக்க முடியும். ஏன் இப்படி சொ்லறேன்னு புரியலையா? இந்த கட்டுரையை முழுசா படிங்க புரியும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
காலை பானம்

காலை பானம்

டீ, காபி குடிக்கக்கூடாது. அப்போ காலையில் எழுந்ததும் இரவு உணவுக்குப் பின் நீண்ட இடைவெளியாகிவிடும். காலை உணவுக்கு முன்பே பசிக்க ஆரம்பித்துவிடும். அதைவிட சூடாக ஏதாவது குடித்தால் தானே தூக்க கலக்கம் போகும் என்பது தானே உங்களுடைய கவலை. உங்கள் கவலையைத் தீர்க்க எங்களிடம் மருந்து இருக்கு.

தேங்காய் எண்ணெயும் எலுமிச்சையும்

தேங்காய் எண்ணெயும் எலுமிச்சையும்

பொதுவாக டயட்டில் இருக்கும் சிலருக்கு காலை எழுந்ததும் வெந்நீர் குடிக்கும் பழக்கம் இருக்கும். எடையைக் குறைக்க நினைக்க சிலர் வெந்நீரில் தேன் சேர்த்துக் குடிப்பார்கள். சிலரோ வெந்நீரில் எலுமிச்சை சாறும் உப்பும் கலந்து குடிப்பார்கள்.

அதேபோல் தான் இப்போது நாம் சொல்லுகின்ற பானமும். இது ஒரு சூடான பானம் தான். வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறினைப் பிழிந்து கொண்டு, அதில் 2 ஸ்பூன் சுத்தமான தேங்காய் எண்ணெய் கலந்து குடித்து வேண்டும். ஏன் அப்படி குடிக்க வேண்டும் என்று தெரிந்து கொள்வோமா? அப்படி குடிப்பதால் உடலில் என்ன மாதிரியான மாற்றங்கள் உண்டாகும் என்று பார்ப்போம்.

என்ன நடக்கும்?

என்ன நடக்கும்?

வெதுதெவதுப்பான தண்ணீர், எலுமிச்சை சாறு வரைக்கும் ஓகே. அதென்னடா தேங்காய் எண்ணெய் ? இப்படியொரு காமினேஷனா, இதை யாராவது குடிப்பாங்களா அப்படின்னு யோசிச்சீங்கன்னா நஷ்டம் உங்களுக்குத் தான். ஆம். இந்த பானத்தை காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், உடல் எடை குறைவதோடு உடலை நீர்த்தன்மையோடு வைத்திருக்கவும் செய்யும். ஜீரண சக்தியை அதிகரிக்கும். வைட்டமின் சி யை முழுமையாக உடலுக்கு எடுத்துச் செல்லும். உடல் மற்றும் மனம் இரண்டின் ஆற்றலையும் அதிகரிக்கச் செய்யும்.

கொழுப்பை கரைக்கும்

கொழுப்பை கரைக்கும்

வெதுவெதுப்பாக நீர், எலுமிச்சை பழம், தேங்காய் எண்ணெய் ஆகிய மூன்றுமே தனித்தனியே உடலில் உள்ள கொழுப்புக்களை கரைக்கும் ஆற்றல் கொண்டவை தான். இவை மூன்றையும் ஒருசேர சேர்த்துக் குடித்தால் பலன் பலமடங்கு அதிகரிக்கும். இந்த பானத்தில் உள்ள தண்ணீர் நம்முடைய உடலை ஈரப்பதமாக வைத்துக் கொள்கிறது. உடலில் தண்ணீரின் அளவு குறைவாக இருக்கும்பொழுது தான் உடலில் தேவையில்லாத கொழுப்புக்கள் சேர ஆரம்பிக்கின்றன.

மெட்டபாலிசம்

மெட்டபாலிசம்

இந்த பானம் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கச் செய்கிறது. உடலில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுகிறபொழுது, சிறுநீரகம் தனக்கு துணையாக கல்லீரலின் உதவியை நாடும். இதனால் கல்லீரல் ஆற்றல் வீணாகிறது. இந்த பானத்தைக் குடிக்கிற பொழுது, உடலுக்குத் தேவையான நீர்த்தன்மை கிடைப்பதோடு, உடலின் மெட்டபாலிசமும் அதிகரிக்கும். தேங்காய் எண்ணெய்க்கு மெட்டபாலிசத்தைத் தூண்டிவிடும் ஆற்றல் உண்டு.

எப்படி வேலை செய்யும்?

எப்படி வேலை செய்யும்?

உங்களுடைய சிறுநீர் பைகளை எலுமிச்சை சுத்தம் செய்யும். உடலின் ஆற்றலை அதிகரிக்கும்.

ஒரு நாளைக்கு ஒரு முறை இதை எடுத்துக் கொண்டால் உங்களுடைய சிறுநீரகமும் கல்லீரலும் உடலில் உள்ள டாக்சின்களை வெளியேற்றும்.

பொதுவாகவே தேங்காய் எண்ணெய் ஆண்டி பாக்டீரியலாகவும் ஆன்டி வைரல் டானிக்காகவும் ஆன்டி ஃபங்கல் ஏஜெண்ட் நிறைந்திருப்பதால் உடலில் உள்ள தேவையற்ற பாக்டீரியா மற்றும் வைரஸ்களைக் கொல்லும் தன்மை கொண்டதாக இருக்கிறது. அதேபோல் வெளியேறாமல் இருக்கும் மிகக் கடினமான கழிவுகளையும் அகற்றும் ஆற்றல் தேங்காய் எண்ணெய்க்கு உண்டு.

 பயன்கள்

பயன்கள்

எலுமிச்சை உடலுக்குத் தேவையான அதிக அளவு வைட்டமின் சியை கொடுக்கிறது. இது நோயெதிர்ப்பு சக்தியையும் ஜீரண சக்தியையும் அதிகரிக்கச் செய்யும்.

தேங்காய் எண்ணெய் நாம் சாப்பிடும் உணவில் உள்ள வைட்டமின் சியை உறிஞ்சி, அதை எரிபொருளாக மாற்றி, கீட்டோன்களை மூளை உற்பத்தி செய்வதற்காக கடத்தும் பணியைச் செய்கிறது. கீட்டோன்கள் உடலில் உள்ள நல்ல கொழுப்புகளை ஆற்றலாக மாற்றும் வேலையைச் செய்கிறது.

தசைகளின் வலிமை

தசைகளின் வலிமை

தேங்காய் எண்ணெய் உடலுக்கும் தசைகளுக்கும் வலிமையைத் தருகிறது. ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெயை காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், உடல் எடை குறையும். குறிப்பாக ஜிம்முக்கு செல்பவர்கள் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெயைக் குடித்துவிட்டுச் சென்றால், கடினமான பயிற்சிகளையும் இலகுவாய் செய்ய ஆற்றல் கிடைக்கும்.

நினைவாற்றல்

நினைவாற்றல்

காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் தேங்காய் எண்ணெய் குடித்து வந்தால், அது மூளை வளர்ச்சியைத் தூண்டும். நினைவாற்றலை அதிகரிக்கச் செய்யும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

what are the benefits of warm lemon juice with coconut oil in empty stomach

here we are discussing about the benefits of warm lemon juice with coconut oil in empty stomach
Story first published: Thursday, October 18, 2018, 9:49 [IST]
Desktop Bottom Promotion