Latest Updates
-
18 மாதங்களுக்கு பின் நடக்கப்போகும் ராகு-கேது பெயர்ச்சியால் ராஜயோகம் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
சரவணபவன் நெய் மணக்கும் வெண் பொங்கல் ரெசிபி - ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் அசத்தலா இருக்கும் -
இந்த 4 மாதங்களில் பிறந்தவர்களிடம் நல்ல குணங்களை விட கெட்ட குணங்கள்தான் அதிகமாக இருக்குமாம் -
5 முட்டை இருந்தா பள்ளிப்பாளையம் முட்டை வறுவலை செஞ்சு பாருங்க - காரசாரமா வேற லெவலில் இருக்கும் -
மயில்கள் ஏன் மழை வரும்போது நடனமாடுகிறது தெரியுமா? காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
சிக்கன் வாங்குனா இந்த மாதிரி தெலங்கானா ஸ்டைலில் மசாலா செஞ்சு பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமாக இருக்கும் -
குருபகவான்-செவ்வாய் அரிய சேர்க்கையால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தென்னிந்தியாவின் சுல்தான் என்று அழைக்கப்பட்ட வலிமையான அரசர் யார் தெரியுமா? -
மட்டன் வாங்குனா.. இப்படி ஒருவாட்டி கிராமத்து ஸ்டைலில் செஞ்சு சாப்பிடுங்க.. தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 21 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப சந்தோஷமான நாளாக இருக்குமாம்
ஆச்சரியமூட்டும் நாக்கை பற்றிய அதிர்ச்சி தகவல்கள்
உணவு உண்பதிலிருந்து பேசுவது வரை அனைத்திற்கும் முக்கியத்தேவை நாக்குதான். ஆனால் நாக்கை பற்றி நமக்கு முழுமையாக தெரியவில்லை. நமது ஆரோக்கியத்தின் அடையாளமாக இருப்பதே நாக்குதான்.
மனித உடல் என்பது அற்புதங்கள் நிறைந்ததாகும். மனிதர்களுக்கு வாழ்வில் உணவும், பேச்சும் மிக முக்கியமானவை. இந்த இரண்டிற்குமே முக்கிய தேவை நாக்குதான். நாக்கு மட்டும் இல்லையெனில் நம்மால் பேசவும் இயலாது, உணவின் சுவையை உணரவும் இயலாது. ஏன் நாக்கு இல்லையெனில் மூச்சு விடுவது கூட சிரமம்தான். மனிதர்களுக்கு இவ்வளவு முக்கியமான நாக்கை பற்றி நாம் எவ்வளவு தெரிந்து வைத்துள்ளோம்.

நாக்கை பற்றி நாம் தெரிந்து வைத்துக்கொள்வது மிகவும் அவசியம் ஏனெனில் பல நோய்களின் அறிகுறிகள் முதலில் நாக்கில்தான் தெரிய ஆரம்பிக்கும். நாக்கில் சிறிய மாற்றம் தெரிந்தாலும் மருத்துவரை உடனடியாக அணுகுவது நல்லது. இங்கே நமக்கு அத்தியாவசியமான நாக்கை பற்றி நமக்கு தெரியாத சில சுவாரஸ்ய தகவல்களை பார்க்கலாம்.

நாக்கின் நீளம்
நாக்கு நமது கண்ணிற்கு தெரிவது மட்டுமில்லை. தொண்டையின் இறுதிவரை நாக்கு இருக்கும். ஒரு ஆணின் நாக்கானது 8.5 செமீ அளவு வரை வளரும். பெண்ணின் நாக்கு 7.9 செமீ வரை வளரும். ஆனால் தற்போது உலகின் நீளமான நாக்கிற்கான கின்னஸ் சாதனையாக கருதப்படுவது 10.1 செமீ ஆகும். இந்த அசுர நாக்கிற்கு சொந்தக்காரர் அமெரிக்காவை சேர்ந்த நிக் ஸ்டாபெர்ல். இதழ்களுக்கு வெளியே தெரியும் இவருடைய நாக்கின் நீளம் சாதாரண மனிதர்களை காட்டிலும் மிகவும் நீளமானதாகும்.

சுவை மொட்டுகள்
நமது நாக்கில் 2000 முதல் 4000 வரை சுவைமொட்டுகள் இருக்கின்றன. இந்த சுவை மொட்டுகளில் உள்ள சுவையை உணரக்கூடிய செல்கள் ஒவ்வொரு வாரமும் அழிந்து மீண்டும் புதிய செல்கள் உருவாகின்றன. "நாக்கு செத்துபோச்சுனு" சொல்றது உண்மைதான் போல. மக்கள்தொகையில் நான்கில் ஒரு பங்கினர் "சூப்பர்டேஸ்ட்டர்ஸ்" களாக இருக்கிறார்கள் அதாவது இவர்கள் நாக்கில் கிட்டத்தட்ட 10000 சுவைமொட்டுகள் இருக்கும். சிலர் "நான்டேஸ்ட்டர்ஸ்" என்று அளிக்கப்படுகிறார்கள், காரணம் அவர்கள் நாக்கில் சராசரியை விட குறைவான சுவை மொட்டுகளே இருக்கும். பெரும்பாலும் இவர்களால் கசப்பு சுவையை உணர முடியாது. நீங்க சூப்பர்டேஸ்ட்டர்ஸா இல்ல நான்டேஸ்ட்டர்சானு நீங்களே சோதிச்சு பாருங்க.

சுவை மொட்டுக்களை பார்க்க முடியாது
சுவை மொட்டுகளை வெறும் கண்களால் பார்க்க இயலாது. உங்கள் நாக்கில் நீங்கள் பார்க்கும் பிங்க் மற்றும் வெள்ளை நிற சுரப்பிகள் சுவை மொட்டுக்கள் அல்ல அவரை பாபில் என்று அழைக்கப்படும். இந்த பாபில்களில் தான் சுவையை உணரக்கூடிய சென்சார்கள் இருக்கும். அதன் திசுக்களில் சராசரியாக ஆறு சுவைகளை உணரும் சுவைமொட்டுகள் இருக்கின்றன. இந்த திசுக்களில் பாபில் திசுக்களில் மூன்று வகை இருக்கிறது, ஃபங்கிபார்ம், சர்கம்வேலட் மற்றும் ஃபோலியேட். இதில் ஃபங்கிபார்ம் தவிர மீதி இரண்டையும் வெறும் கண்களால் பார்க்கலாம். அவை இரண்டும் நாக்கு தொண்டையுடன் இணையும் இடத்திற்கு அருகில் இருக்கும்.

மாறுபட்ட சுவைகளை உணர முடியாது
நமது நாக்கில் நான்கு சுவை மண்டலங்கள் இருப்பதாக கேள்விப்பட்டிருப்போம். அவை இனிப்பு, புளிப்பு, உவர்ப்பு மற்றும் கசப்பு. ஆனால் இது உண்மையல்ல. ஐந்தாவதாக ஒரு சுவை உள்ளது அதுதான் காரச்சுவை. இந்த ஐந்து சுவைகளுமே நாக்கின் முழுவதும் உணரப்படும். நாக்கின் மையப்பகுதியை காட்டிலும் பக்கவாட்டு பகுதிகள் அதிக உணர்ச்சி வாய்ந்தவை, நாக்கின் பின்புறமானது கசப்பு சுவைகளை பெரிதும் உணரும்.

வலுவானது அல்ல
நாக்குதான் உடலின் மிக வலிமையான தசை என்ற பொய்யான கருத்து நிலவி வருகிறது. உண்மையில் சொல்லப்போனால் நாக்கு என்பது ஒரு தசை மட்டுமல்ல, அது எட்டு தசைகள் இணைந்த தொகுப்பாகும். இந்த தசைகளுக்கு இடையே உள்ள பிணைப்புதான் நாக்கை நெகிழ்வுத்தன்மையுடன் வைத்திருக்கிறது. இது திசுக்களின் கூட்டிணைவு எனப்படுகிறது. மனித உடலிலேயே சுயமாக செயல்பட கூடிய தசை நாக்குதான். நாக்கிற்கு இருக்கும் ஆற்றலானது உடலில் உள்ள வேறு எந்த தசைக்கும் இல்லை, உங்களால் இடைவேளையின்றி பேசவோ, சாப்பிடவோ இயலும். நாக்கிற்கு சோர்வென்ற சொல்லே கிடையாது.

சுவை மொட்டுகள் நம்மை பாதுகாக்கும்
சுவை மொட்டுகள்தான் நம்மை சிறந்த மனிதர்களாக மாற்றுகிறது. ஆரம்பத்தில் சுவை மொட்டுகள் உணவின் சுவையை அறிய உதவியது, பொதுவாக கசப்பு மற்றும் உவர்ப்பு சுவை விஷம் மற்றும் கெட்டுப்போன உணவுகளுடையதாக இருக்கும். நமது நாக்கின் பின்புறம் இந்த சுவைகளை உணரும்போது உடனடியாக நமக்கு எச்சரிக்கை மணி அடிக்கும், நாமும் அதனை விழுங்காமல் துப்பிவிடுவோம். இனிப்பு மற்றும் உப்பு சுவை அதிக ஊட்டச்சத்துக்கள் நிறைந்ததாக அறியப்படுகிறது.

தனித்துவமானது
ஒவ்வொருவரின் நாக்கும் தனித்தன்மை வாய்ந்தது, அதாவது நம்முடைய கைரேகை போல நமது நாக்கும் தனித்துவமானது, நம்மை போல வேறு யாருக்கும் இருக்காது. இப்போது கைரேகையை பாதுகாப்பிற்கு உபயோகப்படுத்துவது போல விரைவில் நாக்கையும் பாதுகாப்பிற்காக பயன்படுத்த தொடங்கலாம். ஆராய்ச்சியாளர்கள் அந்த முயற்சியில் ஏற்கனவே இறங்கி விட்டனர். கைரேகையை விட இது அதிக பாதுகாப்பானது.

ஆரோக்கியத்தின் அறிகுறி
நமது ஆரோக்கியத்தின் அடையாளமாக விளங்குவது நாக்குதான். ஆரோக்கியமான நாக்கு என்பது பிங்க் நிறத்தில் இருக்கும். அடர் சிவப்பு நிற நாக்கு போலிக் அமிலம் அல்லது பி12 குறைபாடு, ஸ்கார்லெட் காய்ச்சல் போன்றவற்றின் அறிகுறிகளாக இருக்கலாம். நாக்கின் மேற்புறத்தில் வெள்ளையாய் இருப்பது லுகோபிலக்கியாவின் அறிகுறியாக இருக்கலாம். கருப்பு நிறம் பாக்டீரிய தொற்றை குறிக்கும். வலிமிகுந்த கொப்புளங்கள் புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம்.

நாக்கின் எடை
மனிதர்களை போலவே நாக்கின் எடையும் அதிகரிக்க கூடும். இரண்டு எடை அதிகரிப்புமே ஆரோக்கிய குறைவின் அறிகுறிதான். நாக்கின் கொழுப்பு அளவு அதிகரிப்பது தூக்கத்தில் ஏற்படக்கூடிய கடுமையான நோயின் அறிகுறியாகும். இது தூங்கும்போது மூச்சு திணறலை ஏற்படுத்தி உயிரையே பறிக்கக்கூடும்.



Click it and Unblock the Notifications