Latest Updates
-
இந்த 5 உணவுகள் உங்கள் உடலில் துர்நாற்றத்தை ஏற்படுத்தி சங்கடமாக உணர வைக்குமாம் - பார்த்து சாப்பிடுங்க -
வாஸ்து செடிகள்: கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுவது எப்படி? -
சிக்கன் பிரியாணியை விட சூப்பரா இருக்கும் ஆம்பூர் ஸ்டைல் சோயா பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
சனிபகவானின் வக்ர பெயர்ச்சியால் 138 நாட்களுக்கு ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சீதா நவமி: உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களைச் செய்தா பணமழை கொட்டுமா? அதிர்ஷ்டம் தரும் வாஸ்து ரகசியம்! -
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்.. -
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம் -
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்!
சிக்குன்குனியாவிற்கான எளிய வீட்டு வைத்தியங்கள்
கொசுக்கள் மூலம் பரவும் இந்த காய்ச்சல் சாதாரண காய்ச்சல் போலத்தான் தோன்றும் ஆனால் இதன் பாதிப்புகள் காய்ச்சலை விட பலமடங்கு அதிகமாய் இருக்கும். இந்த சிக்கன்குனியாவை குணப்படுத்த சில எளிய வீட்டு வைத்தியங்க
மழைக்காலம் வந்துவிட்டது. இனி தொடர்ச்சியாக பல தொற்றுநோய்கள் பரவ தொடங்கும். சில ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தையே உலுக்கிய ஒரு நோய் என்றால் அது சிக்குன்குனியாதான். சாதாரண காய்ச்சல் என நினைத்து இதற்கு சரியான சிகிச்சை எடுத்துக்கொள்ளாததால் பல உயிரிழப்புகள் நேர்ந்தது. அதன் பின்னர்தான் இதன் தீவிரத்தை உணர்ந்து நாடு முழுவதும் இதற்கான தடுப்பூசிகளும், மருந்துகளும் விநியோகிப்பட்டது.

கொசுக்கள் மூலம் பரவும் இந்த காய்ச்சல் சாதாரண காய்ச்சல் போலத்தான் தோன்றும் ஆனால் இதன் பாதிப்புகள் காய்ச்சலை விட பலமடங்கு அதிகமாய் இருக்கும். நோயெதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் முறையான சிகிச்சை எடுத்துக்கொள்ளாவிட்டால் மரணம் வரை ஏற்படுத்தக்கூடியது. இந்த சிக்கன்குனியாவை குணப்படுத்த சில எளிய வீட்டு வைத்தியங்கள் உள்ளது. அவை என்னவென்று இங்கு பார்க்கலாம்.

அறிகுறிகள்
காய்ச்சல் இருக்கும்போது கை, கால் மூட்டுகளில் வலியும், வீக்கமும் இருந்தால் அதனை சாதாரண காய்ச்சல் என்று அலட்சியமாக நினைத்து விடாதீர்கள். இந்த அறிகுறிகளுடன் தலைவலியும் அதிகம் இருந்தால் அது நிச்சயம் சிக்குன்குனியாதான். இது பெரும்பாலும் கொசுக்கள் மூலம் பரவினாலும், சிலசமயம் தாய்ப்பால் மூலம் குழந்தைகளுக்கும் பரவக்கூடும். உலகம் முழுவதும் இது பரவி இருந்தாலும் ஆசியாவில் இதன் பாதிப்பு அதிகமாக உள்ளது.

சுற்றுப்புறம்
உங்களுக்கு சிக்குன்குனியா காய்ச்சல் இருந்தால் நீங்கள் முதலில் சோயா வேண்டியது ஓய்வெடுப்பதுதான். முழுமையான ஓய்வே பாதி நோயை விரட்டிவிடும். உங்கள் அறையின் வெப்பநிலையை எப்பொழுதும் சீராக வைத்திருங்கள். அது அதிகரிக்கவோ அல்லது குறைக்கவோ கூடாது. அடிக்கடி சுடுநீர் மசாஜ் செய்துகொள்வது நல்லது. முக்கியமாக ஆல்கஹால் பக்கம் செல்ல நினைக்காதீர்கள், ஏனெனில் அது உடல் சூட்டை குறைப்பதுடன் பாதிப்பையும் இருமடங்காக்கும்.

ஐஸ்கட்டி மசாஜ்
ஐஸ்கட்டியை உபயோகிப்பது மூட்டு வலிகளை குணமாக்கும். குளிர் உங்கள் இரத்த நாளங்களை சீரடைய வைக்கும், வீக்கத்தை குறைத்து வலியை குறைக்கும். ஒரு துண்டில் சில ஐஸ்கட்டிகளை எடுத்துக்கொண்டு அதனை வலிமிகுந்த இடங்களிலும், வீக்கங்கள் உள்ள இடங்களிலும் தேய்க்கவும்.

இஞ்சி டீ
இஞ்சி அதன் மருத்துவ குணங்களுக்காக பல மருத்துவங்களில் பயன்படுத்தப்படுகிறது. இஞ்சி வலி மற்றும் வீக்கத்தை குறைக்கும் என ஆய்வுகள் கூறுகிறது. உங்கள் உடலில் உள்ள ப்ரஸ்தாலாண்டின் எனப்படும் வீக்கத்தை உண்டாக்கும் ஹார்மோனை இஞ்சி தடுக்கிறது. நல்ல பசுமையான இஞ்சியில் டீ வைத்து குடித்து வீக்கத்தை விரட்டுங்கள்.

மஞ்சளை உபயோகியுங்கள்
மஞ்சளில் உள்ள கர்கமின் வீக்கத்தை உண்டாக்கும் என்சைம்களை தடுக்கிறது. இந்த வீக்கத்திற்கு எதிராக செயல்படும் மஞ்சளின் குணம் வீக்கத்தை கட்டுப்படுத்தி வலியை குறைக்கிறது. இதை உங்கள் உணவில் சேர்த்து கொள்ளுங்கள் அல்லது தேநீர் தயாரித்து குடியுங்கள். இல்லையெனில் துணியை சுடுநீரில் நனைத்து அதனை மஞ்சளுடன் சேர்த்து வலி உள்ள இடத்தில கட்டுங்கள்.

குப்பைமேனி
ஐரோப்பிய மக்கள் வாதநோய்க்கு குப்பைமேனியை பயன்படுத்துவதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள். இது வலியை குறைப்பதற்கு சிறந்த மருந்தாகும். பாதிக்கப்பட்ட பகுதியை சுற்றி இந்த இலைகளை வைத்து நன்கு தேய்ப்பது வலியை குறைக்கும். ஏனெனில் இதில் வலியை குறைக்கக்கூடிய ஹிஸ்டமைன் மற்றும் செரோட்டின் உள்ளது. இதனால் உண்டாகும் எரிச்சல் வலியை விரைவில் குறைக்கும். மறந்து விடாதீர்கள் இதனை உபயோகித்தால் சிறிது எரிச்சல் ஏற்படும்.

மிளகு
கேப்சினின், கெய்ன் போன்று மிளகில் காணப்படும் பொருட்கள் வலிநிவாரிணியாக செயல்படக்கூடியது. இந்த பொருட்கள் உங்கள் மூளைக்கு வலி சிக்னலை அனுப்பி வீக்கத்தை உண்டாக்கும் செயலை தடுக்கக்கூடியது. ஆனால் உங்கள் உடலில் காயங்கள் இருந்தால் அந்த பகுதியில் இதனை தேய்க்க வேண்டாம், ஏனெனில் இதனால் உண்டாகும் எரிச்சலை உங்களால் தாங்க இயலாது.

உலர்திராட்சை மற்றும் பால்
உலர்திராட்சையுடன் பால் சேர்த்து சாப்பிடுவது சிக்கன்குனியாவை கட்டுப்படுத்தும். திராட்சையில் இயற்கையாவே உள்ள உள்ள ஆன்தோசைசின் வலி மற்றும் வீக்கத்தை கட்டுப்படுத்தும் பண்புடையது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

துளசி
துளசி பாரம்பரியமாக காய்ச்சலுக்கு மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன்படி துளசி இலைகள் வீக்கத்தை குறைத்து காய்ச்சலை கட்டுப்படுத்தும் என்பது மருத்துவர்களால்
நிரூபிக்கப்பட்ட ஒன்று. காய்ந்த துளசி இலைகளை கொண்டு தேநீர் தயாரித்து குடியுங்கள். இல்லையெனில் துளசியை நேரடியாகவும் சாப்பிடலாம்.

பப்பாளி இலைகள்
பப்பாளி இலைகள் டெங்கு காய்ச்சலை குணப்படுத்தும் என்று நீங்கள் கேளிவிப்பட்டிருப்பீர்கள். ஆனால் அது சிக்கன்குனியாவையும் கட்டுப்படுத்த கூடும் என்பது பலரும் அறியாத ஒன்று. எளிதில் கிடைக்கக்கூடிய இது உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்தி வைரஸ்களுக்கு எதிராக செயல்பட வைக்கிறது. இதை பயன்படுத்துவது மிகவும் எளிது, இலைகளை மட்டும் எடுத்துக்கொண்டு சிறுசிறு துண்டுகளாக நறுக்கி பின்னர் அரைத்து கொள்ளளவு. தேவைப்பட்டால் தேன் சேர்த்துக்கொள்ளவும். இதனை தினமும் 2 டம்ளர் குடித்தால் விரைவில் உங்கள் காய்ச்சல் குணமடையும்.



Click it and Unblock the Notifications