Latest Updates
-
சனி-சூரியன் உருவாக்கிய சமசப்தம யோகம்: இன்று முதல் அடுத்த 30 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
விநாயகர் சதுர்த்திக்கு வாங்குன விளாங்காய் இருக்கா? அப்ப இப்படி சட்னி செய்யுங்க.. தோசைக்கு அள்ளும்.. -
உங்க வாயைச் சுற்றி ரொம்ப கருப்பா இருக்குதா? அப்ப இந்த 7 ஃபேஸ் பேக்குகளை ட்ரை பண்ணி பாருங்க.. -
குழம்பு மிளகாய் பொடி இப்படி அரைச்சு வெச்சுக்கோங்க.. சைவம், அசைவம்-ன்னு எல்லாத்துக்கும் யூஸ் பண்ணலாம்.. -
காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டிய டாப் 15 உணவுகள்! -
Purattasi Matha Rasi Palan 2026: புரட்டாசி மாதம் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும்?- ஜோதிடர் கணிப்புகள் -
ஆந்திரா ஸ்டைல் முள்ளங்கி சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க... -
செப்டம்பர் 17, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிக்காரங்க பந்தயம் அடிக்கப்போறாங்களாம் -
சூரிய பெயர்ச்சியால் இந்த 3 ராசிக்காரங்க பண விஷயத்துல ஜாக்கிரதையா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
புதனின் நட்சத்திர மாற்றத்தால் இரட்டை ராஜயோகத்தை பெறப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
சருமத்தில் இப்படி இருக்கா? அப்போ இதுல ஏதாவது ஒன்ன அப்ளை பண்ணுங்க...
இந்த இயற்கை சிகிச்சையை மேற்கொண்டால் படர் தாமரை போன்ற பூஞ்சை தொற்றை குணப்படுத்த முடியும். அதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
படர் தாமரை என்பது பொதுவாக ஏற்படுகிற ஒரு பூஞ்சைத் தொற்று தான். சருமத்தில் உண்டாகும் இந்த பூஞ்சைத் தொற்றுக்களுக்குப் பல காரணங்கள் உண்டு. பல அறிகுறிகளும் இருக்கின்றன.

சருமத்தில் உண்டாகும் மற்ற பிரச்சினைகளுக்கும் படர்தாமரைக்கும் இடையே உள்ள வேறுபாட்டைக் கண்டறிந்து விட்டால் மிக எளிதாக வீட்டிலேயே உள்ள பொருள்களைப் பயன்படுத்தி இதை சரிசெய்து விட முடியும்.

அறிகுறிகள்
சருமத்தில் படர் தாமரை உண்டாகிற பொழுது, அது சருமத்தில் சிவப்பு நிறமாக இருக்கும். தோல் உரிந்து வரும், வட்ட வடிவில் பத்துப்போல் இருக்கும். இது சருமத்தில் மட்டுமல்லாது நகங்களிலும் கூட உண்டாகும்.
அதேபோல் உடலில் எந்த இடத்தில் வேண்டுமானாலும் வரலாம். பெரும்பாலும் தோள் பட்டை, இடுப்பு மற்றும் கழுத்தின் பின்புறம் தான் அதிகமாக வருகிறது. இதை எப்படி வீட்டிலுள்ள பொருள்களை வைத்தே சரிசெய்யலாம்.

பூண்டு
பூண்டு பூஞ்சைத் தொற்றுக்களைப் போக்குவதற்கான அற்புத மருந்தாக விளங்குகிறது. பூண்டைத் தோலுரித்து பேஸ்ட்டாக்கிக் கொண்டு அதை தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் ஆயிலில் திக்காக கலந்து பாதிக்கப்பட்ட இடத்தில் அப்ளை செய்யுங்கள். அதை அப்படியே இரண்டு மணி நேரம் காயவிடுங்கள். பிள் வெதுவெதுப்பான நீரில் கழுவுங்கள். ஒரு நாளைக்கு இரண்டு முறை இதைத் தொடர்ந்து செய்து வந்தால் போதும். சிலருக்கு பூண்டு வீக்கம், சருமத் தடிப்பு ஆகியவற்றை ஏற்படுத்தும். அப்படி வந்தால் இதை தொடர்ந்து பயன்படுத்த வேண்டாம்.

சோப்புத் தண்ணீர்
இந்த படர் தாமரை ஓரிடத்தில் இருந்து அப்படியே அருகருகே படர்ந்து கொண்டே போகும் தன்மையுடையது. அதனால் முடிந்தவரையில் சருமத்தையும் தொற்று இருக்கும் இடத்தையும் சுத்தமாக வைத்திருப்பது நல்லது. தினமும் இரண்டு முறையாவது வெதுவெதுப்பான சோப்புத் தண்ணீரால் பாதிக்கப்பட்ட இடத்தை சுத்தம் செய்யுங்கள்.

ஆப்பிள் சீடர் வினிகர்
ஆப்பிள் சீடர் வினிகர் பூஞ்சைத் தொற்றுக்களை அடியோடு அழிக்கும். சுத்தமான காட்டன் அல்லது கம்பளித் துணியில் தண்ணீர் ஏதும் சேர்க்காமல் அப்படியே வினிகரை நனைத்து எடுத்து பாதிக்கப்பட்ட பகுதியில் வைத்து நன்கு துடையுங்கள். தினமும் 3 முறை செய்து வர வேண்டும்.

கற்றாழை
கற்றாழையில் ஆறு வகையான ஆன்டிசெப்டிக் ஏஜண்டுகள் இருக்கின்றன. இது ஆன்டி ஃபங்கல், ஆன்டி பாக்டீரியல் மற்றும் ஆன்டி வைரல் தன்மை கொண்டது.
கற்றாழையில் இருந்து ஜெல்லை எடுத்து தினமும் மூன்று நான்கு முறை பாதிக்கப்பட்ட பகுதியில் அப்ளை செய்ய வேண்டும். கற்றாழை பாதிக்கப்பட்ட இடத்தை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவும். அதனால் அரிப்பு மற்றும் வீக்கம் ஆகியவை ஏற்படாது.

தேங்காய் எண்ணெய்
தேங்காய் எண்ணெயில் உள்ள ஃபேட்டி ஆசிடுகள் பூஞ்சை செல்களைத் தாக்கி அழிக்கும் சக்தி கொண்டது. சருமத் தொற்றுக்களுக்கு தேங்காய் எண்ணெய் மிகச் சிறந்த தீர்வாக அமையும். பாதிக்கப்பட்ட இடத்தை நன்கு சுத்தம் செய்துவிட்டு, ஒரு நாளைக்கு மூன்று முறையாவது தேங்காய் எண்ணெய் அப்ளை செய்யுங்கள்.

ஆரஞ்சு விதைகள்
ஆரஞ்சு பழத்தினுடைய விதைகளில் இருந்து எடுக்கப்பட்ட எண்ணெய் சூப்பர் மார்க்கெட்டுகளில் கிடைக்கும். அதை வாங்கி பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி வந்தாலும் விரைவில் குணமடையும்.

மஞ்சள்
மஞ்சள் நோயெதிர்ப்பு ஆற்றல் கொண்டது. பூஞ்சைத் தொற்றை எதிர்த்துப் போராடும். மஞ்சளை டீ போட்டுக் குடிக்கலாம். உணவில் அதிகமாக மஞ்சள் சேர்ப்பது ஆகியவை பூஞ்சைத் தொற்றைத் தடுக்கும். வெளிப்புறத்தில் மஞ்சளில் சிறிது தண்ணீர் அல்லது தேங்காய் எண்ணெய் சேர்த்து குழைத்தும் அப்ளை செய்யலாம்.

டீ ட்ரீ ஆயில்
சில துளிகள் டீ ட்ரி ஆயிலுடன் ஏதேனும் ஒரு எசன்ஷியல் ஆயில் மற்றும் 2 இரண்டு துளி தேங்காய் கலந்து பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி வந்தாலும் படர் தாமரை வேகமாக குணமடையும்.

ஒரீகனோ ஆயில்
ஒரீகனோ ஆயில் நேரடியாக சருமத்தில் பயன்படுத்தாதீர்கள். அதற்கு முன்பாக, சில துளிகள் ஆலிவ் ஆயில் சேர்த்து பாதிக்கப்பட்ட இடத்தில் அப்ளை செய்யுங்கள்.

லெமன்கிராஸ் ஆயில்
எசன்ஷியல் ஆயிலில் மிக முக்கியத்துவம் வாய்ந்தது. இதையும் ஆலிவ் ஆயிலுடன் கலந்து காட்டனில் நனைத்து, பாதிக்கப்பட்ட இடத்தில் ஒற்றி எடுங்கள்.



Click it and Unblock the Notifications
