Latest Updates
-
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம்
இந்த அறிகுறிகள்லாம் இருந்தா உங்களுக்கு இரும்புச்சத்து கம்மியா இருக்குன்னு அர்த்தம்...
பொதுவாக மனித உடலில் காணப்படும் குறைபாடுகளுள் ஒன்று, இரும்புச் சத்து குறைபாடாகும். இரத்த சிவப்பு அணுக்கள், உடலின் செல்களுக்கு பிராண வாயுவாகிய ஆக்ஸிஜனை கொண்டு செல்ல உதவும் புரத பொருள் ஹீமோகுளோபின். இதன்
பொதுவாக மனித உடலில் காணப்படும் குறைபாடுகளுள் ஒன்று, இரும்புச் சத்து குறைபாடாகும்.

இரத்த சிவப்பு அணுக்கள், உடலின் செல்களுக்கு பிராண வாயுவாகிய ஆக்ஸிஜனை கொண்டு செல்ல உதவும் புரத பொருள் ஹீமோகுளோபின். இதன் உருவாக்கத்தில் இரும்புச் சத்தின் பங்கு இன்றியமையாதது.

அறிகுறிகள்
உடலில் ஹீமோகுளோபின் குறைந்தால், திசுக்கள் மற்றும் தசைகளுக்கு போதுமான ஆக்ஸிஜன் கிடைக்காது. ஆகவே, உடலின் செயல்பாடு பாதிப்புக்குள்ளாகும். இந்தப் பாதிப்பை 'இரத்த சோகை' (அனீமியா) என்று அழைப்பர். அனீமியாவில் பல வகை உண்டு. அனீமியா ஏற்பட முக்கியமான காரணம் இரும்புச் சத்து குறைபாடே ஆகும். உடலில் இரும்புச் சத்து குறைவதை பல்வேறு அறிகுறிகள் மூலம் அறிந்து கொள்ளலாம்.

கர்ப்ப காலம்
இந்த அறிகுறிகள் அன்றாட வாழ்க்கையை பாதிக்கக்கூடியவை. உங்கள் உடலின் ஆரோக்கியம், வயது மற்றும் சத்துக் குறைபாட்டின் தீவிரம் ஆகியவற்றை பொறுத்து அறிகுறிகளும் அமையும். கர்ப்ப காலத்தில், கருவிலிருக்கும் குழந்தைக்கு அதிக இரத்த ஓட்டம் தேவைப்படுவதால், கர்ப்பிணி பெண்களுக்கு அதிக இரும்புச் சத்து தேவைப்படுகிறது.

எப்படி கண்டுபிடிப்பது?
வழக்கத்திற்கு மாறான அசதி
எப்போதும் சோர்வாக உணர்வது, விரைவிலேயே அசதியாகிவிடுவது ஆகியவை இரும்புச் சத்து குறைபாட்டின் அறிகுறியாகும்.
இதன் மூலம் உடலின் செல்களுக்கு போதுமான பிராணவாயு (ஆக்ஸிஜன்) போய் சேரவில்லை என்பதை நாம் தெரிந்து கொள்ளலாம்.
ஆக்ஸிஜன் குறைபாடு, உடலில் ஆற்றல் பாதிப்புக்கு காரணமாகிறது. ஆகவே, போதுமான அளவு ஓய்வு எடுத்தாலும், நன்றாக உறங்கி எழுந்தாலும் சோர்வு அகல்வதில்லை.

மூச்சிரைப்பு
உடலில் ஹீமோகுளோபின் குறைந்தால், ஆக்ஸிஜன் அளவும் குறையும். ஆகவே, உங்கள் தசைகளுக்கு போதுமான பிராண வாயு போய் சேராது. இதனால், நடக்கக்கூட சிரமப்படுகிற நிலை ஏற்படலாம். நடக்கும்போது, உடல் அதிகமான ஆக்ஸிஜனை பெற்றுக்கொள்ள முயற்சிப்பதால், மூச்சிரைப்பு ஏற்படுகிறது. நடக்கும்போதும், அன்றாட வேலைகளை செய்யும்போதும் சுவாசிப்பதில் சிரமம் எற்பட்டால், உங்களுக்கு இரும்புச் சத்து குறைபாடு இருப்பதற்கு வாய்ப்பு உள்ளது.

வெளிறிய தோல்
வெளிறிய தோல், இரத்த சோகையின் அறிகுறி ஆகும். ஹீமோகுளோபினே இரத்தத்திற்கு சிவப்பு நிறம் அளிக்கிறது. இரும்புச் சத்து குறைந்தால், இரத்தத்தில் சிவப்பு நிறமும் குறையும். அதனால் தோல் வெளிறிப்போகும். நகக்கண், ஈறுகள், முகம் ஆகிய பாகங்கள் மட்டுமன்றி, உடல் முழுவதுமே வெளிறி காட்சியளிக்கும்.

பைகா குறைபாடு
சாப்பிடக்கூடாத பொருட்களை சாப்பிடும்படியான தூண்டுதல் உடலில் வருவது பைகா சிண்ட்ரோம் என்னும் குறைபாடு ஆகும். இந்த குறைபாடு உள்ளவர்களுக்கு நாணயங்கள், துணி, சிகரெட் துண்டுகள், மரத்துண்டுகள் மற்றும் ஊசிகள் போன்றவற்றை கடிக்க வேண்டும் என்ற ஆவல் உருவாகும். இவ்வகை குறைபாடு பெரும்பாலும் இரும்புச் சத்து குறைபாட்டினாலேயே ஏற்படுகிறது.

முடி உதிர்தல்
இரும்புச் சத்து குறைபாடு இருந்தால் முடி உதிரும். மயிர்க்கால்களுக்குப் போதுமான பிராணவாயு கிடைக்காதபோது, அவை ஓய்வு நிலைக்குச் செல்கின்றன. ஆகவே, முடி உதிர ஆரம்பிக்கிறது. போதுமான ஆக்ஸிஜன் கிடைக்கும் வரை புதிதாக முடி முளைக்காது. உங்களுக்கு அதிகமான முடி கொட்டினால், அது இரும்புச் சத்து குறைபாட்டின் காரணமாக இருக்க வாய்ப்புள்ளது.

தலைவலி மற்றும் தலை சுற்றல்
இரும்புச் சத்து குறைபாட்டினால் மூளைக்குப் போதுமான ஆக்ஸிஜன் சென்று சேராததன் காரணமாக தலைவலி போன்ற அவதிகள் ஏற்படும்.

இருதய படபடப்பு
இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைந்தால், உடல் உறுப்புகளுக்கு போதுமான ஆக்ஸிஜனை அனுப்புவதற்காக இருதயம் அதிகமாக உழைக்க வேண்டியது நேரும். ஆகவே, இருதய படபடப்பு ஏற்படும்.

உடல் குளிர்தல்
கைகள் மற்றும் பாதங்கள் குளிர்ந்து போதல், பதற்றம், நகங்கள் உறுதியற்று உடைந்து போதல் மற்றும் அடிக்கடி நோய் தொற்று ஏற்படல் ஆகியவையும் இரும்புச் சத்து குறைபாட்டின் அறிகுறிகளே
இந்த அறிகுறிகள் காணப்பட்டால், இரும்புச் சத்து நிறைந்த உணவுகளை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். அறிகுறிகள் தீவிரமானால், மருத்துவரை அணுகி தேவையான ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளலாம்.



Click it and Unblock the Notifications
