Latest Updates
-
ஆகஸ்ட் 02 செவ்வாய் மிதுன ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சௌ சௌ வாங்குனா இந்த பொருளை சேர்த்து சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
குருபகவான் கடக ராசியில் அஸ்தமனமாவதால் துரதிர்ஷ்டத்தால் துரத்தப்படப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஈவ்னிங் டைம்ல ந்த செட்டிநாடு உருளைக்கிழங்கு அடையை செஞ்சு கொடுங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
உலகில் எந்த நாட்டில் இன்டர்நெட் மிகவேகமாக உள்ளது தெரியுமா? இந்தியாவின் இன்டர்நெட் வேகம் என்ன தெரியுமா? -
ஆந்திரா பூண்டு மிளகு கார குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையா, ஆரோக்கியமா இருக்கும் -
எலான் மஸ்க் அவருடைய பணத்தை பிரித்துக் கொடுத்தால் பூமியில் உள்ள ஒவ்வொருவருக்கும் எவ்வளவு கிடைக்கும் தெரியுமா? -
டிபன் சென்டர் டிபன் சாம்பார் ருசியா இருப்பதன் ரகசியம் இதாங்க.. அது என்னன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 21 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு மோசமான நாளாக இருக்குமாம் -
குரு-சூரியனால் உருவாகியுள்ள சிவ ராஜயோகம்: இந்த 4 ராசிகளின் கஷ்டம் தீர்ந்து செல்வம் பெருகும்!
லீவு நாட்கள்ல மட்டும் அளவு தெரியாம நிறைய சாப்பிடறீங்களா? அது ஏன்னு தெரியுமா?
விடுமுறை நாட்களில் மட்டும் நாம் ஏன் வழக்கத்தைவிட அதிகமாக சாப்பிடுகிறோம் என்று தெரியுமா? காரணங்கள் இதோ
பொதுவாக விடுமுறை நாட்களில் நிறைய சாப்பிடுபவரா நீங்கள் ? வீடாக இருந்தாலும் சரி பொது இடங்களாக இருந்தாலும் சரி அதை பற்றி கவலை கொள்ளாமல் அதிகமாக சாப்பிடுபவரா ? இனி கவலை வேண்டாம் மிகுதியாக சாப்பிடுவதை தடுக்க சில குறிப்புகள் இதோ உங்களுக்காக இந்த பதிவில்..

1. நீங்கள் சாப்பிடும் உணவை கவனித்து கொள்ளுங்கள்
எப்பொழுதும் உங்கள் கையில் ஒரு டம்ளர் தண்ணீர் அல்லது சூடான டீ வைத்துக் கொள்ளுங்கள். தேநீர் போன்ற சூடான பானங்களை எடுத்துக்கொள்வது உங்கள் உணவை குறைக்கும்.
நீங்கள் உங்கள் உணவை சாப்பிட்டு முடித்துவிட்டால், எழுந்து உங்களுக்கு விருந்தோம்பல் அளித்தவர்களுக்கு மேஜையை துடைத்தல் போன்ற உதவி செய்யுங்கள். அந்த வகையில் உங்களால் அதிகம் சாப்பிடும் எண்ணத்தை தவிர்க்கலாம். மேலும், நீங்கள் சாப்பிட பின் நடப்பது உங்கள் உடல் ஜீரனத்துக்கு நல்லது. அது மட்டுமல்லாமல், உங்கள் நண்பருக்கு அது பெரிய உதவியாக இருக்கும்.

2. செயற்கை இனிப்புகளை தவிர்க்கவும்
உங்கள் பானங்கள் அல்லது இனிப்பு உணவுகளில் செயற்கை இனிப்பான்களை உட்கொள்வது அதிக பசியை உண்டாக்குவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மூளையில் உள்ள ரசாயன எதிர்வினை கலோரி உட்கொண்டதை உணராமல் உங்களுக்கு இன்னும் சாப்பிட வேண்டும் என்ற உணர்வை ஏற்படுத்தும்.

3. உணவின் அளவை முன்னரே திட்டமிடுங்கள்
எல்லா வேலைக்கும் தேவையான உணவை அந்த அந்த நேரத்திற்கு செய்யாமல் முன்கூட்டியே எல்லா வேலைக்கும் சேர்த்து தேவையான அளவு மட்டும் சமைத்து வைத்துவிட்டால் நீங்கள் அதிகம் சாப்பிட மாட்டீர்கள் .

4. மது/ஆல்கஹால் குறைக்கவும்
மது/ஆல்கஹால் உங்கள் கலோரி உட்கொள்ளலை சேர்ப்பது மட்டுமல்லாமல் அந்த நிலை உங்களுக்கு ஓரி தவறான உணர்வைத் தந்து உங்களை அதிகமாக சாப்பிட வைக்கும். ஒரு முழு டம்ளர் அளவிற்கு மது அருந்துவதை தவிர்த்து ஒரு அரை க்ளாசில் கிளப் சோடா கலந்து குடிக்க முயற்சி செய்யவும். இதன் மூலம் மது'வின் அளவும் கம்மியாகும் சுவையும் மாறாது.

5. பலவீனங்களை அப்புறப்படுத்தவும்
நாம் அனைவர்க்கும் புடித்தமான உணவை என்ற ஒன்று கனிடிப்பாக இருக்கும். நாம் என்னதான் நன்றாக சாப்பிட்டிருந்தாலும் சரி நமக்கு பிடித்த உணவு நம் கண்முன் இருந்தால் அதை எடுத்து சாப்பிட்டுக்கொண்டே தான் இருப்போம். ஒரு முழு உணவைச் சாப்பிட்ட பிறகு கூட - அது ஒரு கேக், அல்லது குக்கீயாக இருந்தாலும் சரி உங்கள் மூளை நீங்கள் இன்னும் பசியாக இருக்குறீர்கள் என்ற எண்ணத்தை ஏற்படுத்தும். அதற்கு பதிலாக, இந்த "தூண்டுதல் உணவுகள்" அனைத்தையும் முற்றிலுமாக உங்கள் வீட்டிலிருந்து அகற்றுவதே சிறந்தது. அந்த வழியில், நீங்கள் அதிகம் சாப்பிடுவதை தவிர்க்கலாம்.

6. உங்கள் மூளையை ஏமாற்றுங்கள்
சிறிய தட்டு மற்றும் கொஞ்சமான அளவு சாப்பாட்டை உங்கள் தட்டில் வைத்து சாப்பிடுங்கள். சிறிய தட்டு முழுமையாய் இருப்பதை உங்கள் கண்கள் காணும்போது, நீங்கள் உங்கள் மூளை, நீங்கள் தேவையான அளவு சாப்பிடுகிறீர்கள் என்று நினைத்துக் கொள்ளும்.



Click it and Unblock the Notifications