For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தண்ணி மாத்தி குடிச்சா உடனே தொண்டை கட்டுதா? அதுக்குதான் இவ்ளோ வீட்டு வைத்தியம் இருக்கே...

தொண்டைக் கட்டிக்கொண்டு பேச முடியவில்லை என்பதற்காக வருத்தப்படாமல் நாங்கள் கீழே கொடுத்துள்ள வீட்டு வைத்தியத்தை முயற்சி செய்யுங்கள்.

|

தொண்டைக்கட்டு ஏற்படும் போது குரல் உடைந்து சத்தம் குறைகிறது. கரகரப்பான மற்றும் சோர்வான குரல் சில நேரம் பேச முடியாமல் ஒரு வித வலியைக் கொடுக்கும்.

Home Remedies for Lost Voice

நீண்ட நேரம் பேசுவதால், தொற்று பாதிப்பால், அல்லது வேறு சில நோயால் இந்த தொண்டைக்கட்டு ஏற்படலாம். குரல்வளை, மூச்சுக்குழல் போன்றவற்றில் பாதிப்பு ஏற்படும்போது இந்த தொண்டைக்கட்டு ஏற்படலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தொண்டைக்கட்டு

தொண்டைக்கட்டு

பொதுவாக அதிக சளி பிடிக்கும் நாட்களிலும் இந்த நிலை உண்டாகலாம். ஆனால் அடுத்த சில தினங்களில் இந்த தொண்டைக்க்கட்டு தானாக மறைந்து இயல்பான குரல் வெளிப்படும். ஒருவேளை அடுத்த சில தினங்களில் உங்கள் குரல் இயல்பு நிலைக்கு திரும்பாமல் இருந்தால் அதனை கவனிக்க வேண்டியது அவசியம். இத்தகைய நிலையை சரிசெய்து சிகிச்சை அளிக்க சில எளிய வழிமுறைகள் உள்ளன. ஆகவே தொலைந்த குரலை மீட்டெடுக்க உள்ள வழிமுறைகளை இந்த பதிவில் இப்போது நாம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்..

காரணங்கள்

காரணங்கள்

இந்த தொண்டைக்கட்டு பல நிலைகளில் உண்டாகலாம். குரலை மோசமாக பயன்படுத்துவது, வாழ்வியல் மாற்றம், தொற்று பாதிப்பு போன்றவற்றில் ஏதேனும் ஒரு காரணத்தால் தொண்டைக்கட்டு உண்டாகலாம். கரகரப்பான குரல் மற்றும் தொண்டைகட்டிற்கான சில காரணிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

குரலில் பாதிப்பு ஏற்படுவதற்கான காரணம் குரல் அழற்சியாக இருக்கலாம். குரல் வளையில் தொற்று ஏற்படுவதன் காரணமாக வீக்கம் ஏற்படுவதால் இந்த தொண்டைக்கட்டு உண்டாகலாம்.

குரல்வளை அழற்சி தொடர்ந்து இரண்டு அல்லது மூன்று வாரங்கள் நீடிக்கும்போது அது நாட்பட்ட நிலையை அடைகிறது. இந்த நிலையில் குரல் இழப்பு என்பது நாளடைவில் உண்டாகிறது.

மது மற்றும் சிகரெட் புகைப்பதால் குரல் இழப்பு உண்டாகலாம். தொண்டைக்கட்டு மற்றும் குரல் இழப்பிற்கான முக்கிய காரணிகளாக இவை உள்ளன. தொடர்ந்து மது அருந்தி, புகை பிடிப்பதால் அவற்றின் நச்சு காரணமாக குரல்வளை அழற்சி உண்டாகலாம்.

குரலை மோமான முறையில் பயன்படுத்துவதால் கூட குரல் இழப்பு அல்லது தொண்டைக்கட்டு உண்டாகலாம். தொடர்ந்து கத்துவது அல்லது தொண்டையை கிழித்துக் கொண்டு பேசுவது போன்ற காரணத்தால் குரல்வளை சேதமடையலாம். குரல்வளையில் பக்கவாதம் அல்லது புற்றுநோய் போன்றவையும் சில நேரம் தொண்டை கரகரப்பின் காரணமாக இருக்கலாம்.

இரையக உண்குழலியப் பின்னோட்ட நோய் (Gastroesophageal reflux disease (GERD)) என்பது வயிற்றில் உள்ள அமிலம் பின்னோக்கி வழிந்து உணவுக்குழாயை வந்தடைகிறது. இந்த அமிலம் குரல்வளையை பாதித்து சேதப்படுத்துகிறது.

பாலிப்ஸ் என்பது குரல்வளையின் அசாதாரண வளர்ச்சி என்பதாகும். இதனால் குரல்வளையின் தசைகள் பலவீனமடைகின்றன, இத்தகைய பாதிப்புகளை உண்டாக்கும் தொண்டைக்கட்டிலிருந்து உங்களுக்கு நிவாரணம் கிடைக்க வேண்டுமா? குரல்வளை அழற்சியிலிருந்து 24 மணிநேரத்தில் உங்களால் நிவாரணம் பெற முடியும். கீழே குறிப்பிட்டுள்ள குறிப்புகளை பின்பற்றி உங்கள் தொண்டைக்கட்டை எளிதில் போக்கலாம்.

Most Read: வாஸ்லின் இருந்தா போதும்... ஒரே கல்லுல 17 மாங்கா அடிக்கலாம்... எப்படின்னு உள்ளே வந்து பாருங்க...

இஞ்சி

இஞ்சி

பாடகர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தொண்டைக்கட்டு ஏற்படுவது சாதாரணமான ஒரு விஷயம். அவர்களுக்கு இஞ்சி சிறந்த தீர்வைத் தருகிறது. குரல் வளையைச் சுற்றியிருக்கும் சளி மென்படலில் இது ஒரு இனிமையான விளைவைத் தருகிறது.. இஞ்சியில் இருக்கும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் வீக்கமாக இருக்கும் குரல்வளைக்கு நிவாரணம் தருகிறது. மேலும் கூடுதலாக, இஞ்சியை உட்கொள்வதால், உங்கள் சுவாசப் பாதையில் உள்ள தொற்றுகள் நீக்கப்படுகிறது.

ஒரு சிறிய துண்டு இஞ்சியை எடுத்து தோல் சீவி, அதனை அப்படியே சாப்பிடலாம். இதனுடன் சிறிதளவு உப்பு சேர்த்து சாப்பிடுவதால் அதன் சுவை அதிகரிக்கும்.

அல்லது, கொதிக்கும் நீரில் ஒரு ஸ்பூன் இஞ்சியை போட்டு கொதிக்க விடவும். பின்பு அந்த நீரை வடிகட்டி அதில் சிறிதளவு தேன் சேர்த்து பருகவும். ஒரு நாளில் மூன்று முறை இதனை பருகலாம்.

தேன்

தேன்

தேனின் மென்மையான தன்மை குரல்வளையை மிருதுவாக்கி உங்கள் குரலை மீட்டுத் தருகிறது. தொண்டை எரிச்சலைப் போக்கி அழற்சியைக் குறைக்கிறது. குரல்வளை அழற்சியைப் போக்க ஒரு அற்புதமான தீர்வு உள்ளது. அது, தினமும் ஒரு ஸ்பூன் ஆர்கானிக் தேன் சாப்பிடுவது. அல்லது ஒரு சிட்டிகை மிளகு தூளுடன், இதனைக் கலந்து இந்த கலவையை ஒரு கிளாஸ் தண்ணீரில் கலந்து பருகலாம்.

மேலும் தேனுடன் துளசி சாறு சம அளவு சேர்த்து தினமும் மூன்று வேளை பருகுவதால் நல்ல பலன் கிடைக்கும்.

ஆப்பிள் சிடர் வினிகர்

ஆப்பிள் சிடர் வினிகர்

தொண்டைக்கட்டுடன் நீங்கள் அனுபவிக்கும் அசௌகரியங்களை விலக்க ஆப்பிள் சிடர் வினிகர் பயன்படுத்தலாம். இதில் இருக்கும் கிருமி எதிர்ப்பு பண்பு , தொண்டையில் உள்ள தொற்றை நீக்கி குணப்படுத்துகிறது.

இனிமையான குரலுக்கு ஆப்பிள் சிடர் வினிகர் சிறந்த தீர்வாகும். ஆகவே தினமும் ஒரு க்ளாஸ் தண்ணீரில் ஒரு ஸ்பூன் ஆப்பிள் சிடர் வினிகர் சேர்த்து அந்த நீரை பருகவும். அல்லது ஆப்பிள் சிடர் வினிகர் மற்றும் தண்ணீர் சம அளவு எடுத்து, அந்த கலவையைக் கொண்டு வாயைக் கொப்பளிக்கவும். தினமும் இரண்டு முறை இதனைச் செய்யலாம்.

உப்பு நீரால் கொப்பளித்தல்

உப்பு நீரால் கொப்பளித்தல்

தொண்டை தொடர்பான எல்லா பிரச்சனைகளுக்கு உப்பு நீரால் கொப்பளிப்பது ஒரு சிறந்த தீர்வாகும். சுவாச பாதையில் உள்ள சளியைப் போக்க உப்பு உதவுகிறது, மற்றும் வெந்நீர் தொண்டைக்கு இதமான உணர்வைத் தருகிறது.

மேலும் உப்பு கலந்த நீர் ஒரு கிருமி நாசினி பண்பைக் கொண்ட ஒரு நீர். ஆகவே வேறு எதாவது தொற்று பாதிப்பின் காரணமாக தொண்டைக்கட்டு உண்டாகும்போடும் அதனை போக்க முடியும். ஒரு கிளாஸ் வெந்நீரில் சிறிதளவு உப்பு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். இந்த நீரைக் கொண்டு தொண்டையில் ஊற்றி கொப்பளிப்பதால் தொண்டைக்கு நிவாரணம் கிடைக்கிறது. பாடகர்கள் இதனை அடிக்கடி முயற்சிக்கலாம். ஒரு நாளில் மூன்று முறை இதனைச் செய்யலாம்.

நீராவி சிகிச்சை

நீராவி சிகிச்சை

ஒரே நாள் இரவில் தொண்டைக்கட்டை போக்குவதில் நீராவி சிகிச்சை மிகச் சிறந்த தீர்வைத் தருகிறது. இது கேட்பதற்கு ஆச்சர்யமாக இருக்கும். ஆனால் முயற்சித்து பாருங்கள். நீராவி பிடிப்பதால் அழற்சி மற்றும் அசௌகரியம் குறைந்து குரல் இழப்பு கட்டுப்படுகிறது. குரல் வளை அழற்சியைப் போக்க நீராவி பிடிக்கும்போது அத்தியாவசிய எண்ணெய்யை பயன்படுத்தலாம். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் விட்டு கொதிக்க வைக்கவும். கொதிக்கும் நீரில் சில துளிகள் லாவேண்டேர் என்னை அல்லது செவ்வந்தி பூ எண்ணெய் சேர்த்து கலந்து அந்த நீரை ஆவி பிடிக்கவும். ஒரு நாளில் இரண்டு முறை நீராவி பிடிப்பதால் நல்ல தீர்வு கிடைக்கும்.

மிளகு

மிளகு

தொண்டைக்கட்டு ஏற்பட்ட அடுத்த சில நிமிடங்களில் மிளகு நல்ல பலனைத் தரும். இருமல் மற்றும் தொண்டைக்கட்டு போன்ற பாதிப்புகளுக்கு மிளகு உடனடி நிவாரணத்தை வழங்குகிறது. தொண்டை எரிச்சலைப் போக்கவும் மிளகு பயன்படுகிறது. மேலும் குரல்வளையில் உள்ள வீக்கத்தைக் குறைக்கிறது. மேலும் குரல்வளையில் தொற்று பதிப்பு ஏதேனும் இருந்தால் அதனையும் மிளகு சரி செய்கிறது. அரை ஸ்பூன் அல்லது ஒரு ஸ்பூன் மிளகு தூளுடன் தேன் சேர்த்து கலந்து கொள்ளவும். ஒரு ஸ்பூன் மூலம் இந்த கலவையை மெதுவாக உட்கொள்ளவும்.

அல்லது மிளகுடன் சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்க்கவும். இந்த கலவையை ஒரு கிளாஸ் தண்ணீரில் சேர்க்கவும். இந்த நீரை தினமும் பருகி வரவும்.

Most Read: ஒரு வாரம் கோதுமைப்புல் சாறு குடிச்சுப் பாருங்க... இந்த அற்புதமெல்லாம் உங்க உடம்புல நடக்கும்

எலுமிச்சை

எலுமிச்சை

குரல்வளை அழற்சி உண்டாகும்போது நீங்கள் தாராளமாக எலுமிச்சையை பயன்படுத்தலாம். தொண்டையின் ஈரப்பதத்தை இது அதிகரிக்கும். மேலும் எரிச்சல் மற்றும் வறட்சியைப் போக்கி குரல் இழப்பை சரி செய்கிறது.

மேலும் எலுமிச்சையில் வைட்டமின் சி இருப்பதால் தொற்று பாதிப்பைக் குறைக்க உதவுகிறது.

வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு சேர்த்து அதனுடன் சிறிதளவு தேன் சேர்த்து கலந்து பருகவும். தினமும் சில முறை இதனை பருகலாம். அல்லது எலுமிச்சையை பாதியாக நறுக்கி அதில் சிறிதளவு மிளகு மற்றும் உப்பு தூவி அதனை உட்கொள்ளலாம்.

எலுமிச்சை சாற்றுடன் தண்ணீர் சேர்த்து கலந்து அந்த நீரை தொண்டை வரை ஊற்றி கொப்பளிப்பதால் நல்ல பலன் கிடைக்கும். ஒரு நாளில் இரண்டு முறை இதனைச் செய்யலாம்.

பூண்டு

பூண்டு

பூண்டில் அழற்சி எதிர்ப்பு தன்மை உண்டு. இதனால் தொண்டை வலி குணமடைகிறது. மேலும் தொண்டையில் உள்ள அழற்சியைக் குறைத்து எளிதில் உங்களை பேச வைக்கிறது.

ஒரு பூண்டை இரண்டு பாதியாக நறுக்கிக் கொள்ளவும். வாயின் இரண்டு பக்கத்திலும் இந்த பூண்டு பற்களை வைத்து அதன் சாற்றை உறிஞ்சிக் கொள்ளவும். இந்த சாறு உங்கள் தொண்டைக்குள் சென்று அழற்சியைக் குறைக்கும். வெதுவெதுப்பான நீரில் இரண்டு துளிகள் பூண்டு எண்ணெய்யை சேர்க்கவும். இந்த நீரை தினமும் இரண்டு முறை தொண்டையில் ஊற்றி கொப்பளிக்கவும்.

வழுக்கும் எல்ம் மூலிகை

வழுக்கும் எல்ம் மூலிகை

சளி சவ்வுகளை சீராக்கி, தொண்டையின் கரகரப்பை போக்கி குரலை மீட்டுத் தரும் ஒரு சிறந்த மூலிகை இந்த எல்ம் மூலிகை ஆகும். உங்கள் தொண்டைக்கட்டு உண்டான அடுத்த சில தினங்களில் இதனை பயன்படுத்தும்போது நிச்சயம் ஒரு மாற்றம் உண்டாகும். சில நேரங்களில் உங்கள் குரல் இழப்பிற்கான உடனடி நிவாரணத்தையும் இது வழங்குகிறது.

இரண்டு கப் தண்ணீரில் இந்த மூலிகையை இரண்டு ஸ்பூன் சேர்த்து கலந்து கொள்ளவும். ஐந்து நிமிடம் இந்த மூலிகை நீரில் ஊறியவுடன் அந்த நீரை ஒரு நாளில் இரண்டு முறை பருகலாம். மேலும் இந்த எல்ம் மூலிகை தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு பாதுகாப்பானது அல்ல என்பதை நினைவில் கொள்ள வேண்டும். சர்க்கரை கலந்த மிட்டாய் உட்கொள்வதால் கூட தொண்டைக்கட்டு குறையலாம்.

ஏலக்காய்

ஏலக்காய்

ஆயுர்வேத மருந்தில் ஏலக்காய் ஒரு தனி சிறப்பு பெற்ற ஒரு பொருளாகும். தொண்டை கரகரப்பைப் போக்கி இழந்த குரலை மீட்டுத் தர இது உதவுகிறது. ஏலக்காயின் அழற்சி எதிர்ப்பு பண்பு வீக்கமடைந்த குரல்வளையை சீராக்க உதவுகிறது. தொண்டைக்கட்டிற்கான காரணம் எதுவாக இருந்தாலும் ஏலக்காய் சிறந்த தீர்வைத் தருகிறது. ஏலக்காயை எடுத்து வாயில் போட்டு மெல்லவும். இதனால் தொண்டை ஈரப்பதம் பெறுகிறது. அல்லது ஏலக்காய் தூளுடன் சிறிதளவு தேன் சேர்த்து தினமும் சாப்பிட்டு வரவும்.

எலுமிச்சை எண்ணெய்

எலுமிச்சை எண்ணெய்

குரல்வளை அழற்சியைப் போக்க எலுமிச்சை எண்ணெய் ஒரு சிறந்த வழியாகும். இதனால் உங்கள் இழந்த குரல் மீட்கப் படுகிறது. சளி மற்றும் காய்ச்சல் காரணமாக தொண்டை பாதிப்பு ஏற்பட்டாலும் அதனைப் போக்க எலுமிச்சை எண்ணெய்யை பயன்படுத்தலாம்.

எலுமிச்சை எண்ணெய் உடலின் நச்சுகளைப் போக்கி, தொண்டையில் உள்ள சளியை விரட்டுகிறது. அதனால் இருமல் குறைந்து உங்கள் குரல்வளைக்கு ஓய்வு கிடைக்கிறது. ஒரு கிளாஸ் நீரில் இரண்டு துளிகள் எலுமிச்சை எண்ணெய் சேர்த்து தினமும் பருகி வரலாம்.

புதினா எசன்ஷியல் ஆயில்

புதினா எசன்ஷியல் ஆயில்

குரல்வளை அழற்சியை உண்டாக்கும் ஒவ்வாமை பாதிப்பிற்கு புதினா எண்ணெய் ஒரு சிறந்த தீர்வாகும். தொண்டையில் உண்டாகும் எரிச்சல் மற்றும் கரகரப்பை போக்கி அசௌகரியத்தை விரட்டுகிறது. உங்கள் குரல் இழப்பிற்கு காரணமான எல்லா வித பிரச்சனைகளையும் போக்க இது உதவுகிறது. தொண்டையில் உள்ள கோழையை அகற்றி குரல்வளையில் உள்ள அழற்சியைக் குறைக்க உதவுகிறது.

ஆகவே தினமும் ஒரு கிளாஸ் தண்ணீரில் ஒன்று அல்லது இரண்டு துளிகள் புதினா எண்ணெய்யை சேர்த்து பருகி வரவும்.

மாஷ்மேல்லோ வேர்கள்

மாஷ்மேல்லோ வேர்கள்

பாடகர்கள் தங்கள் குரலை இனிமையாக பராமரிக்க பல காலமாக மஷ்மேல்லோ வேர்களை பயன்படுத்தி வருகின்றனர். இது தொண்டைக்கு கவசமாக இருந்து தொண்டை எரிச்சல் ஏற்படாமல் பாதுகாக்கிறது. மாஷ்மேல்லோ , நிணநீர் வீக்கத்தை குறைத்து குணப்படுத்துதலை விரைவாக்குகிறது. இருமலைக் குறைக்க உதவுகிறது. மாஷ்மேல்லோ வேர்களை நீரில் கொதிக்க வைக்கவும். சில நிமிடங்கள் அவை நீரில் ஊறியவுடன் அந்த நீரை தினமும் பருகி வரவும். நல்ல பலன் கிடைக்கும் வரை தொடர்ந்து இதனை பின்பற்றவும்.

Most Read: சர்க்கரை நோயை அடியோடு காலி பண்ணும் முருங்கை டீ... ட்ரை பண்ணிப் பாருங்க...

குரல்வளைக்கு ஓய்வு கொடுக்கவும்

குரல்வளைக்கு ஓய்வு கொடுக்கவும்

ஒரே நாளில் உங்கள் தொண்டைக்கட்டைப் போக்க சிறந்த வழி, உங்கள் குரல்வளைக்கு ஓய்வு கொடுப்பது. முடிந்த அளவிற்கு பேசுவதைத் தவிர்க்கவும். பேசும் நேரம் மிகவும் மென்மையாக பேசவும். கிசுகிசுப்பதை தவிர்க்கவும், பேசுவதைக் காட்டிலும் கிசுகிசுப்பதால் உங்கள் குரல்வளை அதிகம் பாதிக்கப்படலாம். தொண்டையை அடிக்கடி கனைத்துக் கொள்ள வேண்டாம். இதனால் உங்கள் குரல்வளை அதிகம் பாதிக்கபப்டும். முடிந்த அளவிற்கு பேசாமல் இருக்க முயற்சிக்கவும்.

திரவம் அதிகம் பருகவும்

திரவம் அதிகம் பருகவும்

எந்த விதத்தில் நீங்கள் நோய்வாய்ப் பட்டாலும் அதிக அளவு திரவ உணவுகளை எடுத்துக் கொள்ளவும். உங்கள் குரல்வளை அழற்சிக்கும் இது பொருந்தும். ஜூஸ், தண்ணீர், தேநீர், சூப் என்று எந்த வடிவத்திலும் நீங்கள் திரவ உணவுகளை எடுத்துக் கொள்ளலாம். இதனால் நீங்கள் நீர்ச்சத்தோடு இருக்கலாம். மேலும் சளியை துப்ப முடியும். வெதுவெதுப்பான திரவம் பருகுவதால் அடைப்பு நீங்கும் என்பதால் சூப் பருகலாம். காபின் சேர்க்கப்பட்ட பானங்களைப் பருகுவதால் நீர்ச்சத்து குறைவதால் அவற்றை மட்டும் தவிர்ப்பது நல்லது.

செய்ய வேண்டியவை

செய்ய வேண்டியவை

உறைய வைத்த காய்கறிகள் மற்றும் பழங்கள் தொண்டைக்கு இதமளிக்கும்.

உங்கள் வீட்டில் ஒரு ஈரப்பதமூட்டி வைக்கவும்

நீங்கள் அறிந்த ஒவ்வொரு ஆழ்ந்த மூச்சு பயிற்சியை முயற்சிக்கவும்

செய்யக் கூடாதவை

செய்யக் கூடாதவை

உங்கள் தொண்டையில் தானாக சளி வெளிவராத பட்சத்தில் அதனை வெளியேற்ற முயற்சிக்க வேண்டாம்.

கத்துவது அல்லது சத்தமிடுவதை தவிர்க்கவும்.

மூக்கடைப்பு நீக்கி போன்றவற்றை உபயோகிப்பதால் மேலும் தீங்கு உண்டாகும் என்பதால் அவற்றை பயன்படுத்த வேண்டாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Home Remedies for Lost Voice

Go through the following home remedies for lost voice and know it all. There are several remedies that you can try.
Desktop Bottom Promotion