For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்கள் உடம்புக்குள் என்ன நோய் இருக்கிறது? இதோ அதன் அறிகுறிகள்

இங்கே நாம் நம்முடைய சில அறிகுறிகளை வைத்து என்னென்ன உள்ளுறுப்புகள் பாதிக்கப்பட்டிருக்கின்றன என்று தெரிந்து கொள்ளுங்கள்.

|

நம்முடைய உடலுக்கு வெளியில் ஏதாவது காயங்கள் இருந்தால் நமக்கு அதிக வலி இருக்கும். வெளியில் தெரியும். என்ன பிரச்னை என்பது நமக்குத் தெரியும். ஆனால் உடலுக்குள் இருக்கின்ற உறுப்புகளில் ஏதேனும் பாதிப்புகள் இருந்தால், அதை நம்மால் எளிதில் கண்டுபிடிக்க முடியாது. ஸ்கேன், எக்ஸ்ரே என ஏதாவது ஒரு முறையில் தான் கண்டுபிடிக்க முடியும்.

external symptoms for affecting internal organs

ஆனால் சில அறிகுறிகள் நம்மால் உணர்நு்து கொள்ள முடியும். இருந்தபோதிலும் என்ன அறிகுறி இருந்தால், என்ன உறுப்பு பாதிப்படைந்திருக்கிறது என்பது முதலில் நமக்குத் தெரிய வேண்டும். இப்படி என்னென்ன அறிகுறிகள் எந்தெந்த உறுப்புகள் பாதிக்கப்பட்டிருக்கும் என்பது பற்றி இங்கே பார்ப்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கண் உப்பியிருந்தால்

கண் உப்பியிருந்தால்

உங்களுடைய கண்கள் உப்பியிருப்பது போல தோற்றம் இருந்தால், உங்களுடைய சிறுநீரகங்கள் மிகவும் மோசமாக இருக்கின்றன என்று அர்த்தம். சிறுநீரகங்கள் நம்முடைய உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றும் வேலையைச் செய்கின்றது. அது சரிவர வேலை செய்யவில்லை என்றாலும் உடலில் சேருகின்ற அழுக்குகளை வெளியேற முடியாமல் போய்விடும். இந்த அழுக்குகள் தான் கண்களைச் சுற்றி தேங்கியிருக்கும். அதுதான் கண்களைச் சுற்றிலும் உப்பிக் கொண்டிருக்கும்.

தீர்வு

உணவில் வழக்கமாக சேர்த்துக் கொள்ளும் உப்பின் அளவைக் கட்டாயமாகக் குறைத்துக் கொள்ள வேண்டும். அதேபோல தண்ணீர் குடிக்கும் அளவையும் அதிகரிக்க வேண்டும்.

கண் இமைகள் வலி

கண் இமைகள் வலி

கண்களுக்கு நீங்கள் கொடுக்கும் அதிகப்படியான வேலையின் காரணமாக இந்த கண் இமைகளில் வலி ஏற்படலாம். அதுமட்டுமின்றி, உங்களுடைய உடலில் மக்னீசியத்தின் அளவு மிகவும் குறைவாக இருக்கிறது என்பதற்கான ஒரு அறிகுறிதான் கண் இமைகளில் வலி உண்டாவதற்கான காரணங்கள் ஆகும்.

தீர்வு

கண்களுக்குப் போதுமான அளவு ஒய்வு கொடுங்கள். நல்ல நிம்மதியான உறக்கம் மிக அவசியம். அதோடு உணவில் மிக அதிகமாக கொஞ்சம் முட்டைகோஸ் மற்றும் கீரைகளைச் சேர்த்துக் கொள்ளுங்கள்.

கண்களில் அதிக வெளிச்சம்

கண்களில் அதிக வெளிச்சம்

சிலருக்கு கண்கள் பளிச்சென நன்றாகத் தெரிந்தாலும் அடிக்கடி கொஞ்சம் அதிக வெளிச்சத்தை சந்தித்தாலும் கண்கள் கூசுவதுபோல உணர்வார்கள். கண்களுக்குக் கொடுக்கப்படும் அதிகப்படியான அழுத்தத்தினால், மூளை சற்று குழப்பமடைந்து, தவறான தகவல்களைக் கண்களுக்குத் தந்துவிடுகிறது. அந்த சமயங்களில் நம்முடைய கண்களுக்கு அதிகப்படியான வெளிச்சங்களும் புள்ளிகளும் நம்முடைய பார்வைக்குத் தெரிகின்றன.

தீர்வு

எப்போதும் முதுகைக் கூன் போட்டுக் கொண்டிருக்காமல், தோள்களை நேராக நிமிர்த்தி, கண்களை நேராகப் பார்த்து, நிமிர்ந்து நிற்க வேண்டும். அதேபோல் அளவுக்கு அதிகமாக காபி குடிப்பதையும் தவிர்க்க வேண்டும்.

கண்கள் உலர்வது

கண்கள் உலர்வது

ஏசி நிறைந்த இடங்களில் நம்முடைய இடங்களில் அதிக நேரத்தைச் செலவிடுவது மற்றும் கண்களுக்கு நாம் கொடுக்கும் அதிக வேலையின் காரணமாக, களைப்படைகின்ற பொழுது, நம்முடைய கண்கள் மிக அதிக அளவில் உலர்ந்து போகின்றன. இதை நாம்அவ்வளவ சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது.

தீர்வு

ஒரு நாளைக்கு தினமும் குறைந்தது எட்டு மணி நேரமாவது தூஞ்குவது மிக மகி அவசியமான ஒன்று, அதேபோல் தினமும் கண்களை மேலும் கீழுமாகவும் பக்கவாட்டின் இருபுறத்திலும் அசைப்பது போன்ற சின்ன சின்ன பயிற்சிகளைச் செய்ய வேண்டும். இந்த எளிய பயிற்சிகளை ஒரு நாளைக்கு இரண்டு முறை செய்ய வேண்டும்.

தோலில் தடிப்பு உண்டாதல்

தோலில் தடிப்பு உண்டாதல்

தோலில் தடிப்புகள் உண்டானால் அதை வெறுமனே தோல் சம்பந்தப்பட்ட பிரச்னை என்று மட்டும் எடுத்துக் கொள்ளாதீர்கள். இது இருதய நோயாகக் கூட இருக்கலாம். குறிப்பாக, உங்களுடைய காதுகளுக்குப் பக்கத்தில் உள்ள தோல் பகுதியில் தடிப்புகள் ஏதேனும் உண்டானால், நிச்சயம் இருதயக் கோளாறுகள் உள்ளது என்று தெரிந்து கொள்ளலாம். ஆனால் இதற்கான காரணம் என்பதை இன்னும் ஆராயப்படவில்லை.

தீர்வு

மிக அதிகப்படியான மன அழுத்தம் மாரடைப்பை உண்டாக்குவதற்கான வாய்ப்பை மிக இதிகமாக வழங்குகிறது. உங்களுடைய மனதை எப்போதும், லேசாக பாரமில்லாமல் லேசாக வைத்துக் கொள்ள முயற்சி செய்வது நல்லது.

முக வீக்கம்

முக வீக்கம்

உங்களுடைய உடலில் தண்ணீரின் அளவு குறைவாக உள்ளது என்பதள் அறிகுறி தான் முகம் வீக்கமாகக் காணப்படக் காரணம். இப்படி முக வீக்கம் உண்டாகிற பொழுது, உங்களுடைய உடலுக்குத் தண்ணீர் தேவைப்படுகிறது என்று அர்த்தம். போதுமான அளவு தண்ணீர் உடலில் இல்லையென்றால். ரத்த செல்கள் யாவும் விரிவடைந்து முகம் வீக்கமாகத் தெரியும்.

தீர்வு

ஒரு நாளைக்கு குறைந்தது எட்டு கிளாஸ் அளவாவது தண்ணீர் குடிக்க வேண்டும். எப்போதும், வெளியில் எங்கு சென்றாலும் தண்ணீர் பாட்டிலை உங்களுடன் எடுத்துச் சென்று,அடிக்கடி தண்ணீர் குடியுங்கள்.

தோல் இளமஞ்சள் நிறமாதல்

தோல் இளமஞ்சள் நிறமாதல்

தோலின் நிறம் சற்று இள மஞ்சள் நிறமாக மாறியிருந்தால், உங்களுடைய கல்லீரலில் நோய்த்தொற்று இருக்கிறது என்று அர்த்தம். கல்லீரலில் பாதிப்பு உண்டாகின்ற பொழுது, உடலில் இருக்கின்ற பித்த நீர் போன்ற மஞ்சள் நிற திரவங்களை வெளியேற்ற முடிவதில்லை. இதனால் தான் தோல் மஞ்சள் நிறமாக மாறிவிடுகிறது.

தீர்வு

அதிகப்படியான ஆல்கஹாலின் அளவால் தான் கல்லீரல் பிரச்னைகள் உண்டாகின்றன. குடிப்பழக்கம் இருக்கின்றவர்கள் கட்டாயம் உடனடியாக அந்த பழக்கத்தை நிறுத்திவிடுவது நல்லது.

பாதம், கை, கால் வலி

பாதம், கை, கால் வலி

சீரான ரத்த ஓட்டம் இல்லாமல் இருந்தால் தான் கை, பாதம், கால்களில் சுறுசுறுவென ஏதோ உள்ளே ஓடுவது போன்ற உணர்வு வரும். ரத்தக் குழாயில் அடைப்பு இருந்தால், உடலினுடைய ரத்த ஓட்டம் சீராக இருக்காது. இந்த அறிகுறிகள் உங்களுடைய ரத்தமானது, பாதம் வரை சீராக ஓடச் செய்யும் முயற்சியே ஆகும்.

தீர்வு

வைட்டமின்கள் நிறைந்த உணவுகளும் மிக அதிக அளவில் கீரைகளும் உணவில் சேர்த்துக் கொள்வது அவசியம்.

பாதம் மரத்துப்போதல்

பாதம் மரத்துப்போதல்

சர்க்கரை நோய் பாதிப்பு இருக்கலாம். நீரிழிவு ரத்தத்தில் இருக்கும்

செல்களை பாதிப்பதோடு, நரம்புகள் செய்யும் வேலைகளையும் தடுத்து விடுகிறது. இதனுடைய விளைவாக, சில நேரங்களில் கால்கிளல் செருப்புகள் உராய்ந்து ஏற்படுத்துகின்ற எரிச்சலையுா வலியையோ கூட உணர்ந்து கொள்ள முடியாது,

தீர்வு

பிளாக் டீ அல்லது கிரீன் டீ உங்களுடைய ரத்தத்தில் இருக்கும் குளுக்கோஸின் அளவைக் குறைத்து, நீரிழிவு நோயைக் கொஞ்சம் கட்டுப்படுத்தும். உடல் பருமன் கூட, நீரிழிவு நோய் உண்டாவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக இருக்கும். அதனால் உடல் எடை அதிகமாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது மிக அவசியம்.

பாத வெடிப்புகள்

பாத வெடிப்புகள்

தைராய்டு பிரச்னைகள் ஏதேனும் இருந்தாலும் கால் பாதங்களில் வறட்சியான வெடிப்புகள் தோன்றும். இந்த தைராய்டு சுரப்பிகள் தான், நம்முடைய தோலுக்குத் தேவையான ஹார்மோன்களை சரியாக ஒழுங்கு செய்கிறது. இந்த தைராய்டு சுரப்பிகள் சரியாக வேலை செய்யாத பொழுது, நம்முடைய பாதங்களில் உள்ள தோல்கள் உலர்ந்து போகும். அதன்பின் பாதங்களைச் சரிவர பராமரிக்காமல் விட்டுவிட்டால், பாதங்கள் அதிகமாக பாதிப்படையும்.

தீர்வு

தைராய்டு பிரச்னையின் வேறு சில அறிகுறிகள், அதிக சோர்வும் அதிக உடல்எடை அதிகமாதலும் தான். இதில் எந்த அறிகுறிகள் இருந்தாலும் மருத்துவரைச் சந்திப்பது நல்லது.

சிவந்த உள்ளங்கை

சிவந்த உள்ளங்கை

சிலருக்கு அடிக்கடி உள்ளங்கை சிவந்து போகும். அதற்குக் காரணம் கல்லீரல் நோய் பிரச்னையாகக் கூட இருக்கலாம். நோய்வாய்ப்பட்ட கல்லீரலால், நம்முடைய ரத்தத்தில் உள்ள ஹார்மோன்களைக் கட்டுப்படுத்த முடியாமல், போய்விடும். அதனால் உங்களுடைய ரத்தத்தின் நிறம் அதிக சிவப்பாகிவிடும். கல்லீரல் சரியாக வேலை செய்யவில்லை. என்பதை அதிக சிவப்பாக உள்ளங்கைகள் தான் சட்டென்று காட்டிக் கொடுக்கும். காரணம் உடலினுடைய மற்ற பாகங்களை விட, உள்ளங்கையின் தோல் மிகவும் மிருதுவாக இருக்கும்.

தீர்வு

கீழாநெல்லியை வாரத்தில் ஒருமுறையாவது சாப்பிட்டு வந்தால் கல்லீரல் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் குறையும். உடம்பில் உள்ள விஷத்தன்மையை மாதம் ஒருமுறையாவது போக்குவதற்கான தினம் ஏதாவது ஒரு பழத்தைச் சாப்பிடுங்கள்.

நகங்கள் வெளுத்துப் போதல்

நகங்கள் வெளுத்துப் போதல்

சிலருக்கு நகங்கள் வெளுத்துப் போய் காணப்படும். அதற்குக் காரணம் என்னவெனில் அவர்களுக்கு ரத்த சோகை இருக்கும். ரத்தத்திலுள்ள சிகப்பணுக்கள் அளவில் குறைகின்ற போது, சின்னச் சின்ன வேலையை செய்வதற்கும் உடல் பலம் ஏதுமின்றி, போகும். ரத்தத்தின் சிவப்பணுக்கள் குறைவதால், இயல்பாக நகம் இருக்க வேண்டிய பிங்க் நிறம் மாறி வெளுத்துக் காணப்படும்.

தீர்வு

இரும்புச்சத்து ரத்தத்தில் உள்ள சிகப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்யும். ஈரல், கீரை வகைகள் மற்றும் இறைச்சியை உணவுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும். மருத்துவர்களின் ஆலோசனையின் படி, குறிப்பிட்ட நாட்களுக்கு இரும்புச்சத்து மாத்திரைகள் மற்றும் பி12 மாத்திரைகளையும் எடுத்துக் கொள்ளலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

external symptoms for affecting internal organs

here we are giving some external symptoms for affecting internal organs.read and know it.
Desktop Bottom Promotion