Latest Updates
-
எச்சரிக்கை! உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப அசால்ட்டா இருக்காதீங்க.. -
ஹிரோஷிமா-நாகசாகியில் வெடித்த அணுகுண்டில் எத்தனை பேர் இறந்தார்கள்? உயிர் பிழைத்தவர்கள் நிலை என்னவானது தெரியுமா? -
18 ஆண்டுகளுக்கு பின் சிம்ம ராசியில் இணையும் சூரியன்-கேது: இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது -
உடனடி கார தோசையும், வெள்ளை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 07 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க மனஉளைச்சலால் கஷ்டப்படப்போறாங்களாம் -
மிதுன ராசியில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம் இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக மாற்றப்போகுதாம் -
கேரட் தக்காளி தொக்கு ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
இந்த இடங்களில் மச்சம் உள்ள ஆண்கள் சக்கரவர்த்தியாக வாழும் அதிர்ஷ்டம் உள்ளவர்களாம் - உங்களுக்கு இருக்கா? -
ஆரஞ்சு ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
12 மாநிலங்கள் வழியாக செல்லும் இந்தியாவின் உயிர்நாடி என்று அழைக்கப்படும் நெடுஞ்சாலை எது தெரியுமா?
மூட்டுவலி பிரச்னை அடியோடு விரட்டும் எளிய வீட்டு வைத்தியங்கள்
இங்கே மூட்டுவலியை சரிசெய்வதற்கான சில வீட்டு வைத்திய முறைகள் இங்கே கூறப்பட்டுள்ளன. அவற்றைப் பயன்படுத்தி பயன்பெறுங்கள்.
லேசான மூட்டுவலியை வீட்டியேலே சரி செய்துகொள்ளலாம். சுளுக்கோ அல்லது ஆர்த்தரைடிஸோ, வலியை குணப்படுத்த பல வழிகள் உள்ளன. நீங்கள் வீட்டிலேயே உங்களது முட்டி வலியை குணப்படுத்த முயற்சி செய்யும் முன் நீங்கள் சற்று கவனமாக இருக்கவேண்டும். காயங்களால் ஏற்படும் தீவிர வலிக்கு மருத்துவரை சந்திக்கவும். சில வகையான முட்டி வலிக்கு அறுவை சிகிச்சையும் மற்ற சிகிச்சை முறைகளும் தேவைப்படலாம். தீவிர ஆர்த்தரைடிஸ் போன்றவற்றிக்கு அறுவை சிகிச்சை தேவைப்படலாம்.

அறுவை சிகிச்சைக்கு பிறகு புதிதாக முட்டி வலி ஏற்பட்டால் மருத்துவரை பார்க்கவும். எனினும் வலி வீக்கத்தினாலோ, ஆர்த்தரைட்டிஸினாலோ அல்லது சிறு காயத்தாலோ ஏற்பட்டிருந்தால், வீட்டிலேயே அதற்கு சிகிச்சை செய்து கொள்ளலாம். மேலும் தெரிந்துகொள்ள மேற்கொண்டு படிக்கவும்.

சுளுக்குக்கு அரிசி
காலில் சுளுக்கு ஏற்பட்டிருக்கிறது என்றால், வீட்டிலேயே பர்ஸ்ட் எய்ட் செய்து கொள்ளலாம்.
முட்டியில் ஐஸ் கட்டி வைக்கவும், உறைய வைத்த பட்டாணி கூட உபயோகமாகிக்கலாம். வீக்கத்தை தடுக்க, உங்கள் முட்டியை பேன்டாஜ் வைத்து கட்டுங்கள், மிகவும் இறுக்கமாக கட்டவேண்டும், அது இரத்த ஓட்டத்தை பாதிக்கும். ஓய்வு எடுக்கும்போது காலை சற்று உயர்த்தி வையுங்கள்.

டாய் சி
டாய் சி சீனர்களின் பழமையான உடல் மன பயிற்சி முறை. இது உடலில் சமநிலையையும் வளைந்துகொடுக்கும் தன்மையையும் அதிகரிக்கும். ஆர்த்ரைடிஸ் அண்ட் ருமாட்டிசம் என்ற பத்திரிகையில் வெளியான ஒரு கட்டுரையில், டாய் சி ஆஸ்டியோ ஆர்த்தரைடிஸ் உள்ளவர்களுக்கு மிகுந்த பலன் அளிப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த பயிற்சி வலியை குறைத்து நகர்தலை அதிகரிக்கிறது. இது தரும் மன புத்துணர்வு நாட்பட்ட வலியை தாங்கவும் உதவுகிறது.

உடற்பயிற்சி மற்றும் எடை மேலாண்மை
தினமும் உடற்பயிற்சி செய்து மூட்டுகளை அசைப்பது, சிலருக்கு வலியை குறைக்க உதவியுள்ளது. ஆர்த்தரைடிஸ் உள்ளவர்கள் கால்களை அசைக்காமல் வைத்திருப்பது முட்டியை இறுக்கமாக்கி சூழ்நிலையை இன்னும் மோசமாக்கும். அதிகமான உடல் எடையும் பிரச்னையை தீவிரமாக்கும். எனவே எடை மேலாண்மை முக்கியம்.

வெப்ப மற்றும் குளிர் சிகிச்சை
நீங்கள் ஓய்வு எடுக்கும்போது வெப்பமூட்டியை முட்டி மீது வைப்பது மூட்டுகள் விறைத்துப்போகாமல் இருக்க உதவும். குளிரூட்டும் திண்டு அல்லது குளிரூட்டும் ஜெல் உபயோகிப்பது வலியையும் வீக்கத்தையும் குறைக்க உதவும். வெப்பமூட்டியையும் குளிர்ரூடியையும் மாற்றி மாற்றி உபயோகியுங்கள். காயம் ஏற்பட்ட முதல் 24 மணி நேரத்திற்குள் குளிரூட்டியை அதிகமுறை உபயோகப்படுத்தவும்.

மூலிகை சிகிச்சை
பாகிஸ்தான் ஜர்னல் ஆப் பயோலஜிக்கல் சயின்சஸ் என்ற பத்திரிகையில் வெளிவந்த ஒரு கட்டுரையில், ஆராய்ச்சியாளர்கள் இலவங்கப்பட்டை, இஞ்சி மற்றும் நல்லெண்ணெய் கொண்டு தயாரிக்கப்பட்ட ஒரு களிம்பு முட்டி வலிக்கு எவ்வாறு நிவாரணம் தருகிறது என்று ஆராய்ந்துள்ளனர். விற்பனையில் உள்ள, மேற்பூச்சு வலி நிவாரணியான சாலிசிலேட் கொண்ட கிரீம்களை போலவே இந்த களிம்பும் வலி நிவாரணம் தருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வில்லோ பட்டை
2001 ல் வெளிவந்த ஒரு ஆய்வில், ஆர்த்தரைடிஸ் உள்ளவர்களுக்கு வில்லோ மர பட்டை வலி நிவாரணம் தருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் சாறு பொதுவாக காய்ச்சல், வலி, வீக்கத்தை குறைக்க மூலிகை மருத்துவர்களால் பயன்படுத்தப்படுகிறது. உங்களுக்கு ஆஸ்பிரின் அல்ர்ஜி இருந்தாலோ அல்லது நீங்கள் இரத்த உறைதலை தடுக்கும் மருந்துகள் உட்கொள்பவராக இருந்தாலோ, வில்லோ பட்டையை உட்கொள்ள வேண்டாம். 4 வயதுக்கு குறைந்த வயதுடைய குழந்தைகளுக்கு வில்லோ பட்டை கொடுக்க வேண்டாம்.

இஞ்சி சாறு
இஞ்சி பல வடிவங்களில் கிடைக்கிறது. கடைகளில் பாக்கெட்டுகளிலும் கூட கிடைக்கிறது. இஞ்சி வேர் மற்றும் இஞ்சி டீ மளிகை கடைகளில் கிடைக்கிறது. ஆர்த்தரைட்டீஸுக்கு மருத்துவர் பரிந்துரைத்த மருந்துடன் சேர்த்து இஞ்சி எடுத்துக்கொள்ளும்போது, சிறந்த பலன் கிடைப்பதாக ஒரு ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.

க்ளுகோஸமைன்
கடந்த பத்து வருடங்களில் வணிக விளம்பரங்களின் தாக்கத்தால் க்ளுகோஸமைன் மற்றும் காண்ட்ராய்டின் ஸல்பேட் ஆகிய இரண்டும் மூட்டு ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என்று நம்பப்படுகிறது. ஆராய்ச்சி முடிவுகள், லேசான மற்றும் மிதமான ஆஸ்டியோஆர்த்தரைடிஸ் உள்ளவர்களுக்கு இது குறைந்த விளைவே ஏற்படுத்துகிறது என்று கூறுகின்றன. எனினும் இந்த இரண்டும் அதி தீவிர வலி உள்ளவர்களுக்கு நல்ல வலி நிவாரணத்தை தருகின்றன.

கவனிக்க வேண்டியவை
நீங்கள் வீட்டில் ஏதாவது மாற்று சிகிச்சை முறையை கையாளும் முன் உங்கள் மருத்துவரை கலந்தாலோசியுங்கள். சில வகையான நிவாரணிகள் நீங்கள் உட்கொள்ளும் மற்ற மருந்துகளுடன் சேர்ந்து தேவையற்ற பக்க விளைவுகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
உங்கள் வலிக்கான காரணத்தை கண்டுபிடிப்பதும் முக்கியம். தீவிரமான பிரச்சனையை கண்டறிய இரத்த பரிசோதனை, எக்ஸ்-ரே போன்றவை கூட தேவைபடலாம். எவ்வளவு விரைவாக பிரச்சனையை கண்டுபிடிக்கிறீர்களோ அவ்வளவு விரைவாக தீர்வைக் காணலாம்.



Click it and Unblock the Notifications