For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஸ்டிராவை ஒரு தடவைக்கு மேல நாம ஏன் பயன்படுத்துறது இல்லனு தெரியுமா? இதுதான் காரணம்

|

பிளாஸ்டிக் ஸ்ட்ராவை பயன்படுத்துவதைப் பற்றிய அனைத்து உண்மைகளையும் நீங்கள் அறியும்போது, உங்கள் மனதை மாற்றிக் கொண்டு அதைத் தூக்கி எறிந்து விட்டு குடிப்பீர்கள். சிலர் அதை உபயோகிக்கிறார்கள், ஏனென்றால் அதை மிகவும் வசதியாகக் கருதுகிறார்கள், மற்றவர்கள் அதன் மூலமாக தங்களது பற்களில் கறைகளைத் தடுக்கிறார்கள் என்று நம்புகிறார்கள். ஆனால், இது உங்களை சர்க்கரை பானங்கள் மற்றும் கேவிட்டிஸ் - லிருந்து பாதுகாக்காது மற்றும் உங்களுக்கு கூடுதல் கெடுதல்களையும் செய்யும் என்று உங்களுக்குத் தெரியாது.

Reasons to Never Use Plastic Straws Again

பிளாஸ்டிக் ஸ்ட்ரா உங்கள் ஆரோக்கியத்தைப் பாதிக்கக்கூடிய காரணங்களைக் கண்டுபிடிப்பதற்காக வேடிக்கையான உண்மைகளின் எங்கள் சொந்த ஆராய்ச்சி 5 முடிவுகளைக் கொடுத்தது,

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
புகைப்பவரின் உதடுகள்

புகைப்பவரின் உதடுகள்

உங்கள் அழகைப் பற்றி நீங்கள் உண்மையிலேயே கவலைப்படுபவராக இருந்தால், புகைபிடித்தல் உதட்டில் சுருக்கங்களை தோற்றுவிக்கிறது என்பதை நீங்கள் அறிவீர்கள். இதேபோல் ஒரு ஸ்ட்ரா கொண்டு குடிப்பதும் அதே விளைவுத்தான் ஏற்படுத்துகிறது .

ஸ்ட்ராவை அடிக்கடி பயன்படுத்துவதால் உங்கள் வாயைச் சுற்றியுள்ள தசைகள் காரணமாக உதட்டில் சுருக்கங்கள் ஏற்படுகிறது. எவ்வளவு அதிகமாக நீங்கள் பயன்படுத்துகிறீர்களோ அவ்வளவு ஆழமாக வரிகள் தோன்றத் துவங்குகிறது.

அதிகப்படியான கேஸ் மற்றும் வீக்கம்:

அதிகப்படியான கேஸ் மற்றும் வீக்கம்:

ஸ்ட்ரா கொண்டு குடிப்பது உங்கள் வயிற்றில் அதிக தேவையற்ற காற்றைப் பெற எளிதான வழியாகும் என்று நம்மில் பலர் உணரவில்லை. இதன் விளைவாக, இது வாயு மற்றும் வீக்கத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அது நீங்கள் குடிக்கும் பானத்தின் தன்மையைப் பொருத்ததில்லை. மேலும் நீங்கள் எவ்வளவுக்கு எவ்வளவு ஸ்ட்ராவின் பயன்பாட்டை அதிகரிக்கிறீர்களோ, அவ்வளவு சங்கடகரமான உணர்வை உங்கள் வயிற்றில் உணர்வீர்கள்.

நீங்கள் ஒரு ஆரோக்கியமான உணவுப் பழக்கமுறையை பின்பற்றத் தொடங்கத் தீர்மானித்திருந்தால், ஸ்ட்ராவைத் தவிர்ப்பது நல்லது.

MOST READ: விஷ்ணுவை ஏன் வியாழக்கிழமை நாளில் வழிபட வேண்டும்?... எப்படி வழிபடணும்?

பல் துவாரங்கள் மற்றும் பற்சிதைவு

பல் துவாரங்கள் மற்றும் பற்சிதைவு

ஆராய்ச்சிகளின் படி, ஸ்ட்ராவைப் பயன்படுத்துவதால், நீங்கள் கேவிட்டிஸ்களிலிருந்து பற்களைக் காப்பாற்ற முடியாது, மேலும் பற் சிதைவின் பெரிய ஆபத்தில் அகப்பட வாய்ப்புள்ளது. நீங்கள் தொடர்ந்து ஸ்ட்ராவைப் பயன்படுத்தினால், சர்க்கரை மற்றும் அமில பானங்கள் சில பற்களைப் பாதிக்கின்றன. சர்க்கரை விரைவாகவோ அல்லது பின்னரோ பற்களில் குழிகளை ஏற்படுத்துகிறது.

நீங்கள் பற்சிதைவுக்கு பயப்படுகிறீர்கள் என்றால், அதற்கான சரியான வைத்தியம் சரியான சுகாதாரமேயன்றி ஸ்ட்ரா அல்ல.

காயங்கள்

காயங்கள்

காயங்கள்? இது முதல் பார்வையில் பைத்தியகாரத்தனமாகத் தோன்றலாம். ஆனால் பிளாஸ்டிக் ஸ்ட்ராக்கள் குறிப்பாக குழந்தைகளில் விநோத காயங்களை ஏற்படுத்த நிறைய வாய்ப்புள்ளது.

செய்திகளின் படி, ஒரு ஆண்டுக்கு சுமார் 1,400 மக்கள் பிளாஸ்டிக் ஸ்ட்ராக் காயங்களால் அவசர சிகிச்சைப் பிரிவுக்குச் செல்லுமளவிற்கு பாதிக்கப்படுகிறார்கள்: காது மற்றும் மூக்கில் செருகல், lacerations, மற்றும் கார்னியல் சிராய்ப்புகள்.

மாசு

மாசு

தேசிய புவியியல் அமைப்பின் படி, கடலுக்கு மிக அதிக பாதிப்பை ஏற்படுத்தும் மிகவும் ஆபத்தான வகையான பிளாஸ்டிக்கில் இந்த ஸ்ட்ராவும் ஒன்றாகும். அவைகளின் சைஸ், மீன் போன்ற கடல் விலங்குகளை அடிக்கடி அவைகளை உண்ணத் தூண்டுகிறது.

ஆராய்ச்சி முடிவுகள் பிளாஸ்டிக் ஸ்ட்ராக்கள் எவ்வளவு ஆபத்தானவை என்பதை நிரூபித்துள்ளது. அவை 2017 ஆம் ஆண்டில் கடலில் உள்ள 11 வது மிகப்பெரிய குப்பைகளாகக் கருதப்படுகின்றன, மேலும் அவை சிதைவுற குறைந்தபட்சம் 200 ஆண்டுகள் ஆகும் எனவும் கூறுகின்றன.

MOST READ: கல்யாணம் முடிஞ்சு வீட்டுக்கு வந்ததும் மொதல்ல ஏன் பால், பழம் தர்றாங்க தெரியுமா? இதுக்குதான்...

பிளாஸ்டிக் ஸ்ட்ராக்களுக்கு மாற்று

பிளாஸ்டிக் ஸ்ட்ராக்களுக்கு மாற்று

1. சிறந்த வழி, ஸ்ட்ராக்களை பயன்படுத்தாமல் இருப்பதேயாகும். இது சொந்த ஆரோக்கியத்தை கவனித்து, பொல்யூசனுக்கு எதிராகப் போராடுபவர்களுக்கு உகந்தது.

2. மூங்கில் ஸ்ட்ரா: நீங்கள் விரும்பும் பல முறைகளில் இவற்றைப் பயன்படுத்தலாம், இவை முற்றிலும் சூழல் நட்புடையவை.

3. காகித ஸ்ட்ரா: இந்தப் பொருள் நிச்சயமாக எளிதில் சிதைகிறது.

4.மெட்டல் ஸ்ட்ரா: இது உணவகங்கள் மற்றும் கஃபேக்கள்க்கு நல்ல தீர்வாக இருக்கலாம். அவற்றை சுத்தம் செய்து அவற்றை மீண்டும் பயன்படுத்துங்கள்.

நீங்கள் ஸ்ட்ராக்களைப் பயன்படுத்துகிறீர்களா? நீங்கள் அவைகளுக்கு எதிராக இருக்கிறீர்கள் அல்லது சில சுற்றுச்சூழல் ரீதியான மாற்றுகளைப் பயன்படுத்தினால் அல்லது பயன்படுத்த விரும்பினால், கருத்து தெரிவிக்கவும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

5 Reasons to Never Use Plastic Straws Again

here we are talking about the important 5 Reasons to Never Use Plastic Straws Again.
Story first published: Thursday, December 20, 2018, 11:20 [IST]
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more