For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  எப்பவுமே பாலாப்பழத்த பத்தி பேசுறோமே... அதோட இலையில இருக்கிற அற்புதம் என்னன்னு தெரியுமா?

  |

  பலா மரத்தை பற்றி பேசும்போது, முதலில் நினைவுக்கு வருவது அதன் பழம். பலா பழம் சமையல் பொருளாக பொதுவாகப் பயன்படுவத்தல் நாம் இம்மரத்தின் வேறெதையும் விட பழத்தை நன்கு அறிந்திருக்கிறோம். ஆனால், உண்மையில் மிகவும் இம்மரத்தின் பிற பகுதிகள் குறிப்பாக நமது ஆரோக்கியத்திற்காக மிக சிறந்தது என்பது நமக்குத் தெரிந்து இருக்க முடியாது.

  health

  பல நேரங்களில், நாம் இந்த மரத்தின் இலைகளை பற்றி அதிகம் பேசுவது இல்லை. இம்மரத்தின் இலைகள் இயற்கையாக பல சுகாதார நலன்கள் கொண்டுள்ளன. படித்த பிறகு இவ்வளவு நன்மைகளா என்று ஆச்சரியப் படக்கூடாது. உதாரணத்திற்கு, பல பிரபலமான மர இலைகள், எடுத்துக்காட்டாக கொய்யா இலைகள், வயிற்றுப்போக்கை குணப்படுத்த உதவும் என்று பலர் நம்புகிறார்கள். மற்றும் வெண்ணெய் பழ மரத்தின் இலைகள் மிகுந்த நன்மைகள் கொண்டது, இதில் இருந்து பலா மர இலைகள் விதிவிலக்கல்ல. உங்களுக்கு சில நோய்கள் இருந்தால், மருந்து அல்லது வெண்ணெய் இலைகளை கிடைக்கவில்லை என்றால், பயப்பட வேண்டாம்!

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
  ஊட்டச்சத்து

  ஊட்டச்சத்து

  ஸ்ரீகாந்த் பஸ்லிங்கப்பா ஸ்வாமி, என்.ஜே. தாக்கோர், பி மா ஹல்தன்கர் மற்றும் எஸ்.பீ கல்ஸி ஆகியோரால் எழுதப்பட்ட கட்டுரையின் படி பலா மர இலைகளில் சோப்புஜெனின்கள், சைக்ளோரார்டினோன், சைக்ளோர்ட்டெனோல், β-சைமோஸ்டெரால் - sapogenins, cycloartenone, cycloartenol, β-sitosterol (நாத் மற்றும் சதுர்வேதி 1989) மற்றும் டானின்கள் ஆகியவற்றின் இருப்பையும், ஈஸ்ட்ரோஜெனிக் செயல்பாடும் காட்டப்பட்டுள்ளது. எனவே மற்ற இலைகளுக்கு பதிலாக நீங்கள் உங்கள் இருப்பிடத்தை சுற்றி காணப்படும் பலா மர இலையை பயன்படுத்தலாம்.

  ஆரோக்கியம்

  ஆரோக்கியம்

  இங்கே யார் தான் ஆரோக்கியமாக இருக்க விரும்பாதவர்கள்? உங்கள் ஆரோக்கியத்தை பாதிக்கும் பல்வேறு காரணிகள் இருந்தாலும், பல மர இலைகள் உங்கள் ஆரோக்கியத்தை பராமரிப்பதற்கான வாய்ப்பை அதிகரிக்கும். பலாப்பழம் இலைகளில் உள்ள பொருள்கள் உங்கள் உடல் எதிர்ப்ப்பு சக்தியை உறுதிப்படுத்துகிறது. எனவே, நீங்கள் எந்த நோய்க்கும் நோயெதிர்ப்பு பெற்றவராக இருக்க போகிறீர்கள். நீங்கள் பலா கொட்டையின் ஆரோக்கிய நன்மைகள் பற்றியும் படிக்கலாம்.

  தோல் பிரச்சினை

  தோல் பிரச்சினை

  சரி, நீங்கள் சில வழக்கமான உடற்பயிற்சி செய்பவராக இருந்தால், உங்களுக்கு முழங்கால் காயம் என்பது அடிக்கடி ஏற்படும் ஒன்று. நீங்கள் பல நாள் முன்பு காயமடைந்திருந்தாலும், வடு நீங்காது. இது ஒருவேளை உங்களை கவலையை உண்டாக்கலாம். கவலைப்படாதீர்கள், பலாப்பழம் இலைகள் வேகமாக இதை குணப்படுத்தும் மற்றும் உங்கள் கவலையை நீக்கிவிடும். மேலும், அது இறந்த சரும செல்களை மீண்டும் உருவாக்கி ஒரு இயற்கை அழகு சிகிச்சை மருந்தாக செயல்பட முடியும்.

  எப்படி பயன்படுத்த வேண்டும்?

  எப்படி பயன்படுத்த வேண்டும்?

  • முதலில் நீங்கள் பலாப்பழம் இலைகளை கையளவு எடுத்துக் கொள்ளலாம் (மிக முற்றியது அல்லது இளம் இலைகளை தவிர்க்கவும் ).

  • சுத்தமான தண்ணீரில் இலைகளை கழுவவும்.

  • மென்மையான இலைகளை அரைத்து பசை போல ஆக்கவும்

  • பசையை முகத்தில் தடவி (முகமூடியைப் போல) வைக்கவும். குறைந்தபட்சம் வாரம் ஒரு முறை அல்லது தினசரி செய்யுங்கள். அவ்வாறு செய்யும் பொது நல்ல பலன்களை காணலாம்.

  வயதான தோற்றத்தை மாற்றும்

  வயதான தோற்றத்தை மாற்றும்

  இது உண்மையில் இளம் வயது முதுமை தோற்றம் அல்லது முதுமையை தடுக்கும். இதன் இலைகள் நோய் எதிர்ப்பு ஏஜெண்டுகள் நிறைந்தவை, இது முன்கூட்டிய வயதாவதை தடுக்க முக்கிய பங்கைக் கொண்டுள்ளது. அது எப்படி முக்கியம்? இதன் இலையில் உள்ள எதிர்ப்பு காரணிகள் நமது உடலில் உள்ள முதிர்ச்சியை வெளி காட்டக்கூடிய பொருள்களை அழித்து உங்களை இளமையுடன் காண வலி வகை செய்யும். இது பல்வேறு நோய்களை தடுக்க உதவும் பைட்டோ-நியூட்ரியன்ட் (Phytonutrients) கொண்டுள்ளது.

  ஆராய்ச்சியின் படி, (phytonutrient) பைட்டோ-நியூட்ரியன்ட் நிறைந்த உணவு உட்கொள்வதால் புற்றுநோய் மற்றும் இதய நோய் அபாயங்கலில் இருந்து நம்மை காக்க உதவும் வழிமுறையாகும். மேலும், பைட்டோ-நியூட்ரியன்ட்பற்பல நோய்களை குணப்படுத்துகின்றன, காய்ச்சலை குணப்படுத்துகின்றன, எலும்புப்புரையைத் தடுக்கவும், உயர் இரத்த அழுத்தம் தடுக்க இரத்த ஓட்டத்தை கட்டுப்படுத்தவும் காரணமாக உதவும்.

  எனவே, புற்றுநோய் அல்லது இதய நோய் உங்களுக்கு ஏற்பட்டால் இந்த இலையை வழக்கமாக உண்டு வந்தால் இவை மட்டும் அல்லாமல் பல்வேறு நோய்களைத் தடுக்க உதவும்.

  புண்களை குணப்படுத்தும்

  புண்களை குணப்படுத்தும்

  நீங்கள் பலாப்பழம் இலைகளின் சாம்பல் கொண்டு உடலின் வெளிப்புறத்தில் ஏற்படும் புண்களை குணப்படுத்த முடியும். இது உடலின் மேல் பகுதிகளில் வரும் புண்களை குணமாக்கும் எளிய செயல்முறை பின்வருமாறு:

  • முதலில் நீங்கள் மக்காச்சோளம் மற்றும் தேங்காய் ஓடுகள் கொண்டு உலர்த்தப்பட்ட பழுப்பு இலைகளை எரிக்க வேண்டும்.

  • சாம்பலை எடுத்துகொள்ள வேண்டும்

  • யூகலிப்டஸ் அல்லது தேங்காய் எண்ணெய் (இது உங்கள் விருப்பம்) உடன் கலக்கவும்.

  • நீங்கள் சிகிச்சை விரும்பும் பகுதியில் இந்த கலவையை தடவவும்.

  நீரிழிவு நோய்

  நீரிழிவு நோய்

  பலா இலை உங்கள் இரத்த சர்க்கரை அளவை குறைப்பதன் மூலம் நீரிழிவு நாயை கட்டுப்படுத்தும். எனவே, பலா இலைகள் நீரிழிவு நோய்க்கு நல்லது. (நீங்கள் படிக்கலாம்: நீரிழிவு நோய்க்கான கருப்பு சாக்லேட் நன்மைகள்)

  தாய்ப்பால்

  தாய்ப்பால்

  தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு, பலா மர இலைகளை சாப்பிடுவதால் மார்பக பால் உற்பத்தி அதிகரிக்கும். அதற்கான நிறைய சாப்பிட்டு விடாதீர்கள். தினமும் ஒரு இலை அளவு சாப்பிட்டாலோ அல்லது 4 இலைகளைப் போட்டு கஷாயமாகவோ சாப்பிடலாம்.

  உடல் எடை குறைக்க

  உடல் எடை குறைக்க

  தங்கள் உடல் எடையை குறைக்க வேண்டுமா? பலா மர இலை உங்கள் உணவில் கட்டாயம் ஒரு நல்ல தீர்வை கொடுக்கும். நீங்கள் படிக்கலாம்: வேகவைத்த ஆப்பிள் உடல் நல நன்மைகள்

  நச்சுத்தன்மை

  நச்சுத்தன்மை

  இதன் இலையை நுகர்வுக்குப் பயன்படுத்தினால், உங்கள் உடலில் இருந்து நச்சுப் பொருள்களை நீக்கலாம். உடலில் உள்ள டாக்சினை வெளியேற்றுவதில் மிகச்சிறந்த பங்கு ஆற்றுகிறது.

  புற்றுநோய்

  புற்றுநோய்

  சில ஆய்வுகள் படி, நீங்கள் பலா இல்லை மற்றும் முள்ளு சீதா மர இலை ஆகியவற்றை கலந்து உண்பது மூலம் மூலம் புற்று நோயை குணப்படுத்த முடியும். ஏனெனில் இந்த கலவை புற்றுநோய் மீட்புத் தன்மையை வலுவாக்கும். (நீங்கள் படிக்கலாம்: முள்ளு சீதா மர இலையின் நன்மைகள்)

  பிற நன்மைகள்

  பிற நன்மைகள்

  • இந்த இலைகளில் இருந்து பிரித்தெடுக்கப்படும் மருந்தானது ஆஸ்துமாவை குணமாக்கவும், வட்டப்புழுவின் தொற்று நோயைத் தடுக்கிறது மற்றும் கால்கலில் வெடிப்பை குணப்படுத்துகிறது.

  • சூடாக்கப்பட்ட இதன் இலைகள் காயங்கள், வீக்கம் மற்றும் காது பிரச்சினைகளை குணப்படுத்தவும், வலி நிவாரணம் பெறவும் உதவுகின்றன. முதிர்ந்த இலைகள் மற்றும் மரப்பட்டைகளின் பித்தப்பை பிரச்சனைகளை கையாள பயன்படுகிறது.

  உலர்ந்த மற்றும் தூளாக்கப்பட்ட இலைகளில் இருந்து தயாரிக்கப்படும் தேநீர் ஆஸ்துமாவை நிவாரணம் செய்ய பயன்படுத்தலாம். இதுவரை பலா மர இலையின் நம்மைகள் குருத்து அறிந்தோம் இப்போது இந்த இலை உள்ளே மேலும் என்ன உள்ளது என்பதை பார்ப்போம்.

  எச்சரிக்கை

  எச்சரிக்கை

  பட்டை, மரம், இலைகள், பழம் மற்றும் விதைகள் போன்றவற்றில் பாக்டீரியா எதிர்ப்பு தன்மை மிகுந்த அளவில் காணப்படுவதால் இவற்றை மற்ற மருந்துகளுடன் சாப்பிடும்போது கவனம் தேவை. ஆகையால், நீங்கள் பிற ஆண்டிபயாடிக்குகள் மற்றும் மூலிகைகள் சாப்பிடுபவரானால் பலா இல்லை நேர் மறை விளைவுகளை ஏற்படுத்தும், எனவே தயவு செய்து பலா மர இலைகளை எடுத்துக்கொள்ளாதீர்கள்.

  இந்த இல்லை சாதாரண மற்றும் வகை 2 நீரிழிவு நோயாளிகளுக்கு குளுக்கோஸ் அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. எனவே, இரத்த சர்க்கரையை மாற்றியமைக்கும் மருந்துகளைப் பயன்படுத்துவதில் கவனமாக இருக்கவேண்டும். நீரிழிவு நோயாளிகள், எந்த மூலிகை மருத்துவத்தையும் எடுத்துக்கொள்வதற்கு முன்னும், ஒரு மருத்துவ நிபுணரை அணுகுவது மற்றும் ஆலோசனை பெறுவது அவசியம்.

  பின்பற்ற வேண்டியவை

  பின்பற்ற வேண்டியவை

  • சுமார் 10-15 இலைகளை எடுத்துக்கொள்ளுங்கள்.

  • இரண்டு துண்டு மஞ்சள் கிழங்கை எடுத்துக்கொள்ளவும் .

  • ஏழு குவளை ஆற்று தண்ணீரை கண்ணாடி எடுத்துக்கொள்ளுங்கள்.

  • அனைத்து பொருட்களையும் நன்றாக கொதிக்க விடவும் .

  • மூடிய பாத்திரத்தில் குளிர வையுங்கள் வரை.

  • தினசரி சாப்பாட்டிற்கு முன் அல்லது அதற்குப் பிறகு இதை அருந்தவும்.

  மேற்க்கண்ட அறிவுரைகள் உங்கள் மருத்துவ பிரச்சனையை தீர்ப்பதற்கான திட்டவட்டமான வழியைக் குறிக்கவில்லை என்பதை கவனத்தில் கொள்க. நீங்கள் உங்கள் மருத்துவ ஆலோசனைகளை தொடர்ந்து பின் பற்ற வேண்டும்.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

  English summary

  10 Unbelievable Health Benefits of Jackfruit Leaves

  jackfruit leaves have health benefits. Look up other famous tree leaves, such as Guava leaves that many people believe can help to cure diarrhea
  Story first published: Monday, June 18, 2018, 18:20 [IST]
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more