For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அதிக நேரம் சேரிலேயே உட்காந்திருக்கீங்களா? எந்தெந்த உறுப்புகள் பாதிக்கப்படும் தெரியுமா?

அதிக நேரம் சேரிலேயே உட்கந்திருக்கீங்களா? எந்தெந்த உறுப்புகள் பாதிக்கப்படும் என இந்த கட்டுரையில் சொல்லப்பட்டுள்ளது

By Hemalatha
|

சேரில் உட்காந்த பசை போட்டது போல் காலையிலிருந்து மாலை வ்ரை அசையாம உட்காந்திருக்கிற 10ல ஒருத்தர்தானே நீங்க? நிச்சயம் முதுகு கழுத்து வலி இல்லாமல் இருக்காது. ஏனென்றால் அவை வெளிப்பகுதியில் இருப்பதால் உங்களுக்கு எளிதாக தன் வலி தெரிந்து விடும். ஆனால் என்னைக்காவது உள்ளே இருக்கும் உறுப்புகளைப் பற்றி யோசிச்சிருக்கீங்களா?

What happens to your Inner organs when you sit for long time


அவை உள்ளே மௌனமாக அழுது கொண்டிருப்பது உங்கள் காதில் அப்போதைக்கு தெரிய வராதுதான். ஆனால் அதன் அறிகுறிகள் வெளியே தெரிய வர ஆரம்பிக்கும்போதுதான் ஒன்றொன்றாக யோசித்து பார்ப்பீர்கள்.

உண்மையில் நீங்கள் நீண்ட நேரம் நாற்காலியில் அமர்ந்து கொண்டிருக்கும்போது ஒவ்வொரு உறுப்பும் அதிகமாக அழுத்தப்படுகின்றன . இதனால் ஹார்மோன் மாற்றங்கள், உடல் இயக்கம் தவறுதல் என பல பாதிப்புகள் உருவாகின்றன. இவற்றுள் முதன்மையான காரணம் என்ன தெரியுமா? தொடர்ந்து படியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
முதன்மையான மாற்றம் :

முதன்மையான மாற்றம் :

நீங்கள் உட்கார்ந்து விட்டு எழுந்திருக்கும் ஒவ்வொரு சமயத்திலும் உங்களின் வளர்சிதை மாற்றன் நடக்க தூண்டப்படும். அமர்ந்த 90 வி நாடிகளுக்குள் எழும்போது உங்கள் சர்க்கரை, கொழுப்பு போன்றவை வளர்சிதை மாற்றத்திற்கு உட்படுகிறது. இதனால் சர்க்கரை வியாதி வராமல் தடுக்க முடியும்ன். ஆனால் எழுந்து கொள்ளாமல் நீண்ட நேரம் அமரும்போது இது சாத்தியமாகாது.

இதயம் :

இதயம் :

நீங்கள் அமர்ந்து கொண்டிருக்கும்போது, ரத்த ஓட்டம் குறைவாக இருக்கும். கொழுப்புகள் கரையாமல் இதய வால்வுகளில் தேங்கும் அபாயம் உண்டு. இதனால் ஹார்ட் அட்டாக், மற்றும் இதய நோய்கள் வரும் அபாயம் அதிகம் என ஆய்வுகள் கூறுகின்றன.

கணையம் :

கணையம் :

அதிக நேரம் அமரும்போது உங்கள் உடல் இன்சுலின் சுரப்பிற்கு கட்டுப்படாமல் சர்க்கரையை அதிகரித்துக் கொண்டே செல்லும். இதனால்தான் டைப் 2 டயாபடிஸ் வருவதற்கான அதிக வாய்ப்புகள் உண்டு.

ஜீரண நோய்கள் :

ஜீரண நோய்கள் :

தொடர்ந்து உங்கள் அடிவயிறு அழுத்தப்படும்போது உங்கள் ஜீரண உறுப்புகள் பாதிக்கப்பட்டு, வயிறு பிடிப்பு, உப்புசம், நெஞ்செரிச்சல் தொடங்கி இறுதியில் ஜீரண நோய்கள் வராமல் காப்பது உங்கள் கையில்தான் இருக்கிறது. உஷாராய் இருங்கள்.

குடல் புற்று நோய் :

குடல் புற்று நோய் :

தொடர்ச்சியாக அதிக நேரம் அமர்வதால் குடல், மார்பகம், கர்ப்பப்பை புற்று நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

நுரையீரல் புற்று நோய் - 54%

கர்ப்பப்பை புற்று நோய் - 66%

குடல் புற்று நோய் - 30%

இந்த சதவீதத்தில் ஆபத்து நம்மை நெருங்காமல் காப்பதென்றால் நீண்ட நேரம் அமர்வதை முதலில் விடுங்கள்.

மூளை பாதிப்பு :

மூளை பாதிப்பு :

தெரியுமா? உங்கள் மூளையின் செயல்கள் மெல்ல குறைந்து கொண்டே வருமாம். நீங்கள் அசைய அசையத்தான் மூளை புதிதான் ஆக்ஸிஜன் எடுத்துக் கொள்ள முனையும். ஆனால் ஒரே இடத்தில் அமரும்போதும் ஆக்ஸிஜன் வரத்து மூளைக்கு குறைய ஆரம்பிக்கும்.

கழுத்து மற்றும் தோள்பட்டை வலி :

கழுத்து மற்றும் தோள்பட்டை வலி :

இது சாதரணமாக உங்களுக்கே தெரிந்திருக்கும். உங்கள் கழுத்தை முன்னெ வைத்தபடி மிகவும் ஈடுபாடோடு வேலை செய்யும்போது உங்கள் கழுத்தெலும்பு பாதிக்கப்படுவதை அப்போது உணர மாட்டீர்கள். மெல்ல மெல்ல கழுத்து அசைய முடியாதபடி வலி எடுக்கும்போதுதான் செய்த தவறு தெரிய வரும்.

முதுகு :

முதுகு :

முக்கியமான உறுப்பு, முதுகுதண்டுவடத்தில் நீங்கள் கொடுக்கும் அளவுக்கதிகமக அழுத்தம் உங்கல் இடுப்பு வரை பாதித்து பிரச்சனைகளால உருவெடுக்கும். பின்னர் நடந்தால் வலிக்கும். அமர்ந்தால் வலிக்கும் என மாத்திரகளைக் கொண்டு ஒப்பெற்றுவது மிகப்பெரிய ஆபத்தை கொண்டு தருவதாக அமையு

தசை பாதிப்பு :

தசை பாதிப்பு :

வயிறு மற்றும் தசை கள் பிடிப்பு சாதரனமாகிவிடும். குறிப்பாக அதிக நேரம் அமரும்போது படாத பாடு படுவது இடுப்புதான். இடுப்பிற்கு அசைவே இல்லாமல் இருக்கும்போது ரத்த ஓட்டம் குறைந்து அங்கிருக்கும் தசைகள் பாதிகப்பட்டு தாங்க முடியாத இடுப்பு வலி வருவது இதனால்தான்.

 கால் நோய்கள் :

கால் நோய்கள் :

உங்கள் கால்களுக்கு குறைவான ரத்த ஓட்டம் செல்வதால் வெரிகோஸ் போன்ற நோய்கள் உருவாவதற்கான வாய்ப்புகள் அதிகம். இதனல கால் வீக்கம்,. பாத வீக்கம் என ஒவ்வொர் தொல்லையாக ஆரம்பிக்கும்.

எலும்பு தொய்வு :

எலும்பு தொய்வு :

எல்லாவ்ற்றிற்கும் மேலாக எலும்பு வளர்ச்சி பாதிக்கப்படும். பலவீனமான எலும்புகள் உங்களுக்கு இம்சையை தரும். வயது ஆகும்போது ஆஸ்டியோஃபோரோசிஸ் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

 இந்த பாதிப்பெல்லாம் தடுக்க என்ன வழி :

இந்த பாதிப்பெல்லாம் தடுக்க என்ன வழி :

ரொம்ப சிம்பிள். அதிகமான நேரம் உட்காந்துட்டே இருக்காதீங்க. மந்தின குறைந்தது 7000- 10,000 அடி வரை நடந்தால்தான் அவனது உள்ளுறுப்புகளுக்கு குறைந்த பட்சம் ஆரோக்கியம் கிடைக்கும். ஆகவே ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கு எழுந்து ஒரு நடை போயிட்டு வாங்க.

 அமர்ந்து கொண்டே என்ன முயற்சிக்கலாம் :

அமர்ந்து கொண்டே என்ன முயற்சிக்கலாம் :

அங்கே இங்கே நகர முடியவில்லையென்றால் என்ன செய்யலாம் தெரியுமா? உங்கள் கால்களை முன்னும் பின்னும்அவ்வப்போது ஆட்டிக் கொண்டேயிருக்க வேண்டும். குனிந்து நிமிர்ந்து இரு முறை எழுந்திருங்கள். கழுத்தை இடம் வலமாக, மேலும் கீழும் ஆட்ட வெண்டும். இதெல்லாம் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒருமுறை செய்ய வேண்டும்.

நடை அவசியம் :

நடை அவசியம் :

குறைந்தபட்சமாக மாடிப்படியாவது ஏறுங்கள். இதனால் உங்கள் இதயத்திர்கும் முதுகிற்கும் மிகவும் நல்லது. மதிய வேளையில் காலார கொஞ்சம் நடந்து விட்டு வாருங்கள்.

சாய்ந்து அமர்தல் :

சாய்ந்து அமர்தல் :

நாற்காலியில் அமரும்போது எல்லாரும் மறப்பது என்னவென்றால் சாய்ந்து அமர்வது. சாய்ந்து மூச்சை ஆழ்ந்து ஒருமுறை விடும்போது உங்கள் முதுகு ஆசுவாசமாகிரது. உள்ளுறுப்புகளுக்கு சீராக ரத்தம் செல்லும். கழுத்து முதுகு வலியை தடுக்கலாம்.

முன்னெர்ச்செரிக்கை :

முன்னெர்ச்செரிக்கை :

ஆய்வுகள் கூறுவது இருக்கட்டும். நீங்களே நீண்ட நேரம் அமர்வதால் பலவித பிரச்சனைகளை அனுபவப்பூர்வமாக உணர்ந்திருப்பீர்கள். ஆகவே பிரச்சனைகளை பூதாகரமாக்காமல் வரும் முன் காப்பது சிறந்தது. ஆகவே மெலே சொன்னப்படி கடைபிடியுங்கள். பாதிப்புகள் வராமல் தற்காத்துக் கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

What happens to your Inner organs when you sit for long time

What happens to your Inner organs when you sit for long time
Desktop Bottom Promotion