மாதவிடாய் துவங்கியவுடன் நிறுத்த வேண்டுமா? இதனை பின்பற்றிப்பாருங்கள்!

Posted By:
Subscribe to Boldsky

பெண்களின் வாழ்க்கையில் மிகவும் அடிப்படையான விஷயங்களில் ஒன்றாக இருப்பது மாதவிடாய்.மாதவிடாய் இருக்கிற ஒரு வார காலம் பெண்களுக்கு சிரமமானதாகவே

இருக்கும்.

தங்கள் அன்றாட வாழ்க்கையில் பல சிரமங்களை சந்தித்தாலும் தங்கள் வாழ்க்கையில் ஒன்றோடு ஒன்றாகி விட்டபடியால் அதனையும் தாங்கிக் கொள்ள வேண்டிய

கட்டாயம்.

சில தர்மசங்கடமான சூழ்நிலையில் பெண்கள் எல்லாரும் ஒருமுறையாவது இந்த மாதவிடாய் இல்லையென்றால் எப்படியிருக்கும் என்று எதாவது ஒரு கட்டத்தில் யோசித்திருப்பார்கள்.

ஆம்,நீங்களும் நினைத்துப் பாருங்கள் மாதவிடாய் இல்லையென்றால் பெண்களுக்கு எப்படியிருக்கும்?

Tips to Stop your Menstrual Period Once It Starts

வளர்ந்திருக்கும் நவீன மருத்துவம் மற்றும் சந்தைகளில் கிடைக்கக்கூடிய மருத்துவ முறைகளினால் நாம் மாதவிடாயை ஒரு மாதத்திற்கு நிறுத்த முடியும் அவசரத்திற்கும்,தவிர்க்க முடியாத காரணங்கள் மற்றும் தொலைதூரப் பயணம் என்று வரும் போது பெண்கள்

இதைத்தான் பயன்படுத்துகிறார்கள்.

இதுவும் நாம் மாதவிடாய் தேதியினை முன்கூட்டியே கணக்கிட்டு மாத்திரை சாப்பிட்டால் மட்டுமே இந்த மாத்திரை முறைகள் சாத்தியம். ஒரு வேளை மாதவிடாய் ஆரம்பித்துவிட்டாள் ?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கர்ப்பத்தடை மாத்திரை :

கர்ப்பத்தடை மாத்திரை :

மாதவிடாய் வருவதற்கு முன்னால் என்றால் மாத்திரைகளை எடுக்கலாம். இதுவே மாதவிடாய் ஆரம்பித்தவுடன் என்றால் என்ன செய்வது? சில பெண்கள் கர்ப்பத்தடை மாத்திரைகளை

உட்கொள்கிறார்கள்.

ஆனால் இது எல்லா நேரத்திலும் சரியாக செயல்படும், முற்றிலுமாக மாதவிடாயை நிறுத்தும் என்று சொல்லமுடியாது.

அதுவும் சிலரது உடல்நலனுக்கு ஏற்ப இதன் செயல்பாடுகள் வேறுபடும்.

வலி :

வலி :

மாதவிடாய் ஏற்படுகிற காலத்தில் பெண்களுக்கு வலியும் வேதனையும் ஏற்படுவது வழக்கம்.தலைவலி,வயிற்றுவலி என சிரமப்படுவார்கள். இங்கே உங்களுக்காக சில வீட்டு மருத்துவக் குறிப்புகள் கொடுக்கப்போகிறோம்.

அவற்றை நீங்கள் செய்து வந்தால், கர்ப்பப்பை தசைகளை தளர்வுறச் செய்திடும். இதனால் மாதவிடாய் ஏற்படும் போது வலியும் வேதனையும் குறையும்.அதோடு முற்றிலுமாக மாதவிடாய் நிற்பதற்கும் அதிக வாய்ப்புகள் உண்டு.

இபுப்ரோஃபென் :

இபுப்ரோஃபென் :

மாதவிடாய் காலத்தில் பெண்கள் சந்திக்கிற பிரச்சனைகளுக்கு அருமருந்தாய் இருப்பது இது தான். இதைச் சாப்பிட்டால் மாதவிடாய் ஏற்கனவே ஆரம்பித்திருந்தாலும் நின்றுவிடும் என்று நிரூபணமாகியிருக்கிறது.

இந்த மருந்தை ஒரு நாளைக்கு குறைந்தது மூன்று முதல் நான்கு முறை எடுத்துக் கொள்ளலாம்.அதற்கு மேல் எடுத்துக் கொள்ள வேண்டாம். இது மாதவிடாய் ரத்த ஓட்டத்தை ஐம்பது சதவீதம் குறைத்திடும்.

வேறு எதேனும் மருந்து அலர்ஜி அல்லது மருத்துவ குறைபாடு இருப்பவர்கள் என்றால்.மருத்துவ ஆலோசனைப் பெற்ற பிறகே இந்த மருந்தை எடுத்துக் கொள்ள வேண்டும்.

தண்ணீர் :

தண்ணீர் :

நம் உடலை ஹைட்ரேட்டடாக வைத்திருக்க வேண்டியது அவசியம் என்று எல்லாருக்கும் தெரியும், நம் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த, உடலிலிருக்கும் செல்களின் சீரான வளர்ச்சிக்கும் தண்ணீர் மிகவும் அவசியமான ஒன்றாக இருக்கிறது.

இது உங்கள் மாதவிடாய் நிறுத்துவதற்கும் பெரிதும் உதவுகிறது என்பது தெரியுமா உங்களுக்கு? நீங்கள் நிறையத் தண்ணீர் குடிக்கும் போது, உங்கள் மாதவிடாய் ரத்தத்தின் நிறம் வேறுபடும். அதோடு உடலில் இருக்கக்கூடிய டாக்சிங்கள் சிறுநீர் வழியாகவே வெளியேறிடும். இதனால் மாதவிடாய் விரைவாக நிற்கும்.

விட்டமின்ஸ் மற்றும் மினரல்ஸ் :

விட்டமின்ஸ் மற்றும் மினரல்ஸ் :

மாதவிடாயை நிறுத்த வேண்டும் என்று நினைப்பவர்கள் உங்கள் உணவுகளில் அதிகப்படியான விட்டமின்ஸ் மற்றும் மினரல்ஸ்களை சேர்த்துக் கொள்ளுங்கள்.

மாதவிடாய் ஆரம்பிப்பதற்கு முன்னதாகவே இந்த சத்துக்கள் சேர்த்துக் கொள்வது நல்லது.பெண்களுக்கு மிகவும் அவசியமான சத்து என்றால் அவை, விட்டமின் ஏ,சி,பி6 மற்றும் பி12.

என்ன செய்யும் :

என்ன செய்யும் :

இதைச் சாப்பிட்டவுடன் மறுகணமே மதாவிடாய் நிற்கும் என்று அர்த்தமல்ல.ஐந்து நாட்கள் மாதவிடாய் இருக்கும் எனும் பட்சத்தில் அவை மூன்று நாட்களாக குறைக்கும். விட்டமின் ஏ

மற்றும் விட்டமின் சி யில் ஏராளமான ஆண்ட்டி ஆக்ஸிடண்ட்கள் இருக்கின்றன.

அதனால் அவை பீரியட்ஸை குறைக்கும்.விட்டமின் சி, கர்ப்பப்பையில் இருக்கிற ப்ரோஜெஸ்ட்ரோன் அளவு குறையும். இதனால் மாதவிடாய் தேதிகள் குறைந்திடும்.

 காய்கறி மற்றும் பழங்கள் :

காய்கறி மற்றும் பழங்கள் :

உணவு விஷயத்தில் நீங்கள் கொண்டு வருகிற சின்ன சின்ன மாற்றங்கள் கூட மாதாவிடாயில் அது வெளிப்படும். மிகவும் கடினமான செரிமானத்திற்கு தடையாயிருக்கிற விஷயமாக அது இருக்க வேண்டும்.

உடல் சூட்டை அதிகரிக்கிற உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள்.அதே போல பீன்ஸ்,பைனாப்பிள் சாப்பிடுங்கள்.

மஞ்சள் மற்றும் வெல்லத்தூள் :

மஞ்சள் மற்றும் வெல்லத்தூள் :

ஒரு டம்பளர் தண்ணீரில் அரை டீஸ்ப்பூன் மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கலக்கிக் கொள்ளுங்கள்.அத்துடன் ஒரு ஸ்பூன் அளவு வெல்லம் சேர்த்துக் கொள்ளுங்கள்.இதனை ஒரு

நாளைக்கு இரண்டு முறை சாப்பிடுங்கள்.

இது உடல் சூட்டை அதிகரிக்கும் என்பதால் ஒரு வாரத்திற்கும் மேல் குடிக்க வேண்டாம்.மாதவிடாய் ஒட்டிய வாரங்களில் மட்டும் குடிக்கலாம்.

எலுமிச்சை :

எலுமிச்சை :

மாதவிடாய் துவங்கியவுடன் எலுமிச்சை பழத்தை எடுத்து அப்படியே சாப்பிடுங்கள்.அல்லது எலுமிச்சை சாறு எடுத்து தினமும் குடித்திடுங்கள்.எலுமிச்சை சாறு ஒரு வாரத்திற்கு முந்தைய நாளிலிருந்து இதனை குடிக்க ஆரம்பிக்கலாம்.

இஞ்சி :

இஞ்சி :

உடல் ஆரோக்கியத்திற்கும் அழகுக்கும் இஞ்சி பெரிதும் பயன்படுகிறது என்பதை அறிவோம்.அதனை எடுத்துக் கொள்வதால் நமக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றன

அவற்றில் ஒன்றாக இஞ்சிக்கு உங்கள் மாதவிடாயை நிறுத்தும் ஆற்றலும் இருக்கிறது என்பது தெரியுமா?

முதலில் இஞ்சியை தோல் நீக்கி சுத்தமாக்கிக் கொள்ளுங்கள்.பின்னர் அதனை பொடியாக நறுக்க வேண்டும்.ஒரு ஸ்பூன் அளவுள்ள அந்த இஞ்சியுடன் ஒரு கிளாஸ் தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்.

சுமார் ஐந்து நிமிடங்கள் வரை நன்றாக கொதித்ததும்,அந்த நீரை வடிகட்டிவிடாலம். பின்னர் அதில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து குடிக்கலாம்.இதனை நீங்கள் மாதவிடாய் வரும் என்று கணிக்கும் முந்தைய வாரத்திலிருந்தே குடித்து வந்தால் நல்ல பலன் உண்டு.

ஆப்பிள் சிடர் வினிகர் :

ஆப்பிள் சிடர் வினிகர் :

இது உங்கள் மாதவிடாயை உடனடியாக நிறுத்தாது என்றாலும் அறிகுறிகளை குறைக்கும்,மாதவிடாய் ரத்தத்தையும் தடை செய்வதால் மாதவிடாய் விரைவாக நின்றுவிடும்.

ஒரு கிளாஸ் தண்ணீரில் இரண்டு முதல் மூன்று ஸ்பூன் வினிகரைக் கலந்து நீராக்கி குடிக்க வேண்டும்.இதனை ஒரு நாளைக்கு மூன்று முறை குடிக்கலாம்.

ஜெலட்டீன் :

ஜெலட்டீன் :

இது சிறந்த பலனை தரக்கூடியது. ஒரு கப் நிறையத் தண்ணீரில் ஜெலட்டீன் கலந்து குடிக்க வேண்டும். நீண்ட நேரம் இருக்க வேண்டிய அவசியமில்லை, ஜெலட்டீன் கரைந்ததும் எடுத்து குடித்துவிடலாம்.இதனைக் குடித்த மூன்று மணி நேரத்திலிருந்து நல்ல பலனை பார்க்கலாம்.

மதுபானம் :

மதுபானம் :

அளவுக்கு மிதமிஞ்சிய மதுபானம் குடிப்பவராக இருந்தால் இந்த பலனை நீங்கள் நேரடியாக அனுபவித்திருப்பீர்கள். அதாவது குறைவான நாட்கள் மாதவிடாய் இருக்கும்.

மது நிறையக் குடித்தால் இரண்டே மணி நேரத்தில் உங்கள் மாதவிடாய் நின்றுவிடுவதற்கும் அதிக வாய்ப்புகள் உண்டு. ஆனால் இந்த முறையை யாருக்கும் பரிந்துரைப்பதில்லை ஏனென்றால் மதுபானம் நம் உடல் ஆரோக்கியத்திற்கு ஏராளமான கேடுகளை அளிக்கக்கூடியது.

உடலுறவு :

உடலுறவு :

மாதவிடாய் காலத்தில் உடலுறவு என்பது சற்று சங்கடமான விஷயம் தான்.ஆனால் மாதவிடாய் காலத்தில் நீங்கள் வைத்துக் கொள்ளப்போகும் உடலுறவு மாதவிடாய் இருக்கும் நாட்களின் ஆயுளை குறைக்கூடியது.

உடலில் இருக்கும் ஆர்காஸ்மிக் ஃப்ளூயிட்களை தானாக வெளியேற்றிவிடுவதால் மாதவிடாய் அதிக நாட்கள் இருக்காது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Tips to Stop your Menstrual Period Once It Starts

Tips to Stop your Menstrual Period Once It Starts
Story first published: Wednesday, December 27, 2017, 10:10 [IST]