வயசானாலும் கண்கள் நல்லா தெரியனுமா? இதெல்லாம் செய்ங்க!!

By Gnaana
Subscribe to Boldsky

முகத்தின் பொலிவுக்கு மெருகேற்றுவது கண்கள். நம் அறிவின் அளவுக்கு, கண்களே பெரும்துணை. கண்கள் மனதின் கண்ணாடி! மனிதனின் கருணையையும், கபடத்தையும் ஒளிவுமறைவின்றி, வெளிச்சம் போட்டு உலகிற்குக் காட்டும் தன்மை மிக்கவை, கண்கள். மொடமொடப்பான வெள்ளை வேட்டி வெள்ளை சட்டை உடுத்தி, மதச்சின்னங்களை அணிந்து, இறை அச்சம் மிக்கவர் என்று ஊரை ஏமாற்றலாம், தம் கண்களை ஏமாற்ற முடியுமா!?

Tips to maintain healthy eyes after ageing

"அடுத்தது காட்டும் பளிங்கு போல் நெஞ்சம் கடுத்தது காட்டும் முகம்" என்றார் தெய்வப்புலவர். எதிரில் தோன்றும் பொருளை, உள்ளது உள்ளபடி காட்டும் வெண்ணிற பளிங்கு போல, மனதில் உள்ளதை அப்படியே காட்டும் வல்லமை மிக்கது, முகம் என்றார். முகத்தின் அந்தத் தன்மைக்கு பெரிதும் உதவுவது கண்களே!

கருணையும், அன்பும் கண்களிலே தெரியும்! கண்களே, ஒரு மனிதனின் மெய்த் தன்மைகளைக் கூறும், ஒருவனை அவன் கண்களைக் கொண்டே, பெரியோர் அறிந்துகொள்வர்.

இத்தனை அரும்பெருமைகள் கொண்ட கண்களை நாம் எவ்வாறு பாதுகாக்க வேண்டும், செய்கிறோமா? பிறந்த சில ஆண்டுகளிலேயே, குழந்தைகள் கண்ணாடியுடன் இருப்பதைக் கண்டு அதிர்ந்து போகிறோம்! கண்ணாடி அணியாத இளைய வயதினரை விட. கண்ணாடி அணிந்தவர்களே, இன்று அதிகம் காணப்படும் விபரீத சூழலில், எதிர்கால தலைமுறை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எப்படிக் களைவது கண் நல பாதிப்புகளை?

எப்படிக் களைவது கண் நல பாதிப்புகளை?

இன்றைய குழந்தைகளின் கண் பார்வைக்குறைபாடுகளுக்கு நாம் எத்தனை கரணங்கள் சொல்கிறோமோ, அதைவிட மிக அதிக காரணங்களாக, அவர்களின் பெற்றோரைக் கைகாட்ட முடியும்! அவர்கள் செய்தது, பிள்ளைகளை பாதிக்கிறது. நாம் ஆன்மீக நம்பிக்கைகளை இங்கே விதைக்கவில்லை, இது முழுக்க அறிவியல் ரீதியிலானது.

கருவுற்ற மகளிர் அக்காலங்களில், தூய்மையாக இருக்க வேண்டும், நல்ல சத்துமிக்க உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும், வைட்டமின் A மற்றும் வைட்டமின் C போன்ற சத்துக்கள், இரும்புச்சத்து, புரோடீன் மற்றும் உடல் நலம் காக்கும் தாதுக்கள் நிறைந்த காய்கறிகள், பழ வகைகள் மற்றும் சத்தான உணவுகளை முறையாக சாப்பிடாமல் இருந்த விளைவு, பிள்ளைகளின் கண் பார்வைத்திறனை பாதிக்கிறது. இனி, மற்றவர்களுக்கு ஏற்படும் கண் பாதிப்புகளின் காரணிகளையும் அறிவோம்.

நல்ல கண்பார்வை எப்படி அளப்பது?

நல்ல கண்பார்வை எப்படி அளப்பது?

எனக்கு கண்கள் நன்றாகத் தெரிகிறதே, ஒன்றும் பாதிப்பில்லை என்று யாராவது சொன்னால், உடனே நம்பிவிடாதீர்கள். அவருக்கு உண்மையிலேயே கண்கள் நன்றாகத் தெரிகிறதா என்று சோதிக்க, ஒரு எளிமையான வழி இருக்கிறது.

சில மூலிகைகளை வாயில் இட்டு மென்றுகொண்டோ அல்லது சில மூலிகைகளின் மீது நின்றுகொண்டோ பார்த்தால், சூரிய வெயில் சுட்டெரிக்கும் கடும் பகலிலும், வானில் உள்ள நட்சத்திரங்கள் தெரியுமாம். நாம் அந்த அளவுக்கு அவர்களை, சோதிக்க வேண்டாம், ஒரு சிறிய டெஸ்ட் வைத்தால் போதும்.

தூரத்தில் உள்ள மெழுகுவர்த்தியின் ஒளியை அவரால் காணமுடிந்தால் அவர் கண்பார்வை கூர்மையானது என்று நாம் ஒப்புக்கொள்கிறோமோ இல்லையோ, கண் மருத்துவம் ஒத்துக்கொள்கிறது.

இது என்ன பிரமாதம், என்று அவர்கள் வந்து எங்கே, மெழுகுவர்த்தி என்று கேட்டால், சொல்லுங்கள், பதினான்கு மைல்கள் [ கிட்டத்தட்ட இருபத்தி மூன்று கிலோ மீட்டர் தூரம் ] தொலைவில் உள்ள இந்த சாலையின் முடிவில், என்று கூறுங்கள். வந்தவர், அடுத்த வினாடி அங்கு நிற்பாரா என்ன! இதன் மூலம், நமது கண் பார்வையின் ஆற்றலை நாம் உணர்ந்துகொள்ள முடியும்.

கண்பார்வை குறைபாடு:

கண்பார்வை குறைபாடு:

தூக்கமின்மை, மன அழுத்தம், போதைப் பழக்கங்கள், நீண்ட நேர கணினிப் பணிச்சூழல் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகள், கண் பார்வைக் குறைபாட்டை அதிகரிக்கக்கூடியவை.

 கண்களைப் பாதிக்கும் சுற்றுச்சூழல் மாசு..

கண்களைப் பாதிக்கும் சுற்றுச்சூழல் மாசு..

டெல்லியில், நாட்டில் வேறெங்கும் இல்லாத அளவு காற்றில் மாசுக்கள் கலந்து, சுவாசத்தில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி, மக்கள் எல்லோரும் முகமூடி அணிந்து செல்வதை நாம் கண்டிருப்போம். ஆயினும், அதைக் கூர்ந்து கவனித்தால், நமக்கு ஒரு விஷயம் அதிர்ச்சியாக இருக்கும்.

காற்றில் கலந்த நச்சுக்கள், சுவாசத்தில் கலந்து, உடல் நலம் கெடாமல் இருக்கக் காட்டும் அக்கறை, வாழ்நாள் முழுதும் வழித்துணையாகவும், அறிவுத்துணையாகவும் விளங்கும், கண்களின் மீது காட்டவில்லையே!காற்று நச்சுக்கள் கண்களை அடையும்போது, அவை கண்பார்வைத்திறனை இழக்கவைக்கும் ஆபத்து நிரம்பியவை என்பதை, பல மருத்துவர்கள் எச்சரிக்காமல் இருக்கிறார்கள்!

 பிறப்பில் வரும் குறைபாடு :

பிறப்பில் வரும் குறைபாடு :

பிறப்பில் வரும் கண் பார்வைக் கோளாறுகளை, முடிந்த அளவு, நாம் முறையான வைத்தியம் செய்து, குணமாக்கிவிடலாம். உறக்கமின்மை, போதை, மற்றும் மன அழுத்த பாதிப்புகளை, முயன்று அவற்றை சரிசெய்ய, கடுமையாகப் போராடினால், அவற்றையும் சரியாக்கி விடலாம்.

இதேபோல, கண்களை பாதிக்கும் கணிணி பயன்பாட்டை நாம் குறைத்துக்கொள்வது நல்லம் தரும் என்பது ஒருபக்கம், அதனால் ஏற்படும் கண் சோர்வை, எப்படிப் போக்குவது என்று பார்ப்போம்.

 அதிக நேர கம்ப்யூட்டர் பயன்படுத்துவதால் :

அதிக நேர கம்ப்யூட்டர் பயன்படுத்துவதால் :

பொதுவாக, கம்ப்யூட்டர் திரைக்கும் கண்களுக்கும், நாற்பத்தைந்து செ.மீ தூரம் அதாவது, ஒன்றரை அடி தூரம் இடைவெளி இருக்கவேண்டும், கண்களின் நேர்ப்பார்வைக்கு சமமாக திரையின் மேற்புறம் இருக்கவேண்டும்.

அதிக நேரம் கணிணியில் பணியாற்றும் சூழலில், அவ்வப்போது கண்களை இமைக்க முடியாததால்தான், கண்களில் சோர்வு ஏற்படுகிறது. எனவே, எதிர்புறம் யாருமில்லை என்பதை உறுதிசெய்துகொண்டு, அவ்வப்போது கண்களை சிமிட்டி வருவது நலமளிக்கும். சில நேரங்களில் கண்களை மோதிரவிரல் கொண்டு மென்மையாகத் தடவி வர, கண் சோர்வு நீங்கும். கண்களை மேலும் கீழும், இடமும் வலமும், திருப்ப கண் சோர்வுகள் விலகும்.

 பன்னீர் ஒத்தடம்:

பன்னீர் ஒத்தடம்:

மேலும், கண் இமைகளில் குளிர்ந்த நீரில் நனைத்த பஞ்சை, சற்று நேரம் வைத்து வர, பாதிப்புகள் சரியாகும். அல்லது சுத்தமானபன்னீரில் ஊறவைத்து பயன்படுத்தலாம். தினமும் திரிபலா நீரில் கண்களை நன்கு அலசி வரலாம். கண்கள் பொலிவாகும்.

வெங்காயச் சாறு :

வெங்காயச் சாறு :

இரவு உறங்குமுன் சிறிது தேனை கண்களில் விட, சற்று நேரம் எரிந்தாலும், பிறகு கண்கள் குளுமையாகும். இதைப்போல சிறிய வெங்காயத்தின் சாற்றையும் சிறிது கண்களில் விட, கண் பார்வை கூர்மையாகும்.

 கண்களை கழுவ வேண்டும் :

கண்களை கழுவ வேண்டும் :

இங்கே, குறிப்பிடும் செயல்முறைகள் பொதுவாக ஆண்களுக்கானவை. பெண்களுக்கு வரும் கண் பார்வைக் குறைபாடுகளுக்கு மிக அதிக காரணங்களாக விளங்குபவை, கண் இமைகளில், புருவங்களில் அவர்கள் செய்யும் கண் பூச்சுக்கள் மற்றும் மைகள். இவற்றில் நிறைய கலப்படங்கள் இருக்கின்றன, தினமும் இரவில் நன்கு கண்களை அலசுவதன் மூலம் கண் இமைகளில், புருவங்களில் இருக்கும் மைகளின் மிச்சங்கள் வெளியேறி, பாதிப்புகளைத் தவிர்க்கலாம்.

கண்களைக் காக்கும் உணவுகள் :

கண்களைக் காக்கும் உணவுகள் :

வைட்டமின் A மற்றும் C சத்தை அளிக்கும் பசலைக்கீரை, முளைக்கீரை, அகத்திக்கீரை, பொன்னாங்கண்ணி, முருங்கைக்கீரை, வல்லாரைகீரை போன்ற கீரைகள் மற்றும் முருங்கைப்பூவை அடிக்கடி உணவில் சேர்க்க வேண்டும். இரும்புச்சத்து மற்றும் புரோடீன் சத்துமிக்க கேரட், பீட்ரூட், அவரைக்காய், வெண்டைக்காய் மற்றும் பீன்ஸ் போன்ற காய்கறிகளை அதிகம் உணவில் சேர்த்துவர வேண்டும்.

கேரட், வெள்ளரி, இஞ்சி, இவற்றை துண்டுகளாக நறுக்கி, எழுமிச்சை சாறு சேர்த்து, சாலட் போல சாப்பிட கண்களுக்கு வலு சேர்க்கும் உணவுகள் இவை.

கண்களுக்கு சில பயிற்சிகள்

கண்களுக்கு சில பயிற்சிகள்

வேலைக்கு நடுவே அல்லது ஒய்வு நேரத்தில், உள்ளங்கைகளை, மூடிய கண்களின் மேல் குவித்து வைத்து, கண்களை திறந்து மூட, நல்ல பயிற்சியாக அமையும்.

கண்களை இருக மூடி பின்னர் அகலமாகத் திறக்க வேண்டும், புருவங்களை நெரிக்காமல் கண் இமைகளை மூடி திறந்து, இதுபோல, சிறிது நேரம் தினமும் செய்துவர, கண்களைச் சுற்றியுள்ள தசைகளுக்கு சிறந்த பயிற்சியாவது மட்டுமல்லாமல், கண்களின் கருவளையங்களையும் போக்கிவிடும் ஆற்றல்மிக்கது.

பாதாம் :

பாதாம் :

கண்களை உப்பு கலந்த நீரில், திறந்து மூட, கண்களில் உள்ள அழுக்குகள் தூசுகள் வெளியேறி, கண் பொலிவாகும். பாதாம் பருப்பை பாலில் அரைத்து, கண்களைச் சுற்றித் தடவி வந்தாலும், கரு வளையம் போகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary

    Tips to maintain healthy eyes after ageing

    Tips to maintain healthy eyes after ageing
    Story first published: Tuesday, December 19, 2017, 17:00 [IST]
    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more