For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெங்கு காய்ச்சல் வந்தால் ஏன் அவசியம் கொய்யாப் பழம் சாப்பிட வேண்டும்?

கொய்யாப் பழத்தை டெங்கு காய்ச்சல் வரும்போது சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகளை இந்த கட்டுரையில் காணலாம்.

By Ambika Saravanan
|

டெங்கு காய்ச்சலால் இன்றைய சமூகத்தில் பலரும் அவதி படுகின்றனர். . இந்த நோய்க்கான காரணம் மற்றும் அறிகுறிகள் பற்றி நாம் நிறைய கேள்விப்பட்டிருக்கிறோம். ஏடிஸ் எனப்படும் கொசுவால் இந்த நோய் பரவுகிறது.

திடீர் காய்ச்சல், வாந்தி , தசை வலி முக்கியமாக தோல் வெடிப்பு போன்றவை இதன் அறிகுறியாகும். பகல் நேரத்தில் தான் இந்த வகை கொசுக்கள் மனிதனை கடிக்கின்றன. தவறான சிகிச்சைகள் பல ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தலாம்.

டெங்கு வைரஸ் உடலில் உள்ள செல்களை சேதமடைய செய்கின்றன. குறிப்பாக இரத்த நுண் தட்டுகளில் சேதம் விளைவிக்கின்றன. இந்த நுண் தட்டுகள் த்ரோம்போசிஸ் என்னும் ஒரு வினையை உருவாக்குகின்றன. உடல் முழுக்க ஆக்ஸிஜென் மற்றும் ஊட்டச்சத்துகளை கொண்டு செல்ல இந்த த்ரோம்போசிஸ் உதவுகின்றன.

Reasons why we must take guava if we suffer from Dengue

இந்த டெங்கு காய்ச்சலுக்கு வீட்டிலேயே இருக்கும் ஒரு தீர்வு கொய்யா பழம். டெங்குவால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகளவில் கொய்யா ஜூஸை பருகலாம். இதற்கு காரணம் , இந்த ஜூஸ் த்ரோம்போசிஸ் எண்ணிக்கையை அதிகப்படுத்தும்.

கொய்யாவின் ஊட்டச்சத்து அட்டவணை :

100 கிராம் கொய்யாவில் கீழே குறிப்பிடப்பட்டுள்ள ஊட்டச்சத்துகள் உள்ளன.

கலோரிகள் - 68

கார்போஹைட்ரெட் - 75%

கொழுப்பு - 11%

புரதம் - 13%

வைட்டமின் ஏ , பீட்டா கரோட்டின் , தையாமின், ரிபோபிளவின், நியாசின், வைட்டமின் சி, வைட்டமின் கே போன்றவை இவற்றில் உள்ளன. மினரல்கள் கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம் , இரும்பு, பாஸ்போரஸ் ,சோடியம், ஜின்க் போன்றவை உள்ளன.

டெங்கு நோயிலிருந்து விடுபடச் செய்யும் கொய்யாவின் நன்மைகளை பற்றி இப்போது காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வைட்டமின் சி, மீட்பை ஊக்குவிக்கிறது:

வைட்டமின் சி, மீட்பை ஊக்குவிக்கிறது:

டெங்கு காய்ச்சலை போக்க குறிப்பிட்ட சிகிச்சை எதுவும் கிடையாது. இந்த நோயில் இருந்து மீள்வதற்கான வழிமுறைகளை ஊக்குவிப்பதே சரியான தீர்வாகும். இதற்கான சரியான தீர்வு அதிக அளவில் வைட்டமின் சி சத்தை உடலுக்கு கொடுப்பது தான். ஆரஞ்சு பழத்தை விட வைட்டமின் சி சத்து கொய்யாவில் அதிகம் உள்ளது

நீர்வறட்சியை தடுக்கிறது:

நீர்வறட்சியை தடுக்கிறது:

டெங்கு காய்ச்சலில் வாந்தியின் தாக்கம் அதிகமாக இருக்கும். தொடர்ந்து வாந்தி எடுப்பதால் உடலில் நீர்சத்து குறையும். அதனை தடுக்க கொய்யா ஜூஸ் பருகுவது நல்லது. கொய்யாவில் நீர்சத்து அதிகமாக இருப்பதால் வாந்தியால் ஏற்படும் நீர்வறட்சி சரி செய்யப்படும்.

இனிப்பு சேர்க்காத கொய்யா பழ ஜூஸ் குடிப்பது நல்லது. இனிப்பு சேர்ப்பதால் சிறுநீர் அதிகமாக வெளியேறும் . அதனால் மீண்டும் நீர் வறட்சி ஏற்படும். கொய்யாவில் உள்ள இனிப்பு சுவை வாந்தியை கட்டுப்படுத்துகிறது. மேலும் நீர்வறட்சி ஏற்படாமல் தடுக்கிறது.

நோயெதிர்ப்பு அதிகரிக்கிறது:

நோயெதிர்ப்பு அதிகரிக்கிறது:

வைட்டமின் சி மற்றும் ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றன. இதனால் மேலும் கிருமிகளின் தாக்கம் ஏற்படுவது தவிர்க்கப்படுகிறது.

நார்ச்சத்து செரிமானத்தை மேம்படுத்துகிறது :

நார்ச்சத்து செரிமானத்தை மேம்படுத்துகிறது :

டெங்கு நோயாளிகள் எடுத்துக் கொள்ளும் உணவை சரியான முறையில் செரிமானம் செய்வதில் இந்த நார் சத்து மிக்க பழம் உதவி புரிகிறது. வாந்தியால் ஏற்படும் ஊட்டச்சத்து இழப்பை இது சமன் செய்கிறது.

ஆற்றலுக்கு ஆதாரமாக விளங்குகிறது:

ஆற்றலுக்கு ஆதாரமாக விளங்குகிறது:

டெங்கு பாதிப்பால் சோர்வு, குமட்டல் மற்றும் வாந்தி அதிகமாக இருப்பதால் உடலுக்கு அதிகமான ஆற்றல் தேவைப்படுகிறது. கொய்யாவில் இயற்கை சர்க்கரை அதிகமாக இருப்பதால் க்ளுகோஸ் அதிகரிக்காமல் தேவையான ஆற்றல் கிடைக்க படுகிறது.

சிறந்த சிற்றுண்டி:

சிறந்த சிற்றுண்டி:

நோய் பாதிப்பால் உணவு உண்ண பிடிக்காது. ஆனாலும் உடலுக்கு ஆற்றல் தேவை என்பதை மறக்க கூடாது. கொய்யாவின் இனிப்பு சுவை , வாந்தியை கட்டுப்படுத்துவதால் அடிக்கடி கொய்யாவை சாப்பிடுவது உடலுக்கு பலத்தை கொடுக்கும். பசி நேரத்திற்கு ஒரு சிறந்த சிற்றுண்டியாக இருக்கும்.

டெங்குவிற்கு இதுவரை எந்த ஒரு சிகிச்சையும் மருந்தும் கண்டுபிடிக்க படவில்லை. ஆனால் டெங்குவால் பாதிக்க பட்டவர்கள் நீர்ச்சத்துடன் நல்ல ஓய்வில் இருக்க வேண்டியது அவசியம். இந்த நீர்ச்சத்தை தருவதில் சிறந்த பழம் கொய்யா. அதனால் கொய்யா பழத்தை அதிகமாக எடுத்து கொள்வது டெங்குவின் இருந்து மீள்வதற்கான ஒரு இயற்கையான வழியாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Reasons why we must take guava if we suffer from Dengue

Reasons why we must take guava if we suffer from Dengue
Story first published: Monday, September 11, 2017, 10:23 [IST]
Desktop Bottom Promotion