மார்பக புற்று நோய்ப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்!!

Posted By: Bala latha
Subscribe to Boldsky

மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதம் இன்னும் சில நாட்களில் வரவிருக்கிறது. ஆனால் நாம் நவம்பர் மாதம் மற்றும் ஹாலோவீன் திருநாள் வருவதைப் பற்றி மகிழ்ச்சியடைவதற்கு முன் ஒரு அடி பின்னோக்கி வந்து இந்த நிலையுடன் தொடர்புடைய சிக்கலான பிரச்சனையை அடையாளம் காணுங்கள். ஒரு முறை மார்பகப் புற்றுநோய் கண்டறியப்பட்டால் அதற்கு பிறகு உயிர்வாழ்தல் எப்படி.

இது மும்பையிலுள்ள மார்பகப்புற்றுநோய்க்காக ஹெச்சிஜி அபெக்ஸ் பற்றுநோய் மையத்தின் பிரபல கதிர்வீச்சு புற்றுநோய் கட்டிகளுக்கான சிகிச்சை சிறப்பு மருத்துவ நிபுணர் எம்.டி. டாக்டர். உபாஸனா சக்சேனாவுடனான எங்களுடைய நேர்க்காணலின் இரண்டாவது பாகமாகும்.

Treatment for Breast Cancer: Everything You Need to Know!

நீங்கள் தவறவிடக்கூடாத பேட்டியின் சிறப்பம்சங்கள்:

சீனா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் வருடந்தோறும் மார்பகப் புற்றுநோய் கண்டறியப்பட்டாலும் இறப்பு விகிதம் 16 முதல் 25% மட்டுமே உள்ளது. ஆனால், இந்தியாவில் இறப்பு விகிதம் ஏன் 50% ஆக இருக்கிறது?

மார்பக நீக்க அறுவைச் சிகிச்சை ஒரு முறை பெண்களுக்கு செய்யப்பட்டால் வாழ்நாள் முழுவதும் அவர்கள் அந்தத் தழும்பை சுமக்க வேண்டி இருக்கிறது.

மாஸ்டெக்டமி சிகிச்சைக்குப் பிறகு மார்பகத்தை மறுசீரமைப்பதற்கு சிலிக்கான் உட்பொருத்திகளை பரிந்துரைக்க விரும்பாததற்கு காரணம் என்ன?

உங்களுக்கு கீமோ தெரபி தேவையா இல்லையா என்பதை துல்லியமாகக் கண்டறியும் ஒரு அற்புதமான மரபணுக் கருவி.

எனவே, மேற்கொண்டு குழப்பிக் கொள்ளாமல் இந்தத் தலைப்பிற்குள் புகுவோம் வாருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இந்தியாவில் மார்பகப் புற்றுநோய் இறப்பு விகிதம் :

இந்தியாவில் மார்பகப் புற்றுநோய் இறப்பு விகிதம் :

ரியா: நாம் உலக சுகாதார நிறுவனத்தின் 2012 ஆம் ஆண்டு புள்ளிவிவர அறிக்கையைப் பார்த்தால் 2012 ஆம் ஆண்டில் 144,937 புதிய மார்பகப் புற்று நோய் வழக்குகள் கண்டறியப்பட்டுள்ளது. இது சீனாவில் கண்டறியப்பட்ட 187,213 இறப்புகள் அல்லது அமெரிக்காவில் கண்டறியப்பட்ட 232,714 விகிதத்தை விட பெரியது அல்ல. இருந்தாலும், இந்தியாவில் மார்பகப் புற்றுநோயால் ஏற்படும் இறப்பு விகிதம் கிட்டத்தட்ட 50% ஆக இருக்கிறது. அதே சமயம், சீனாவிலும் அமெரிக்காவிலும் இறப்பு விகிதம் மிகக் குறைவாக இருக்கிறது. (4 இல் 1 நபர் மற்றும் 6 இல் 1 நோயாளிகள்) இந்த மோசமான எண்ணிக்கைக்குப் பின்னால் உள்ள காரணம் என்ன?

டாக்டர். உபாஸனா: உங்களுக்கு பல விஷயங்களை விளக்கக்கூடிய சில புள்ளி விவரங்களை நான் இங்கே குறிப்பிட விரும்புகிறேன். நீங்கள் இங்கிலாந்தில் இணையத் தளத்தை பார்வையிட்டால் அவர்கள் கொடுத்துள்ள தகவல்களில் 1930 ஆம் ஆண்டு முதல் மார்பகப் புற்றுநோய் நிகழ்வுகள் சுமார் 19 முதல் 20% அதிகரித்துள்ளதாகத் தெரிகிறது. இந்த உயர்வுக்குக் காரணம் அவர்களுடைய வாழ்க்கை முறையின் மாற்றங்களாகும்.

நீங்கள் கவனிக்க வேண்டிய மற்றொரு விஷயம் இங்கிலாந்தின் மார்பகப் புற்றுநோய் கொண்டவர்களின் உயிர்வாழும் விகிதம் கடந்த 40 ஆண்டுகளில் இரட்டிப்பாகியுள்ளது. எனவே, அவர்களுடைய நோயாளியின் சுய விவரக் குறிப்புக்கும் நமது நாட்டு நோயாளியின் சுயவிவரக் குறிப்புக்கும் இடையே உள்ள மிக முக்கியமான வித்தியாசம் சரியான நேரத்தில் நோயை கண்டறிவதாகும். அவர்களுக்கு 79 முதல் 87% நோயாளிகளின் நிலை 1 அல்லது 2 இல் நோய் கணடறியப்படுகிறார்கள். 13 முதல் 21% நோயாளிகள் மட்டுமே நிலை 3 அல்லது 4 இல் நோய் கண்டறியப்படுகிறார்கள். மேலும் 6 முதல் 7% நோயாளிகள் மட்டுமே நோய் கண்டறியும் நேரத்தில் நோய் முற்றிய நிலையில் இருக்கிறார்கள்.

இது ஏன் என்றால் பல ஆண்டுகளாக அங்கு குறிப்பிடத் தகுந்த அளவு மார்பகப் புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. இது பேசப்படும் ஒரு தலைப்பாக இருக்கிறது. மேலும் அங்குள்ள மக்கள் வழக்கமாக பரிசோதனை செய்துக் கொள்கிறார்கள்.

ஏனென்றால் அவர்களுடைய சமூகத்தில் மார்பகம் அல்லது கர்ப்பப்பை புற்றுநோய் பற்றி பேசுவதற்கு வலுவாக சமூகக் கட்டுப்பாடுகள் இல்லை. நிலை 1 அல்லது 2 இல் ஒரு நோயாளியை மருத்துவமனைக்கு அழைத்து வரும் தருணத்தில் அவர்களுக்கு உயிர் வாழ்வதற்கு நல்ல சாத்தியங்கள் இருக்கின்றன.

எனவே, அவர்களுடைய ஒட்டுமொத்த நோயாளியின் புள்ளி விவரம் நன்கு உயிர் வாழ்வதை காட்டுகிறது. ஆனால் ஒட்டுமொத்த உலக நிகழ்வுகளை நீங்கள் பார்த்தால் நோய் வந்த 5 ஆண்டுகளுக்னகுப் பிறகு உயிர் வாழும் சாத்தியங்கள் 89% மாக வீழ்ச்சியடைகிறது. ஏன்?

ஏனென்றால் இந்தியா போன்ற இதர பிற நாடுகளில் உயிர் வாழ்தல் குறைவாக இருக்கிறது. மேலும் ஆப்பிரிக்க நாடுகளில் சிகிச்சைக்கான வசதிகள் முன்னேற்றமடையவில்லை. இவை ஒட்டுமொத்த புள்ளிவிவரத்தை பாதிக்கிறது.

இந்த நாடுகளில் உயிர் வாழும் விகிதம் குறைவாக இருப்பதற்கான முதன்மையான காரணம் அவர்களுடைய மிக அதிகமான சமூகக் கட்டுப்பாடுகள் ஆகும்.

அந்த மக்களுக்கு நோய் குறித்து அக்கறை கொள்வதற்கு தேவையான கல்வியும் விழப்புணர்வும் இல்லை. அவர்களுக்கு நோயைப் பற்றித் தெரியாது. அவர்கள் அதைப் பற்றி பேச விரும்புவதில்லை. மேலும், அவர்கள் அதைப் பற்றி காதில் கேட்பதற்கு கூட வெட்கப்படுகிறார்கள்.

உண்மையில், நன்கு படித்த வகுப்பிலிருந்து வரும் ஏராளமான நோயாளிகள் கூட நோயின் அறிகுறிகளை அவர்கள் கவனித்திருந்தாலும் வெட்கம் காரணமாக மருத்துவமனைக்கு செல்வதில்லை. மேலும் அவர்கள் வழக்கமான பரிசோதனைகளையும் செய்துக் கொள்வதில்லை.

இன்னமும் நாங்கள் மக்களுக்கு பரிசோதனைகள் மிக முக்கியமானவை அதனால் நாம் புற்றுநோயை நிலை 1 மற்றும் 2 லேயே கண்டறிய முடியும் என்று புரிய வைத்து பயிற்சி கொடுக்க முயற்சி செய்து வருகிறோம்.

 மார்பகப் புற்றுநோய்க்கான பரிசோதனை ஆய்வுகள்:

மார்பகப் புற்றுநோய்க்கான பரிசோதனை ஆய்வுகள்:

ரியா: பரிசோதனைகள் விலையுயர்ந்தவையா?

டாக்டர். உபாஸனா: அது ஒன்றும் அவ்வளவு விலை உயர்ந்ததல்ல. வருடத்திற்கு ஒரு முறை பரிசோதனைகள் செய்யப்பட வேண்டும். விலை உயர்ந்தவை என்று சொல்லப்படுவது அபத்தமானது. மேலும் பரிசோதனைகளை வழக்கமாகச் செய்யும் போது கைகளால் கண்டுபிடிக்க முடியாத சிறிய புற்றுக் கட்டிகளைக் கூட இந்தப் பரிசோதனையில் கண்டுபிடிக்கலாம், இதன் விளைவாக உங்களுக்கு குணமாகும் வாய்ப்புகள் மிக அதிகம்.

ஆனால் ஏராளமான சமூக, தர்க்க மற்றும் பொருளாதார காரணிகள் இருக்கின்றன. இங்கிலாந்திலும் அமெரிக்காவிலும் இந்த மருத்துவ செலவுகளுக்கு அரசாங்கம் உதவி செய்கிறது. எனவே, ஒரு நோயாளிக்கு நோய் கண்டறியப்பட்டால் அரசாங்க உதவியுடன் சரியான சிகிச்சை கொடுக்கப்படுகிறது.

ஆனால் இங்கோ அதிகக் கட்டணம் காரணமாக இச்சிகிச்சைக்கு வராத நோயாளிகள், வந்தாலும் முழுமையாக சிகிச்சை எடுக்க முடியாதவர்கள், மேலும் சிகிச்சை பெறுவதற்கு சமூக ஆதரவு இல்லாதவர்கள் என்று பல வகை நோயாளிகள் இருக்கின்றனர்.

எனவே, பல்வேறு காரணிகள் இருக்கின்றன. உண்மையில் நமக்குக் கிடைத்த தகவல்களின் படி நகர்ப்புறங்களில் உயிர் வாழும் விகிதம் 60% க்கும் குறைவாக இருப்பதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

மேலும் இந்தியாவில் 50% க்கும் அதிகமான நோயாளிகள் நிலை 3 மற்றும் 4 இல் தான் நோய் கண்டறியப்படுகிறார்கள். எனவே, நமது ஒட்டுமொத்தப் புள்ளி விவரங்களும் சரிகிறது.

 சிகிச்சை தேர்வுகள்?

சிகிச்சை தேர்வுகள்?

ரியா: மார்பகப் புற்றுநோய்க்கு இந்தியாவில் கிடைக்கும் பல்வேறு சிகிச்சைத் தேர்வுகள் என்ன?

டாக்டர். உபாஸனா: மார்பகப் புற்றுநோய்க்கான அனைத்து விதமான சிகிச்சைத் தேர்வுகள் இந்தியாவில் கிடைக்கப் பெறுகின்றன.

பல்வேறு வகையான அறுவைச் சிகிச்சைகள், வெவ்வேறு விதமான கீமோ தெரபி மருந்துகள், ஹார்மோன் சிகிச்சைகள், மற்றும் கதிர்வீச்சு சிகிச்சைகள், உள்ளார்ந்த ஒளி மற்றும் குறுகிய சிகிச்சைகள் அனைத்து விதமான சிகிச்சை நடைமுறைகளும் இந்தியாவில் கிடைக்கப்பெறுகின்றன.

இது சிகிச்சை மையங்களின் எண்ணிக்கை, மக்களிடையே உள்ள விழிப்புணர்வு மற்றும் பொருளாதார காரணிகளை பொறுத்து அமைந்துள்ளது.

 மார்பை நீக்கும் அறுவை சிகிச்சை

மார்பை நீக்கும் அறுவை சிகிச்சை

ரியா: மாஸ்டெக்டமி சிகிச்சையில் செயல்முறையை பற்றி எங்களுக்கு கொஞ்சம் சொல்ல முடியுமா?

டாக்டர். உபாஸனா: மாஸ்டெக்டமி என்பது மார்புத் திசுக்களை முழுமையாக அகற்றி விடும் ஒரு செயல்முறையாகும். மொத்த பால் சுரப்பிகள், மார்புக் காம்பு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் மற்றும் இதர திசுக்களை நீக்கி விடுகிறோம். இந்த சிகிச்சையில் பல்வேறு வகைகள் இருக்கின்றன.

அவற்றில் ஒன்று, ரேடிக்கல் மாஸ்டெக்டமி. இந்த சிகிச்சையில் அக்குள் மற்றும் தோள் பட்டை எலும்புக்கு மேலுள்ள மார்பகத் திசுக்களும், நிண நீர் முடிச்சுக்களும் மற்றும் மார்பு சுவற்றின் தசைகளும் முழுமையாக நீக்கப்படுகின்றன.

ஆனால், இப்பொழுதெல்லாம் மார்பு சுவர் தசைகளை விட்டு விடுகிறார்கள். இப்பொழுது செய்யப்படும் எளிமையான மாஸ்டெக்டமியில் நிணநீர் முடிச்நசுகளை நீக்காமல் மார்பு மட்டும் நீக்கப்படுகின்றது.

மேலும் உளவியல் பாதிப்புகள் மற்றும் உடலின் தோற்றக் காரணங்களுக்காக மார்பு காம்புகளையும் மற்றும் தோலையும் விட்டு வைத்து பின்னால் மறுசீரமைப்பு செய்யலாம். இதனால் நோயாளியின் வாழ்நாள் முழுவதும் அதிக பாதிப்புகள் இருக்காது.

அடிப்படையில் இங்கே நிறைய அறுவை சிகிச்சைகள் இருக்கின்றன. ஆனால், ஒவ்வொரு வகை்குக்கும் ஏற்றவாறு நோயின் அளவு, நோயாளியின் வயது மற்றும் நோயாளியின் சுய ஆர்வம் ஆகியவற்றை பொறுத்து வெவ்வேறு அறுவை சிகிச்சைகள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. சில வழக்குகளில் லெபேக்டமி மட்டுமே செய்யப்படுகின்றது. இந்த சிகிச்சையில் மார்பகத்தை நீக்காமல் கட்டிகளும் மற்றும் அதன் விளிம்புகளும் நீக்கப்படுகின்றது. இது மார்பகத்தை காக்கும் அறுவை சிகிச்சை என்று அறியப்படுகின்றது.

சமூக களங்கங்களின் பின்விளைவுகள்

சமூக களங்கங்களின் பின்விளைவுகள்

ரியா: எனவே, மாஸ்டெக்டமி தனி நபரின் வாழ்க்கையை எவ்வாறு பாதிக்கிறது? ஆரோக்கியம், சமூக களங்கங்கள், மற்றும் இதர விதங்களில் எவ்வாறு பாதிக்கிறது?

டாக்டர். உபாஸனா: மற்ற காரணிகளை விட உளவியல் ரீதியாகவும் சமூக ரீதியாகவும் குறிப்பிடத் தகுந்த பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. மருத்துவ ரீதியாகச் சொல்ல வேண்டுமென்றால், இரண்டு விஷயங்கள் இருக்கின்றன. ஒன்று, சில நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை செய்த பக்கத்திலுள்ள கையில் வீக்கம் ஏற்படுவதற்கான அபாயங்கள் இருக்கின்றன.

இது லிம்பிடெமோ என்று அறியப்படுகிறது. இது எல்லா நோயாளிக்கும் ஏற்படுவதில்லை. ஆனால், சிலருக்கு ஏற்படுகிறது. எனவே, அறுவை சிகிச்சைக்குப் பிறகு அதைத் தடுப்பதற்கு சில உடற்பயிற்சிகள் பரிந்துரைக்கப்படுகின்றன. ஆனால், அப்படி வீக்கம் அதிகரித்தவர்களுக்கு அழுத்தம் கொடுக்கும் சாதனங்கள் மற்றும் இதர உடற்பயிற்சிகள் தேவை. இவை தான் உடலளவில் ஏற்படும் மாற்றங்கள்.

இதைத் தவிர்த்து உளவியல் ரீதியாகவும், உடல் தோற்றத்திலும், சமூக வசதி நிலைகளிலும், மறறும் தனிப்பட்ட வாழ்க்கையிலும் ஏராளமான தாக்கங்களை ஏற்படுத்துகின்றது. இதனால் தான் சாத்தியமான வரை மார்பகத்தை காப்பாற்றும் அறுவை சிகிச்சை செய்யப்படுவதற்கான காரணங்களாகும். உண்மையில், கட்டி மட்டும் அகற்றப்படும் போது மார்பகத்தின் அளவு மட்டும் குறைகிறது. இதனால் நோயாளி மொத்த மார்பகத்தையும் இழப்பதில்லை.

மறுவாழ்வு

மறுவாழ்வு

ரியா: மாஸ்டெக்டமி சிகிச்சை செய்து கொண்டு பெண்களுக்கு கிடைக்கும் பல்வேறு மறுவாழ்வு தேர்வுகள் என்ன?

டாக்டர் உபாஸனா: அவர்கள் லிபிடெமோவை தடுப்பதற்கு பிசியோ தெரபி மற்றும் உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும். இதைத் தவிர்த்து இழந்த மார்பகத் திசுக்களை சீரமைக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. உதாரணமாக, மிக எளிய நடவடிக்கை மாஸ்டெக்டமி சிகிச்சையின் விளைவுகளை மூடி மறைக்கும் ஆடைகளை அணிவதாகும். ஆர்டர்களை எடுத்துக் கொண்டு நோயாளியை சந்தித்து, நோயாளியின் உடலுக்கு ஏற்றவாறு ஆடைகளை வடிவமைத்து தரும் சில குறிப்பிட்ட மையங்கள் இருக்கின்றன. எனவே இந்த ஆடைகளை நோயாளி அணியும் போது மார்பகம் முழுமையாக நீக்கப்பட்டதை கண்டுபிடிக்க முடியாது.

மற்றொரு தேர்வு, மார்பை மறுசீரமைப்பதாகும். மறுசீரமைப்பில் உடலின் இதர பகுதிகளிலிருந்து சிறிதளவு தசைகளை எடுத்து அறுவை சிகிச்சை செய்த இடத்தில் மார்பகத்தின் வடிவில் மறுகட்டமைப்பு செய்யப்படும். இது மீண்டும் மார்பகம் இருந்த அதே விளைவை ஏற்படுத்தும்.

மூன்றாவது தேர்வு, தோல் மற்றும் மார்பகக் காம்புகளை வடிவமைக்கும் செயல்முறையாகும். இந்தச் சிகிச்சையில் உடலின் இதர பகுதிகளிலிருந்து மார்பகக் காம்புகள் மற்றும் தோலுக்கு அடியில் திசுக்களை வைத்து வளரச் செய்வதாகும்.

எனவே, இது சாதாரண மார்புகளை போல் தோற்றமளிக்கும். நோயாளி மார்பைப் பாதுகாக்கும் அறுவை சிகிச்சை செய்து கொள்வதாக இருந்தால் மேலே சொன்ன அனைத்து முறைகளும் தவிர்க்கப்படும்.

இந்த முறையில் மார்பின் அளவு மட்டுமே லேசாகக் குறைக்கப்படும்.

சிலிக்கான் உட்பொருத்திகள்: பயன்படுத்தலாமா, பயன்படுத்தக்கூடாதா?

சிலிக்கான் உட்பொருத்திகள்: பயன்படுத்தலாமா, பயன்படுத்தக்கூடாதா?

ரியா: சிலிக்கான் உட்பொருத்திகளைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? மறு சீரமைப்பிற்கு அது பரிந்துரைக்கப்படுவதில்லையா?

டாக்டர். உபாஸனா: பாருங்கள், சிலிக்கான் செயற்கை உறுப்புக்களை தீவிரமாக வேண்டாமென்று சொல்வதில்லை. ஆனால், அதைப் பற்றி கலவையான விமர்சனங்கள் இருக்கின்றன.

சிலிக்கான் கருவிகளை பொருத்தினால், நோயாளியை தொடர்ந்து மதிப்பாய்வு செய்ய வேண்டுமென்பதால் அறுவை சிகிச்சை நிபுணர்கள் மார்பக மறுசீரமைப்பையே பரிந்துரைக்கிறார்கள்.

மேலும், சிலிக்கான் செயற்கை உறுப்புகளில் வேறு சில சிக்கல்களும் இருக்கின்றன. அவை சிதைந்து விடும் அல்லது சுருங்கி விடும். இருந்தாலும் சிலிக்கான் கருவிகளுக்கு எதிராக மிக நிச்சயமான மருத்துவ எதிர்ப்புகள் இல்லை.

உயிர் வாழ்தல்

உயிர் வாழ்தல்

ரியா: எந்த சிகிச்சை முறை சிறந்த உயிர் வாழும் விகிதத்தைக் கொண்டிருக்கிறது?

டாக்டர். உபாஸனா: மார்பகப் புற்றுநோய் என்பது பெரும்பாலான நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை, கீமோ தெரபி, ரேடியோ கதிர்வீச்சு சிகிச்சை மற்றும் ஹார்மோன் சிகிச்சை போன்ற அனைத்து முறைகளும் தேவைப்படும் ஒரு நிலையாகும்.

மருத்துவர் கீமோ சிகிச்சை வேண்டாமென்று முடிவு செய்தாலோ அல்லது மிக விரைவாக ஆரம்ப நிலையிலேயே நோய் கண்டறியப்பட்டாலோ அல்லது அறுவை சிகிச்சை செய்ய முடியாத நிலையில் இருந்தாலோ அன்றி ஒரு சிகிச்சையை தவிர்க்க முடியாது. பொதுவாக இந்த சிகிச்சை ஒரு கலவையான ஒருங்கிணைந்த சிகிச்சையாகும்.

ஒரு அற்புதமான மரபணுக் கருவி

ஒரு அற்புதமான மரபணுக் கருவி

ரியா: மாம்மாபிரிண்ட் பற்றிய உங்கள் கருத்து என்ன? வழக்கமான தொழில்நுட்பங்களில் மார்பகப் புற்றுநோய் குறைந்த அபாயமுள்ளதாகக் கண்டறியப்பட்டாலும் கூட இந்த ஆர்என்ஏ கருவி அதிக அபாயங்களை கண்டறிகிறது. இது பயன்பாட்டில் இருக்கிறதா அல்லது இன்னமும் மருத்துவ சோதனை நிலையில் இருக்கிறதா?

டாக்டர். உபாஸனா: இது அதிகப் பயன்பாட்டில் இருக்கிறது. இது மிகவும் பயனுள்ள கருவியாகும். பொதுவாக நாங்கள் மாம்மா பிரிண்ட் முறையை நோய் மிக ஆரம்ப கட்டத்தில் இருக்கும் டி1, டி2, என்1, என்0 போன்ற நோயாளிகளுக்குப் பயன்படுத்துவோம். அவர்களின் மீது சுமார் 70 மரபணுக்களை ஆய்வு செய்யும் மாம்மா பிரிண்ட் ஆய்வை நாங்கள் செய்கிறோம். அத்துடன் இதர கருவிகளும் இருக்கின்றன. சில சமயங்களில் அதிக அபாயங்களைக் கொண்ட கீமோ தெரபி தேவைப்படும் நோயாளிகளுக்குக் கூட இந்த சிகிச்சை செய்யப்படுகிறது.

ஒருவேளை மாம்மாபிரிண்ட் நோயாளிக்கு கீமோ தெரபி தேவையில்லை என்று பரிந்துரைத்தால் சிகிச்சை முறையில் கீமோ தெரபி நீக்கப்படுகிறது.

ரியா: இந்தியாவில் நமக்கு இந்தக் கருவிகள் கிடைக்கிறதா?

டாக்டர். உபாஸனா: ஆமாம், நமக்கு இந்தக் கருவிகள் கிடைக்கின்றன.

ரியா: இது அதிக விலையுடையதா?

டாக்டர். உபாஸனா: அது விலையுயர்ந்தது தான். சில இடங்களில் 70 ஆயிரம் வரை செலவாகிறது. ஆனால் சரியான கட்டணத்தைப் பற்றி நான் சரிபார்த்து தான் சொல்ல வேண்டும்.

புற்றுநோய்க்கு முன் மாஸ்டெக்டமி

புற்றுநோய்க்கு முன் மாஸ்டெக்டமி

ரியா: நோய்க்கான முற்பாதுகாப்பு தடுப்பு மாஸ்டெக்டமி குறித்த உங்கள் பார்வை என்ன?

டாக்டர். உபாஸனா: ஒரு நபர் பிஆர்சிஏ1 மற்றும் பிஆர்சிஏ2 (பிறழ்வுகள்) காரணமாக மார்பகப் புற்றுநோய் வருவதற்கான சாத்தியங்களுடன் தயார் நிலையில் இருந்தால், முற்பாதுகாப்பு தடுப்பு நடவடிக்கையாக புற்றுநோய் உருவாவதற்கு முன்பாகவே கர்ப்பப்பையும் மார்பகங்களும் நீக்கப்படுகின்றன. ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி அப்படித் தான் அகற்றிக் கொண்டார். இது மிகவும் தனிப்பட்ட ஒரு முடிவாகும்.

இறுதியாக சில சிந்தனைகள்

இறுதியாக சில சிந்தனைகள்

ரியா: ஒரு கடைசி கேள்வி. இந்தியாவில் மார்பகப் புற்றுநோயால் இறப்பவர்களின் விகிதம் முற்றிலும் அதிகரித்து வரும் நிலையில் நீங்கள் மக்களுக்கு தெரிவிக்க விரும்புவது ஏதாவது இருக்கிறதா?

டாக்டர். உபாஸனா: மக்கள் மார்பகப் புற்றுநோயைப் பற்றிப் பேசுவது குறித்த சமூகக் கட்டுப்பாடுகளை தாண்டி வர வேண்டும். இதை இலகுவாக எடுத்துக் கொள்வதற்கு பதிலாக மக்கள் வழக்கமாக பரிசோதனைகளை செய்து கொள்ள வேண்டும்.

குழந்தைகளிடம் இத்தகைய உரையாடல்களை ஊக்குவித்தால் அடுத்த சில வருடங்களில் அல்லது சகாப்தங்களில் உண்மையான நகரமயமாக்கலின் தாக்கம் தோன்ற ஆரம்பிக்கும்.

மக்கள் இந்த நோயைப் பற்றி விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியதும், குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியதும், நோய்க்கான பரிசோதனைகளுக்காகவும் அல்லது நோய் வந்தால் சிகிச்சைகளுக்காகவும் வெட்கப்படுவதை நிறுத்த வேண்டியதும் மிகவும் முக்கியமானதாகும்.

நான் டாக்டர். உபாஸனா சக்சேனாவுடன் இந்த நேர்க்காணலில் உரையாடியதில் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன், உங்களுக்கும் இந்த கட்டுரை உபயோகமானதாக இருந்திருக்கும் என்று நம்புகிறோம். இந்தக் கட்டுரை அனைத்து பெண்களையும் சென்றடைய அதிகம் பகிருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Treatment for Breast Cancer: Everything You Need to Know!

Treatment for Breast Cancer: Everything You Need to Know!
Story first published: Monday, October 30, 2017, 18:00 [IST]