நீங்க மாதவிடாய் வலியால் அவதிப்படுறீங்களா? இந்த ஒரு ஆயுர்வேத மருந்தை ட்ரை பண்ணுங்க!!

Posted By: Suganthi Rajalingam
Subscribe to Boldsky

ஒவ்வொரு மாதமும் பெண்கள் தங்கள் மாதவிடாய் காலத்தை கடப்பது என்பது மிகவும் ரணமான விஷயமாகத் தான் உள்ளது . இந்த காலத்தில் ஏற்படும் தாங்கவே முடியாத தீவிர பிடிப்புடன் கூடிய வலி ஏற்பட்டு உங்களை ரணமாய் கொல்கிறதா. இந்த வேதனை சொல்வதை காட்டிலும் நரக வேதனையை அனுபவிக்கும் பெண்கள் தான் அதிகம்.

நீங்கள் மட்டுமில்ல 60% பெண்கள் தங்கள் வாழ்நாளில் இந்த மாதவிடாய் வலியை தாங்கிக் கொண்டு தான் வாழ்கின்றனர். இதில் சில பெண்களுக்கு மட்டுமே அவர்கள் பருவமடையும் போது மட்டுமே மாதவிடாய் வலியால் துன்புறுகின்றனர்.

Say Goodbye To Period Pain With These 3 Kitchen Ingredients!

ஆனால் பெரும்பாலான பெண்கள் தங்கள் பருவமடைதல் மற்றும் மாதவிடாய் காலம் இப்படி எந்த நேரத்தில் வேண்டுமானாலும் அவர்கள் வலிகள் தொடர்கின்றன.

மாதவிடாய் வலியானது பெண்களின் ஆரோக்கியத்தை பொருத்து அதன் வேதனையின் அளவும் வேறுபடுகின்றன.

சில பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் வலி சமாளிக்க முடியாத ரணவேதனை கொடுக்கும். இதற்கு வலி நிவாரண மாத்திரைகளை எடுத்தால் மட்டுமே அவர்களால் நிம்மதி பெருமூச்சு விட முடியும். ஆனால் மற்ற பெண்களுக்கு மாதவிடாய் வலியானது சமாளிக்க கூடியதாக அமைந்துவிடும்.

இந்த மாதவிடாய் வலியானது மாதவிடாயின் முதல் நாளில் தொடங்கி இரண்டாம் நாள் சரியாகி விடும். சில பேர்கள் மாதவிடாய் காலம் முழுவதும் வலியால் அவதிப்படுவர். இந்த வலியானது பெண்களின் அடி வயிற்றுப் பகுதியில் ஏற்படும் ரணமான வேதனையாகும்.

பெண்களின் மாதவிலக்கு கோளாறை நீக்கும் ஒரு அற்புத வைத்தியம்!!

இந்த வலியை மெனாரோயா என்று கூறுவர். இது எதனால் ஏற்படுகிறது என்றால் கருப்பை தசைகள் சுருங்குவதால் ஏற்படுகின்றன. இந்த சுருக்கத்தால் அந்த பகுதியில் உள்ள இரத்த குழாய் செல்களுக்கு ஆக்ஸிஜன் தடைபடுவதால் வலி ஏற்படுகிறது. மேலும் ஹார்மோன் சமநிலையின்மையாலும் கருப்பை சுவர் எரிச்சலடைவதால் வலி ஏற்படுகிறது.

இதற்காக ஒவ்வொரு மாதமும் வலிநிவாரணியை எடுப்பது உங்கள் உடலுக்கு நல்லது இல்லை. எனவே உங்கள் பிரச்சினைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க இங்கே வீட்டிலேயே செய்யும் இயற்கையான முறை கொடுக்கப்பட்டுள்ளது. சரி வாங்க பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 தேவையான பொருட்கள்

தேவையான பொருட்கள்

வாழைப்பழம் - 1

ஆளி விதைப் பொடி - 2 டேபிள் ஸ்பூன்

டார்க் சாக்லேட் பவுடர் - 2 டேபிள் ஸ்பூன்.

 செய்முறை

செய்முறை

ஒரு பெளலில் தேவையான அளவு மேலே குறிப்பிட்டுள்ள பொருட்களை எடுத்து கொள்ள வேண்டும். அதை நன்றாக கலந்து பேஸ்ட் ஆக்கி கொள்ளவும்.

இந்த முறையை மாதவிடாய் காலத்திற்கு 10 நாட்களுக்கு முன்னாடிலிருந்து சாப்பிட்டு உங்கள் மாதவிடாய் காலம் முடியும் வரை இதை சாப்பிட வேண்டும்.

இந்த முறை கண்டிப்பாக உங்கள் மாத விடாய பிடிப்பு வலியை சரியாக்கும்.

இதனுடன் சேர்த்து தண்ணீர், பழங்கள் காய்கறிகள், கீரைகள் போன்றவையும் யோகா பயிற்சிகள் போன்றவற்றையும் மேற்கொண்டால் விரைவிலேயே நல்ல பலனை அளிக்கும். ஜங்க் ஃபுட் போன்றவற்றை தவிர்க்கவும்.

 வாழைப்பழத்தின் நன்மைகள் :

வாழைப்பழத்தின் நன்மைகள் :

வாழைப்பழத்தில் நிறைய பொட்டாசியம் இருப்பதால் அவைகள் கருப்பை தசைகளை ரிலாக்ஸ் ஆகச் செய்வதால் வலியின் வேகம் குறைகிறது.

டார்க் சாக்லேட் :

டார்க் சாக்லேட் :

டார்க் சாக்லேட் பவுடரில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் கருப்பையில் உள்ள அழற்சியை நீக்குகிறது.

ஆளி விதை :

ஆளி விதை :

ஆளி விதைகளில் உள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் கருப்பை தசைகளை ரிலாக்ஸ் செய்வதால் வலியும் குறைகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Say Goodbye To Period Pain With These 3 Kitchen Ingredients!

Say Goodbye To Period Pain With These 3 Kitchen Ingredients!