ஹெபடைடிஸ் பி வராமல் தற்காத்துக் கொள்ள நீங்கள் செய்ய வேண்டியது என்ன?

By: Balakarthik Balasubramanian
Subscribe to Boldsky

ஹெபடைடிஸ் B என்பது கல்லீரலை தாக்க கூடிய, ஹெபடைடிஸ் B வைரஸினால் உண்டாகும் ஒரு நோயாகும். இதன் தாக்கமானது கடுமையானதாகவும் அல்லது நாள்பட்டதாகவும் இருக்கிறது.

இந்த வைரஸானது இரத்தம் மூலமாகவோ அல்லது பாதிக்கப்பட்ட நபரின் உடல் திரவங்கள் மூலமாகவோ ஒருவருக்கு பரவுகிறது.

இந்த நோயானது சுகாதார ஊழியர்களுக்கு தொழில் சார்ந்த தீங்காகவும் அமைகிறது. மேலும், வாழ்க்கையின் பெரும் அச்சுறுத்தலுக்கான சாத்தியக்கூறாகவும் இந்நோய் விளங்குகிறது.

கல்லீரலைத் தூய்மைப்படுத்தும் 15 உணவுகள்!!!

ஹெபடைடிஸ் B நோய், உலக சுகாதார பிரச்சனையில் முக்கிய இடம் வகிப்பதோடு, உலகம் முழுவதும் 257 மில்லியன் மக்களுக்கு இந்த பிரச்சனை இருப்பதாகவும் ஆய்வறிக்கையின் மூலம் நமக்கு தெரிய வருகிறது.

இந்த தொற்றானது நாள்பட்டுபோக, இழைநார் வளர்ச்சி மற்றும் கல்லீரல் புற்றுநோய் மூலம் ஒரு நபரை மரணத்தை நோக்கியும் இந்நோய் அழைத்து செல்கிறது. ஹெபடைடிஸ் B ஒருவருக்கு உண்டாக சில காரணங்கள் அமைகிறது.

Home Remedies To Relieve Symptoms Of Hepatitis B

அவை, பலருடன் உடலுறவு வைத்திருக்கும் ஒருவருடன் பாதுகாப்பற்ற செக்ஸ் வைத்துக்கொள்வது, குழந்தை பிறப்பின்போது தாயிடமிருந்து குழந்தைக்கு தொற்றுவது, ஒரு முறை பயன்படுத்திய ஊசியை மீண்டும் உபயோகிப்பது, சுத்திகரிக்கப்படாத ஊசியின் உபயோகம், ரேசர் பயன்படுத்துவது, அசுத்தமான ரத்தத்தில் தொற்றும் ஒத்த பொருட்கள், பச்சை குத்திக்கொள்ளும் பழக்கம் முதலிய காரணங்களால் ஒருவருக்கு இந்நோய் உண்டாகிறது.

சில பொது அறிகுறிகளாக... லேசான காய்ச்சல், தலைவலி, உடல் அசதியுடன் இருப்பதோர் உணர்வு, லேசான வயிற்று வலி, வயிற்றில் அசௌகரியம், வாந்தி பிரச்சனை, முமட்டல், பசியிழப்பு, உடல் வலி, மற்றும் உடல் சோர்வு ஆகியவை ஏற்படுகிறது.

உலக ஹெபடைடிஸ் தினத்தன்று, சில வீட்டு வைத்தியங்கள் பின்பற்ற அறிவுறுத்தப்படுகிறது. உங்களுக்கு இந்த பிரச்சனை இருக்குமெனில், இவற்றை செயல்முறைப் படுத்தி விரைவில் குணமடையலாம்.

இந்திய நெல்லிக்காய் (அம்லா)

இந்திய நெல்லிக்காயை 'அம்லா' என்றும் அழைக்கப்பட, இதனால் நிறைய சுகாதார நலன்களும் உண்டு. இதில் இருக்கும் வைரஸை எதிர்க்கும் பண்பானது இந்த நோயை விரைவில் குணப்படுத்துகிறது. நீங்கள் இந்த இந்திய நெல்லிக்காயை பிழிந்து தேனுடன் கலந்து ஒரு நாளைக்கு பல முறை பருகி வரலாம்.

மாறாக, நெல்லிக்காய் சாறினை வடிகட்டி, தண்ணீருடன் கலந்து பகல் பொழுதில் சாப்பிட்டும் வரலாம். மற்றுமோர் வழியாக, காய்ந்த நெல்லிக்காய் பொடியை, சர்க்கரையுடன் கலந்து ஒரு நாளைக்கு இரண்டு முறையென ஒரு மாதத்திற்கு நாம் சாப்பிட்டு வர, நோய் விரைவில் குணமடையும்.

Home Remedies To Relieve Symptoms Of Hepatitis B

இஞ்சி:

ஆரோக்கியமானது. ருசியானதும் கூட இந்த இஞ்சி டீ. இந்த தேனீரை இஞ்சி வேரிலிருந்து நாம் தயாரித்து தினமும் பருகி வர, ஹெபடைடிஸ் B பிரச்சனையிலிருந்து விரைவில் விடுபட நமக்கு இந்த தேனீர் உதவுகிறது. நாம் சாப்பிட்டு முடித்தவுடன் இஞ்சி சாறினை குடித்து வருவதாலும், அதே பலனை நம்மால் பெற முடிகிறது.

பூண்டு:

சிதைமாற்றப் பொருட்கள் மற்றும் அமினோ அமிலங்கள் பூண்டில் அதிகமிருக்க, ஹெபடைடிஸ் B வைரஸை கொல்ல இது உதவுகிறது. பச்சை பூண்டு பற்களை வெறும் வாயில் நாம் மெல்லுவதன் மூலம் இந்த நோயிலிருந்து நம்முடைய கல்லீரலை பாதுகாத்து நோய் அண்டாமல் நமக்கு உதவுகிறது.

Home Remedies To Relieve Symptoms Of Hepatitis B

பீட்ரூட்:

ஊட்ட சத்துக்கள் பீட்ரூட்டில் அதிகமிருக்க ஹெபடைடிஸ் B நோயாளிகளுக்கு பீட்ரூட் பெரிதும் உதவுகிறது. பீட்டில் இரும்பு சத்து, பொட்டாசியம், போலிக் அமிலம், மாங்கனீசு, கால்சியம், காப்பர், என அதிகமிருக்க, வைட்டமின் A, B மற்றும் C யும் அதிகளவில் காணப்படுகிறது. இந்த அனைத்து கனிமங்களும் நம்முடைய கல்லீரலில் காணப்படும் சிதைந்த செல்களின் மீளுருவாக்கத்திற்கு பெரிதும் உதவி, வீக்கம் மற்றும் வலியையும் குறைப்பதோடு நோயிலிருந்து விரைவில் விடுபடவும் வழிவகை செய்கிறது.

பீட்களின் திறனால் கல்லீரலில் காணப்படும் நச்சுக்கள் நீக்கப்படுவதோடு, உடலுக்கு தேவையான ஆற்றலையும் பீட்ரூட் தருகிறது. இந்த வீட்டு வைத்தியம் எளிதானது: தினமும் இரண்டு டம்ப்ளர் பீட்ரூட் சாறு பருகிவர, விரைவில் குணமடைவதை நீங்களே பார்ப்பீர்கள்.

ஆலிவ் இலை:

எண்ணற்ற சிகிச்சை பண்புகள் கொண்டதாக ஆலிவ் இலை காணப்படுகிறது. ஆலிவ் இலையில் காணப்படும் முக்கிய சேர்ப்பாக 'ஓலோரூபின்' என்னும் பைட்டோகெமிக்கல் விளங்குகிறது. இதில் திடமிக்க வைரஸ் மற்றும் பூஞ்ஜைகளை எதிர்க்கும் பண்பும் காணப்படுகிறது. இதனால், ஹெபடைடிஸ் B வைரஸானது சாகடிக்கப்படுவதோடு, உடலுக்கு தேவையான துணைப்பொருட்களையும், எதிர்ப்பு சக்தியையும் தந்து ஆற்றல் மட்டும் வலிமையையும் புதுப்பிக்கிறது.

Home Remedies To Relieve Symptoms Of Hepatitis B

ஆலிவ் இலைக்கொண்டு தீர்வினை நாம் பெற வேண்டுமெனில், ஒரு கப் தண்ணீரை கொதிக்கவைத்து அத்துடன் காய்ந்த ஆலிவ் இலைகளை ஒரு டீ ஸ்பூன் சேர்க்க வேண்டும். அதன் பிறகு பத்து நிமிடங்கள் காத்திருக்க வேண்டும். அதன்பின்னர், அந்த தேனீரை வடிக்கட்டி ஒரு நாளைக்கு மூன்று முறை பருகி வர வேண்டும். உங்கள் வீட்டில் ஆலிவ் இலை இல்லையென்றால், 500 மில்லி கிராம், ஆலிவ் இலைக்கொண்டு தயாரிக்கப்பட்ட மாத்திரையை மருந்துக்கடைகளில் வாங்கி அதனை பிரித்தெடுத்து பயன்படுத்தலாம்.

அதிமதுரம்:

இதில் இருக்கும், வைரஸ் மற்றும் ஆக்ஸிஜனேற்றத்தை எதிர்க்கும் பண்பானது ஹெபடைடிஸ் B வைரஸை மிக விரைவில் அழித்து வேகமாக குணமடையவும் உதவுகிறது. ஓர் எளிதான தீர்வாக, ஒரு துண்டு அதிமதுரத்தை, ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறை மென்று சாப்பிட்டு வருவது நல்லதாகும்.

மஞ்சள்:

ஹெபடோ பாதுகாப்பு முகவராக செயல்படும் இந்த மஞ்சள், கல்லீரலை நச்சுத்தன்மையிலிருந்தும் நோயிலிருந்தும் காத்து கல்லீரலை ஒழுங்காகவும் செயல்பட வைக்கிறது. மஞ்சளில் ஆக்ஸிஜனேற்ற பண்பு இருக்க, கல்லீரல் முன்னேற்றத்துக்கு வழிவகுத்து நோய் அண்டாமல் பாதுகாக்கிறது.

உடம்பில் ஹெபடைடிஸ் வைரஸின் இனப்பெருக்கத்தையும் இந்த மஞ்சள் கட்டுப்படுத்துகிறது. இந்த நோயிலிருந்து நாம் விரைவில் மீளவும் இது உதவுகிறது. நாம் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்று தான். ஆம், நம்முடைய அனைத்து சமையலிலும் மஞ்சள் தூளை அதிகம் சேர்த்து சமைத்து சாப்பிடுவது, பெரிதும் பயனுள்ளதாய் அமைகிறது.

வேம்பு:

ஆக்கக் கூறுகள் அதிகம் வேம்பில் காணப்பட, வைரஸை எதிர்க்கும் பண்பும் இதில் உள்ளது. ஹெபடைடிஸ் B நோயிலிருந்து நம்மை காப்பாற்றவும் இது உதவுவதோடு வைரஸின் தோற்றத்தை முளையிலே (தொடக்கத்திலே) கிள்ளி எறிகிறது.

வேம்பிற்கு கல்லீரலில் உண்டாகும் நச்சுத்தன்மையை அழிக்கும் ஆற்றலும் இருக்கிறது.

வேம்பிலிருந்து ஹெபடைடிஸ் B நோய்க்கு மருந்து தயாரிக்கும் சிறந்த முறையாக: முதலில் வேம்பு இலைகளை நன்றாக கழுவி அரைத்து பிழிந்துக்கொள்ள வேண்டும். அந்த சாறில் 30 மில்லி எடுத்து, தோராயமாக 15 மில்லி தேனுடன் கலந்துகொள்ள வேண்டும். அந்த கலவையை தினசரி அதிகாலையில் வெறும் வயிற்றில் ஒரு வாரத்துக்கு குடித்து வர வேண்டும்.

சீந்தில் கொடி:

இது மிகவும் பழமை வாய்ந்த மற்றும் மந்திர மூலிகையும் கூட. இதனால் பல விதமான நோய்களுக்கு மருந்தாக, அவற்றுள் ஹெபடைடிஸ் Bயும் ஒன்றாகும். இதில் அழற்சியை எதிர்க்கும் பண்பு இருக்க, நோய்தடுப்பு பண்பும் காணப்படுவதால் தசை மற்றும் எழும்பு சம்பந்தப்பட்ட நோய்களுக்கு சிறந்த மூலிகை மருந்தாக இது பயன்படுகிறது.

இந்த தாவரத்தினை பிரித்தெடுத்து பயன்படுத்துவதன் மூலம் மாற்றப்பட்ட கல்லீரலின் செயல்பாடானது இயல்பாகிறது. இதனால் ஹெபடைடிஸ் B நோயாளிகளும் குணமடைகின்றனர்.

எலுமிச்சை:

ஹெபடைடிஸ் B நோயை குணப்படுத்த கூடிய மற்றுமோர் இயற்கை மருந்து தான் எலுமிச்சையாகும். நீங்கள் இந்த எலுமிச்சை நீரை ஒரு நாளைக்கு பல முறை குடித்துவர., குமட்டல், வாந்தி எடுத்தல், பசியிழப்பு பிரச்சனைகள் விரைவில் குணமாகிறது. நீங்கள் எலுமிச்சை பழச்சாறுடன் பப்பாளி விதை சாறையும் கலந்து சாப்பிட, நல்ல பயனை உணர்வீர்கள். மேலும், எலுமிச்சை சாறுடன் திராட்சை பழச்சாறு மற்றும் ஆலிவ் எண்ணெயை கலந்து சாப்பிட ஹெபடைடிஸ் B நோய் குணமாகும்.

டேன்டேலியன்:

இதற்கு நிறைய சிகிச்சை பண்புகள் உண்டு. இதில் காணும் வைரஸ், அழற்சி, மற்றும் ஆக்ஷிஜனேற்றத்தை எதிர்க்கும் பண்பானது, ஹெபடைடிஸ் B நோயினால் கல்லீரலில் உண்டாகக்கூடிய வலி மற்றும் வீக்கத்தை குறைக்கிறது. மேலும், கல்லீரலில் காணப்படும் அனைத்து நச்சுத்தன்மை கொண்ட பொருட்களையும் நீக்கி, சுத்தமாக வைத்துக்கொள்ள உதவுகிறது.

நீங்கள், டேன்டேலியனின் சுத்தமான அல்லது காய்ந்த இலைகளையும், மலர்களையும் பயன்படுத்தி ஹெபடைடிஸ் B நோயினை குணப்படுத்தலாம். கொஞ்சம் தண்ணீரை கொதிக்க வைத்து, அதில் சுத்தமான அல்லது காய்ந்த இலைகள் மற்றும் மலரையும் போட வேண்டும். அதனை பத்து நிமிடங்களுக்கு வைத்திருந்து அதன்பிறகு, வடிக்கட்டி பிரித்தெடுத்து அந்த தேனீரை மட்டும் குடிக்க வேண்டும்.

English summary

Home Remedies To Relieve Symptoms Of Hepatitis B

Home Remedies To Relieve Symptoms Of Hepatitis B
Story first published: Tuesday, August 1, 2017, 8:00 [IST]
Subscribe Newsletter