புற்று நோய் செல்களை அழிக்கும் புதிய சிகிச்சை முறை!! அவசியம் பகிரவும்!!

By: Divyalakshmi Soundarrajan
Subscribe to Boldsky

வைட்டமின் சி மற்றும் ஆன்டிபயோடிக் கலவை புற்றுநோய் செல்களை அழிக்க உதவக்கூடியது என்று புதிய ஆய்வில் தெரிந்துள்ளது. மேலும், இந்த கலவை புற்றுநோய் திரும்ப வராமல் தடுக்கவும், அதற்கான மருத்துவத்தை வாழ்நாள் முழுவதும் தொடர்வதை தவிர்க்கவும் உதவக்கூடியது என்று வெளியிட்டுள்ளது.

ஆய்வின் முடிவில், புற்றுநோயை குணப்படுத்த தற்போது உதவக்கூடிய 2-டிஜி முறையை விட வைட்டமின் சி மற்றும் ஆன்டிபயோடிக் கலவை 100 மடங்கு சிறந்தது என்று கண்டறியப்பட்டுள்ளது.

லண்டன் சல்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் உயிரிமருத்துவ ஆராய்ச்சி மையத்தின் ஆய்வு இணை-ஆசிரியர், பேராசிரியர் மைக்கேல் லேசானி மற்றும் சக ஊழியர்கள் அண்மையில் தங்கள் கண்டுபிடிப்புகளை பத்திரிகை ஒன்றில் வெளியிட்டனர்.

Combination of vitamin C and antibiotic make wonder on destroying cancer cells in the body

ஸ்டெம் செல்கள் என்பது ஒரு செல்லின் வகையை மாற்றியமைக்கும் திறன் கொண்டது. மேலும், ஆய்வுகள் கூறுவது என்னவென்றால் புற்றுநோய் செல்களும் ஸ்டெம் செல்களை போன்று மற்ற செல்களை புற்றுநோய் செல்களாகவோ அல்லது புற்றுநோய் கட்டிகளாகவோ மாற்றவைக் கூடிய ஆற்றலை கொண்டது என்று குறிப்பிடுகிறது.

எனவே, புற்றுநோய் ஸ்டெம் செல்களை அடையாளம் காணவும், அழிக்கவும் புதிய சிகிச்சை முறைகள் அவசியமானவை என்று பேராசிரியர் லிசந்தி மற்றும் சக ஊழியர்கள் கூறுகின்றனர். புதிய ஆய்வில் ஆராய்ச்சியாளர்கள் புற்றுநோய் ஸ்டெம் செல்களை அழிக்கும் புதிய முறைகள் பற்றி கண்டறிந்துள்ளனர்.

புற்றுநோயை அழிக்க உதவும் வைட்டமின் சி :

இந்த ஆண்டு வெளிவந்த அறிக்கையில், பேராசிரியர். லிசந்தி மற்றும் குழுவின் மற்றொரு ஆய்வில், வைட்டமின் சி திறம்பட புற்றுநோய்களை எவ்வாறு தாக்குகிறது என்பதை வெளியிட்டிருந்தனர். இது குறித்து அவர்கள் மேற்கொண்ட ஆய்வில், டாக்ஸிசைக்ளிங் என்னும் முகப்பரு, நிமோனியா மற்றும் நோய் தொற்றுகளுக்கு உபயோகிக்கும் ஆன்டிபயோடிக்கை புற்றுநோய் ஸ்டெம் செல்களில் 3 மாதங்களுக்கு அளித்தனர்.

Combination of vitamin C and antibiotic make wonder on destroying cancer cells in the body

ஆன்டிபயாடிக் "வளர்சிதை மாற்ற நெகிழ்வுத்தன்மையை" தூண்டுகிறது என்று இந்த ஆய்வு குழு விளக்குகிறது. அதாவது, இது எரிபொருள் ஆதாரங்களை உயிர்வாழ்வதற்கான வழிகளாக மாற்றும் செல்களின் திறனைத் தடுக்கிறது. இதன் முடிவாக அந்த செல்கள் ஆற்றலின் ஒரு ஆதாரமாக குளுக்கோஸைக் கொண்டிருக்கும். ஆனால் ஆன்டி-பயாடிக்குடன் வைட்டமின் சி-யை எடுக்கும் போது, அது புற்றுநோய் ஸ்டெம் செல்களில் இருந்து க்ளுக்கோஸை நீக்கி, அந்த செல்களை அழித்துவிடும்.

இந்த சூழ்நிலையில், வைட்டமின் சி கிளைகோலைஸிஸின் தடுப்பானாக செயல்படுகிறது. இது மைட்டோகோண்ட்ரியாவில் எரிபொருள்களை உற்பத்தி செய்யும் செல்களின் 'பவர் ஹவுஸ்' ஆக செயல்படுகிறது என்று, சல்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் உயிரிமருத்துவ ஆராய்ச்சி மையத்தின் இணை ஆசிரியரான டாக்டர் ஃபெடரிகா சோட்ஜியாவை விளக்குகிறார்.

Combination of vitamin C and antibiotic make wonder on destroying cancer cells in the body

2 டிஜியை விட 100 மடங்கு சக்தி வாய்ந்த புதிய தெரபி

முந்தைய ஆய்வில் புற்றுநோய் ஸ்டெம் செல்களை அழிப்பதில் 2 டிஜியை விட, வைட்டமின் சி உபயோகிப்பது மட்டும் 10 மடங்கு சிறந்ததாக கண்டறியப்பட்டது. ஆனால், அத்துடன் டாக்ஸிசைக்கிளினை சேர்க்கும் போது 100 மடங்கு சிறந்தது என்பது தெரியவந்துள்ளது.

"புற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் வைட்டமின் சி மற்றும் நச்சல்லாத கலவைகள் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது என்பதற்கான சான்று" என பேராசிரியர் லசந்தி தெரிவிக்கிறார்.

English summary

Combination of vitamin C and antibiotic make wonder on destroying cancer cells in the body

Combination of vitamin C and antibiotic make wonder on destroying cancer cells in the body
Story first published: Wednesday, June 21, 2017, 13:00 [IST]
Subscribe Newsletter