மெனோபாஸ் சமயத்தில் சகல பாதிப்புகளும் குணமாக இந்த ஆயுர்வேத மருந்தை சாப்பிட்டு பாருங்களேன்!!

Written By:
Subscribe to Boldsky

மெனோபாஸை 50 வயதை அடைந்த ஒவ்வொரு பெண்ணும் சந்தித்தே ஆகவேண்டிய நிர்பந்தம் உள்ளது. அதுவரை சீராக சுரந்த ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் பின் சடாரென் குறையத் தொடங்கும்.

ஹார்மோன் ஏற்ற இறக்கங்களால் உடல் சற்று குழம்பி போவது உண்மைதான். இதனால் மனத் தடுமாற்றம், குழப்பங்கள், கோபம், தூக்கமின்மை, எரிச்சல் என பல வகை பாதிப்புகள் தலைக்காட்டும்.

Ayurvedhic remedies to treat menopause symptoms

அந்த சமயத்த்தில் தக்க முன்னெச்செரிக்கையாக செயல்பட்டால் நீங்கள் எப்போதும் போல சுறுசுறுப்பாகவும் இயல்பாகவும் இருக்க முடியும். அதற்கான வழிமுறைகள் இதோ உங்களுக்காக கொடுக்கப்பட்டுள்ளது. தெரிந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கல்யாண குலம் :

கல்யாண குலம் :

மெனோபாஸ் ஆரம்பிக்கும்போதே ‘கல்யாண குலம்' என்ற ஆயுர்வேத மருந்தை சாப்பிட்டால் பக்க விளைவுகள் எதுவும் ஏற்படாது. இது எல்லா ஆயுர்வேத மருந்துக் கடைகளிலும் கிடைக்கும்.

தினமும் ஒருவேளை இரவு படுக்கப் போவதற்கு முன் கல்யாண குலம் ஒரு டீஸ்பூன் எடுத்து அதை வெதுவெதுப்பான நீரிலோ அல்லது இளஞ்சூட்டில் இருக்கும் பாலிலோ கலந்து சாப்பிட வேண்டும். இப்படி தொடர்ந்து இரண்டு மாதங்கள் சாப்பிட்டால் மெனோபாஸ் கஷ்டமான விஷயமாக தோன்றாது.

மெனோபாஸ் சமயத்தில் அதிக உதிரப்போக்கை தடுக்க :

மெனோபாஸ் சமயத்தில் அதிக உதிரப்போக்கை தடுக்க :

மெனோபாஸ் சமயத்தில் அதிக ரத்தப்போக்கு உண்டாகும்

சுத்தமான ஆடுதொடா இலைகள் பத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அவற்றை கழுவி சுத்தம் செய்து, இலைகளின் காம்பு, நரம்பு எல்லாவற்றையும் எடுத்துவிட வேண்டும்.

பிறகு, அந்த இலைகளை இட்லி குக்கரில் வைத்து ஆவியில் வேகவிட வேண்டும். வெந்த இலைகளை ஒரு மெல்லிய, சுத்தமான துணியில் போட்டு இறுக்கி சாறு எடுக்க வேண்டும்.

அந்த சாற்றுடன் சமபங்கு தேன் கலந்து, இரவு படுக்கப் போகும் முன் அருந்த வேண்டும். மெனோபாஸ் நேரத்தில் உதிரப்போக்கு வரும் நாட்களில் இந்த மருந்தை உட்கொண்டால் தொல்லை தீரும்.

 தலைவலி, தூக்கமின்மைக்கு :

தலைவலி, தூக்கமின்மைக்கு :

மெனோபாஸ் சமயத்தில் வரும் தலைவலி, எரிச்சல், தூக்கமின்மை, மன அழுத்தம் ஆகியவற்றை தவிர்க்க ஆயுர்வேதத்தில் ஒரு மருந்து இருக்கிறது. அஸ்வகந்தாரிஷ்டம் என்பது அதன் பெயர்.

இதை, உணவு உட்கொண்ட பிறகு காலை ஒன்பது மணிக்கு ஒரு தடவையும், இரவு ஒன்பது மணிக்கு ஒரு தடவையும் முப்பது மில்லி அருந்தவேண்டும்.

கட்டி கட்டியான உதிரப்போக்கிற்கு :

கட்டி கட்டியான உதிரப்போக்கிற்கு :

மெனோபாஸ் சமயத்தில் சிலருக்கு உடம்பு சூடாகி உதிரப் போக்கு திடீரென கட்டி கட்டியாக வரும். இதைத் தவிர்க்க நன்னாரி, சீந்தில் கொடி ஆகிய இரண்டும் எல்லா நாட்டு மருந்துக் கடைகளிலும் கிடைக்கும்.

இவற்றில் தலா பதினைந்து கிராம் எடுத்து கழுவி சுத்தம் செய்து கொள்ள வேண்டும். நூறு மில்லி பால், நூறு மில்லி தண்ணீர் எடுத்து, இரண்டையும் கலந்து, அதில் இந்த இரண்டு மருந்துகளையும் போட்டுக் காய்ச்ச வேண்டும்.

பாலும், தண்ணீரும் சேர்ந்து நூறு மில்லி அளவுக்கு வரும்வரை நன்கு கொதிக்கவைத்து எடுக்க வேண்டும். வெதுவெதுப்பான சூட்டில் இந்தப் பாலை, இரவு படுக்கப் போகும் முன்பு சாப்பிட வேண்டும்.

எலும்பு பலமாக

எலும்பு பலமாக

மெனோபாஸ் சமயத்தில் வரும் எலும்பு வலுவிழத்தல் நோயின் பாதிப்புகளைத் தவிர்க்க... மூட்டுகளில் தினமும் நல்லெண்ணெய் தேய்த்து மிருதுவாக மஸாஜ் செய்து விடவேண்டும். தினமும் கொஞ்சம் கறுப்பு எள்ளை மென்று சாப்பிட வேண்டும். வேளாவேளைக்கு சரியான நேரத்தில் உணவு உட்கொள்ள வேண்டும்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Ayurvedhic remedies to treat menopause symptoms

Ayurvedhic remedies to treat menopause symptoms
Story first published: Saturday, April 15, 2017, 9:00 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter