வொயிட் காலர் ஜாப் தான் வேண்டுமென தேடிப்பிடித்து வாங்கிய வேலையால் வந்த வினை!

Posted By:
Subscribe to Boldsky

வொயிட் காலர் ஜாப் வேண்டும் என்று தேடி இன்றைக்கு இளைஞர்கள் பலரும் சிஸ்டம் முன்பாக உட்கார்ந்திருக்கும் வேலையை தான் செய்து கொண்டிருக்கிறார்க. நாள் முழுவதும் ஒரேயிடத்தில் உட்கார்ந்து செய்கின்ற வேலையினால் பெரும் உடல் உபாதைகளை சந்திக்கிறார்கள் என்று நிறைய செய்திகளை படித்திருப்போம் இதே நேரத்தில் நீண்ட நேரம் சிஸ்டம் பார்பதால் கண்கள் எவ்வளவு பாதிக்கப்படுகிறது என்று தெரியுமா?

Amazing home remedies for dry eye

அதிக வெளிச்சத்துடன் கூடிய சிஸ்டத்தை நீண்ட நேரம் பார்ப்பதால் கண்கள் ட்ரை ஆகிடுகிறது. கண்களில் வறட்சி ஏற்பட்டு கண் எரிச்சல் ஏற்படுகிறது, இது அப்படியே தொடர்ந்தால் கண் பார்வை பாதிக்கப்படுவதற்கு கூட வாய்ப்புகள் அதிகம். இதனை சமாளிக்க வீட்டிலிருந்தே செய்யக்கூடிய கை வைத்தியங்கள் என்னென்ன என்று தெரிந்து கொள்ளுங்கள்.

பொதுவாக இந்த கண் பிரச்சனையை பொறுத்தவரையில் அதனை சரி செய்ய வேண்டுமென்றால் உங்களுடைய வாழ்க்கை முறையையும் மாற்றுவது மிகவும் அவசியமாகும். அவை எல்லாம் என்னென்ன என்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ட்ரை ஐ :

ட்ரை ஐ :

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லாருக்கும் இந்த பாதிப்பு வரக்கூடும். உலக மக்கள் தொகையில் அறுபது சதவீதத்தினருக்கு இந்த பாதிப்பு இருக்கிறது. இது கண்களில் இருக்கும் லூப்ரிக்கண்ட் அளவு குறைவது தான் முக்கிய காரணியாக இருக்கிறது.

இந்த பாதிப்பு ஏற்பட்டால் கண்கள் எரிச்சலாவது,கண்கள் சிவந்து போவது, இதே இன்னும் தீவிரமானால் நீங்கள் பார்ப்பது எல்லாமே கலங்கலாக தெரியும். இதனை சரியான நேரத்தில் கண்டறிந்து முறையாக கவனிப்பது மிகவும் அவசியமானது. இல்லையென்றால் இது மேற்கொண்டு சீரியசான பிரச்சனைகளில் கொண்டு சேர்த்திடும்.

காரணங்கள் :

காரணங்கள் :

கண்கள் வறண்டு போவதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகிறது, அவற்றில் முக்கியமாக நீண்ட நேரம் சிஸ்டம் மற்றும் மொபைல் போன் பார்ப்பது, அதிக நேரம் டிவி பார்ப்பது, புத்தகம் படிப்பது, அதீத மது மற்றும் புகைப்பழக்கம், ரத்த அழுத்தம்,மன அழுத்தம், அலர்ஜி,க்ளைமேட் மாறுவது போன்றவை முக்கிய காரணியாக சொல்லப்படுகிறது.

இதனை சரிப்படுத்த மேற்கொள்ள வேண்டிய சில எளிய வீட்டு மருத்துவக் குறிப்புகள் என்னென்ன என்று தெரிந்து கொள்ளலாம்.

வெள்ளரி :

வெள்ளரி :

வெள்ளரியில் இருக்கும் நீர்ச்சத்து கண்களுக்கு மிகவும் நல்லது. இது குளிர்ச்சியான காயும் கூட. வெயில் காலங்களில் அதிகமான வெள்ளரியை எடுத்துக் கொள்ளுங்கள். தினமும் அலுவலகம் முடித்து வீடு திரும்பியதும்.

கண்களை மூடி கண்களுக்கு மேலே வெள்ளரியை வைத்திடுங்கள். இது குளிர்ச்சியை ஏற்படுத்தும். அதே சமயம் உங்கள் டயட்டில் நிறைய வெள்ளரியை சேர்க்கலாம்.

பால் :

பால் :

பாலில் அதிகப்படியான என்சைம்ஸ் இருக்கிறது, இவை நம் உடலில் இருக்கும் திசுக்களின் வளர்ச்சிக்கு முக்கியப் பங்காற்றுகிறது. குளிர்ந்த பாலை பஞ்சில் நனைத்து கண்களில் வைத்துக் கொள்ளலாம். இது கண்களை குளிர்விக்கும். வேண்டுமென்றால் ரோஸ்வாட்டரும் சேர்க்கலாம்.

வெந்தயம் :

வெந்தயம் :

வீட்டில் இருக்கும் சமையல் பொருட்களில் ஒன்றான வெந்தயத்தில் ஏராளமான மருத்துவ குணங்கள் அடங்கியிருக்கிறது. இதனை சருமம் மற்றும் முடி பராமரிக்கவும் இதனை நாம் பயன்படுத்தியிருப்போம். ஆனால் இதனை நம் கண்களை குளிர்விக்கவும் பயன்படுத்தலாம்.

ஒரு கப் தண்ணீரில் ஒரு ஸ்பூன் வெந்தயத்தை சேர்த்து நன்றாக கொதிக்க வைத்திடுங்கள். சுமார் பதினைந்து நிமிடங்கள் வரை கொதிக்க வைக்க வேண்டும். பின்னர் அதனை இறக்கிவிடலாம், அது நன்றாக ஆறியதும். அந்த நீரில் பஞ்சை நனைத்து அதனைக் கொண்டு கண்களை துடைத்தெடுங்கள்.

ஆளி விதை :

ஆளி விதை :

ஆளி விதையில் அதிகப்படியான ஃபேட்டி ஆசிட் மற்றும் ஒமேகா 3 இருக்கிறது. ஒரு நாளைக்கு இதனை இரண்டாயிரம் மில்லி கிராம் வரை எடுத்துக் கொண்டால் கண் வறட்சியை 85 சதவீதம் குறைக்கலாம். கர்ப்பமானவர்கள் மற்றும் தாய்ப்பால் கொடுப்பவர்கள் இதனை செய்யாமல் தவிர்ப்பது நல்லது.

கற்றாழை :

கற்றாழை :

கற்றாழையில் இருக்கும் ஆண்ட்டிசெப்டிக் துகள்கள் கண்களை குளிர்விக்கும். தினமும் கண்களை மூடிக்கொண்டு மேலே கற்றாழை ஜெல்லைத் தடவி லேசாக மசாஜ் செய்திடுங்கள் இதனை தொடர்ந்து பத்து நாட்கள் வரை செய்து வர நல்ல பலன் கிடைத்திடும்.

தேன் :

தேன் :

சர்வதேச தேனீக்கள் ஆராய்ச்சி அமைப்பு நடத்திய ஆய்வில் தேனில் இருக்கும் தன்மை கண் வறட்சியை போக்கும் என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். கண்களைச் சுற்றி தேனைத் தடவுங்கள். கண்களுக்கு பயன்படுத்தும் போது அதிக கெமிக்கல் இல்லாத தேனை பயன்படுத்துங்கள். தேனுக்கு பதிலாக விளக்கெண்ணையையும் தடவலாம்.

 கண்டறிய வேண்டும் :

கண்டறிய வேண்டும் :

இதனை போக்க நீங்கள் அவசியம் செய்யவேண்டியது இது தான். என்ன காரணத்திற்காக கண்கள் எரிகிறது என்ற காரணத்தை முதலில் கண்டறிய வேண்டும். ஏதேனும் அலர்ஜியினாலா அல்லது நீங்கள் செய்யும் ஏதேனும் தவறினால் இப்படியான கண் எரிச்சல் ஏற்படுகிறதா என்பதை கண்டறிந்தால் மட்டுமே அதிலிருந்து மீள வழி செய்ய முடியும்.

நேரம் :

நேரம் :

வேலை, பொழுது போக்கு என்று எந்த விஷயமாக இருந்தாலும் சரி நீண்ட நேரம் ஒரேயிடத்தை பார்ப்பதை தவிர்க்க வேண்டும். அது டிவி, கணினி, புத்தகம் என எதுவாகவும் இருக்கலாம். குறிப்பாக ஒவ்வொரு அறுபது நிமிடங்களுக்கு ஒரு முறை கண்களை சிமிட்ட வேண்டும்.

ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை சீட்டை விட்டு எழுந்து சின்ன வாக் சென்று வாருங்கள். சின்ன சின்ன கண்களுக்கான பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.

சுத்தம் :

சுத்தம் :

முகம், தலைமுடிக்கு கொடுக்கிற முக்கியத்துவம் கண்களுக்கு கொடுப்பது கிடையாது. தினமும் கண்களை குளிர்ந்த நீரினால் கழுவிடுங்கள். மற்ற கெமிக்கல்களை பயன்படுத்துவதை விட குளிர்ந்த நீரே இதற்கு பாதுகாப்பானது. அதை விட உங்களை ஹைட்ரேட்டடாக வைத்திருப்பது மிகவும் அவசியமாகும்.

ஒமேகா 3 :

ஒமேகா 3 :

ஒமேகா 3 கண்களில் இருக்கும் வாட்டர் லேயருக்கும் aqueous என்ற ஒரு வகை திரவத்திற்கும் மிகவும் முக்கியமானது. அதனால் உங்கள் உணவில் ஒமேகா 3 அதிகமிருக்கும் உணவினை அதிகமாக சேர்த்துக் கொள்ளுங்கள். இதனுடன் விட்டமின் சி மற்றும் விட்டமின் பி 6 சேர்த்துக் கொண்டால் நல்ல பலன் கிடைத்திடும்.

பொட்டாசியம் மற்றும் ஜிங்க் :

பொட்டாசியம் மற்றும் ஜிங்க் :

கண்களின் வறட்சிக்கு இன்னொரு காரணமாக சொல்லபடுவது இது. நம் உடலில் பொட்டாசியம் அளவு குறைந்தாலும் கண்கள் வறண்டு போவதுண்டு. பொட்டாசியம் நிறைந்த வாழைப்பழம், பேரீட்சை, அவகேடோ, அத்திப்பழம், கோதுமை,பாதாம் போன்றவற்றை அதிகமாக உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

இதே போல ஜிங்க் அதிகமிருக்கும் காளாண், முழு தானியங்கள் போன்றவற்றையும் உங்கள் உணவில் சேர்க்க வேண்டும். இதில் இருக்கும் தாதுக்கள் கண்களில் வாஸ்குலர் கோட்டிங்காக செயல்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Amazing home remedies for dry eye

Amazing home remedies for dry eye
Story first published: Tuesday, November 7, 2017, 16:35 [IST]
Subscribe Newsletter