ஸ்லீப்பிங் செக்ஸா? அப்படினா என்ன? உறங்கும் போது நிகழும் 7 மர்மான செயல்கள்!

Posted By:
Subscribe to Boldsky

படுத்தவுடன் உறங்குவதே பெரிய வரம் என்பது போல ஆகிவிட்ட நிலையில். "தூக்கமே வரல, இதுல மர்ம நிகழ்வு வேறயா?" என சிலர் கோபித்துக் கொள்ளலாம். என்ன செய்வது அறிவியல் கூறுகிறதே.

இவற்றில் தூக்கத்தில், நடப்பது, தூக்கத்தில் பேசுவது போன்றவற்றை நீங்கள் முன்னவே அறிந்திருக்கலாம். ஆனால், தூக்கத்தில் எப்படி செக்ஸ்? என்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தும்.

இதற்கே அசந்துவிட்டால் எப்படி. அமுக்குவான் பேய் என்றால் என்ன? தூங்கும் போது உங்கள் உடலை நீங்களே வெளியிருந்த பார்க்க முடியும் நிகழ்வு ஒன்று இருக்கிறது... இவற்றை பற்றி நீங்கள் அறிந்துக் கொள்ள வேண்டாமா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 ஸ்லீப்பிங் செக்ஸ்!

ஸ்லீப்பிங் செக்ஸ்!

ஸ்லீப்பிங் செக்ஸ் என்பது வினோதமான நிகழ்வு. இதை செக்ஸ்ஸோம்னியா (Sexsomnia) என குறிப்பிடுகிறார்கள். இந்த நிகழ்வின் போது ஒரு நபர் செக்ஸுவல் செயலில் ஈடுபடுவார்.

ஆனால், உறங்கிக் கொண்டே. இது ஏறத்தாழ தூக்கத்தில் நடப்பது போல தான். மனது உறங்கிக் கொண்டிருக்கும், ஆனால், உடல் இயங்கிக் கொண்டிருக்கும்.

ஸ்லீப்பிங் பராலசிஸ்!

ஸ்லீப்பிங் பராலசிஸ்!

ஸ்லீப்பிங் பராலசிஸ் என்பதை தான் சிலர் அமுக்குவான் பேய் என நம்பிக் கொண்டிருக்கிறார்கள். "நேற்று உறங்கும் போது உடல் மீது யாரோ அமர்ந்து அமுக்குவது போல இருந்தது. என்னால் கை, கால்களை அசைக்கவே முடியவில்லை" என்பார்கள். இந்த நிலை தான் ஸ்லீப்பிங் பராலசிஸ்.

அதாவது மனம் விழித்துக் கொள்ளும், ஆனால், உடலின் தசைகள் அசைக்க முடியாத நிலையியல் இருக்கும். இந்த ஸ்லீப்பிங் பராலசிஸ் அதிகபட்சம் ஒருசில நொடிகளில் இருந்து ஓர் நிமிடம் வரை தான் நீடிக்கும்.

ஸ்லீப் வாக்கிங்!

ஸ்லீப் வாக்கிங்!

தூக்கத்தில் நடப்பது! இது நாம் அனைவரும் அறிந்தது தான். உறங்கிக் கொண்டிருக்கும் போது, உடல் மட்டும் விழித்துக் கொள்வது தான் இது. சிலர் வீட்டுக்குள்ளேயே நடப்பார்கள். சிலர் வீட்டைவிட்டு எங்கோ சென்றுவிடுவார்கள். தூக்கத்தில் நடக்கும் போது அவர்கள் செய்யும் காரியங்கள் எதுவும் அவர்களுக்கு நினைவில் இருக்காது. இதனால், விபத்துகள் ஏற்படுவதற்கு கூற வாய்ப்புகள் உண்டு.

தலை வெடிப்பது போல...

தலை வெடிப்பது போல...

ஆங்கிலத்தில் எக்ஸ்ப்ளோடிங் சின்றோம் எனப்படுகிறது இந்த உறக்கம் சார்ந்த பாதிப்பு. தூங்கிக் கொண்டிருக்கும் போது ஏதோ வெடி வெடித்தது போன்ற சப்தம் கேட்டது போல உணர்ந்து எழுவார்கள். அது இவர்களுக்கு மட்டும் தான் அப்படி இருக்கும். இது அபாயகரமானது இல்லை எனிலும், அதிக அச்சத்தை அளிக்கும்.

ஸ்லீப் டாக்கிங்!

ஸ்லீப் டாக்கிங்!

தூக்கத்தில் பேசுவது! இதை நீங்களே கூட செய்திருக்கலாம். தூக்கத்தில் பேசும் இந்த நிகழ்வு அதிகபட்சம் 30 நொடிகள் நீடிக்கும். இது உறங்கிய முதல் இரண்டு மணி நேரத்தில் தான் ஏற்படும். இது பெரிய பிரச்சனை இல்லை எனிலும், அருகே உறங்கும் நபருக்கு தொல்லையாக இருக்கும்.

தொடர் கனவுகள்!

தொடர் கனவுகள்!

ஒரே கனவு மீண்டும், மீண்டும் வரும். இது கேட்க ஃபேண்டசி போல இருப்பினும், நாள்ப்பட அந்த நபருக்கு மிகந்த தொல்லையாக மாறும். சில சமயங்களில் அந்த தொடர் கனவுகள் அந்த நபரின் சொந்த வாழ்க்கை, அவரை சுற்றி இருக்கும் மக்களை பற்றியதாக கூட அமையலாம்.

இப்படி ஓர் நிகழ்வு ஏன் உண்டாகிறது என்பதற்கான தெளிவான விளக்கம் இன்று வரையிலும் அறியப்படவில்லை. சிலர், மூளையில் ஆழமாக பதியும் கனவுகள் மீண்டும், மீண்டும் வரும் என கூறுகிறார்கள்.

வினோதம்!

வினோதம்!

தன் உடல் படுத்திருப்பதை தானே வெளியிருந்த காண்பது போன்ற நிகழ்வு இது. இதை நரம்பு ரீதியான உளவியல் நிகழ்வு என குறிப்பிடுகிறார்கள். உறங்கி கொண்டிருக்கும் அந்த நபரின் எண்ணம் மட்டும் விளித்து, தானே உறங்கி கொண்டிருப்பதை வெளியில் இருந்து காண்பது போல உணர்வு ஏற்படும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

7 Mysterious Things That Happen When You are Sleeping?

What is Sleeping Sex? 7 Mysterious Things That Happen When You are Sleeping?
Story first published: Wednesday, September 27, 2017, 14:00 [IST]