For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நீங்கள் அறியாத அற்புத மருத்துவ குணங்களை கொண்ட வெண்சங்கின் மகத்துவங்கள் !!

வெண்சங்கின் மகத்துவமும், அவை மருத்துவ உலகத்தில் பயன்படுத்தும் முறையும் இந்த கட்டுரையில் சொல்லப்பட்டுள்ளது.

By Gnaana
|

சங்கு ஆன்மீகத்தில் மட்டுமல்ல, மனிதர்களின் நல்வாழ்வுக்கும் பயன் உள்ள ஒரு கடல்வாழ் உயிரினத்தின் மேல் ஓடு, என்பது நாம் அறிவோம்தானே.சங்கினில் நிறைய வகைகள் இருந்தாலும், ஆன்மீகத்தில் வலம்புரிச்சங்கு உயர்வாகவும், மனிதர்களின் பயன்பாட்டில் வெண்சங்கு, மருத்துவரீதியாக உயர்வாகவும் கருதப்படுகிறது.

6 Surprising benefits of shell to treat different ailments.

கடலின் அடிப்பகுதிகளில் சங்குப்படுகைகள் எனும் இடத்தில் கூட்டமாக வாழும் சங்கினம், கடலோரப்பாறைகளை ஒட்டிய மணற்பகுதிகளிலும் வாழும் தன்மைமிக்கவை. தமிழ்நாட்டில் தூத்துக்குடி, பூம்புகார், இராமேஸ்வரம், கன்யாகுமரி மற்றும் நமது நாட்டின் பிற கடற்கரையோரப்பகுதிகளில், அதிகம் கிடைக்கின்றன. வெண்சங்கு குறிப்பாக மருத்துவ உலகில் பயன்படுத்தப்படுகிறது. அவ்வகையில் அதன் நன்மைகளைப் பற்றி இந்த கட்டுரையில் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சங்கின் மருத்துவ குணங்கள்

சங்கின் மருத்துவ குணங்கள்

கைக்குழந்தைகளுக்கு சங்கில் இட்டு மருந்தைப்புகட்ட, மருந்தை வெளியே கக்காமல் குழந்தைகள் சாப்பிட்டு உடல்நலமாகும் என்பது, பாரம்பரியமாக முன்னோர் கடைபிடித்துவந்த ஒரு மரபு.

வாத நோய்க்கு- சங்கு பற்பம் !!

வாத நோய்க்கு- சங்கு பற்பம் !!

சங்குடன் தாமரைஇலைகள் சேர்த்து உருவாகும் சங்கு பற்பத்தை, தேன், சோறு வடித்த கஞ்சியுடன் கலந்து சாப்பிட்டுவர, நாள்பட்ட விக்கல்,தும்மல்,ஜுரம், பித்தம் மற்றும் வாத சம்பந்தமான வியாதிகள் தீரும். தசைப்பிடிப்பும் சரியாகும். தொடர்ந்து சாப்பிட்டுவர, கண் வியாதிகள் நீங்கும்.

 வெண் குஷ்டத்திற்கு-சங்கு செந்தூரம்!1

வெண் குஷ்டத்திற்கு-சங்கு செந்தூரம்!1

சங்குடன் சோற்றுக்கற்றாழை உள்ளிட்ட சில மூலிகைகளைச்சேர்த்து இடித்து, சித்த மருத்துவ முறையில் பதப்படுத்தப்பட்ட பொடியே, சங்கு செந்தூரம் எனப்படும்.

சங்கு செந்தூரம், வெண்குஷ்டம் எனும் சரும நோய்க்கு அருமருந்தாகும். சங்கு செந்தூரத்தை எலுமிச்சை சாற்றுடன் கலந்து தினமும் சாப்பிட்டுவர, மன உளைச்சலைத் தந்துவந்த வெண்குஷ்டம் விரைவில், மறையும்.

ஆஸ்துமா :

ஆஸ்துமா :

T.B வியாதி, ஆஸ்துமா மற்றும் வயிறு,கண் போன்ற பாதிப்புகளை நீக்க, தூளாக்கிய சங்கு சுண்ணாம்பு பயனாகிறது. சங்கு சுண்ணாம்பு, விஷக்கடியை குணமாக்கும் மருந்தாகிறது.

கண்கட்டி :

கண்கட்டி :

தண்ணீர்விட்டு கறிவேப்பிலை சேர்த்து சங்கை இழைத்து, அத்துடன் தாய்ப்பாலை கலந்து, பரு,கண்கட்டிகள் மீது தடவிவர, அவை குணமாகும். அல்லது சங்கு மாத்திரை பயன்படுத்தலாம்.

 சங்கின் இதர பயன்பாடுகள்.

சங்கின் இதர பயன்பாடுகள்.

பெண்களின் ஆபரணங்களாக சங்கு வளையல்கள், சங்கு மோதிரம் உள்ளிட்ட அணிகலன்கள் செய்யும் தயாரிப்பில் பயனாகின்றன.

சில குடும்பங்களில், மரணமடையும் நிலையிலுள்ள வயதானவர்களுக்கு சங்கில் பால் இட்டு வாயில் செலுத்த, அவர்களுக்கு இம்மையில் இருந்த துன்பங்கள் நீங்கி, மறுமையில் சிறந்த இறைவாழ்க்கை கிடைக்கும் எனற நம்பிக்கை உண்டு.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

6 Surprising benefits of shell to treat different ailments.

6 Surprising benefits of shell to treat different ailments.
Desktop Bottom Promotion