பற்களுக்கு க்ளிப் போட்டிருக்கிறீர்களா? எப்படி அதனை பாதுகாக்க வேண்டும்?

By: Peveena Murugesan
Subscribe to Boldsky

உங்கள் பற்களை நேராக்கவும்,இடைவெளி இன்றியும் இருப்பதற்கும் இந்த ப்ரேஸ்(க்ளிப்) போடப்படுகிறது. சிலருக்கு வரிசையில் தப்பி பல பற்கள் ஒரே இடத்தில் முளைக்கும். அவற்றைப க்ளிப் கொண்டு சரிப்படுத்தலாம்.

ஆனால் ஈறு பலமாக இருந்தால்தான் க்ளிப் போட முடியும். அப்போதுதான் க்ளிப் போட்டபின் வரும் இடையூறுகளையும் வீக்கத்தையும் சமாளிக்க முடியும். மேலும் க்ளிப் போட்டபின் தாடை எலும்பிற்கு அழுத்தம் தரப்படுவதால் வலி உண்டாகும். இன்னும் உண்டாகும் சில பிரச்சனைகளை குணப்படுத்த எப்படி உங்கள் பற்களை கையாள வேண்டும் என ஒதோ உங்களுக்காக.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
1.மிகவும் சுத்தமாக பராமரிக்க வேண்டும்.

1.மிகவும் சுத்தமாக பராமரிக்க வேண்டும்.

இந்த ப்ரேஸ் உலோகம் (அ) பீங்கான் போன்ற அமைப்புடையது.இதனால் சாப்பிடும்போது உணவுகள் இந்த ப்ரேஸ்களில் சிக்கிக் கொள்கின்றன.இவற்றை சுத்தம் செய்யாவிடில் பற்களில் கறை மற்றும் பற்களில் அரிப்பு ஏற்படும்.எனவே இவற்றை சுத்தமாக பராகரிக்க வேண்டும்.

2.எந்தெந்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.

2.எந்தெந்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.

பீட்சா,ஒட்டக்கூடிய மிட்டாய்கள் (அ) மிகவும் கடினமான வகை சாக்லேட்கள் (ஏனெனில் இவை முன் பற்களால் அழுந்த கடிக்க கூடியது இது மிகவும் அபாயகரமானது ப்ரேஸ் அணிந்திருக்கும் போது) இவை அனைத்தையும் முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

ஏனெனில் இவை அனைத்தும் இந்த சிகிச்சையை பாதிக்கும் மற்றும் உங்களுக்கு வலியையும் ஏற்படுத்தும்.

சோடாக்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.ஏனெனில் இந்த சோடாக்கள் ப்ரேஸ்ஸின் பசையை நீக்கி இவற்றை பற்களில் இருந்து எளிதாக நீக்கிவிடும்.இதனால் சிகிச்சை தடைபடும்.

3.ப்ராக்கெட் பிரேக்ஸ்:

3.ப்ராக்கெட் பிரேக்ஸ்:

இந்த வகை ப்ரேஸ் பற்களின் மீது தனிப்பட்ட அமைப்புடன் நகரும் தன்மையுடன் அமைந்திருக்கும்.இவை அனைத்தும் ஒரு கம்பி மூலம் இணைக்கப் பட்டிருக்கும்.ஆனால் இந்த வகையை அணியும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

இல்லாவிடில் இவை உடைய வாய்ப்பு உள்ளது.அவ்வாறு உடைந்தால் அதை பொருத்துவது மிகவும் கடினம் மற்றும் இதனால் சிகிச்சை பாதிக்கப்படும்.உணவில் முன்னெச்சரிக்கை,பல் துலக்குவது மற்றும் முகத்தில் அதிர்வுகள் வராமல் பாதுகாத்தல் இவை மூலம் உடையாமல் பாதுகாக்கலாம்.

4.வலி (அ) கொப்புளங்கள் ஏற்பட்டால் கவனம்.

4.வலி (அ) கொப்புளங்கள் ஏற்பட்டால் கவனம்.

ப்ரேஸ் முதல் முறை அணிபவர்களுக்கு லேசான வலி (அ) புண் ஏற்படும்.பெரும்பாலும் அதிக ரசாயனம் கலந்த பொருட்கள் உபயோகிப்பதால் ஊறு விளைவிக்கும்.இது பற்களுக்கு பொருந்த சில நாட்கள் ஆகும். பற்களில் ஏற்படும் வலி உணர்வுக்கு தேவை இருந்தால் வழியைக் குறைக்க கூடிய மாத்திரைகள் எடுத்து கொள்ளலாம்.

5.மருத்துவரின் சந்திப்புகளை தவற விடாதீர்கள்:

5.மருத்துவரின் சந்திப்புகளை தவற விடாதீர்கள்:

பற்களுக்கு ப்ரேஸ் பொருத்தி இருந்தால் மருத்துவரின் ஆலோசனைப்படி மருத்துவர் குறித்த நேரத்தில் மாதம் ஒரு முறை தவறாமல் சென்று பார்க்க வேண்டும்.அதை மாற்றவோ (அ) போகாமல் இருப்பதோ கூடாது.ஏனெனில் சிகிச்சை தாமதமானால் இந்த சிகிச்சை முறை நீண்ட காலம் நீடிக்கும்.

எனவே அழகான புன்னகைக்கு இந்த வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.இதனால் ஆர்த்தோடான்டிக்ஸ் சிகிச்சை எளிதாகவும் விரைவாகவும் முடிவடையும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

5 Habits that make living with braces easier

5 Habits that make living with braces easier
Story first published: Wednesday, April 12, 2017, 13:20 [IST]
Subscribe Newsletter