For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

50 வயதிற்கும் குறைவான பெண்களை தாக்கும் ஆபத்து.! அலட்சியம் வேண்டாம்!!

|

பெண்களின் உடல் அமைப்பு ஆண்களைக் காட்டிலும் சற்று சிக்கலானது. நிறைய ஹார்மோன் மாற்றங்கள் பூப்பெய்தல் தொடங்கி, மெனோபாஸ் வரை தொடர்ந்து கொண்டிருக்கும். இதனால் நிறைய மன மற்றும் உடல் நிலையில் பாதிப்புகள் வந்தபடி இருக்கும்.

அவரவர் வாழும் சூழ் நிலையை பொறுத்து ஆரோக்கியம் வேறுபட்டாலும், ஒட்டுமொத்தமாக பெண்கள் அனைவரும் கவனமாக இருக்க வேண்டியது ஒன்றில்தான் . அது புற்று நோய்.

women below 50 increase in cancer risk in India

50 வயதிற்கும் குறைவான பெண்கள் சுமார் 46 சதவீதத்தினர் புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு காலம் கடந்து மணம் செய்து கொள்வது, தாமதமாக குழந்தை பெற்றுக் கொள்வது, தாய்ப்பால் சரிவர கொடுக்காமலிருப்பது, ஒன்றிற்கும் மேற்பட்டவர்களுடன் உருவ் வைத்துக் கொள்வது இவையெல்லா காரணமாக அமைகிறது.

20- 30 வயது வரை சுமார் 2 சதவீத பெண்கள், 30- 40 வரை 16 சதவீத பெண்கள், 40-50 வயது வரை 28 சதவீத பெண்களுக்கு புற்று நோய் தாக்கும் அபாயம் உள்ளது என்று இந்தரப்ரஸ்தா புற்று நோய் மருத்துவமனையின் மூத்த அறுவை சிகிச்சையாளர் சமீர் கௌல் கூறியிருக்கிறார்.

25-40 வயது வரை உள்ள பெண்களுக்கு புற்று நோய் அதிகரித்திருப்பது ஒரு எச்சரிக்கை மணிதான். தகுந்த விழிப்புணர்வை இன்றைய பெண்கள் பெறுவது மேலும் அவசியம் என்று கூறுகின்றார்.

மார்பக புற்று நோய் மற்றும் ஒவரியன் புற்று நோய்கள்தான் பெண்களுக்கு அதிகம் தாக்குபவை. மேலும் கர்ப்பப்பை வாய் புற்று நோயால் 8 நிமிடங்களுக்கு ஒருவர் இறக்கிறார் என்று தேசிய புற்று நோய் மற்றும் ஆராய்ச்சி கழகம் கூறியிருக்கிறது.

மார்பக புற்று நோய் கண்டறியப்பட்ட இரண்டில் ஒரு பெண், இறக்கும் நிலை ஏற்படுகிறது. இன்னும் கவலைபட வேண்டிய விஷ்யம், இளம் பெண்கள் , வயதான பெண்களை விட மார்பக புற்று நோயால் பாதிக்கப்படுகிறார்கள்.

அவர்கள் வாழும் வாழ்க்கை முறை, மரபு ரீதி, குடும்ப உறுவு முறைகளில் உள்ல குறைபாடுள்ள ஜீன், இதெல்லாம் ஒருவருக்கொருவர் வேறுபடுகிறது. இவைகள்தான் உடலில் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்று சமீர் மேலும் கூறுகிறார்.

அதேபோல் புகையிலை பழக்கங்கள், தவறான உறவுமுறை, மோசமான உணவு பழக்கம் இவையெல்லாம் 40 % பெண்களுக்கு புற்று நோயை ஏற்படுத்துகின்றன.

காலம் கடந்து பரிசோதிப்பதை விட, வருவதற்கு முன் எச்சரிக்கையாய் உங்கள் உடல் நலத்தை மருத்துவரிடம் பரிசோதிப்பது எவ்வளவோ உகந்தது. நாள்பட்ட காய்ச்சல், சிறு வீக்கங்கள், கட்டிகள், புதிதாக தோன்றிய மச்சம், ரத்தப் போக்கு, ஆகியவற்றில் அலட்சியம் காட்டாதீர்கள்.

ஓடிக் கொண்டிருக்கிறேன் நேரமில்லை என்று இன்று நினைத்தால், நாளை இவ்வுலகில் நிற்பதற்கும் கூட நேரத்தை காலம் கொடுக்காது என்பது நினைருக்கட்டும். எதிலும் அலட்சியம் வேண்டாம் பெண்களே !

English summary

women below 50 increase in cancer risk in India

women below 50 increase in cancer risk in India
Story first published: Wednesday, July 20, 2016, 15:27 [IST]
Desktop Bottom Promotion