Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
பிறப்புறுப்பின்றி வாழ்ந்து வரும் வினோதமான மருத்துவ நிலையுடன் பெண்!
பிறப்புறுப்பின்றி வினோதமான மருத்துவ நிலையுடன் வாழ்ந்து வரும் பெண்ணை பற்றி இங்கு கூறப்பட்டுள்ளது.
ஒவ்வொரு பெண்ணின் கனவு, தனக்கான தனி குடும்பம் அமைத்துக் கொள்ளுதல். தன் கணவன், தன் குழந்தைகள் என தனது உலகத்தில் சந்தோசமாக வாழவேண்டும். ஒரு பெண் தாய்மை அடையும் போது தான் தன் பிறப்பின் முழுமையை எட்டுகிறாள் என கூறுப்படுகிறது.

ஆனால், சில தம்பதிகளுக்கு ஆரோக்கிய மருத்துவ நிலை காரணமாக இது சாத்தியமற்று போகிறது. ஆனால், இன்றைய அறிவியல் உலகு அனைத்திற்கும் தீர்வுக் கொண்டுள்ளது. ஆயினும், இந்த பெண்ணின் நிலை சற்றே விநோதமானது. கருவளம், என்பதை தாண்டி, பெண்ணுறுப்பு இல்லாமல் வாழ்ந்து வருகிறார் டேவன் மெர்க்.

டேவன் மெர்க்!
டேவன் மெர்க், 23 வயது நிரம்பிய பெண். பிறக்கும் போதே இவருக்கு பிறப்புறுப்பு வாய் பகுதி இல்லை. தவறான வடிவமைப்பில் கருப்பை அமைந்திருந்தது. கருப்பை வாயும் இல்லை. இதை இவரது 12 வது வயதில் தான் கண்டறிந்தனர்.

பிள்ளை பருவம்!
தனது இளம் வயதில் நான்கு வருடங்கள் மிகவும் கிண்டல், கேலிக்கு உள்ளானதாகவும். சிறுவர்கள் தன்னை பையன் என்று கூறி தான அழைப்பார்கள். அதே போல, தன்னை விரும்பிய ஆண்களும், தனது நிலை அறிந்த பிறகு விலகி சென்றனர். அப்போது தான் தன்னால் உடலுறவில் ஈடுபட முடியாதது இதற்கான காரணம் என்பதை உணர்ததாக கூறுகிறார் டேவன் மெர்க்!

எம்.ஆர்.கே.எச்
எம்.ஆர்.கே.எச் (MRKH) என்பது Mayer-Rokitansky-Küster-Hauser என்பதன் ஆங்கில சுருக்கம். இது ஒரு விதமான நோய் அல்லது குறைபாடு என கூறலாம். இந்த குறைபாடு கண்டறியப்பட்ட பிறகு தான் தனது ஆண் நண்பர்கள் தன்னைவிட்டு விலக ஆரம்பித்ததாக டேவன் மெர்க் கூறுகிறார்.

கணவர்!
16 வயதில் அறுவை சிகிச்சை நிபுணர்கள், இவருக்கு பிறப்புறுப்பு நுழைவு பகுதி அமைப்பு அறுவை சிகிச்சை செய்து, உடலுறவில் ஈடுபட வழிவகை செய்தனர். இப்போது டேவன் மெர்க் மற்றும் இவரது கணவர் சந்தோசமான இல்லற வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர். விரைவில் இவர்கள் குழந்தை பெற்றுக்கொள்ள போகிறார்கள்.

எம்.ஆர்.கே.எச் வகைகள்!
எம்.ஆர்.கே.எச்-ல் இரண்டு வகைகள் இருக்கின்றன. டைப் எ என்பது கருப்பை, பிறப்புறுப்பு, அண்டப்பை இன்றி அமைவது, மற்றொன்று கருமுட்டை குழாய் இன்றி அமைவது என கூறப்படுகிறது.



Click it and Unblock the Notifications