Latest Updates
-
ஆந்திரா ஸ்டைல் முள்ளங்கி பச்சடி ரெசிபி - இப்படி ட்ரை பண்ணுங்க - செம சைடிஷா இருக்கும் -
சன்டே ஸ்பெஷல் திருவனந்தபுரம் சிக்கன் ப்ரை - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
2026-ன் கடைசி சூரிய கிரகணத்தால் தீராத கஷ்டங்களை அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
Aadi Perukku 2026: ஆடிப்பெருக்கு எப்போது? அந்த நாளில் என்ன செய்ய வேண்டும் தெரியுமா? -
பூமியின் அழிவு எப்போது வரப்போகிறது தெரியுமா? அதுவும் இப்படித்தான் நடக்கப்போகுதாம் - ஷாக் ஆகாதீங்க -
நாளை உருவாகும் நவபஞ்ச யோகம்: இந்த 4 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
இந்த 4 ராசிக்காரங்க அவங்கள பிடிச்சவங்களுக்காக உயிரையும் கொடுப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
கிராமத்து ஸ்டைல் சின்ன வெங்காய குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் முருங்கைக்காய் கூட்டு ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - வித்தியாசமா, சூப்பரா இருக்கும் -
World Lung Cancer Day 2026: அலட்சியம் செய்யக்கூடாத நுரையீரல் புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகளை பகிர்ந்த டாக்டர்!
காலில் உண்டாகும் சுளுக்கை சுலபத்தில் குணமாக்க 3 வழிகள்.
சுளுக்கு உடலில் ஏற்படும் சிறி பிரச்சனைகளில் ஒன்று. ஓடியாடும் போதும் , விழும்போதும் அவ்வப்போது இப்படி பிசகும். ஆனால் நடப்பதற்கு முடியாதபடி வலிக்கும். அதனை குணப்படுத்த 2 வழிகள் இங்கே.
லேசாக பாதம் பிசகினாலே கணுக்காலில் சுளுக்கு உண்டாகும். அங்கே சதை அதிகம் இல்லாததால் தோலை ஒட்டிய தசை நார்களில் பாதிப்பு உண்டாகி எளிதில் நரம்புகள் இன்றோடொன்று பிணைந்து இறுக்கத்தை உண்டாக்கும். இதனை சுளுக்கு என்று நாம் கூறுவோம்.

அது எளிதில் போகாது. அதுவாகவே போனால்தான் உண்டு. மாத்திரை மருந்துகள் பலனைத் தராது. எவ்வாறு அதனை சரிசெய்வது என தெரிந்து கொள்வதில் விருப்பமா? கீழே உள்ள யுக்திகளை முயற்சித்துப் பாருங்கள்

கல் உப்பு பற்று :
அரை கரண்டி நல்லெண்ணெயை பொறுக்கும் அளவில் சூடு படுத்தி அதில் கைப்பிடி கல் உப்பை போட வேண்டும்.
இதனை ஒரு நல்ல பருத்தி துணியில் போட்டு இறுக்கமாக கட்டி அதனைக் கொண்டு ஒத்தடம் தர வேண்டும்.
அவ்வப்போது அதனை வெதுவெதுப்பாக சூடு படுத்தி ஒத்தடம் தாருங்கள்.

கல் உப்பு பற்று :
பின்னர் இரவில் இந்த கலவையை காலில் படும்படி பற்று போல் கட்டி வைத்துவிடுங்கள். சுளுக்கு விரைவில் மறைந்துவிடும்.

ஐஸ் கட்டி ஒத்தடம் :
இது தசைகளில் உண்டாகும் இறுக்கத்தை தளர்க்கிறது. இதனால் நரம்புகளுக்கும் நிவாரணம் கிடைக்கிறது. சுளுக்கு விரைவில் குணமாகும்.

ஐஸ் கட்டி ஒத்தடம் :
ஐஸ் கட்டியை சுளுக்கு இருக்குமிடத்தில் ஒற்றி எடுங்கள். . 5-10 நிமிடம் இடைவெளிவிட்டு ஒத்தடம் கொடுங்கள். தேய்க்க வேண்டாம்.
தினமும் ஒரு மணி நேர இடைவெளியில் இப்படி செய்தால் விரைவில் சுளுக்கு சரியாகிவிடும்.

எப்சம் உப்பு :
இன்னொரு எளிதான் வழி இது. அரை பக்கெட் நீரை வெதுவெதுப்பான சூட்டில் எடுத்துக் கொள்ளுங்கள்.

எப்சம் உப்பு :
2-3 ஸ்பூன் எப்சம் உப்பை அதில் கலக்குங்கள். இந்த நீரில் உங்கள் கால்களை அமிழ்த்துங்கள்.
15 நிமிடம் கழித்து எடுக்கவும். தினமும் இருவேளை இப்படி செய்தால் சுளுக்கு குணமாகும்.



Click it and Unblock the Notifications