பல் கூச்சத்தை எப்படி சரி பண்ணலாம் என தெரிஞ்சுக்கனுமா? இத படிங்க

Written By: Hemalatha
Subscribe to Boldsky

பல் கூச்சம் என்பது பற்களின் வேர்பகுதிகளில் இருக்கும் நரம்புகள் பலவீனமடைந்து, ஈறுகளில் பிரதிபலிக்கும்.

கிருமிகளின் தொற்று, பற்களின் சிதைவு, அல்லது எனாமல் போகும்படி அதிக செறிவு மிகுந்த பேஸ்ட், நிறைய அமிலங்கள் உள்ள குளிர்பானங்கள் குடிப்பது ஆகியவற்றால் இது போன்று கூச்சம் வரும்.

Natural remedies to treat tooth sensitivity

இனிப்பு , சூடாக, அல்லது குளிர்ந்த உணவுகளை சாப்பிடும்போது, உண்டாகும் வலி. சில சமயங்களில் தலையின் நரம்புவரை வலி தெறிக்கும்.

ஆசையாய் ஐஸ்க்ரீம் சாப்பிட முடியாது. மணமாய் சூடாக காஃபி சாப்பிட முடியாது. இந்த பிரச்சனைகளை முடிந்தவரை வீட்டிலேயே சரி பண்ண முயற்சி செய்யுங்கள்.

கீழ்கண்ட குறிப்புகளை பின்பற்றினால் இதற்கென மருத்துவரிடம் செல்ல வேண்டிய அவசியம் ஏற்படாது.

தேங்காய் எண்ணெயில் வாய் கொப்பளித்தல் :

தேங்காய் எண்ணெயை கையளவு எடுத்து காலையில் பல் விளக்குவதற்கு முன் வாயில் ஊற்றி கொப்பளியுங்கள். வாயிற்குள் ஈறுகளுக்குள்ளே செல்லும்படி கொப்பளிக்க வேண்டும்.தேங்காய் எண்ணெயில் உள்ள ஆன்டி ஆக்ஸிடென்ட் ஈறுகளில் ஏற்படும் பாதிப்பினை சரி செய்கிறது.

Natural remedies to treat tooth sensitivity

உப்பு நீர் :

வெதுவெதுப்பான உப்பு நீரும் கிருமிகளை அழித்து, பல் கூச்சத்திலிருந்து மெல்ல விடுபடச் செய்யும். தினமும் காலை மாலை செய்தால், ஈறுகள் பலப்பட்டு, பல் கூச்சத்திலிருந்து விடுவிக்கும். தினமும் பல் விளக்கியதும், வெதுவெதுப்பான உப்பு நீரை வாயில், ஈறுகளில் படுமாறு 1 நிமிடம் வைத்திருந்து, பின் கொப்பளிக்கவும். கல் உப்பில் செய்வது நல்லது.

Natural remedies to treat tooth sensitivity

கிராம்பு எண்ணெய் :

கிராம்பு எண்ணெயை ஈறுகளில் மெதுவாக மசாஜ் செய்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இவ்வாறு தினமும் இருதடவை செய்யலாம்.

Natural remedies to treat tooth sensitivity

கொய்யா இலை :

கொய்யா இலைகளில் அதிக ஆன்டி ஆக்ஸிடென்டுகள் உள்ளன. இவை கிருமிகளை எதிர்த்து போராடும். ஈறுகளை பலப்படுத்தும். கூச்சம் கட்டுப்படும். தினமும் இரண்டு ஃப்ரஷான கொய்யா இலைகளை பற்களில் படுமாறு மெல்லுங்கள்.

Natural remedies to treat tooth sensitivity

ஹைட்ரஜன் பெராக்ஸைட் :

ஹைட்ரஜன் பெராக்ஸைட் சிறந்த நிவாரணி. பற்களில் ஏற்படும் சிதைவினை தடுக்கின்றது. பல் கூச்சத்தை குணப்படுத்தும். கடையில் 3% ஹைட்ரஜன் பெராக்ஸைடை வாங்க வேண்டும்.

அதில் 1 ஸ்பூன் எடுத்து அதனுடன் சம அளவு நீரை கலந்து வாயில் அரை நிமிடம் எல்லா இடங்களிலும் படுமாறு வைத்திருங்கள். முழுங்கக் கூடாது. அதன்பின்னர் அதனை கொப்பளித்துவிடுங்கள். பிறகு வெதுவெதுப்பான நீரில் வாயை கொப்பளிக்க வேண்டும்.

Natural remedies to treat tooth sensitivity

அமில உணவுகளை கட்டுப்படுத்த வேண்டும் :

சிட்ரஸ் வகை உணவுகள் பல் கூச்சம் இருக்கும்போது குறைவாக எடுத்துக் கொள்ளவேண்டும். கார்பனேட்டட் குளிர்பானங்களையும் தவிர்ப்பது நல்லது. அவை பற்களின் எனாமலை போக்கிவிடும்.

Natural remedies to treat tooth sensitivity

இதுமட்டுமல்லாது அதிக நேரம் பல் விளக்கினால், பல் எனாமல் போய் விடும். பல்கூச்சம் அதிகரிக்கும். பொதினா கலந்த டூத் பேஸ்டை உபயோகித்தால், ஈறுகளுக்கு புத்துணர்ச்சி தரும். பல் கூச்சமும் குறையும்.

English summary

Natural remedies to treat tooth sensitivity

Natural remedies to treat tooth sensitivity
Please Wait while comments are loading...
Subscribe Newsletter