ஒற்றைத் தலைவலி ஏன் வருகிறது? எப்படி தடுக்கலாம்?

Written By: Hemalatha V
Subscribe to Boldsky

ஆண்களை விட பெண்களே ஒற்றைத் தலைவலியால் அவதிப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள்.சரியான நேரத்திற்கு உணவு எடுத்துக் கொள்ளாலம் இருக்கும்போது அல்லது அதிக மன அழுத்தத்தில் இருக்கும்போது பலர் இந்த ஒற்றைத் தலைபலியால் பாதிக்கப்படுகிறார்கள்.

நரம்புகளில் உண்டாகும் இறுக்கமே தலைவலி வருவதற்கான முக்கிய காரணமாகும். வேலை செய்ய வேண்டுமே என நிறைய பேர் தலைவலி வரும்போதெல்லாம் ஒரு மாத்திரை எடுத்துக் கொள்வார்கள். அது தவறு. இது பக்க வாதம். இதய நோய்கள் மற்றும் சிறு நீரக பாதிப்பை தந்துவிடும்.

ஆகவே அதற்கான காரணங்கள் என்னெவென்று அறிந்து அதனை தடுக்க முயலுங்கள். ஒற்றைத் தலைவலியைப் பற்றி விரிவாக காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கிளாசிக் மைக்ரேன்:

கிளாசிக் மைக்ரேன்:

தலையில் நெற்றிப்பொட்டில், பின்பக்கத் தலை போன்ற இடங்களில் இதன் வலி தெரியும். கண்களிலும், தாடையிலும், முதுகிலும்கூட வலி தெரியலாம். பேச்சு குழறுதல், அதிக எச்சில் சுரத்தல் மனநோய் போன்றவை இதனால் வர வாய்ப்புண்டு. தற்காலிகமாக பார்வையில் கோளாறு, உணர்வில் கோளாறு, கண்களுக்குள் மின்னல் போன்ற ஒளிக்கீற்று வந்து போவது போல் உணர்வு ஏற்படும். இது நரம்பு சம்பந்தப்பட்ட நோய்க்கான அறிகுறியாகும்.

 பொதுவான மைக்ரேன்:

பொதுவான மைக்ரேன்:

மன அழுத்தம், மனச் சோர்வு, பதட்டம், அடிக்கடி கோபம், டென்ஷன் என இருப்பது ஆகியவற்றால் இத்தலைவலி ஏற்படும். இது தொடர்ந்து மூன்று நான்கு நாட்களுக்கு இருந்தால் குமட்டல், வாந்தி, வயிற்றுப் போக்கு, சிறுநீர் அதிகரித்தல் ஆகியன உண்டாகும்.

ஒற்றைத் தலைவலி எதனால் வருகிறது?

ஒற்றைத் தலைவலி எதனால் வருகிறது?

பல ஆண்டுகளாக, தலைக்குச் செல்லும் நரம்புகள் சுருங்கி இரத்த ஓட்டம் தடைப்படுவதால்தான் ஏற்படுவதாக விஞ்ஞானிகள் நம்பினார்கள். புதிய கண்டு பிடிப்புகளின்படி, மூளையைச் சேர்ந்த சில செல்களில் ஏற்பட்டுள்ள குறைபாடுதான் தான் காரணம் என்று கண்டுபிடித்திருக்கிறார்கள்.

மூளைக்குச் செல்லும் இரத்த ஓட்டம் தடைப்படும்போது, மூளைக்குச் செல்லும் செல்கள் அழிந்துபோக வாய்ப்புகள் உண்டு. அதனால் தலைவலி ஏற்படுவதாகக் கூறப்படுகிறது.

 உணவுமுறையில் மாற்றம் :

உணவுமுறையில் மாற்றம் :

சரியாக உணவு உண்ணாததும், ஒத்துக்கொள்ளாத சில உணவுவகைகளை உண்பதும், அளவுக்கு அதிகமாக உண்பதும் ஒற்றைத் தலைவலிக்கு முக்கியக் காரணங்களாகும். இதனால் நல்ல ஆரோக்கியமான உணவை, வேளை தவறாமல் எடுத்துக்கொள்ள வேண்டும். பால், காய்கறி வகைகள் நல்லது. இறைச்சி வகைகளைத் தவிர்த்தல் மிக நல்லது.

முறையான தூக்கம் :

முறையான தூக்கம் :

தூக்கமில்லாமல் அவதிப்படுபவர்கள் காலையில் எழுந்ததும் தலைவலிப்பதாகச் சொல்வது வாடிக்கையாகிவிட்டது. அதனால் நல்ல தூக்கம் வரச்செய்யும் வழி முறைகளைத் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். உதாரணமாக தூக்கம் வரும்வரை படிப்பது.

 உடற்பயிற்சி:

உடற்பயிற்சி:

உடற்பயிற்சிதான் உடலில் உள்ள வேதிப்பொருட்களை உற்பத்தி செய்யும் தன்மை கொண்டது. இதனால் மூளை நன்கு செயல்படத் தொடங்கும். முறையான தொடர் உடற்பயிற்சி இருந்தாலே ஒற்றைத் தலைவலி அண்டாது.

சுற்றுச்சூழலில் கவனம்:

சுற்றுச்சூழலில் கவனம்:

அதிக சூரிய வெப்பம் படுதல், வானிலை மாற்றங்கள், காற்றோட்டமில்லாத புழுக்கமாக சூழலில் வாழ்தல் ஆகிய சுற்றுச்சுழல்களாலும் சிலருக்கு தலைவலி வரும். அதனால் இவற்றைத் தவிர்த்தல் வேண்டும். காற்றோட்டமுள்ள இடத்தில் தூங்குவதும், மலச்சிக்கல் வராமல் பார்த்துக் கொள்வதும் மிக அவசியம்.

கவலை, சோர்வு, மனஅழுத்தம் வேண்டாம் :

கவலை, சோர்வு, மனஅழுத்தம் வேண்டாம் :

அதிகமாகக் கவலைப்படுபவர்கள், அடிக்கடி சோர்வு அடைபவர்கள், மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அடிக்கடி ஒற்றைத் தலைவலி வரும். இவற்றில் இருந்து விடுபட, மனதை எப்போது மகிழ்ச்சியான சூழ்நிலையில் வைத்திருக்க வேண்டும். பிடித்தவர்களுடன் பேசுவது, வெளியில் சென்று வருவது என இருந்தால் தலைவலி வராமல் தடுக்க முடியும்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

உங்களுக்கான சிறந்த ஹெல்த் இன்சூரன்ஸ் எது, ஒப்பிட்டு பார்த்து தேர்வு செய்யுங்கள்!

English summary

How to Overcome Migraine

Causes for Remedies for Migraine.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter