Latest Updates
-
விரிசல் இல்லாம பூர்ண கொழுக்கட்டை செய்யணுமா? இதோ சில டிப்ஸ்.. -
பெண்களுக்கு ஆண்கள் வரதட்சணை கொடுத்து திருமணம் செய்யும் பெண்களால் ஆளப்படும் இந்தியச் சமூகம் எது தெரியுமா? -
Ganesh Chaturthi 2026: உங்க கஷ்டங்கள் குறையணுமா? அப்ப இன்னிக்கு விநாயகருக்கு உங்க ராசிப்படி இத வாங்கி கொடுங்க! -
விநாயகர் சதுர்த்திக்கு வழக்கமான சுண்டல் செய்யாம இந்த மாதிரி மசாலா அரைச்சு செஞ்சு பாருங்க - செமையா இருக்கும் -
Ganesh Chaturthi 2026: விநாயகரின் சிறப்பு ஆசீர்வாதத்தைப் பெற்ற 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
Ganesh Chaturthi 2026: விநாயகர் சதுர்த்தி நாளில் அதிர்ஷ்ட மழையில் நனையப்போவது இந்த 4 ராசிக்காரங்க தான்! -
கூரைக்கடை கார சட்னி - இட்லிக்கு இந்த சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
செப்டம்பர் 14, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிக்காரங்க நிறைய சோதனைகளை சந்திக்கப் போறாங்களாம் -
கடக ராசியில் உருவாகும் குரு-மங்கள யோகத்தால் ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
கேரளா ஸ்டைல் மீல் மேக்கர் சுக்கா ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - செம சைடிஷா இருக்கும்
அட்டைப் பூச்சி தெரபி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
அட்டைபூச்சி தெரபி ஒரு ஆயுர்வேத மருத்துவமாகும். அட்டைபூச்சியைக் கொண்டு வைத்தியம் செய்வது பண்டைய காலத்தில் இருந்தது.
19 ஆம் நூற்றாண்டில் இந்த வைத்தியம் பிரபலமாக பரவியிருந்தது. 20 ஆம் நூற்றாண்டில் மெதுவாக நவீன மருத்துவங்கள் வளர்ச்சியடைந்ததும், இந்த அட்டை தெரபி நலிவடைந்தது.

எனினும் 1960 பிறகு சில பகுதிகளில் இந்த அட்டை பூச்சி தெரபியை மீண்டும் ஆரம்பிக்கின்றனர். இதில் பல்வேறு நோய்களை அட்டைப் பூச்சி தீர்க்கிறது. இந்த வைத்தியத்திற்கு ஹிருடோதெரபி என்று பெயர்.
எவ்வாறு செயல்படுகிறது?
பாதிக்கப்பட்ட இடங்களில் அட்டைப்பூச்சிகளை நேரடியாக விட்டுவிடுவார்கள். இவை இதய நோய்களுக்கு, இரத்தக்கட்டிகளை கரைப்பதற்கு, முகப்பரு, சொட்டை முடியில் முடி வளர என பல்வெறு நோய்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. அட்டைபூச்சியின் எச்சில் இரத்தத்தின் அடர்த்தியை குறைக்கிறது.
ஆறாத காயங்களை குணப்படுத்துகிறது. முக்கியமாக அறுவை சிகிச்சைக்கு பின் உண்டாகும் ரணங்களை வெகுவிரைவில் ஆற்றுகிறது. உடலில் செல்லிறப்பு அதிகமாக இருந்தால், அல்லது ரத்த ஓட்டம் குறைவாக இருக்கும்போது, இந்த அட்டைப் பூச்சிகள் அவைகளுக்கு தூண்டுதல் அளித்து, வேகமாக செயல்பட வைக்கிறது.
மருந்துக்களாக பயன்படுகிறது :
அட்டைப்பூச்சியின் எச்சிலில் புரோடியேஸ் தடுப்பு என்ற என்சைம் மற்றும் ரத்த உறைதலை எதிர்க்கும் மூலக்கூறுகள் உள்ளன. இவை புற்று நோய் மருந்துகளாக மருத்துவத்துறையில் பயன்படுகின்றன.
அதேபோல், அதன் எச்சிலில் இருக்கும் கிலான்டென் என்ற பொருள் பல்வேறு புற்றுநோய்கள் உருவாவதை தடுக்கின்றன என மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
ஹிருடின் என்ற புரதம் உள்ளது. அவை புற்று நோயை எதிர்க்கும் மருந்தாக செயல்படுகிறது. காது சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை குணப்படுத்தவும் அட்டைப் பூச்சிகள் பயன்படுத்தப்படுகின்றன.
மூட்டு சம்பந்தப்பட்ட நோயான ஆஸ்டியோ ஆர்த்ரைடிஸை குணப்படுத்தவும் அட்டைபூச்சி பயன்படுத்தப்படுகின்றன. இந்த நோயில் சொல்லத்தகுந்த முன்னேற்றம் கொடுக்கிறது.
ஆனால் அட்டைப்பூச்சி தெரபியை தகுந்த அனுபவம் வாய்ந்த மருத்துவர்களே கையாள வேண்டும். ஏனெனில் இவை அலர்ஜி, தழும்பு, சரும எரிச்சல் போன்ற பக்கவிளைவுகளையும் கொடுக்கும் என ஆயுர்வேத மருத்துவம் சொல்கிறது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications




