ஒற்றைத் தலைவலி குணமடைய இந்த விட்டமின் சாப்பிட்டால் போதும்!

Written By: Hemalatha V
Subscribe to Boldsky

உலகளவில் சுமார் 300 கோடி மக்கள் ஒற்றை தலைவலியால் பாதிக்கப்படுகிறார்கள். இதில் 7 சதவீதம் ஆண்களும், 13 சத்வீதம் பெண்களும் இருக்கிறார்கள்.

இந்த தலைவலி 3 மனி நேரம் தொடங்கி 3 நாட்கள் வரை கூட இருக்கும். மற்ற வலிகளைக் கூட தாங்கிக் கொள்ளலாம். ஆனால் தலைவலி நமது தினசரி வேலைகளையே முடக்கிவிடும்.

இந்த பாடாய்படுத்தும் ஒற்றை தலைவலிக்கு என்ன காரணமாக இருக்கும். பார்க்கலாம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மூளையில் செரடோனின் அளவில் மாறுபாடு :

மூளையில் செரடோனின் அளவில் மாறுபாடு :

மூளையில் தூக்கத்தை தருவிக்கும் செரடோனின் அளவு குறையும்போது, மூளையிலுள்ள ரத்தக் குழாய்களில் வீக்கம் உண்டாகி, ஒற்றைத் தலைவலி உண்டாகும்.

ரத்த குழாய்களில் இறுக்கம் :

ரத்த குழாய்களில் இறுக்கம் :

ரத்தக் குழாய்கள் இறுக்கமடைந்தால், ரத்த ஓட்டம் மூளையில் குறையும். இதனால் வலியை உண்டாக்கும் நரம்புகளின் சிக்னல் தூண்டப்பட்டு ஒற்றை தலைவலியை உண்டாக்குகின்றன.

அதிக ரத்த ஓட்டம் :

அதிக ரத்த ஓட்டம் :

மூளையில் ரத்த ஓட்டம் குறைந்தால் மட்டுமல்ல, அதிக ரத்த ஓட்டம் பாய்ந்தாலும் தலைவலி உண்டாகும் என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

எப்படியிருந்தாலும். இந்த வேகமான ரத்த ஓட்டம் குறைந்தாலும், அல்லது இயல்பாய் மாறினாலும், தலைவலியின் தீவிரம் குறையாமல் இருக்கும். இதற்கு நரம்புகளின் உள்ள தகவல் பரிமாற்றத்தில் பிரச்சனை உண்டாவதே காரணம்.

 மூளையிலுள்ள 3 செல்கள் :

மூளையிலுள்ள 3 செல்கள் :

சாதரணமாக ஒற்றை தலைவலி வருபவர்களுக்கு மூளையில் 3 செல் திட்டு தலைவலி வருகின்றபோதும், வந்து சரியானபின்னும் இவை சுறுசுறுப்பாக இருக்கும்.

இதனால் மூளை அல்லத ரத்த குழாய் வலி சிக்னல் குடுக்காவிட்டாலும், இந்த செல்கள் இயங்கிக் கொண்டிருப்பதால் வலி குறையாமல் அப்படியே இருக்கும்.

 விட்டமின் குறைபாடு :

விட்டமின் குறைபாடு :

விட்டமின் பி6, பி12 குறைபாடு இருந்தாலும் ஒற்றை தலைவலி ஏற்படும் வாய்ப்புகள் உண்டாகும் என ஆராய்ச்சியாளர்கள் கொறுகிறர்கள். விட்டமின் பி குறைப்பாட்டிற்கும் மரபணுவில் உண்டாகும் பாதிப்பிற்கும், நெருங்கிய தொடர்பு உள்ளது.

2004 ஆம் ஆண்டு நடந்த ஆய்வில் விட்டமின் பி12 மாத்திரையை ஒற்றை தலைவலி உள்ளவர்களுக்கு கொடுத்தபோது அவர்களுக்கு தலைவலி குணமானது தெரிய வந்துள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

How to cure Migraine

This Vitamin supplementary may cure Migraine
Story first published: Sunday, September 25, 2016, 10:18 [IST]
Subscribe Newsletter