கால் நகத் தொற்று உண்டாக்கும் ஆபத்து பற்றி தெரியுமா?

Written By:
Subscribe to Boldsky

நகங்களிலுள்ள பூஞ்சை தொற்றுக்கள் பொதுவாக ஒரு குறிப்பிட்ட வகையான பூஞ்சை காரணமாக ஏற்படுகிறது இந்த நிலை ஒனிகோமிகோசிஸ் என்று அழைக்கப்படுகிறது. இந்த நிலையில் உங்கள் நகங்கள் நொறுங்கத்தக்கதாக ஆகிறது, மஞ்சள் அல்லது கருப்பு நிறமாக மாறுவதுடன், சில சமயங்களில் கெட்ட நாற்றத்தையும் வெளிப்படுத்துகிறது.

Home remedies to treat toenail fungal infection

இந்த கால் நகப் பூஞ்சை தொற்று மிகவும் தீங்கானது, எளிதில் குணமாகாது. அதோடு பல பாதிப்புகளை உடலுக்கு தருகிறது. இந்த பூஞ்சை நகத்திலிருந்து பரவி ரத்த நாளங்களில் பரவி விட்டால் பின்னர் பல உபாதைகள் உண்டாகும். கல்லீரலையும் தாக்கும் அபாயம் உண்டு.

இதன் அறிகுறிகள் சோர்வு, உடல் இளைத்தல், குமட்ட, பசியின்மை ஆகியவைகள் இருந்தால் கால் நகத் தொற்று வேகமாக ஆகவே நகத்தில் உண்டாகும் தொற்றை சாதரணமாக எடுத்துக் கொள்ளாதீர்கள்.இதனை குணப்படுத்தும் இயற்கை வழிகளை காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மருதாணி :

மருதாணி :

மருதாணி மிகவும் சக்திவாய்ந்த மற்றும் எதிர்ப்பு பூஞ்சை பண்புகள் கொண்டதால் இது வேரிலிருந்து தொற்றை நீக்க உதவுகிறது.

சில புதிய மருதாணி இலைகளை அரைத்து, அந்தக் கலவையில் அரை எலுமிச்சை பழச்சாற்றையும், மஞ்சளையும் கலக்கவும்..

இப்போது இதை நன்றாகக் கலந்து இரவு தூங்கப் போவதற்கு முன் பாதிக்கபட்ட நகத்தில் இதைத் தடவவும்.. இந்த கலவை போட்டப் பகுதிகளை, கலவை உலர்ந்து உதிர்ந்து விடாதிருக்க ஒரு துண்டினால மூடி வைக்கவும்.

மறுநாள் காலையில் இதைக் கழுவி விடவும். நல்ல பலனைப் பெற இதை தினமும் செய்ய வேண்டும்.

சல்பர் :

சல்பர் :

ஆயுர்வேதத்தில் குந்தக் என்று அறியப்படும் இது, பூஞ்சை தொற்று, சிரங்கிற்கு மிகச் சிறந்த மருந்தாகும். மஞ்சள் வடிவ சல்பர், பூஞ்சையைக் கொன்று அது திரும்ப வராமல் தடுப்பதில் உதவுகிறது. சல்ஃபட் அதிகம் இருக்கும் வெங்காயச் சாறை பயன்படுத்தலாம்.

உருளைக்கிழங்குகள் :

உருளைக்கிழங்குகள் :

தொற்றை நீக்க ஒரு சிறிய உருளையை தோலுரித்து, துருவி அதில் ஒரு மேஜைக் கரண்டி மஞ்சளை கலந்து, பாதிக்கப்பட்ட நகத்தில் தடவவும்.

அதை எட்டு மணி நேரம் வைத்திருந்து பின்பு கழுவி விடவும். இந்த மருந்தின் சிறப்பு என்னவென்றால் அது உங்கள் நகத்தின் அசல் நிறத்தை திரும்பக் கொண்டு வர உதவுகிறது.

எலுமிச்சை :

எலுமிச்சை :

பூஞ்சை எதிர்ப்பு மற்றும் கிருமி நாசினி, எலுமிச்சை அநேகமாக எல்லா சரும தொற்றுக்களுக்கும் சிறந்தது.

அது உங்கள் தொற்று நகத்தின் நிறத்தை மீட்க உதவுவது மட்டுமல்ல, பூஞ்சை தொற்றுகளையும் மிகவும் திறம்பட எதிர்க்கிறது. உடனடி பலனுககு, தினமும் எலுமிச்சை சாற்றை உங்கள் நகங்களில் தடவவும்.

ஆப்பிள் சைடர் வினிகர் :

ஆப்பிள் சைடர் வினிகர் :

ஆப்பிள் சைடர் வினிகர் பாதத்திலிருக்கும் பூஞ்சு தொற்றைக் குணப்படுத்தவும் சிறந்ததாகும்.

இந்த மருந்தை உபயோகிக்க, ஆப்பிள் சாறு காடியை உங்கள் நகத்தில் தடவவும் அல்லது ஒரு பாத்திரத்திலுள்ள சுடு தண்ணீரில் வினிகரை அதில் போட்டு, உங்கள் பாதத்தை ஊற வைக்கவும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Home remedies to treat toenail fungal infection

Home remedies to treat toenail fungal infection
Story first published: Saturday, December 17, 2016, 13:06 [IST]
Subscribe Newsletter