சாதாரண உடல் உபாதைகளுக்கான பாட்டி வைத்தியம்!!

Written By:
Subscribe to Boldsky

சின்னதாய் உடல் உபாதைகள் வந்தால்தான் நமது உடல் உறுப்புகள் இயல்பாக இயங்குகிறது என அர்த்தம். ஆனால் அதற்கெல்லாம் உடனே மாத்திரைகள் சாப்பிடுவது உடலுக்கு கேடு தருவதோடு, நமது நோய் எதிர்ப்பு செல்களை முடக்கி விடும்.

How to cure using Kitchen ingredients for minor health issues,

ஆகவே இயற்கையான ஆயுர்வேத குணங்கள் அமைந்த நமது சமையலறைப் பொருட்கள் பல உபாதைகளை போக்கி, உடலுக்கு ஆரோக்கியத்தை அதிகப்படுத்தும். அத்தகையகைய பொருட்களைப் பற்றி காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சீரகம்:

சீரகம்:

சீரகத்தைப் பொன்வறுவலாக வறுத்து தூள் செய்து கொதிநீரில் இட்டு காய்ச்சிக் குடித்தால் உண்ட உணவை சீரணமாக்கி பசியைத் தூண்டுவதுடன் உணவுப்பாதையையும் சீராக வைத்துக்கொள்ள உதவுகிறது.

 கால் ஆணிக்கு:

கால் ஆணிக்கு:

மருதாணி இலைகள், சிறிது வசம்பு, சிறிய மஞ்சள் துண்டு மூன்றையும் நன்கு அரைத்து ஒரு வெற்றிலையில் வைத்து கால் ஆணிடில் வைத்து ஒரு துணியால் கட்டி வந்தால் ஒரு வாரத்தில் குணமாகி விடும்.

தொண்டைக்கட்டிற்கு:

தொண்டைக்கட்டிற்கு:

அதிமதுரத்தை நாட்டு மருந்து கடையில் வாங்கி இடித்து சலிக்கவும். ஒரு வேலைக்கு அரை ஸ்பூன் எடுத்து தேன் கலந்து குழைத்து சாப்பிட்டு வந்தால் தொண்டைக்கட்டு சரியாகும்.

தலைவலி:

தலைவலி:

ஒரு ஸ்பூன் கிராம்பையும் ஒரு சிட்டிகை கல் உப்பையும் அரைத்து பற்று போட்டால் தலைவலி சரியாகும்.

அஜீரணம்:

அஜீரணம்:

அரை ஸ்பூன் இஞ்சி சாறு, அரை ஸ்பூன் எலுமிச்சை சாறு, அரை ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டால் அஜீரணக் கோளாறுகள் குணமாகும்.

மலச்சிக்கல்:

மலச்சிக்கல்:

வெங்காயத்தையும் முள்ளங்கியையும் அடிக்கடி சமையல் சேர்த்துக்கொள்ளவும். அதிமதுரம், ரோஜா மொக்கு, சோம்பு சம பங்கு எடுத்து பவுடர் செய்து ஒரு ஸ்பூன் எடுத்து தேனில் குழைத்து சாப்பிடவும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

How to cure using Kitchen ingredients for minor health issues,

Treatments to cure minor health issues using Kitchen ingredients
Story first published: Friday, December 9, 2016, 16:00 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter