ஆஸ்துமாவை நெருங்கம் விடாத இந்த ஜூஸ் பற்றி தெரியுமா?

Written By: Hemalatha V
Subscribe to Boldsky

ஆஸ்துமா சுவாசக் குழாயில் உண்டாகும் அலர்ஜியினால் உண்டாகும் நாள்பட்ட வியாதி. பரிபூரணமாக குணப்படுத்த முடியாது. ஆனால் முற்றிலும் வரவிடாமல் தடுக்கலாம். அதாவது நமது நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தி, அலர்ஜியை உண்டாக்காதவாறு செய்யலாம்.

இது பொதுவாக குளிர்காலத்தில் கிருமிகளின் தாக்கத்தினாலும், தூசு, புகை நிறைந்த இடங்களிலும் இந்த நோயின் தாக்கம் அதிகமாக இருக்கும். இதனால் சரிவர தூக்கமில்லாத அப்னியா நோயினால் அவதிப்படுவார்கள். இரவுகளில் தூக்கம் இல்லாத போது அதிகப் பிரச்சனைகளை உண்டாக்கும்.

ஆஸ்துமா நோயினை முழுவதும் கட்டுக்குள் கொண்டு வர ஒரு ஜூஸ் உள்ளது. தினமும் குடித்தால் உங்களுக்கு ஆஸ்துமா என்பதை மறந்துவிடுவீர்கள் அதனைப் பற்றி இங்கு காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 ஹெர்பல் ஜூஸ் தயாரிக்கும் முறை :

ஹெர்பல் ஜூஸ் தயாரிக்கும் முறை :

தேவையானவை :

எலுமிச்சை - 1

அன்னாசி - 2 துண்டுகள் சிறியது

வெள்ளரி - 2 துண்டுகள்

இஞ்சி - சிறிய துண்டு

மஞ்சள் - 1 சிட்டிகை

மிளகுப் பொடி - அரை ஸ்பூன்

ஹெர்பல் ஜூஸ் தயாரிக்கும் முறை :

ஹெர்பல் ஜூஸ் தயாரிக்கும் முறை :

அன்னாசி , வெள்ளரி இஞ்சியை அரைத்துக் கொள்ளுங்கள். அதனை ஒரு டம்ளர் நீரில் கலந்து எலுமிச்சை சாறு, மஞ்சள் மிளகுப் பொடி ஆகியவை கலக்கவும்.

பருகும் முறை :

பருகும் முறை :

இந்த ஜூஸை காலையில் எழுந்ததும் பருக வேண்டும். முக்கியமாக உடனுக்குடன் புதிதாக தயாரித்து குடிக்கவேண்டும். வைத்து குடிக்கக் கூடாது.

மற்றொரு தயாரிக்கும் முறை :

மற்றொரு தயாரிக்கும் முறை :

250 மி.லி நீரில் எலுமிச்சை தோல், அன்னாசி, வெள்ளரி, தோல் நீக்கிய இஞ்சி துண்டு, மஞ்சள் ஆகியவற்றை கலந்து நன்றாக கொதிக்கவிடுங்கள். நீர் ஒரு மடங்கு சுண்டியதும் அதனை வடிகட்டி அதில் மிளகுத் தூள் கலந்து குடிப்பதும் நல்லது.

பலன்கள் :

பலன்கள் :

விட்டமின் சி நிறைந்த சிட்ரஸ் பழங்கள் அதிக ஆன்டி ஆக்ஸிடென்ட் கொண்டவை. நோய் எதிர்ப்பு மணடலத்தை பலப்படுத்தும். கிருமிகளை எதிர்த்து போராடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

உங்களுக்கான சிறந்த ஹெல்த் இன்சூரன்ஸ் எது, ஒப்பிட்டு பார்த்து தேர்வு செய்யுங்கள்!

English summary

Herbal Juice to control Asthma

Drink this Herbal Juice to keep Asthma at bay
Story first published: Friday, August 26, 2016, 15:05 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter