மலக் குடல் புற்று நோயின் 5 அறிகுறிகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள் !!

Written By:
Subscribe to Boldsky

மலக் குடலில் புற்று நோய் தாக்கும்போது அதன் ஆரம்ப அறிகுறிகள் வெளியே தருவதில்லை. இதனாலே பலருக்கும் இந்த நோய் உயிருக்கு ஆபத்தான் கட்டத்தில் கொண்டு சென்றுவிடுகிறது.

மலக்க்குடலில் உண்டாகும் செல் சிதைவினால் உண்டாகும் பாதிப்பை கொலோனோஸ்கோபி மூலம் கண்டறியலாம். தகுந்த சிகிச்சையினால் சிதைவ்டைந்த செல்கள் புற்று நோயாக தடுக்க முடியும்.

5 symptoms of colorectal cancer

மலக்குடலில் புற்று நோய் வந்தால் அதன் அறிகுறிகள் எப்படி இருக்கும் என தெரியுமா? மேலும் படியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 சோர்வு :

சோர்வு :

பெருங்குடலில் இருந்து கசியும் ரத்தம் ஜீரண பாதையை அடையும். இது சிவப்பணுக்களோடு இணையும்போது போதுமான அளவு ஆக்ஸிஜன் கொண்டு செல்ல முடியாமல் தேக்க நிலை உண்டாகும் இதனால் ரத்த சோகை ஏற்பட்டு உடல் சோர்வு உண்டாகும்.

மலக்குடலில் புற்று நோய் இருப்பவர்கள் பெரும்பாலும் இந்த பாதிப்புடன் வருகிறார்கள்.

ஆசன வாயில் ரத்தம் :

ஆசன வாயில் ரத்தம் :

மலம் கழிக்கும்போது ரத்தம் வந்தால் அது மலக்குடல் புற்று நோயாகவும் இருக்கலாம். மூலம் இருந்தாலும் இது போன்று ரத்த கசிவு உண்டாகலாம்.

ஆனால் அதனை சாதரணமாக எடுத்துக் கொள்ளாமல் உடனடியாக மருத்துவரை பார்ப்பது நல்லது.

மலத்தின் நிறம் :

மலத்தின் நிறம் :

மலம் கருப்பாக அல்லது அடர்ந்த நிறத்தில் இருந்தாலோ அது உறைந்த ரத்தம் கலந்து வெளிவருவதன் அறிகுறியாக இருக்கலாம். தொடந்து இந்த மாதிரி வந்தால் மருத்துவரை காணவும்.

 பென்சில் போல் மலம் கழித்தால் :

பென்சில் போல் மலம் கழித்தால் :

மலக்குடலில் புற்று நோய் உண்டானால் மலத்தின் தன்மையும் மாறுபடும். இதனால் மலம் பென்சில் போன்று சன்னமாக வரும். இவ்வாறான நிலை தொடர்ச்சியாக ஒரு வாரத்திற்கும் மேலிருந்தால் உடனடியாக மருத்துவரை காணவும்.

 வயிறு வலி :

வயிறு வலி :

அடிவயிறு வலி, குமட்டல் வாந்தி ஆகியவைகளும் இதன் அறிகுறிகளாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

5 symptoms of colorectal cancer

5 Symptoms that colorectal tube has been affected by cancer,
Story first published: Wednesday, December 7, 2016, 11:46 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter