Latest Updates
-
அவல் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 19, 2026: இன்றைய நாள் இந்த 2 ராசிகளுக்கு ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் - ஜாக்கிரதை -
கடக ராசிக்கு சென்றுள்ள செவ்வாய்: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், சொத்துக்களும் குவியும்.. -
4 வெங்காயம் இருந்தா போதும்.. சப்பாத்திக்கு சூப்பரான சைடு டிஷ் செய்யலாம்! எப்படின்னு பாருங்க.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
பொலிவான முகம் வேண்டுமா? அப்ப அரிசி மாவை வெச்சு அடிக்கடி இப்படி ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
தக்காளியோட இந்த பொருளை சேர்த்து சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமான சைடிஷா இருக்கும் -
ஃபோலிக் அமிலம் ஏன் மிகவும் முக்கியம்? அதன் குறைபாட்டின் எச்சரிக்கை அறிகுறிகள் என்ன? - விளக்கும் டாக்டர்! -
இந்திய ரூபாய்களில் ஏன் காந்தியின் முகம் மட்டும் உள்ளது? காந்திக்கு முன் யாருடைய முகம் இருந்தது தெரியுமா? -
Purattasi 2026: புரட்டாசி மாதம் ஏன் முக்கியமானது? இந்த மாத விரதத்தால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?
இந்த அறிகுறிகள் அடிக்கடி தெரியுதா? அப்ப உங்களுக்கு ஹெர்னியா இருக்கு-ன்னு அர்த்தம்..
Hernia Symptoms In Tamil: தொடர்ச்சியாக வயிற்றில் வலி அல்லது இடுப்பு பகுதியில் கடுமையான வலியை சந்தித்தால், அது குடலிறக்கத்தின் அறிகுறியாக இருக்க வாய்ப்புள்ளது. இந்த குடலிறக்கத்தை தான் ஆங்கிலத்தில் ஹெர்னியா என்று அழைப்பர்.
இந்த குடலிறக்கம் ஆண்கள், பெண்கள் என இருபாலருக்கும் ஏற்படும் ஒரு பொதுவான நிலை. நிபுணர்களின் கூற்றுப்படி, குடலிறக்கம் மிகுந்த அசௌகரியத்தை ஏற்படுத்தும் மற்றும் இந்த அசௌகரியமானது தானாக சரியாகாது. குடலிறக்க பிரச்சனையை அறுவை சிகிச்சையின் மூலம் சரிசெய்யலாம்.

ஒருவருக்கு குடலிறக்கம் இருந்தால், அது படிப்படியாக வளர்ந்து, ஒருசில அறிகுறிகளை வெளிக்காட்டும். ஆனால் அந்த அறிகுறிகள் தினசரி சந்திக்கும் பொதுவான ஆரோக்கிய பிரச்சனைகளைப் போன்று இருப்பதால், நிறைய பேர் அவற்றை புறக்கணித்துவிடுவார்கள். இப்படி புறக்கணிக்கும் போது சில சமயங்களில் அது தீவிரமான ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு வழிவகுத்துவிடும்.
ஹெர்னியா என்றால் என்ன?
நமது அடிவயிற்றுப் பகுதியானது தசை மற்றும் வலுவான திசுக்களின் அடுக்குகளால் மூடப்பட்டிருக்கும். இந்த அடுக்குகள் தான் வயிற்றில் உள்ள உள்ளுறுப்புக்களை பாதுகாப்பாக வைத்திருக்க உதவுகிறது. ஆனால் குடலியறக்கத்தின் போது, வயிற்றில் உள்ள தசைச்சுவற்றில் உள்ள இடைவெளி வழியே குடல் வெளியே தள்ளப்படும். இந்த குடலிறக்கத்தில் பல வகைகள் உள்ளன. இதில் பொதுவான குடலிறக்கங்கள் எனறால் அது தொப்பை அல்லது இடுப்பு பகுதிகளில் தான் ஏற்படுகின்றன.
குடலிறக்கம் எவருக்கு வேண்டுமானாலும் உருவாகலாம். ஆனால் இந்த குடலிறக்கமானது வயிற்றில் அறுவை சிகிச்சை செய்தவர்களுக்கு வருவதற்கான அபாயம் அதிகம் உள்ளது. இப்போது குடலிறக்கத்தின் சில எச்சரிக்கை அறிகுறிகள் என்னவென்பதைக் காண்போம்.
வயிற்றில் வீக்கம் அல்லது கட்டி
குடலிறக்கத்தின் மிகவும் பொதுவான அறிகுறி பாதிக்கப்பட்ட பகுதியில் வீக்கம் அல்லது கட்டி இருக்கும். அதுவும் இந்த கட்டியானது வயிற்றில் இருந்தால், படுக்கும் போது அவை மறைந்துவிடுவதைக் காணலாம். ஆனால் நிற்கும் போதோ அல்லது குனியும் போது, அந்த கட்டி வயிற்றில் இருப்பதை உணரலாம்.
தொடர்ந்து வலி
வயிற்றில் குடலிறக்கம் இருந்தால், அடிக்கடி மற்றும் இடைவிடாத வயிற்று வலியால் அவதிப்படக்கூடும். இந்த வலி மந்தமானது முதல் கூர்மையானது வரை இருக்கலாம். முக்கியமாக இந்த வலி அவ்வளவு விரைவில் சரியாகாது மற்றும் நீண்ட நேரம் நீடித்திருக்கும்.
வீக்கம்
குடலிறக்கம் அடிவயிற்றில் ஏற்பட்டிருந்தால், அது வயிற்றுப் பகுதியில் வீக்கத்தை ஏற்படுத்தும். இப்படி வீக்கம் ஏற்படும் போது, அது நெஞ்செரிச்சல், ஆசிட் ரிப்ளக்ஸ் மற்றும் நெஞ்சு வலி போன்றவற்றை ஏற்படுத்துவதைத் தவிர, சிறிது உணவை உண்டாலும் வயிறு நிறைய உணவு உண்ட உணர்வைத் தரும்.
சிறுநீர், மலம் கழிப்பதில் சிரமம்
குடலிறக்கத்தின் மிகவும் ஆபத்தான விளைவுகளில் ஒன்று, சிறுநீர் மற்றும் மலம் கழிக்கும் போது மிகுந்த சிரமத்தை சந்திக்க நேரிடும். அதுவும் குடல் அதிக அழுத்தத்திற்கு உடபட்டால், அது தன்னிச்சையான பெரிஸ்டால்சிஸை எதிர்மறையாக பாதிக்கும்.
எரிச்சல் உணர்வு
குடலிற பிரச்சனை இருந்தால், அது உள்ள இடத்தில் மிகுதியான அசௌகரியத்தை ஏற்படுத்தும். அதுவும் இந்த எரிச்சல் தொடர்ந்து இருப்பதோடு, தினசரி செயல்பாடுகளை செய்யும் போது, இந்த எரிச்சல் இன்னும் தீவிரமாகும்.
மூச்சுத்திணறல்
சில சமயங்களில் ஹெர்னியா கட்டுப்பாடு இல்லாமல் வளருக்கும் போது, அது நுரையீரல் அல்லது உதரவிதானத்தில் அதிக அழுத்தத்தைக் கொடுத்து மூச்சுத்திணறலுக்கு வழிவகுக்கும். எனவே மேலே கொடுக்கப்பட்டுள்ள அறிகுறிகளுடன், மூச்சுத்திணறலை சந்தித்தால், உடனே மருத்துவரை அணுகுங்கள்.
குமட்டல் மற்றும் வாந்தி
குடலிறக்கம் வயிற்றுச் சுவரில் உள்ள பலவீனமான இடத்தில் ஏற்பட்டால், அது குடவைத் தடுக்க தொடங்கி, அதன் விளைவாக கடுமையாக வயிற்று வல், குமட்டல் மற்றும் வாந்தியை ஏற்படுத்தும்.
காய்ச்சல்
தொடர்ந்து அடிக்கடி உங்களுக்கு காய்ச்சல் அதிகமாக வந்தால், அது குடலிறக்கத்தின் முக்கியமான அறிகுறிகளுள் ஒன்றாகும்.
மிகுந்த உடல் சோர்வு
உங்கள் மேல் கால், மற்றும் இடுப்பு பகுதியில் மிகுந்த பலவீனத்தை உணர்ந்தால், அது குடலிறக்கத்தின் அறிகுறியாக இருக்கலாம்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications
