Latest Updates
-
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம் -
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
Snake Wine என்றால் என்ன? சீன மக்கள் இதை ஏன் விரும்பி குடிக்கிறார்கள் தெரியுமா?இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? -
வாஸ்துப்படி கிருஷ்ண ஜெயந்தி நாளில் இந்த பொருட்களை வாங்கி கடை/ஆபீஸில் வையுங்க.. தொழில் களைகட்டும்.. -
நீலகிரி வெஜ் குருமா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - தோசை. சப்பாத்திக்கு செமையா இருக்கும -
இந்த 4 ராசிக்காரங்க தலையே போனாலும் அவங்க செஞ்ச தப்பை ஒத்துக்க மாட்டாங்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
மதியம் இந்த மாதிரி ரசம் வையுங்க.. குழம்பே கேக்கமாட்டாங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க..
கொலஸ்ட்ராலை விரட்டி அடிக்கும் எளிய உணவுகள் இதோ..!
Cholesterol Control Foods: நம்முடைய ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் உணவுமுறை காரணமாக தற்போது பலர் அதிக கொலஸ்ட்ராலால் அவதிப்படுகிறார்கள். கெட்ட கொழுப்பு அதிகமாக இருப்பது ஒரு பொதுவான பிரச்சனை ஆகிவிட்டது. சுகர் போன்றே அனைவரும் கொலஸ்ட்ராலால் அவதிப்பட்டு வருகின்றனர்..
உடலில் கொலஸ்ட்ரால் அதிகரிப்பதால் தமனிகளில் அடைப்பு ஏற்பட்டு இதயம் தொடர்பான நோய்கள் ஏற்படும் அபாயம் ஏற்படுகின்றது. இது தவிர, கொழுப்பு உடலின் மற்ற பாகங்களையும் பாதிக்கத் தொடங்குகிறது. இதனால் கொலஸ்ட்ராலை குறைக்க உதவும் சில உணவுகளை சப்பிட்டு வர உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கலாம்.. வாங்க அது என்னென்ன? உணவுகள் என்று இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்..

நமது உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அளவு அதிகமானால், அது இதய நோய்கள், மாரடைப்பு போன்ற சில தீவிர நோய்களை ஏற்படுத்தக்கூடும் அபாயம் உள்ளது.. . ஆகையால் இதை கட்டுக்குள் வைப்பது மிக அவசியம். சில குறிப்பிட்ட உணவுகளை உட்கொள்வதன் மூலம் உடலில் கெட்ட கொலஸ்ட்ராலின் அளவை கட்டுக்குள் வைக்க முடியும். நாம் தினமும் சமையலில் சேர்க்கும் சில எளிய உணவுகளை கொண்டே கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் வைக்க முடியும். இவை நமது உடல் ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும். உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைக்க உதவும் சில ஆரோக்கியமான எளிய உணவுகளாவான.. தினை, கம்பு கொண்டைகடலை, பெர்ரி வகைகள், வெந்தயம், பச்சை காய்கறிகள்...
தினை மற்றும் கம்பு கொலஸ்ட்ராலை குறைக்க பெரிய அளவில் உதவும். இதில் அதிக நார்ச்சத்து இருக்கின்றது. தினையை இரவு முழுவதும் ஊறவைத்து, காலையில் அதை வேகவைத்து, அதில் சிறிது வெங்காயம், பச்சை மிளகாய், சிறிது கல் உப்பு சேர்த்து சாப்பிடலாம்... தினமும் 1 கிண்ணம் அளவு கம்பை உட்கொள்வது கொலஸ்ட்ராலை விரைவாகக் குறைக்க உதவியாக இருக்கும். அத்துடன் உங்க டயட்டில் தினமும் பூண்டை சேர்த்துக்கொள்வது கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்கும். பூண்டை பல வகைகளில் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். பூண்டில் உள்ள ஆரோக்கிய நன்மைகளால் பல வித உடல் உபாதைகளுக்கும் நிவாரணம் கிடைக்கும்.
அதிக கொலஸ்ட்ரால் உள்ளவர்கள் வேகவைத்த கொண்டைக்கடலையை உட்கொள்ளலாம். இது கெட்ட கொலஸ்ட்ராலை குறைகக் உதவுவதோடு பல வித ஆரோக்கிய நன்மைகளையும் உடலுக்கு அளிக்கின்றது. இதை சாலட், சப்ஜி, சுண்டல் என பல வகைகளில் செய்து சாப்பிடலாம். இதில் வெங்காயம், பச்சை மிளகாய், எலுமிச்சை சாறு, மாங்காய், கேரட் என அனைத்தையும் சேர்த்து சிற்றுண்டியாகவும் உட்கொள்ளலாம்.
பெர்ரி வகை பழங்கள் கெட்ட கொலஸ்ட்ராலை கரைக்குமாம்.. இது கொலஸ்ட்ராலை குறைக்க பெரிய வகையில் உதவும். புளுபெர்ரி, ராஸ்பெர்ரி, ஸ்ட்ராபெர்ரி உள்ளிட்ட பெர்ரி வகை பழங்கள் இதயத்திற்கும் மிகவும் நல்லதாக கருதப்படுகின்றன. இதில் அதிக அளவு நார்ச்சத்து மற்றும் ஆண்டிஆக்சிடெண்டுகள் உள்ளன. பெர்ரி வகைகளில் கெட்ட கொழுப்பை குறைக்க உதவும் வைட்டமின் சி மற்றும் பொட்டாசியம் மிக அதிக காணப்படுகின்றன.
பச்சை காய்கறிகள் அதிகமாக சாப்பிட்டால் உடலில் கெட்ட கொழுப்பு தங்காது..கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த மிக சிறந்ததாக காய்கள் கருதப்படுகின்றது. இதை அவ்வப்போது உட்கொள்வது கொலஸ்ட்ராலை குறைக்க பெரிய அளவில் உதவும். இதில் அதிக அளவில் நார்ச்சத்து இருப்பதால், இது வயிற்றுக்கும் நிறைவான உணர்வை அளிக்கின்றது. அத்துடன் உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகமாக உள்ளவர்கள் அதை கட்டுப்படுத்த, முழு தானியங்களை உட்கொள்ளலாம். கினோவா, கோதுமை, தினை போன்ற முழு தானியங்களை அதிக அளவில் உணவில் சேர்த்துக் கொள்வது நன்மை பயக்கும். இவற்றில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது.
இதில் மிக முக்கியமாக அதிக கொழுப்பு உள்ளவர்கள் வெந்தயத்தை சாப்பிட வேண்டும்.. இதனை ஊற வைத்தும் சாப்பிடலாம்.. வேகவைத்தும் சாப்பிடலாம்.. இது அதிக நன்மை பயக்கும். கொலஸ்ட்ராலை குறைப்பது மட்டுமின்றி இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்கவும் இது உதவுகிறது. இது கெட்ட கொழுப்பைக் குறைத்து நல்ல கொழுப்பை அதிகரிக்கிறது. இரவில் வெந்தயத்தை ஊற வைத்து காலையில் அதை தண்ணீரில் கொதிக்க வைத்து, அதனுடன் வெங்காயம், மிளகாய், கல் உப்பு சேர்த்துதாளித்தும் சாப்பிடலாம். அதனால் உங்க உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் குறையும்..
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications