Latest Updates
-
கல்யாண வீட்டு சுரைக்காய் கூட்டு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. பிடிக்காதவங்க கூட சாப்பிடுவாங்க.. -
40 கிலோ எடை குறைத்த நடிகை குஷ்பு - எப்படி? இந்த ஒரு ஜப்பானிய பழக்கம் தான் காரணமாம்! -
சிங்கப்பூர் வெஜ் ப்ரைடு ரைஸ் ரெசிபி - இந்த மாதிரி ரைஸ் செஞ்சா இனிமே ஹோட்டல் பக்கமே போகமாட்டிங்க -
அக்டோபரில் உருவாகியுள்ள லட்சுமி நாராயண ராஜயோகம்: இந்த 5 ராசிக்கு பணம் சம்பாதிக்க புதிய வழி கிடைக்கும்! -
சிப்ஸ் பாக்கெட்களில் ஏன் சிப்ஸை விட காற்று அதிகமாக உள்ளது தெரியுமா? அது சாதாரண காற்றே இல்லையாம் -
15 நிமிடத்தில் இட்லி குருமா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
அக்டோபர் 06 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு ஏமாற்றங்கள் நிறைந்த நாளாக இருக்குமாம் -
அக்டோபர் இறுதியில் நடக்கும் குரு பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு கூரைய பிச்சுகிட்டு பணம் கொட்டப்போகுது! -
30 ஆண்டுக்கு பின் சனி மீனத்தில் நேரடி இயக்கத்தை தொடங்குவதால் இந்த 3 ராசியின் பலமும்,பணமும் அதிகரிக்கப்போகுதாம் -
ஹோட்டல் ஸ்டைல் முந்திரி வெஜ் குருமா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - அருமையா இருக்கும்
ஆப்பிள் சீடர் வினிகருடன் இந்த ஒரு பொருளை கலந்து குடிச்சா மாரடைப்பும் வராது.. இதய அடைப்பும் சரியாகும் தெரியுமா?
Apple Cider Vinegar With Turmeric Benefits In Tamil: பழங்காலத்தில் நமது முன்னோர்கள் நீண்ட காலம் நோயின்றி ஆரோக்கியமாக வாழ்ந்ததற்கு முக்கிய காரணம் அவர்களின் வாழ்க்கை முறையும் உணவுப் பழக்கங்களும் தான். அத்துடன் இவர்கள் தாங்கள் சந்திக்கும் ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு உணவுப் பொருட்களைக் கொண்டே தீர்வு கண்டனர்.
அப்படி பல ஆண்டுகளாக உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவிய உணவுப் பொருட்கள் தான் மஞ்சள் மற்றும் ஆப்பிள் சீடர் வினிகர். இவை இரண்டுமே தனித்துவமான மருத்துவ பண்புகளைக் கொண்டவை. இதனால் தான் இயற்கை மருத்துவத்தில் இவ்விரு பொருட்களும் ஆரோக்கிய பிரச்சனைகளை சரிசெய்ய பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

ஆனால் ஆப்பிள் சீடர் வினிகருடன் மஞ்சள் தூளை கலந்து குடித்தால் இன்னும் சிறப்பான பலன் கிடைக்கும் என்பது தெரியுமா? ஆம், இவ்விரு பொருட்களையும் ஒன்றாக கலந்து எடுக்கும் போது, அவற்றில் உள்ள மருத்துவ பண்புகள், நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது முதல் மூளை மற்றும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவது வரை பல நன்மைகள் கிடைக்கும். சரி, ஆப்பிள் சீடர் வினிகருடன் மஞ்சளை கலந்து குடிப்பது எப்படி இதயத்திற்கு நன்மைகளை அளிக்கிறது என்பதை இப்போது காண்போம்.
அழற்சி எதிர்ப்பு பண்புகள்
மஞ்சளில் குர்குமின் என்னும் கலவை அதிகம் உள்ளன. இந்த குர்குமின் அழற்சி எதிர்ப்பு பண்புகளாக செயல்படக்கூடியவை. இப்படிப்பட்ட மஞ்சளை அப்பிள் சீடர் வினிகருடன் சேர்த்து எடுக்கும் போது, உடலினுள் மற்றும் இரத்தக் குழாய்களில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்க உதவி புரிந்து, இதய ஆரோக்கியத்தை சிறப்பாக பராமரிக்க உதவுகின்றன.
கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்கும்
உங்களுக்கு உயர் கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளதா? அப்படியானால் அந்த கொலஸ்ட்ராலைக் குறைக்க காலையில் காபி, டீ-க்கு பதிலாக ஆப்பிள் சீடர் வினிகருடன் மஞ்சள் தூளைக் கலந்து குடித்து வாருங்கள். இவை இரத்த குழாய்களில் படிந்துள்ள அதிகப்படியான கொலஸ்ட்ராலைக் கரைத்து, இரத்த குழாய்களை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவுகின்றன. இதன் விளைவாக மாரடைப்பின் அபாயம் குறைகிறது.
இரத்த ஓட்டம் மேம்படும்
மஞ்சள் இரத்தத்தை மெலிதாக்கும் தன்மையைக் கொண்டவை. மஞ்சளை உட்கொள்ளும் போது இரத்த ஓட்டம் மேம்படும். அதோ சமயம் ஆப்பிள் சீடர் வினிகர் இரத்த அழுத்தத்தை சீராக்க உதவுகிறது. இவ்விரண்டையும் ஒன்றாக எடுக்கும் போது, இரத்த ஓட்டம் சீராவதோடு, இரத்தம் உறைவது தடுக்கப்படும் மற்றும் இரத்த அழுத்த பிரச்சனையும் கட்டுப்பாட்டில் இருக்கும்.
ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்தவை
ஆப்பிள் சீடர் வினிகர் மற்றும் மஞ்சள் ஆகிய இரண்டிலும் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளன. இவை ப்ரீ ராடிக்கல்களால் ஏற்படும் சேதம் மற்றம் அழுத்தத்தைத் தடுத்து, இதயத்தில் பாதிப்பு ஏற்படுவதை தடுக்கின்றன.
உடல் எடை கட்டுப்படும்
இதயம் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், உடல் எடை சரியான அளவு இருக்க வேண்டியது முக்கியம். மஞ்சள் மற்றும் ஆப்பிள் சீடர் வினிகர் ஆகிய இரண்டும் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து, கொழுப்புக்களை கரைத்து, உடல் எடையைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள உதவுகின்றன. ஆகவே இதய ஆரோக்கியத்திற்கும், உடல் எடையைக் கட்டுப்படுத்துவதற்கும் சிறந்த வழி ஆப்பிள் சீடர்வினிகருடன், மஞ்சளை கலந்து குடிப்பது தான்.
இரத்த சர்க்கரை கட்டுப்படும்
இரத்த சர்க்கரை அளவு அதிகரித்தால், அது தானாக இதய நோய் மற்றும் பக்கவாதத்தின் அபாயத்தை அதிகரிக்கும். எனவே இரத்த சர்ச்சரையைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள விரும்பினால், ஆப்பிள் சீடர் வினிகருடன் மஞ்சள் தூளை கலந்து குடியுங்கள்.
செரிமானம் மேம்படும்
மஞ்சள் மற்றும் ஆப்பிள் சீடர் வினிகர் ஆகிய இரண்டுமே செரிமான ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இவ்விரு பொருட்களையும் ஒன்றாக கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து வரும் போது, செரிமான செயல்முறை சிறப்பாக இருப்பதோடு, வயிற்று உப்புசம், வாய்வு தொல்லை போன்றவை தடுக்கப்படுவதோடு, இதய ஆரோக்கியமும் மேம்படும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications
