Latest Updates
-
அக்டோபர் மாத சூரிய பெயர்ச்சியால் இந்த 4 ராசிக்காரங்கள பணப் பிரச்சனை பாடாய் படுத்தப்போகுது! -
அக்டோபர் 11-ல் உருவாகும் வைதிருதி யோகத்தால் இந்த 3 ராசிக்காரர்களை துரதிர்ஷ்டம் விடாமல் துரத்தப்போகுதாம் -
கொங்கு ஸ்பெஷல் பழ கச்சாயம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சாப்பிட புசுபுசுனு அருமையா இருக்கும் -
லன்ச் பாக்ஸ்-க்கு ஒருடைம் இந்த கோவக்காய் சாதம் செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
Mahalaya Amavasya 2026: மகாளய அமாவாசை அன்று முன்னோர்களின் ஆசியை பெற என்ன செய்ய வேண்டும் தெரியுமா? -
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. மற்றவர்களிடம் மறைக்கும் உங்களின் நச்சு குணம் பத்தி சொல்றோம்.. -
தமிழ்நாட்டின் மிகப்பெரிய மாவட்டம் எது தெரியுமா? எதுன்னு தெரிஞ்சா நீங்க நம்பவே மாட்டிங்க... -
சிக்கன் வாங்குனா எப்பவும் குழம்பு செய்யாம, ஒருவாட்டி ரசம் செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்.. -
1/2 கப் தட்டைப்பயறு இருந்தா இந்த மாதிரி கார குழம்பு வைச்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்தியாவின் 'காபி தலைநகரம்' என்று அழைக்கப்படும் நகரம் எது தெரியுமா? நம்ம பக்கத்துக்கு ஊர்தானா?
ஆண்களே! உங்க கை விரல்கள் இப்படி இருக்கா? அப்ப உங்களுக்கு இந்த பிரச்சனை இருக்கு-ன்னு அர்த்தம்.. உஷார்..
Symptoms Of High Uric Acid In Men In Tamil: இன்று நிறைய பேர் வாத நோயால் அதிகம் அவதிப்பட்டு வருகிறார்கள். இப்படி வாத நோயால் அவஸ்தைப்படுவதற்கு முக்கிய காரணம் யூரிக் அமில தேக்கம் தான். யூரிக் அமிலம் என்பது இரத்தத்தில் உள்ள ஒரு கழிவுப் பொருளாகும். இது ப்யூரின்கள் எனபபடும் ரசாயனங்களை உடைத்தெறியும் போது உற்பத்தி செய்யப்படுகிறது.
பொதுவாக இந்த யூரிக் அமிலம் சிறுநீரகங்களால் சிறுநீரின் வழியே வெளியேற்றப்படும். ஆனால் எப்போது இந்த யூரிக் அமிலம் அதிகமாகிறதோடு, அது உடலின் மூட்டுப் பகுதிகளில் தேங்கி, பல்வேறு உடல் பாகங்கள் மற்றும் உறுப்புகளுக்கு சேதத்தை ஏற்படுத்தும்.

சரி, எப்படி யூரிக் அமிலம் அதிகரிக்கிறது என்று நீங்கள் கேட்கலாம். ப்யூரின்கள் உள்ள சில வகையான உணவுகள் மற்றும் பானங்களை உட்கொண்டு ஜீரணிக்கும் போது, நமது உடலானது உற்பத்தி செய்யும் ஒரு பொருள் தான் யூரிக் அமிலம். பொதுவாக இந்த யூரிக் அமிலம் தீங்கற்றது. ஆனால் இந்த யூரிக் அமிலம் அதிகரிக்கும் போது, அது ஹைப்பர்யூரிசிமியாவை உண்டாக்குகிறது.
உடலில் யூரிக் அமிலம் அதிகம் இருந்தால், அது ஒருசில அறிகுறிகளை கைகள் மற்றும் விரல்களில் வெளிக்காட்டும். இப்போது 30 வயதை எட்டிய ஆண்களின் உடலில் யூரிக் அமிலம் அதிகமாக இருந்தால், அது கைகள் மற்றும் விரல்களில் எந்த மாதிரியான அறிகுறிகளை வெளிக்காட்டும் என்பதைக் காண்போம்.
அசாதாரண வீக்கம் மற்றும் சிவந்து போவது
விரல் மூட்டுகள் அல்லது மணிக்கட்டுகள் போன்ற மூட்டுப் பகுதிகளில் வீக்கம் மற்றும் சிவந்து இருப்பதைக் கண்டால், அது உடலில் யூரிக் அமிலம் அதிகம் இருப்பதன் ஆரம்பகால அறிகுறியாகும். எனவே உங்கள் விரல் மூட்டுக்களில் இம்மாதிரியான அறிகுறிகளை அனுபவித்தால், அத்துடன் அப்பகுதியானது சற்று வெப்பமாகவும், மென்மையாகவும் இருப்பதைக் காண்டால், உடனே மருத்துவரை அணுகுங்கள்.
அதிகப்படியான முட்டு வலி
உங்கள் கைகள் மற்றும் விரல் மூட்டுக்களில் கடுமையான மற்றும் திடீரென்று வலி ஏற்பட்டால், அந்த பகுதிகளில் யூரிக் அமிலம் அதிகமாக தேங்கியுள்ளது என்று அர்த்தம். அதுவும் இந்த வலியானது அடிக்கடி காரணமின்றி ஏற்படக்கூடும். இதனால் அவ்வபோது மிகுந்த அசௌகரியத்தை உணரக்கூடும்.
தடிமனான சருமம்
கைகளின் மூட்டுப் பகுதிகளில் உள்ள சருமம் தடித்து கட்டி போன்று உள்ளதா? அப்படியானால் அப்பகுதியில் யூரிக் அமிலம் அதிகமாக தேங்கியுள்ளது என்று அர்த்தம். அதுவும் இந்த கட்டிகள் வலிமிக்கதாக இருப்பதோடு, இவற்றை கைகளிலும் விரல்களிலும் காணலாம். எனவே இப்படி உங்கள் கைகளில் திடீரென்று கட்டிகள் இருப்பதை உணர்ந்தால் மற்றும் அவை உங்களின் இயக்கத்தில் தடையை ஏற்படுத்தினால், உடனே மருத்துவரை அணுகுங்கள்.
அசைக்க முடியாமை
மூட்டுக்களில் யூரிக் அமிலம் அளவுக்கு அதிகமாக தேங்கி வீக்கத்தை ஏற்படுத்தியிருந்தால், அது இயக்கத்தை கட்டுப்படுத்தும். எனவே உங்கள் கை விரல்களை திடீரென்று உங்களால் சரியாக அசைக்க முடியாமல் இருப்பதை உணர்ந்தால், மருத்துவரிடம் உடனே சென்று பரிசோதனை செய்து பாருங்கள்.
உணர்வின்மை அல்லது கூச்ச உணர்வு
உங்கள் கைகள் அல்லது விரல்களில் உணர்வின்மையையோ அல்லது கூச்ச உணர்வையோ உணர்ந்தால், அது யூரிக் அமிலம் அதிகமாக தேங்கியுள்ளது என்பதற்கான அறிகுறியாக இருக்கலாம். அதுவும் இம்மாதிரியான உணர்வு ஒன்றிற்கு மேற்பட்ட விரல்களிலும் காணப்படலாம்.
தோல் அமைப்பில் மாற்றம்
சருமத்தின் நிறம் மாற்றமடைந்து காணப்பட்டால், யூரிக் அமிலம் அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது. அதுவும் இப்படி நிறமாற்றமடைந்த சரும பகுதியானது பளபளப்பாக இருக்கலாம். இன்னும் தீவிரமான நிலையில், அந்த தோல் புண்ணாகி, மூட்டு பகுதிகளில் தொற்றை ஏற்படுத்தலாம். எனவே சரும நிறம் மாற்றமடைவதை கண்டால், உஷாகிக் கொள்ளுங்கள்.
வலியால் மிகுந்த அசௌகரியம்
யூரிக் அமிலம் ஒருவரது மூட்டுப் பகுதிகளில் அதிகமாக தேங்கியிருந்தால், அவரால் பொருட்களை தூக்கவோ, பிடிக்கவோ முடியாமல் போகலாம். அதுவும் இது தூக்க முடியாமல் போவதற்கு வலி, வீக்கம் போன்றவை முக்கிய காரணங்களாக இருக்கலாம்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications
