Latest Updates
-
சிக்கன் எடுத்தா இப்படி மசாலா அரைச்சு கிரேவி செஞ்சு பாருங்க.. பூரி, சப்பாத்திக்கு அல்டிமேட்டா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 23 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு நல்ல செய்திகள் தேடிவரப்போகுதாம் -
வார ராசிபலன் (23 August 2026 - 29 August 2026)- உங்க ராசிப்படி இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும் தெரியுமா -
மலபார் சிக்கன் கறி ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - சப்பாத்தி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இளம் வயதிலேயே சொந்த வீடு வாங்கும் யோகம் இருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
சவூதி அரேபியாவில் இந்திய ஓட்டுநர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
ஐயங்கார் ஸ்டைல் அஞ்சறைப் பெட்டி குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
ஆகஸ்ட் 28-ல் நடக்கும் சந்திர கிரகணத்தால் இந்த 3 ராசிக்காரர்களை துன்பங்கள் துரத்தப்போகுதாம் - உங்க ராசி என்ன? -
முட்டைக்கோஸும், உருளைக்கிழங்கும் வெச்சு இப்படி கிரேவி செய்யுங்க.. பூரி, சப்பாத்திக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 22 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கஷ்டங்கள் துரத்தும் நாளாக இருக்குமாம்
High Cholesterol: உங்க நாக்கு இப்படி இருக்கா? அப்ப உடம்புல கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்..
Symptoms Of High Cholesterol In Tamil: கொலஸ்ட்ரால் என்பது உடலின் செல்களில் காணப்படும் மெழுகுப் போன்ற பொருள். இந்த கொலஸ்ட்ரால் செல்களின் ஆரோக்கியமான வளரச்சிக்கு மிகவும் இன்றியமையாதது. இந்த கொலஸ்ட்ராலின் அளவு உடலில் அதிகமானால், அது இதய நோய், பக்கவாதம் போன்றவற்றின் அபாயத்தை அதிகரித்துவிடும்.
தற்போதைய ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம் மற்றும் வாழ்க்கை முறையின் காரணமாக, 30 வயதிலேயே கொலஸ்ட்ரால் பிரச்சனையை நிறைய பேர் சந்திக்கிறார்கள். அதுவும் ஆண்கள் மட்டுமின்றி, பெண்களும் கொலஸ்ட்ரால் பிரச்சனையால் சிரமப்படுகிறார்கள்.

ஒருவரது உடலில் கொலஸ்ட்ரால் அதிகமாக இருந்தால், அது ஒருசில அறிகுறிகளை வெளிக்காட்டும். அந்த அறிகுறிகள் உடலின் பல்வேறு பகுதிகளில் தெரியும். அதில் ஒன்று தான் நாக்கு. நிறைய பேருக்கு நாக்கின் மூலம் கொலஸ்ட்ராலை அறியலாம் என்பது தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
நிச்சயம் இச்செய்தி பலருக்கும் ஆச்சரியத்தை அளிப்பதோடு, நிறைய பேர் உடனே கண்ணாடி முன் சென்று தங்களின் நாக்கை பார்க்க வாய்ப்புள்ளது. இப்போது உடலில் கொலஸ்ட்ரால் அதிகம் இருந்தால், நாக்கில் எந்த மாதிரியான அறிகுறிகள் தெரியும் என்பதைக் காண்போம்.
நாக்கில் வெள்ளை திட்டுக்கள்
உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமாக இருந்தால் நாக்கில் தெரியும் முதன்மையான அறிகுறி நாக்கில் வெள்ளைத் திட்டுக்கள் காணப்படும். எனவே உங்கள் நாக்கில் இந்த மாதிரியான வெள்ளை புள்ளிகள் அல்லது திட்டுகளை கண்டால், உடனே உங்கள் கொலஸ்ட்ரால் அளவை பரிசோதனை செய்து பாருங்கள்.
நாக்கில் அசாதாரண வீக்கம்
உங்கள் நாக்கு திடீரென்று வழக்கமான அளவை விட சற்று பெரிதாகவோ அல்லது வீங்கியோ காணப்பட்டால், உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமாக உள்ளது என்று அர்த்தம். ஏனெனில் நாக்கில் உள்ள இரத்த நாளங்களில் கெட்ட கொலஸ்ட்ரால் தேங்கி, இம்மாதிரியான வீக்கத்தை ஏற்படுத்தியிருக்கலாம். எனவே கவனமாக இருங்கள்.
நாக்கில் எரிச்சல்
உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அளவுக்கு அதிகமாக இருந்தால், சில சமயங்களில் நாக்கில் எரிச்சல் உணர்வை சந்திக்க நேரிடும். ஏனென்றால் நாக்கில் உள்ள இரத்த நாளங்களில் கொழுப்பு தேக்கத்தால் ஏற்பட்ட வீக்கமானது, நாக்கில் உள்ள நரம்புகளை பாதித்து இம்மாதிரியான எரிச்சல் உணர்வை ஏற்படுத்தலாம்.
சுவை மாற்றம்
உடலில் கொலஸ்ட்ரால் அளவு எக்கச்சக்கமாக இருந்தால், அது நாக்கின் சுவை உணர்வை பாதிக்கலாம். இதன் விளைவாக சுவை உணர்வில் மாற்றத்தை காணக்கூடும். முக்கியமாக திடீரென்று வாய் கசப்பாகவோ அல்லது உலோகச் சுவையையோ அனுபவித்தால், கொலஸ்ட்ரால் பிரச்சனை இருக்க வாய்ப்புள்ளது என்று அர்த்தம்.
வாய் வறட்சி
உங்கள் வாய் வழக்கத்தை விட அதிகமாக வறண்டு போவதை உணர்ந்தால், அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாதீர்கள். ஏனெனில் இது உயர் கொலஸ்ட்ரால் பிரச்சனையின் எச்சரிக்கை அறிகுறியாக இருக்கலாம். எப்படியெனில் இரத்த நாளங்களில் படிந்துள்ள கெட்ட கொலஸ்ட்ரால் எச்சில் உற்பத்தியை பாதித்து, வாய் மற்றும் நாக்கில் வறட்சியை ஏற்படுத்தும்.
விழுங்குவதில் சிரமம்
உடலில் கொலஸ்ட்ரால் அதிகமாக இருந்தால், இரத்த நாளங்களில் ப்ளேக்குகுள் உருவாகி விழுங்குவதில் சிரமத்தை ஏற்படுத்தும். இப்படியான நிலையை மருத்துவ ரீதியாக டிஸ்ஃபேஜியா என்று அழைப்பர். இப்படியான அறிகுறியை ஒருவர் திடீரென்று சந்தித்தால், உடனே மருத்துவரை அணுக வேண்டும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications