Latest Updates
-
30 ஆண்டுக்கு பின் சனியும்-செவ்வாயும் மீனத்தில் இணைவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
No Oil Noi Boil Recipe: அடுப்பே தேவைப்படாத ஆரோக்கியமான, சுவையான இட்லி மற்றும் சட்னி ரெசிபி...ட்ரை பண்ணுங்க...! -
1 வருடத்துக்கு பின் மேஷம் செல்லும் சுக்கிரன்: இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம்...! -
336 ஆண்டுகளுக்கு முன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாக்கு 11 மார்ச் 'இதே' நாளில் என்ன நடந்தது தெரியுமா? -
4 பிரெட், 1 கப் தயிர் இருந்தா 10 நிமிஷத்துல இந்த மாதிரி வடை சுடுங்க... மொறுமொறுனு டேஸ்ட் பிரமாதமா இருக்கும்... -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா? -
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...! -
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது...
எச்சரிக்கை! இரவில் இந்த அறிகுறிகள் தெரியுதா? அப்ப இரத்த அழுத்தம் ஆபத்தான நிலையில் இருக்கு-ன்னு அர்த்தம்..
Symptoms Of High Blood Pressure In Tamil: உயர் இரத்த அழுத்தம் என்பது அமைதியாக ஆளை கொல்லக்கூடிய ஒரு கொடிய பிரச்சனை. ஏனெனில் உயர் இரத்த அழுத்தமானது ஒரு கட்டத்தில் இதயத்திற்கு செல்லும் தமனிகளை மோசமாக சேதப்படுத்தி மாரடைப்பு அல்லது பக்கவாதம் போன்றவற்றின் அபாயத்தை அதிகரித்துவிடும்.
எனவே உயர் இரத்த அழுத்த பிரச்சனையை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். ஒருவேளை கட்டுப்பாடு இல்லாமல் இருந்தால், அதன் விளைவாக இதய பிரச்சனை மட்டுமின்றி, சிறுநீரகங்களின் செயல்பாடும் பாதிக்கப்படும், பார்வையை இழக்க நேரிடும் மற்றும் ஞாபக மறதியை சந்திக்க நேரிடும்.

இந்த உயர் இரத்த அழுத்த அளவானது அளவீடுகளின் போது ஆபத்தான அளவுகளை எட்டினாலும், சில சமயங்களில் எந்த ஒரு அறிகுறியையும் வெளிப்படுத்தாமல் இருக்கலாம். ஆனால் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் இந்த உயர் இரத்த அழுத்தமானது ஒருசில அறிகுறிகளை தொடர்ந்து வெளிக்காட்டிக் கொண்டே இருக்கும். எனவே எப்போதும் ஒருவர் தங்களின் உடல் வெளிப்படுத்தும் அறிகுறிகளை கவனிக்க வேண்டும். அசாதாரணமாக எடுத்துக் கொண்டால், அதன் விளைவாக மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும்.
முக்கியமாக உயர் இரத்த அழுத்த பிரச்சனை இருந்தால், குறட்டை முதல் இரவு நேரத்தில் அடிக்கடி சிறுநீர் கழிப்பது வரை அறிகுறிகள் தென்படும். இந்த அறிகுறிகளை சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டாம். இதெல்லாம் எச்சரிக்கை அறிகுறிகளாகும். யார் ஒருவருக்கு கட்டுப்பாடு இல்லாத அளவில் இரத்த அழுத்தம் அதிகமாக உள்ளதோ, அவர்கள் இரவில் அதிகமாக குறட்டை விடுவதாக ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது. இப்போது உயர் இரத்த அழுத்தம் தீவிரமாக இருந்தால் இரவு நேரத்தில் வெளிப்படும் சில அறிகுறிகளைக் காண்போம்.
குறட்டை
உயர் இரத்த அழுத்த பிரச்சனையில் ஒரு பொதுவான அறிகுறி தான் குறட்டை. இந்த குறட்டையானது சுவாசிக்கும் போது சுவாசப் பாதைகளில் அடைப்புக்கள் ஏற்பட்டு, சுவாசிக்கும் காற்றானது சிறு பாதைகள் வழியே பயணித்து, தொண்டையில் உள்ள திசுக்களில் அதிர்வுகளை ஏற்படுத்தும் போது ஏற்படுகிறது. சொல்லப்போனால் உயர் இரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்கள் அதிக சப்தத்துடன் குறட்டையை விடக்கூடும். இதைக் கொண்டு உயர் இரத்த அழுத்த பிரச்சனையை அறியலாம்.
தூக்கமின்மை
ஒருவருக்கு தூக்கமின்மையானது மன அழுத்தம், பதட்டம், மோசமான தூக்க பழக்கம் ஆகியவற்றால் மட்டுமின்றி, உயர் இரத்த அழுத்தம் காரணமாகவும் ஏற்படலாம். அதுவும் உயர் இரத்த அழுத்தம் இருப்பவர்களுக்கு அடிக்கடி தூக்கம் கலையலாம் அல்லது இரவு முழுவதும் விழித்திருக்க நேரிடலாம். எனவே இந்த அறிகுறியை நீங்கள் உணர்ந்தால், உடனே மருத்துவரை அணுகுங்கள்.
அமைதியற்ற தூக்கம்
இரவு தூங்கும் போது அடிக்கடி விழித்தால் அல்லது அமைதியற்ற தூக்கத்தை அனுபவித்தால், அவருக்கு உயர் இரத்த அழுத்த பிரச்சனை இருக்க வாய்ப்புள்ளது. ஏனெனில் உயர் இரத்த அழுத்தம் தீவிரமாக இருக்கும் போது, அது ஒருவரை அடிக்கடி ஆழ்ந்த தூக்கத்தில் இருந்து எழத் தூண்டும்.
அடிக்கடி சிறுநீர் கழிப்பது
இரவு நேரத்தில் அடிக்கடி சிறுநீர் கழிப்பது பல ஆரோக்கிய பிரச்சனைகளின் அறிகுறியாக உள்ளது. அதுவும் ஒருவர் பகலில் மட்டுமின்றி, இரவு நேரத்திலும் அடிக்கடி சிறுநீர் கழிக்க எழுந்தால், அது உயர் இரத்த அழுத்தத்தின் அறிகுறியாக இருக்கலாம். இரத்த அழுத்த அளவுகளில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படும் போது, அது ஒருவரது சிறநீரகங்களில் அதிக அழுத்தத்தைக் கொடுத்து, அதன் விளைவாக அதிகளவு சிறுநீரை உற்பத்தி செய்து, இரவு நேரத்தில் அடிக்கடி சிறுநீரை கழிக்கத் தூண்டுகிறது.
தலைவலி
முக்கியமாக அடிக்கடி தலைவலியை சந்திக்கிறீர்களா? அதுவும் இரவு, பகல் பாராமல் எப்போதும் மிகுந்த தலைவலியை அனுபவிக்கிறீர்களா? அப்படியானால் உங்களுக்கு உயர் இரத்த அழுத்த பிரச்சனை இருக்க வாய்ப்புள்ளது. எனவே நீங்கள் தலைவலியை சந்தித்தால் அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல், எப்போதெல்லாம் தலைவலி வருகிறது என்பதை கவனித்து, மருத்துவரை அணுகி தெரிவியுங்கள்.
மேலே கொடுக்கப்பட்டுள்ள அறிகுறிகளை நீங்கள் ஒன்றாக அனுபவித்தால், உங்கள் இரத்த அழுத்தம் கட்டுப்படுத்த முடியாத அளவில் ஆபத்தான நிலையில் உள்ளது என்று அர்த்தம். இந்நிலையில் உடனே மருத்துவரை அணுகி, போதுமான சிகிச்சையைப் பெறுங்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications











