For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அஸ்வகந்தா மூலிகையில் இவ்வளவு ஆபத்துகள் உண்டா? இனி ஜாக்கிரதையா இருந்துக்கோங்க!

|

பலவித மூலிகைகள் இந்த பூமியில் இருந்தாலும் அவற்றில் சில மட்டுமே மனித இனத்திற்கு பயன்தர கூடியவை. இன்னும் பல மூலிகைகளை நாம் கேள்வி பட்டது கூட கிடையாது. மூலிகைகள் என்றாலே ஆயுர்வேதம், சித்த மருத்துவம், மேலும் சில பாட்டி வைத்தியங்கள் தான் நம் நினைவிற்கு வரும். நாம் நினைப்பது போன்று எல்லா மூலிகையும் நமக்கு நன்மை மட்டும் செய்து விடாது.

அஸ்வகந்தா மூலிகையில் இவ்வளவு ஆபத்துகள் உண்டா? இனி ஜாக்கிரதையா இருந்துக்கோங்க!

கூடவே இவை பல வகையில் நமக்கு ஆபத்தையும் உண்டாகும். இதற்கு மூல காரணமே நாம் சாப்பிட கூடிய அளவும், முறையும் தான். எந்த மூலிகையாக இருந்தாலும் அவற்றிற்கென்று சில தன்மைகள் உண்டு. அதை நாம் மீறினால் நிச்சயம் விஷ தன்மை பெற்று விடும். அந்த வகையில் மூலிகைகளின் ராஜா என்று அழைக்கப்படும் அஸ்வகந்தாவும் அடங்கும்.

நாம் இதை சரியான முறையில் பயன்படுத்தவில்லை என்றால் பல்வேறு பாதிப்புகள் நமக்கு உண்டாகும். இனி அஸ்வகந்தா மூலிகையினால் ஏற்பட கூடிய பாதிப்புகளை அறிந்து கொள்ளலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இரத்தம் வடிதல்

இரத்தம் வடிதல்

"அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு" என்கிற பழமொழியை தான் இந்த மூலிகையும் நிரூபணம் செய்துள்ளது.

அளவுக்கு அதிகமாக அஸ்வகந்தா மூலிகையை நாம் எடுத்து கொண்டால் அவை உடலில் சில இடங்களில் இரத்த கசிவை ஏற்படுத்தும்.

விரைப்பு தன்மை

விரைப்பு தன்மை

அஸ்வகந்தா மூலிகையை ஆண்கள் அதிக அளவில் எடுத்து கொண்டால் நிச்சயம் பல்வேறு பாதிப்புகள் ஆண்களின் உடலில் ஏற்படும். அதில் முக்கியமானது விறைப்பு தன்மைதான். கூடவே தாம்பத்தியத்தில் அதிக நேரம் இவர்களால் செயல்படவும் முடியாது என ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

கல்லீரல் பாதிப்பு

கல்லீரல் பாதிப்பு

அஸ்வங்கதா ஒரு அற்புத மூலிகை தான். இருப்பினும் இதை சரியான அளவு எடுத்து கொள்ளலாம் இருந்தால் கல்லீரல் பாதிப்பு ஏற்படும். சில சமயங்களில் கல்லீரல் முழுவதுமாக அதன் செயல்திறனை இழக்கவும் நேரிடலாம்.

கர்ப்பிணிகள்

கர்ப்பிணிகள்

பெரும்பாலும் கர்ப்பமாக இருப்போருக்கு இந்த வகை மூலிகைகளை தர கூடாது. மீறினால், இதனால் கருக்கலைப்பு நேரலாம். மேலும், குழந்தைகளுக்கு இந்த வகை மூலிகைகளை தருவதை தவிர்க்கவும். ஏனெனில், இது பலவித பாதிப்புகளை சிறு வயதிலே அவர்களுக்கு உண்டாக்கி விடும்.

MOST READ: ஆண்கள் கருத்தடையை பற்றி கட்டாயம் மருத்துவர்களிடம் கேட்க வேண்டிய 9 கேள்விகள் இதோ!

ஒவ்வாமை

ஒவ்வாமை

தெரியாமல் கூட அஸ்வகந்தா மூலிகையை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டு விடாதீர்கள். இது உங்களுக்கு பல்வேறு ஆபத்தான நிலையை ஏற்படுத்தும். குறிப்பாக அலர்ஜி, சொரி, அரிப்பு, வீக்கம், வலி போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும்.

இரத்த அழுத்தம்

இரத்த அழுத்தம்

அஸ்வகந்தா மூலிகையை சீரான அளவில் உட்கொண்டால் நல்லது தான். ஆனால், இதுவே இவற்றை அதிக அளவில் உண்டால் இரத்த அழுத்தம் மிகவும் குறைந்து விடும். மேலும், சர்க்கரையின் அளவு மிக மிகவும் குறைய கூடும். இதுவும் நமக்கு ஆபத்தை தர கூடிய நிலைதான்.

வயிற்று புண்

வயிற்று புண்

பொதுவாகவே மூலிகைகளை அதிக அளவில் எடுத்து கொண்டால் வயிற்று சார்ந்த பிரச்சினைகள் வர கூடும். அதிலும் வீரியம் அதிகம் உள்ள இந்த அஸ்வகந்தாவை அதிக அளவில் சாப்பிட்டால் வாயு தொல்லை, வயிற்று புண், மலச்சிக்கல் போன்ற பக்க விளைவுகளை இது உண்டாக்கும். சிலருக்கு வயிற்று போக்கு, அடி வயிற்றில் வலி ஆகியவற்றையும் ஏற்படுத்தும்.

காய்ச்சல்

காய்ச்சல்

அஸ்வகந்தாவை அதிக அளவில் எடுத்து கொள்வோருக்கு காய்ச்சல், உடல் நல மாற்றங்கள் உண்டாகும். சிலருக்கு சோர்வு, மயக்க நிலை போன்றவையும் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. எதிர்ப்பு சக்தி மண்டலத்தையும் இந்த மூலிகை பாதிப்பை ஏற்படுத்தும்.

MOST READ: காலையில் தயிரை மாதுளையுடன் சேர்த்து சாப்பிட்டால் என்னென்ன மாற்றங்கள் உடலில் ஏற்படும் தெரியுமா?

எவ்வளவு சாப்பிடலாம்?

எவ்வளவு சாப்பிடலாம்?

அஸ்வகந்தா மூலிகையை சாப்பிடுவதற்கு முன் அதனை எவ்வளவு அளவு சாப்பிட வேண்டும் என்பதை தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

அஸ்வகந்தா பொடி அல்லது வேர் என்றால் 1 நாளைக்கு 1 ஸ்பூன் தான் சாப்பிட வேண்டும். மாத்திரைகள் என்றால் 1-6 கிராம் வரை உட்கொள்ளலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Side Effects Of Ashwagandha

Side Effects Of Ashwagandha
Story first published: Wednesday, February 20, 2019, 17:10 [IST]
Desktop Bottom Promotion