Latest Updates
-
ஐயங்கார் ஸ்டைல் பொரிச்ச ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா? -
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க...
தாம்பத்திய பிரச்சினைகளை தீர்க்க, தினமும் 1 ஸ்பூன் இந்த பொடியை தேனோடு சாப்பிடுங்க...
இன்றைய கால கட்டத்தில் தன்னை கவனித்து கொள்ள பலருக்கும் நேரம் போதவில்லை. வேலை..வேலை... என்று ஓட கூடிய பலர் கடைசி காலத்தில் தனிமையின் பிடியில் சிக்கி தவிக்கின்றனர். எவ்வளவு தான் காசு, பணம், அந்தஸ்து... இப்படி எக்கச்சக்கமாக இருந்தாலும் கடைசி வரைக்கும் நம் இன்ப துன்பங்களை பரிமாறி கொள்ள ஒருவராவது இருத்தல் வேண்டும். ஆனால்,இன்றைய நிலை அப்படி நிலை அப்படி இல்லை.

ஒரு வித ஈர்ப்பின் காரணமாக சேர்ந்து விட்டு, அந்த உறவின் ஈரம் காய்வதற்குள் முழுமையாக அந்த உறவு முறிந்து விடுகிறது. இதற்கு ஒரு முக்கிய காரணியாக தாம்பத்திய வாழ்க்கையும் உள்ளது. வேலை, பணம் சம்பாரிக்க வேண்டும், காரு வாங்கணும், வீடு வாங்கணும்...இது போன்ற ஆசைகளில் நம்மையே நாம் தொலைத்து விடுகின்றோம்.
இது போன்று தான் பலரின் தாம்பத்திய வாழ்வும் உள்ளது. இந்த நிலை உடலுறவின் மீது நாட்டத்தை ஏற்படுத்தாது, கூடுதலாகவே அவரவர் உடல் நலத்தையும் கவனித்து கொள்ள மாட்டீர்கள்.
இது போன்ற பல பிரச்சினைகளுக்கு தீர்வை தர ஒரு ஸ்பூன் திரிகடுகம் போதும். இதை எப்படி தம்பதியர்கள் பயன்படுத்த வேண்டும் என்பதையும், இதன் முழு பயன்பாட்டையும் இந்த பதிவில் அறிந்து கொள்ளலாம்.

நச்சுக்களை வெளியேற்ற
இந்த திரிகடுகு பொடி உடலில் பல நாட்களாக சேர்ந்துள்ள அழுக்குகளை வெளியேற்றி விடும். யாருக்கெல்லாம் செரிமான கோளாறு, மலச்சிக்கல் இருக்கிறதோ அவர்கள் இதனை தினமும் அரை ஸ்பூன் சாப்பிட்டு வந்தால் இந்த பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி தரும்.

எதிர்ப்பு சக்திக்கு
சாதாரண காய்ச்சல் வந்த கூட உங்களால் தங்கி கொள்ள முடியவில்லையா..? இது போன்ற நிலையில் இருந்து உங்களை காக்க திரிகடுகம் உள்ளது. வெள்ளை அணுக்களின் எண்ணிக்கையை அதிகரித்து நோய்களில் இருந்து காப்பாற்றும்.

அதிக ஆற்றல்
தம்பதிகள் அதிக ஆற்றலுடன் செயல்பட இந்த மூலிகை பொடி போதும். பலர் சிறப்பான தாம்பத்திய உணர்வை பெற முடியாமல் இருக்கின்றனர்.
திரிகடுகம் பொடியை அன்றாடம் தம்பதியர் சாப்பிட்டு வந்தால் நீண்ட ஆற்றலுடன் செயல்படலாம்.

ஆயுர்வேதமும் உடல் எடையும்
உடல் எடையை குறைக்க பல விதங்களில் நாம் முயற்சி செய்தலும் அதற்கு சரியான பலன் கிடைக்கவில்லையா.? உங்களின் ஆதங்கத்தை தீர்க்க திரிகடுக பொடி போதும்.
தினமும் 2 கிராம் அளவு இந்த பொடியை சாப்பிட்டு வந்தால் எளிதாக உடல் எடையை குறைக்கலாம்.

கல்லீரல் பிரச்சினைகளுக்கு
உடலின் பெரிய உறுப்பான கல்லீரலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற இந்த மூலிகை பயன்படுகிறது. மஞ்சள் காமாலை நோய்களை விரட்டி அடிக்க தினமும் சிறிதளவு திரிகடுகம் சாப்பிட்டு வாருங்கள். உங்களை நீண்ட ஆயுதலுடன் வாழ வைக்கும் தன்மை இந்த மூலிகையில் உள்ளதாம்.

கொலஸ்ட்ரால்
இரத்தத்தில் தங்கியுள்ள ஏராளமான கொலஸ்ட்ரால் உடலுக்கு நல்லது கிடையாது. குறிப்பாக LDL எனப்படும் கெட்ட கொலஸ்ட்ரால் அபாயகரமான தாக்கத்தை தரும்.
திரிகடுகம் மூலிகையை தினமும் அரை ஸ்பூன் அளவு சாப்பிட்டு வந்தால் கொலஸ்ட்ராலை நீக்கி விடும்.

தாம்பத்தியம் சிறக்க
தாம்பத்தியத்தில் நாட்டம் இல்லாமல் இருப்போருக்கு இந்த திரிகடுகம் வரப்பிரசாதமாக உள்ளது. இது இயற்கையாகவே தம்பதியருக்கு பாலுணர்வை தூண்டும் தன்மை கொண்டதாம்.
ஆதலால், சிறப்பான உடலுறவு கொள்ள திரிகடுகு பொடியை அன்றாடம் சாப்பிட்டு வாருங்கள்.

நுரையீரல் பிரச்சினைகளுக்கு
சுவாச கோளாறால் அவதிப்படும் பலருக்கும் திரிகடுகு சிறந்த மருந்தாக உள்ளது. 1 ஸ்பூன் திரிகடுகு பொடியுடன் 1 ஸ்பூன் தேன் கலந்து குடித்து வந்தால் சுவாச கோளாறுகள் குணமாகும். மேலும், நுரையீரலில் அடைந்துள்ள சளி முழுவதையும் வெளியேற்றி விடும்.

மூட்டு வலிகளுக்கு
இளம் வயதிலே பலருக்கும் இன்று மூட்டு வலி ஏற்படுகிறது. இதனை முழுவதுமாக குணப்படுத்த கூடிய ஆற்றல் திரிகடுகம் மூலிகைக்கு உள்ளது. அத்துடன் எலும்புகள் மற்றும் தசை பகுதியும் இந்த மூலிகையினால் உறுதி பெறும்.

ஜாக்கிறதை..!
மேற்சொன்ன நன்மைகளை இந்த மூலிகை தருகிறது என்பதற்காக இதனை அதிக அளவில் எடுத்து கொள்ள கூடாது. இந்த மூலிகையை அன்றாடம் 1 ஸ்பூன் அளவிற்கும் குறைவாக தான் உண்ண வேண்டும்.
அதாவது 5 கிராம் அளவு இந்த மூலிகையை தேன், பால் அல்லது வெது வெதுப்பான நீரில் கலந்து குடிக்கலாம். மேலும், இதை பற்றிய சந்தேகம் இருந்தால் உங்களின் மருத்துவரை அணுகுவது சிறந்தது.



Click it and Unblock the Notifications
