Just In
- 1 hr ago
இந்த நேரத்தில் உடலுறவு வைச்சுகிட்டா கர்ப்பமாவதற்கு 99% வாய்ப்பிருக்காம் தெரியுமா?
- 3 hrs ago
ஃபிட்டா இருக்கணுமா? அப்ப இத வாரத்துக்கு 6 நாள் ஃபாலோ பண்ணுங்க..
- 4 hrs ago
வைட்டமின் சி மற்றும் ஈ நிறைந்த உணவுகளை சாப்பிட்டால் உங்களுக்கு இந்த மோசமான நோய் வராதாம்...!
- 8 hrs ago
இன்றைய ராசிப்பலன் (21.01.2021): இன்று இந்த ராசிக்காரர்கள் எந்தவொரு அவசர முடிவையும் எடுக்கக்கூடாது…
Don't Miss
- Education
டான்செட் நுழைவுத் தேர்வு குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அண்ணா பல்கலை!
- Sports
அழுத்தம் கொடுத்த "சிலர்".. "அதிரடி மன்னன்" கேதார் ஜாதவை நீக்க தயக்கம் காட்டிய தோனி.. பரபர நிமிடங்கள்
- News
பாமக வந்தால் திமுக கூட்டணிக்கு நிச்சயம் குட்பைதான்... திருமாவளவன் திட்டவட்டம்
- Automobiles
டுவிட்டரை கையாள பணியாளர்களை நியமிக்கும் பிரபல கார் நிறுவனம்... எதற்காக இந்த பணியமர்வு தெரிஞ்சா வியந்துருவீங்க!
- Finance
கிடு கிடு ஏற்றத்தில் தங்கம்.. போகிற போக்கில் நிபுணர்கள் சொன்னதெல்லாம் நடந்திடும் போலிருக்கே..!
- Movies
மீனுக்குட்டி அன்ட் கன்னுக்குட்டி.. செம்ம க்யூட் போங்க.. அனிதாவை பார்த்து ஜொள்ளு விடும் ஃபேன்ஸ்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
இந்த செடியும் விதையும் பார்த்திருக்கீங்களா? இவ்ளோ அற்புதத்த செய்யும்...
கார்போகரிசி என்பது ஒரு செடி வகையைச் சேர்ந்த மூலிகை. குறிப்பாக இது ரத்தம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளையும் சருமத்தில் ஏற்படக்கூடிய நோய்களை வுகமாகத் தீர்க்கக் கூடிய ஆற்றல் உண்டு. இந்த செடியை நாம் நிறைய இடங்களில் பார்த்திருப்போம்.
ஆனால் இதன் மகத்துவம் தெரிவதில்லை. நாட்டு மருந்து கடைகளில் இதன் விதைகள் எளிதாகக் கிடைக்கின்றன. வாங்கிப் பயன்படுத்த முடியும். அந்த மூலிகையைப் பற்றிய முழு விவரங்களையும் பற்றி இந்த பகுதியில் தெரிந்து கொள்ளலாம்.

பிறப்பிடம்
கார்போகரிசி ஒரு செடி வகையைச் சேர்ந்தது. இது சீனா மற்றும் இந்தியாவைத் தான் பிறப்பிடமாகக் கொண்டது. இந்த செடி ஏறக்குறைய மூன்று அடி தூரம் வளரும் தன்மை கொண்டது. இது நல்ல செழிப்பான இடங்களில் வளரக்கூடிய தன்மை கொண்டது. அகல அகலமான இலைகள் கொண்டிருக்கும். கொத்து கொத்தாக வளரும்.
MOST READ: பென்சாயில் பெராக்சைடுனா என்ன? ஏன் இத கட்டாயம் வீட்ல வாங்கி வைக்கணும்?

எப்படி இருக்கும்?
நல்ல செழிப்பான இடங்களில் வளரக்கூடிய தன்மை கொண்டது. அகல அகலமான இலைகள் கொண்டிருக்கும். கொத்து கொத்தாக வளரும் இந்த செடியில் ஒவ்வொரு கிளையிலும் 8 முதல் 12 பூக்கள் வரை பூக்கும். இந்த பூக்கள் முதிர்ச்சியடைந்து காயாக மாறிவிடும். இந்த விதைகளில் இருந்து எண்ணெய்கள் எடுக்கலாம்.

மருத்துவ குணங்கள்
இந்த செடியில் உள்ள இலைகள், விதைகள்ஈ வேர் ஆகிய எல்லாமே மருத்துவ குணங்கள் நிறைந்திருக்கின்றன. இதை சில இடங்களில் விற்பனைக்காகவே பயிரடப்படுகின்றன. இந்த காய்கள் பழுத்து விதையாகி வெளிவரும். கருப்பு நிற விதைகள் கொண்டது. இதிலிருந்து ஒருவித வாசனை வெளிவரும். அதன்பின்பே இதை அறுவடை செய்வார்கள்.

வருமானம்
இந்த விதைகளை அறுவடை செய்து வெயிலில் காய வைக்க வேண்டும். ஒரு ஹெக்டேர் அளவு நிலத்திலேயே கிட்டதட்ட 2000 கிலோ விதைகள் கிடைக்கும். இதிலிருந்து எண்ணெய் கூட எடுப்பார்கள். வருடாந்திர செலவுகள் 30 ஆயிரம் ஆகும். ஆனால் கிட்டதட்ட ஒரு லட்சம் ரூபாய் வரை லாபம் கிடைக்கும்.

மருத்துவ பயன்கள்
தோல் வியாதிகளைக் குணப்படுத்துவதற்கு இந்த கார்போக அரிசி எண்ணெய் பயன்படும். உடலுக்குப் புத்துணர்ச்சியை அளிக்கக்கூடியது. இந்த கார்புாகரிசி செடியின் வேரும் பல நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுகிறது.
MOST READ: இந்த ஒரு கீரை போதும்... நீங்க அவதிப்படற இந்த 10 நோயையும் ஓடஓட விரட்டலாம்...

நோய் தீர்க்கும் மருந்து
வைரஸால் பாதிக்கப்படும் வயிற்றுப் போக்கு போன்றவற்றை குணப்படுத்த உதவுகிறது. வயிற்றுப் புண்கள், சருமப் புண்களை ஆற்றுவதற்குப் பயன்படுகிறது.

பழத்தின் நன்மைகள்
இந்த கார்போகரிசி செடியின் பழங்களின் மூலம் வாந்தி, மூலம், ரத்த சிவப்பணுக்களின் குறைபாட்டால் ஏற்படுகின்ற இரத்த சோகை, சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்கள் ஆகியவற்றைக் குணப்படுத்த உதவுகிறது.
MOST READ: ரமலான் நோன்பு இருக்கும்போது உடலில் என்னென்ன மாற்றங்கள் உண்டாகும் தெரியுமா? இத பாருங்க...

தலைமுடி
கார்போக அரிசியின் எண்ணெய் மற்றும் இலைகள் தலைமுடி வளர்ச்சியைத் தூண்டுவதற்குப் பயன்படுகிறது.

சிறுநீரகக் கோளாறுகள்
கார்போகரிசி வயிற்று சம்பந்தப்பட்ட பிரச்சினைகள், முதுகு வலி ஆகியவற்றைச் சரிசெய்வதோடு சிறுநீரகம் சம்பந்தப்பட்ட கோளாறுகளைச் சரிசெய்வதற்கு பயன்படுகிறது.

ஆண்மைத்தன்மை
கார்போகரிசி ஆண்மையை அதிகரிக்கச் செய்யவும் விந்துக்களின் உற்பத்தியை அதிகரிக்கச் செய்யவும் விறைப்புத் தன்மையை அதிகரிக்கவும் செய்கிறது. தாது விருத்தியை அதிகரிக்கச் செய்கிறது.
MOST READ: உங்க ஃபேவரட் ஹீரோயினோட வெயிட் குறைக்கிற சீக்ரட் தெரிஞ்சிக்கணுமா? இத படிங்க...

தோல் நோய்கள்
கார்போகரிசி, நீரடி முத்து, கஸ்தூரி மஞ்சள், கோரைக்கிழங்கு, சந்தனப் பொடி, அகில், கல்பாசி, வெட்டிவேர், குருவி வேர் ஆகியவற்றைச் சேர்த்து இடித்து சூரணமாகச் செய்து அதை குளிப்பதற்கு முன் உடலில் பூசிக்கொண்டு, அதை ஊறவிட்டு நன்றாகத் தேய்த்துக் குளித்தால் சருமத்தில் உள்ள நோய்கள், சொறி, சிரங்கு, சரும வடுக்கள் ஆகியவற்றைச் சரிசெய்யும். சருமத்தின் நிறம் அதிகரிக்கும்.