For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த மூலிகைய தினம் கொஞ்சூண்டு சாப்பிட்டீங்கனா அ முதல் ஃ வரை அத்தன நோயும் பறந்துடுமாம்...

|

பிரான்ஸ் நாட்டு உணவுகளை ருசித்திருப்பவர்கள் செர்வில் பற்றி அறிந்திருப்பார்கள். இது பார்ஸ்லி இனத்தை சேர்ந்த ஒரு மூலிகை. பச்சை நிறத்தில் காணப்படும்.

Chervil

இந்த இலைகள் ஒரு மெல்லிய மற்றும் அருமையான நறுமணத்தைக் கொண்டு சோம்பின் சுவையை ஒத்து இருக்கும். சாலட், சூப் போன்றவற்றில் மேலே இதனைத் தூவி உட்கொள்வதால் அவற்றின் சுவை அதிகரிக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எக்சிமாவிற்கு இதமளிக்கிறது

எக்சிமாவிற்கு இதமளிக்கிறது

வறண்ட மற்றும் எரிச்சலான சரும நிலையை எக்சிமா என்று கூறுவார். பெரும்பாலும் இதன் பாதிப்பால், சருமத்தில் வலி மற்றும் அரிப்பு இருக்கும். அதுமட்டுமில்லாமல் இந்த பாதிப்பு நீண்ட நாட்கள் நீடித்து நிலைக்கும் தன்மைக் கொண்டது. இந்த வகை சரும பாதிப்பு உடலின் எந்த ஒரு பகுதியையும் குறிப்பாக, முகம், கழுத்து, கை முட்டி, மணிக்கட்டு, முழங்கால், மற்றும் கால் மணிக்கட்டு போன்ற இடங்களைத் தாக்கலாம்.

அழற்சி எதிர்ப்பு பண்புகள் கொண்ட செர்வில், சருமத்தில் எக்சிமா பாதிப்பால் உண்டான அரிப்பு மற்றும் வீக்கத்தைப் போக்க உதவுகிறது. இந்த ,மூலிகையின் சாறு எடுத்து பாதிக்கபட்ட இடத்தில் தடவுவதால் அந்த இடம் நல்ல நிவாரணம் பெற முடிகிறது. செர்வில் இல்லை சாற்றுடன் க்ரீம் அல்லது லோஷன் சேர்த்தும் பயன்படுத்தலாம்.

MOST READ: எகிப்துல வாழ்க்கையோட எல்லா விஷயத்துக்கும் எந்த மூலிகைய பயன்படுத்தறாங்க தெரியுமா?

செரிமானத்திற்கு

செரிமானத்திற்கு

பிரான்ஸ் நாட்டவர்கள், இந்த மூலிகையை தங்கள் உணவின் ஒரு முக்கிய பகுதியாக மாற்றிய பெருமையைக் கொண்டவர்கள். இந்த அருமையான வாசனை பொருந்திய இலைகள், செரிமானதிற்கு சிறந்த முறையில் உதவுவதாக பல ஆண்டுகளாக அவர்கள் நம்புகின்றனர். குறைந்த கலோரி மற்றும் உயர் நார்ச்சத்து கொண்ட செர்வில், ஒரு வழக்கமான மற்றும் ஆரோக்கியமான குடல் செயல்பாடுகளுக்கு சிறந்த முறையில் உதவுகிறது. மேலும் சிக்கலான குடல் இயக்கத்திற்கு சிறந்த பலன் அளிக்கிறது.

ஊட்டச்சத்துகளின் ஆதாரம்

ஊட்டச்சத்துகளின் ஆதாரம்

இந்த மூலிகை காய வைத்துப் பயன்படுத்தப்படும்போது, கலோரிகள் குறைந்து காணப்படுகிறது மற்றும், கால்சியம், பொட்டாசியம், ஜின்க், மாங்கனீஸ், இரும்பு, மற்றும் மெக்னீசியம் போன்றவை அதிகம் உள்ளன. செடியில் இருந்து புதிதாகப் பறிக்கப்படும் இந்த இலைகளில் மேலே கூறிய ஊட்டச்சத்துகளுடன் வைடமின் பி 2 எனப்படும் ரிபோப்லேவின், நியாசின் - வைட்டமின் பி 3 , பைரிடாக்சின் - வைட்டமின் பி 4, மற்றும் தியாமின் - வைடமின் பி 1 என்ற ஊட்டச்சத்துகளின் ஆதாரமாக விளங்குகிறது.

அன்டி ஆக்சிடென்ட் நிறைந்தது

அன்டி ஆக்சிடென்ட் நிறைந்தது

வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் ஈ போன்ற அன்டி ஆக்சிடென்ட் இந்த மூலிகையில் அதிகம் உள்ளன, மேலும் செர்வில், லூத்தின் போன்ற பாலிபீனாலிக் ப்லேவனைடு அன்டி ஆக்சிடென்ட்களைத் தன்னிடம் கொண்டுள்ளது.

இது கண்பார்வை மற்றும் கண் ஆரோக்கியத்திற்கு நன்மைத் தரும், மேலும் அல்சைமர் பாதிப்பைக் குறைக்கும் திறன் கொண்ட அபிஜெனின் போன்ற கூறுகளைத் தன்வசம் கொண்டுள்ளது.

உயர் இரத்த அழுத்தம்

உயர் இரத்த அழுத்தம்

மாரடைப்பு, வாதம், மற்றும் இதர இதயம் தொடர்பான பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்க இரத்த அழுத்த அளவைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வது நல்லது. இப்படி இரத்த அழுத்த நிலையை பராமரிக்க ஒரு பாரம்பரிய தீர்வாக செர்வில் அமைகிறது.

MOST READ: பணக்கார குபேரனுக்கே பணக்கஷ்டம் வந்தபோது என்ன செய்தார் தெரியுமா? தெரிஞ்சிகங்க... நீங்களும் ட்ரை பண்ணு

ஒரு கிருமிநாசினி

ஒரு கிருமிநாசினி

உடல் ஆரோக்கியத்திற்கு நன்மைகள் அளிக்கும் அத்தியாவசிய எண்ணெய்களில் செர்வில் சேர்க்கப்படுகிறது. இப்படி ஒரு அத்தியாவசிய எண்ணெய். யுஜினால் , இதனை கிராம்பு எண்ணெய் என்றும் கூறுவர்.

பற்களுக்கான சிகிச்சைகளில் இந்த கிராம்பு எண்ணெய்யை பல் மருத்துவர்கள் பெரும்பாலும் பயன்படுத்தி வருகின்றனர். இதற்குக் காரணம் இந்த எண்ணெய்யில் உள்ள கிருமிநாசினி மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளாகும். இதன் காரணமாக வலி எளிதில் குறைகிறது. சருமத்தில் உண்டான தடிப்பு, சிறு காயம் மற்றும் பூச்சிக் கடி போன்றவற்றை சரி செய்ய இந்த எண்ணெய்ப் பயன்படுகிறது.

மாதவிடாய் அறிகுறிகளைக் குறைக்கிறது

மாதவிடாய் அறிகுறிகளைக் குறைக்கிறது

மாதவிடாய் காலத்தை சௌகரியமாகக் கடந்து வர செர்வில் உதவுகிறது. மாதவிடாய் வலி மற்றும் வீக்கம் போன்றவற்றில் இந்த மூலிகை பாரம்பரியமாக பல காலங்களாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அசௌகரியத்தை உண்டாக்கும் நீர் தேக்கம் மற்றும் வயிற்று உப்புசம் போன்ற பாதிப்புகளை செர்விலில் இருக்கும் நீர் பிரிப்புத் தன்மை எதிர்த்துப் போராடி ஒரு சௌகரியமான மாதவிடாய் காலத்தை வழங்குகிறது.

சளி நீக்க மருந்து

சளி நீக்க மருந்து

குளிர்காலங்களில் மற்றும் மழைக் காலங்களில் சளி பிடித்துக் கொள்வது ஒரு இயல்பான காரியமாகும். சளித் தொந்தரவு இருக்கும்போது, சோர்வு, மூக்கடைப்பு , தொண்டை வறட்சி போன்ற சில அறிகுறிகள் உண்டாகும். மேலும் இருமல் போன்ற காரணத்தினால் இரவு நேர உறக்கம் தடைபடும். செர்வில் ஒரு சிறந்த சளி நீக்க மருந்தாக செயல்புரிந்து, இருமல் மற்றும் சளி தொடர்பான அறிகுறிகளைக் குறைக்க உதவுகிறது.

தாய்ப்பால் மறக்கடிக்க நினைக்கும் தாய்மார்கள்

தாய்ப்பால் மறக்கடிக்க நினைக்கும் தாய்மார்கள்

ஒரு குழந்தைக்கு தாய்பால் நிறுத்தப் பழகும் நேரத்தில், தாய்மார்கள் தங்கள் உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றம் மற்றும் சவால்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை உண்டாகும். ஆகவே பாரம்பரிய மருத்துவர்கள் இவற்றிற்கான மூலிகைகளைப் பரிந்துரைக்கும்போது செர்விலையும் இணைத்துக் கொள்கின்றனர் . இதனால் இயற்கையான முறையில் எந்த ஒரு சிக்கலும் இல்லாமல் தாய்பால் சுரப்பு குறைந்து பால் கட்டு தடுக்கப்பட்டு இதனால் ஏற்படும் அசௌகரியங்கள் குறைக்கப்படுகிறது.

MOST READ: கல்லீரல்ல கொழுப்பு தேங்கியிருக்கா?... புளியம்பழத்த இப்படி சாப்பிடுங்க... உடனே கரைஞ்சிடும்...

முகத்திற்கான சிகிச்சை

முகத்திற்கான சிகிச்சை

பிரெஷ் செர்வில் இலைகளைப் பயன்படுத்தி உங்கள் சருமத்தை பொலிவாகவும் மென்மையாகவும் வைத்துக் கொள்ள முடியும். பல்வேறு சக்திமிக்க வைட்டமின் மற்றும் அன்டி ஆக்சிடென்ட் நிறைந்த செர்வில், சருமத்தில் ஏற்படும் வயது முதிர்விற்கான அறிகுறிகளைக் குறைத்து, புதிய சரும அணுக்கள் வளர்ச்சிக்கு ஊக்குவிக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Health Benefits of Chervil

Chervil scientifically known as Anthriscus cerefolium sometimes called French Parsley, Sweet Cicely, cicily, garden chervil, gourmet’s parsley, Rich Man’s Parsley, Beaked Parsley and Salad Chervil is a delicate annual herb related to parsley.
Story first published: Thursday, June 20, 2019, 17:40 [IST]
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more