தேனைப் பற்றி இதுவரை உங்களுக்குத் தெரியாத ரகசிய உண்மைகள்

Posted By: BRINDA JEEVA
Subscribe to Boldsky

மலர்களின் மகரந்தத்தில் இனிமையான தேன் இருக்கிறது . தேனீ இந்த தேனை தன் வயிற்றில் உள்ள பையில் நிரப்பி தேன் கூட்டில் சேமித்து வைக்கிறது . மகரந்தத் தேனில் 50% தேன் இருக்கிறது .தேனீ அந்த நீரை தன் இறக்கைகளால் விசிறி தன் வயிற்றில் இருந்து சுரக்கும் அமிலத்துடன் கலந்து தேனை நீண்ட காலங்களுக்குக் கெடாத தன்மையுடையதாக மாற்றி சேகரிக்கிறது.

health

நவீன தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள்- பூர்வ எகிப்திய கல்லறைகளை அகற்றும்பொழுது கல்லறையின் கலை நூல்களில் எதிர்பாராத விதத்தில் காணப்பட்டது தேன் பானைகள். அந்த தேன் பல ஆயிரம் ஆண்டுகளாக பாதுகாக்கபட்டவை என்றும் அது எந்த தன்மையும் மாறாமல் இருப்பதையும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மறைந்திருக்கும் அறிவியல்

மறைந்திருக்கும் அறிவியல்

அதன் அமிலத்தன்மை, தண்ணீர் இல்லாமை மற்றும் தேனில் உள்ள ஹைட்ரஜன் பெராக்சைடு தன்மை போன்றவற்றின் சிறந்த கலவையே தேனை பல நூறு வருடங்களுக்குக் கொடாமலும் மருத்துவத் தன்மை நிறைத்ததாகவும் வைத்திருக்கிறது என ஆயு்வுகள் குறிப்பிடுகின்றன. இத்தகையை சிறப்புத்தன்மை கொண்ட தேனை காலவரையின்றி நம்மால் பயன்படுத்த முடியும்.

காரணங்கள்

காரணங்கள்

சுத்தமான தேன் எளிதில் செரிக்க கூடியது. அதிக சத்துக்கள் நிறைந்தது. தேனின் இரசாயனக் கலவை அதன் சுவை அதன் காலவரையின்றி பயன்படுத்தும் தன்மை மற்றும் அதன் மருத்துவ குணங்கள். இவை அனைத்துமே நம் முன்னோர்களால் பல நூற்றாண்டுகளுக்கு முன் கண்டறியப்பட்டுள்ளது. அதனால் தான் இயற்கை மற்றும் சித்த மருத்துவத்தின் தேன் மிக முதன்மையான இடத்தைப் பெற்றிருக்கிறது.

தேனின் தன்மை

தேனின் தன்மை

தேன் இயற்கையாகவே அமிலத்தன்மை உடையது . இது சுமார் 3 யில் 4.5 வரை பி.ஹெச்(pH) அளவு உள்ளது. தோராயமாக அந்த அமிலம் அங்கு வளர விரும்பும் எந்த நுண்ணுயிரையும் கொன்றுவிடும். தேன் அதன் இயற்கை வடிவத்தில் மிகவும் குறைந்த ஈரப்பதம் உடையது. மிக சில பாக்டீரியாக்கள் அல்லது நுண்ணுயிர்கள் இதுபோன்ற சூழலில் வாழ முடியும். அவையும் எளிதில் இறந்துவிடும்.

மருத்துவ குணங்கள்

மருத்துவ குணங்கள்

தேன் நூற்றாண்டுகளாக மருத்துவ சிகிச்சைகளில் பயன்படுத்தப்படுகிறது. இது மிகவும் இறுக்கமான நிலையில் இருப்பதால், எந்தவிதமான நுண்ணூயிர் வளர்ச்சியையும் நிராகரிக்கிறது, ஹைட்ரஜன் பெராக்சைடைக் கொண்டிருக்கிறது, இது காயங்களுக்கும் தொற்றுக்கும் எதிரான சரியான தடையை உருவாக்குகிறது. தேன் காயம் அல்லது தீக்காயத்தை மூடுவதற்கு பயன்படுத்தப்பட்டது. பண்டைய காலங்களில் மூலிகை மருத்துவத்தில் தேனை தான் அதிகம் பயன்படுத்தினர். கொடுக்கப்படும் மருந்தை உடலுக்கு ஏற்றவாறு மாற்றியமைப்பதில் தேனின் பங்கு அதிகம். இதனால்தான் தேனுடன் மற்ற மருந்தைச் சாப்பிட கொடுக்கிறார்கள் .

மருத்துவ நோக்கங்களுக்காக தேனை சுமேரியனர்கள் பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பாக பயன்படுத்தினர் என்பதற்கு குறிப்புக்கள் ஆராச்சியாளர்களால் கண்டறியப்பட்டுள்ளது. பூர்வ எகிப்தியர்கள் வழக்கமாக மருத்துவதில் தேனை உபயோகித்து, தோல் மற்றும் கண் நோய்களைப் பரிசோதிப்பதற்காகக் களிம்புகள் தயாரித்தனர். "தெர்மா சயின்சஸ்", ஒரு மருத்துவ சாதன நிறுவனம், உலகெங்கிலும் உள்ள மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படும் தேன் மூலம் மூடப்பட்டிருக்கும் "மெடிஹோனி"யை விற்பனை செய்து வருகிறது.

இத்தகைய அழியாத் தன்மையுடைய அமிர்தமான தேனை நாமும் பல நூறு ஆண்டுகள் பாதுகாக்க வேண்டுமானால் , தேன் நிறைந்த ஜாடியை இறுக்கமாக மூடி அலமாறியில் வைத்தாலே போதுமானது. இயற்கையையும் அதை சார்ந்த உயிரினங்களையும் பேணிப் பாதுகாக்க வேண்டும் என்ற உண்மையையும் காலம் காலமாக தேனும் தேனிக்களும் நமக்கு வலியுறுத்திக்கொண்டே இருக்கின்றன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

The Science Behind Honey’s Eternal Shelf Life

Honey is also naturally extremely acidic. “It has a pH that falls between 3 and 4.5, approximately.
Story first published: Monday, April 16, 2018, 14:20 [IST]