Latest Updates
-
இந்த 4 ராசிக்காரங்க காதலில் அதிர்ஷ்டமே இல்லாதவர்களாம் - இவங்க எதிர்பார்க்கும் எதுவுமே நடக்காதாம் -
1 கப் பச்சை பயறு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இத பசங்களுக்கு செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
ஜப்பானில் 90 லட்சம் வீடுகளில் ஒருவர் கூட வசிக்காத வினோதம் - ஆடம்பர வீடுகள் 'பேய் வீடுகளாக' மாற காரணம் என்ன? -
உடம்பில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? அப்ப இந்த 5 உணவுகளை அதிகமா சாப்பிடுங்க.. -
மலேசியா ஸ்பெஷல் முட்டை சம்பல் ரெசிபி - 4 முட்டை இருந்தா போதும் - தரமான சைடிஷ் ரெடி! -
15000 கோடி முகேஷ் அம்பானி வீட்டை விட பெரிய வீடு இந்தியாவிலுள்ள இந்த வீடுதானாம் - இந்த வீடு யாருடையது தெரியுமா? -
October Matha Rasipalan 2026: அக்டோபர் மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமானதா இருக்கப்போகுது! -
இந்த கஞ்சியை வாரத்துக்கு 3 முறை செஞ்சு குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்துல குறையும்.. -
செப்டம்பர் 24, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க நினைச்சதெல்லாம் நடக்கபோகுதாம் - சந்தோஷமா இருங்க -
அக்டோபரில் நடக்கும் குரு நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது!
நயன்தாரா கஷாயம் பத்தி கேள்விப்பட்டிருக்கீங்களா? அதோட ஸ்பெஷல் என்ன தெரியுமா?
நித்திய கல்யாணி மலரைப் பற்றிய சுவாரஸ்யமான விஷயம் ஒன்றும் அதனுடைய மருத்துவ குணங்கள் பற்றியும் இங்கு குறிப்பிட்டுள்ளோம்.
காமெடிக்கெல்லாம் சொல்லலங்க. நிஜமாவே நயன்தாராங்கிற பேர்ல ஒரு மலர் இருக்கு. இது ஒன்றும் அதிசய மலரெல்லாம் கிடையாது. நாம் எல்லோருமே இந்த பூவைப் பார்த்திருப்போம். ஆனால் இதற்கு இப்படியொரு பேர் இருக்குன்னு நமக்குத் தெரியாது அவ்வளவு தான்.

அந்த பூ எது என்று பார்த்தால் நீங்களே வியந்து போவீர்கள். அட இதுதானா என்று. பாருங்க. ஆனா அப்படியே ஷாக் ஆகி நின்னுடாதீங்க. மேலும் தொடர்ந்து படிங்க. அந்த பூவோட மருத்துவ குணங்களைப் படித்து, பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

நித்திய கல்யாணி
அட ஆமாங்க! நம்ம நித்திய கல்யாணி மலருக்குத் தான் நயன்தாரான்னு இன்னொரு பேரும் இருக்கும். இந்த மலரை நாம் பெரிதாகக் கண்டு கொள்வதே இல்லை. காரணம். இதிலிருந்து வரும் மணம் நம்மைக் கவர்வதில்லை. மூக்கைப் பொத்திக் கொள்ளவே செய்யும். அதனால் தான் இதை நாம் கண்டு கொள்வதில்லை. ஆனால் இதற்கு ஏராளமான மருத்துவ குணங்கள் உண்டு. தெரிந்தால் இந்த செடியை எங்கு பார்த்தாலும் விடவே மாட்டீர்கள். வாருங்கள் தெரிந்து கொள்வோம்.

வேறு பெயர்கள்
இந்த நித்திய கல்யாணி மலருக்கு நித்திய கல்யாணி, சுடுகாட்டு மல்லி, நயன்தாரா, சதபுஷ்பி என்று பல பெயர்கள் உண்டு.

நன்மைகள்
இது பல்வேறு மருத்துவ குணங்களைக் கொண்டது. குறிப்பாக, கீழ்வரும் நோய்களைத் தீர்க்கக் கூடியது. அவை,
1. புற்றுநோய்
2. ரத்த அழுத்தம்
3. மலச்சிக்கல், எரிச்சல்
4. பல் பிரச்சினை
5. புண்கள் ஆற
6. விஷக்கடிக்கு
என பல வகைகளில் மருந்தாகப் பயன்படுகிறது. அவை செயல்படும் விதம் பற்றி இங்கே பார்ப்போம்.

1. புற்றுநோய்
நித்திய கல்யாணி செடியில் வெள்ளை மற்றும் பிங்க் என இரண்டு நிறங்கள் உண்டு. இதில் ஏதாவது ஒருவகையான மலரை 10 எண்ணிக்கையில் எடுத்துக் கொண்டு, அதனுடைய காம்புகளைக் கிள்ளி வீசிவிட வேண்டும். இந்த மலரை ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு, அதனுடன் சிறிதளவு பனங்கற்கண்டு, சீரகம், மஞ்சள். மிளகு ஆகியவற்றைச் சேர்த்து நன்கு கொதிக்க வைத்து கஷாயம் செய்து, காலை, மாலை என இரண்டு வேளையும் 100 மில்லி அளவுக்கு குடித்து வாருங்கள். கீமோதெரிபி எடுத்துக் கொள்ளும் புற்றுநோயாளிகளுக்குக் கூட இது நல்லது. புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுத்து, அது பரவாமலும் காக்கிறது.

2. ரத்த அழுத்தம்
நயன்தாரா பூவை 5 எண்ணிக்கையில் எடுத்துக் கொள்ளுங்கள். அதனுடைய இலை 5, வேர் ஒரு 5 கிராம் என்ற அளவில் எடுத்துக் கொண்டு, அதனுடன் 5 மிளகு, சிறிது சீரகம் ஆகியவற்றைச் சேர்த்து கொதிக்க வைத்து, கசாயமாக்கி விடுங்கள். இது சர்க்கரை நோயையும் கட்டுப்படுத்தும். உடல் உள்ளுறுப்புகளை ஆரோக்கியமாக வைத்திருக்கும். அதோடு ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்கும்.

3. மலச்சிக்கல்
சிலருக்கு மலம் கழித்தலில் சிக்கல் இருக்கும். குறிப்பாக, ஆசன வாயில் எரிச்சலுடனோ ரத்தமோ வந்தால், இந்த நயன்தாரா கஷாயம் மிகப் பயனுள்ளதாக இருக்கும். குறிப்பாக, சிலருக்கு ஆசனவாயைச் சுற்றி கொப்புளங்களும் உண்டாகியிருக்கும். அப்படி இருப்பவர்கள் இந்த கஷாயத்தைக் குடிக்கலாம். இதை ஆறவைத்து ஆசனவாயைக் கழுவவும் பயன்படுத்தலாம். வெளிப்புண்களையும் இது ஆற்றும்.

4. பல் பிரச்சினைகள்
இந்த நயன்தாரா என்னும் நித்தியகல்யாணியின் வேரை சிறிதளவு எடுத்துக் கொண்டு, அதை இரண்டு டம்ளர் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து, காலை, மாலை இரண்டு வேளையும் சுமார் 50 மில்லி முதல் 100 மில்லி வரையிலும் குஎத்து வரலாம். இந்த நீரை ஆறவைத்து வாய் கொப்பளிக்கப் பயன்படுத்தலாம். இதனால் பல் ஆட்டம், ஈறு வீக்கம், ரத்தக்கசிவு, பல் வலி ஆகியவை சரியாகும்.

5. புண்
உடலில் உண்டாகின்ற எந்த வகையான புண்ணாக இருந்தாலும் நித்திய கல்யாணி என்னும் நயன்தாரா இலை தான் சிறந்த மருந்து. இதனுடைய இலைகளை நன்கு அரைத்து தேங்காய் எண்ணெயில் கலந்து புண்களின் மீது தடவி வர ஆறாத புண்களும் ஆறும்.

6. விஷக்கடி
தேள், பூரான், தேனி போன்ற விஷயக்கடிகள் தாக்கி விஷம் ஏறிவிட்டாலும் இந்த நித்திய கல்யாணி இலையை அரைத்து பற்று போடலாம். உள்ளுக்குள்ளும் குடிக்கலாம். மன உளைச்சல், தூக்கமின்மையைக் கூட இது சரி செய்யும்.

குறிப்பு
இந்த கஷாயம் சிலருக்கு ஆரம்பத்தில் வாந்தி, தலைசுற்றல் ஆகியவற்றை ஏற்படுத்தும். அவர்கள் முதலில் சிறிதளவு சாப்பிட்டு, பரிசோதித்துப் பார்த்து விட்டு பயன்படுத்தலாம். அதேபோல இரண்டு நிறங்களில் உள்ள பூக்களையுமே பயன்படுத்தலாம்.



Click it and Unblock the Notifications
