Latest Updates
-
குளிர்காலத்தில் சருமம் அதிகம் வறண்டு போகுதா? அப்ப இந்த ஃபேஸ் பேக்குகளை அடிக்கடி போடுங்க.. -
வாஸ்து படி மாலை நேரத்தில் இந்த செயல்களை செய்வது உங்கள் வீட்டின் அதிர்ஷ்டத்தை வெளியே தள்ளுமாம் - ஜாக்கிரதை -
18 ஆண்டுகள் கழித்து நிகழும் கேது-செவ்வாய் சேர்க்கை: நாளை முதல் இந்த 5 ராசிக்காரங்க உஷார்.. -
இரயில்களுக்கும் Retirement இருக்காம் - ஓய்வு பெற்ற பிறகு இரயில்களை என்ன செய்வார்கள் தெரியுமா? -
ஆந்திரா ஸ்பெஷல் பாலக் பச்சடி - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. ருசியானதும் சத்தானதும் கூட.. -
குளிப்பதற்கு சிறந்தது குளிர்ந்த நீரா? வெந்நீரா? உடலில் முதலில் எந்தப் பகுதியில் தண்ணீர் ஊற்ற வேண்டும்? -
முட்டையும், காளானும் இருந்தால் இந்த மாதிரி வித்தியாசமா ஆம்லெட் செஞ்சு பாருங்க - ஆரோக்கியமா, டேஸ்ட்டா இருக்கும் -
நவம்பர் 12-ல் நிகழும் குரு-செவ்வாய் சேர்க்கை: இந்த 3 ராசிக்கு புதிய வருமான வழிகள் உருவாகும்! -
இந்தியர்களே நுழைய முடியாத இந்தியாவிற்குள் இருக்கும் கிராமம் - இது எந்த மாநிலத்தில் இருக்கு தெரியுமா? -
பச்சை பயறு தோசையும், இஞ்சி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க..
வைரம் பாய்ஞ்ச உடம்பு வேணுமா? ஒரு நாளைக்கு எவ்வளவு மஞ்சள் எப்படி சாப்பிட வேண்டும்?
ஒரு நாளைக்கு எவ்வளவு அளவில் மஞ்சளை நம்முடைய உணவில் சேர்த்துக் கொள்ளலாம் என்று இங்கே விளக்கப்பட்டுள்ளது. அதை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
கிழங்கு வகையைச் சேர்ந்த மஞ்சளில் ஏராளமான அளவு ஊட்டச்சத்துக்களும் ஆரோக்கிய நன்மைகளும் அடங்கியிருக்கின்றன என்பது நம் எல்லோருக்குமே தெரிந்த விஷயம் தான். அதில் தொற்றுக்கள் நீங்குவதற்கான பல்வேறு உட்பொருள்கள இருக்கின்றன.

இது நோய்த் தொற்றுக்களை எதிர்த்துப் போராடுகின்ற ஆற்றல் கொண்டதாக இருக்கிறது. அதனால் சமையலில் மட்டும் அல்லாமல், பால், காபி, டீ, சூப், ஸ்மூத்தி, ஷேக்ஸ் என பல்வேறு வகைகளில் அதைப் பயன்படுத்துகின்றனர். தற்போது மஞ்சளை அடிப்படையாகக் கொண்டே தயாரிக்கப்பட்ட காப்சியூல்கள் கடைகளில் கிடைக்கின்றன.

எது ஆரோக்கியம்
மஞ்சள் உடலுக்கு நல்லது என்றாலும் எப்படி எடுத்துக் கொண்டால் அதிக பலன்கள் இருக்கும் என்பது தெரிந்து கொண்டு அதன்படி பயன்படுத்துவது தானே புத்திசாலித்தனம்.
பாலில் மஞ்சள் போட்டு குடிப்பது அதிக பலன்களைத் தருமா? அல்லது காப்சியூல்கள் வடிவில் சாப்பிடுவது நல்லதா அலல்து உணவில் சேர்த்து சமைத்து சாப்பிடுவது நல்லதா என்று ஆராய்ந்து பார்க்க வேண்டியது மிக அவசியம்.

என்ன இருக்கிறது அதில்?
மஞ்சளில் கர்குமின் என்னும் உட்பொருள் அடங்கியிருக்கிறது. அதில் தான் அந்த சூப்பர் பவர் இருக்கிறது. இதுவே நீங்கள் மஞ்சளை காப்சியூல்களாக எடுத்துக் கொள்கிறீர்கள் என்றால், அதில் குர்குமினின் அளவு எவ்வளவு இருக்கிறது என்பதை கவனிக்க வேண்டியது அவசியம்.

எவ்வளவு தேவை?
குர்குமினாய்டுஸ் என்பது மஞ்சளில் இருக்கின்ற மிகச்சிறிய அளவேயாகும். மஞ்சளில் அதிக அளவில் இன்பிளமேட்ரி எதிர்ப்புப் பொருள் இருக்கிறது. அது இந்த குர்குமினுக்குள் தான் அடங்கியிருக்கிறது. இந்த குர்குமின் 500 முதல் 1000 மில்லி கிராம் வரைக்கும் நமக்குத் தேவைப்படுகிறது.

ஒரு ஸ்பூன் மஞ்சளில்?
ஒரு ஸ்பூன் மஞ்சளில் கிட்டதட்ட 200 மில்லி கிராம் அளவு குர்குமின் நிறைந்திருக்கிறது. அதை மனதில் வைத்துக் கொண்டு ஒரு நாளைக்கு எவ்வளவு தேவையோ அந்த அளவுக்கு எடுத்துக் கொண்டீர்களானால் நல்லது.

எப்படி சாப்பிடலாம்?
அதற்கான வெறுமனே மஞ்சளை பொடியாகவோ கிழங்காகவோ அல்லது ஏதாவது உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்துக் கொள்ள வேண்டாம். வெவ்வேறு வகையிலாக வகைகளில் மஞ்சள் கலந்திருக்கும் பொருள்களை உணவாகவும் மருந்தாகவும் எடுத்துக் கொள்ளலாம்.

காபி (ம) ஸ்மூத்தி
உணவில் மசாலாகவும் சேர்த்து தினசரி உணவில் கட்டாயமாக்கிக் கொள்ளுங்கள்.
நீங்கள் குடிக்கும் காபி மற்றும் ஸ்மூத்திகளில் கூட மஞ்சளை சேர்த்து சாப்பிடலாம்.

எவ்வளவு சாப்பிட வேண்டும்?
என்னதான் ஆரோக்கியமான விஷயமாக இருந்தாலும் எவ்வளவு சாப்பிட வேண்டும் என்ற வரைமுறை இருக்கிறது அல்லவா? அதை மனதில் கொள்வது மஞ்சளுக்கு மட்டுமல்ல, எந்த உணவாக இருந்தாலும் அவசியம்.
ஒரு நாளைக்கு 500 மில்லி கிராம் குர்குமினாய்டுகள் டோஸ் அளவுக்கு எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது. அது உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். எதிர் நோய்த் தொற்றுக்கள், நோய் எதிர்ப்புத் தன்மைகள் உடலில் அதிகரித்து உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

எதோடு சேர்த்து சாப்பிடலாம்?
கருமிளகுடன் மஞ்சளைச் சேர்த்து சாப்பிடுவது இன்னும் கூடுதல் பலன்களைக் கொடுக்கும். மஞ்சளுடன் மிளகைச் சேர்த்துச் சாப்பிடுவதனால், கூடுதல் ஸ்டாமினாவும் உடலில் கூடுதல் ஆற்றலும் திறனும் கூடியிருக்கும்.



Click it and Unblock the Notifications
