For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வெள்ளை அணுக்களை அதிகரிக்க நம்ம வீட்டிலேயே இருக்க கூடிய இந்த மூலிகைகள் போதும்...!

|

நமது உடலுக்கு இருவித அணுக்கள் மிக முக்கியமானவை. ஒன்று ரத்த சிவப்பு அணுக்கள், இன்னொன்று ரத்த வெள்ளை அணுக்கள். இவற்றின் எண்ணிக்கை குறைந்தால் பலவித பாதிப்புகள் நமக்கு ஏற்பட கூடும். இந்த ரத்த அணுக்களின் எண்ணிக்கை குறைய குறைய நமது ஆயுள் குறைகிறது என அர்த்தம். நமது ஆயுளை அதிகரிக்கவும், நோய்கள் இல்லாமலும் வாழ இந்த ரத்த அணுக்கள் மிக அவசியம்.

வெள்ளை அணுக்களை அதிகரிக்க நம்ம வீட்டிலையே இருக்க கூடிய இந்த மூலிகைகள் போதும்..!

இதில் நோய் எதிர்ப்பு சக்தியை இரட்டிப்பாக்க கூடிய தன்மை இந்த வெள்ளை அணுக்களுக்கு தான் உள்ளது. உங்களை எந்த நோய்களும் அண்டாமல் வைத்து கொள்ள வெள்ளை ரத்த அணுக்களை அதிகரித்தாலே போதும். வெள்ளை ரத்த அணுக்களை உயர்த்த பலவகையான மூலிகை வைத்தியங்கள் உள்ளன. எப்படி இந்த வெள்ளை ரத்த அணுக்களை அதிகரிக்கலாம் என்பதை இனி பார்ப்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அணுக்களும் உடலும்..!

அணுக்களும் உடலும்..!

நமது உடலானது ரத்த அணுக்களால் உருவானது. நமது உடலின் முழு இயக்கத்தையும் இந்த ரத்த அணுக்கள் தான் நிர்ணயிக்கின்றன. இவை எண்ணிக்கையில் அதிகரித்தால் நமது உடலுக்கு நல்லதே. அணுக்கள் குறைந்தால் அவற்றை எளிதாக உயர்த்த இயற்கை மூலிகை முறைகள் உள்ளன.

அதிமதுரம்

அதிமதுரம்

வெள்ளை ரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க கூடிய ஆற்றல் இந்த அற்புத மூலிகைக்கு உள்ளதாம். இவை எதிர்ப்பு சக்தி மண்டலத்தை வலுபடுத்தி நோய்களை தடுத்து நிறுத்துகிறது. இதற்கு காரணம் அதிமதுரத்தில் உள்ள மருத்துவ குணம் தான். வெள்ளை ரத்த அணுக்களை அதிகரிப்பதோடு உடல் வீக்கங்களையும் சேர்த்தே குறைக்குமாம்.

ஓரிகானோ

ஓரிகானோ

இந்த மூலிகையை பலவித சமையல் குறிப்புகளிலும் நாம் பயன்படுத்துவதுண்டு. இந்த மூலிகையில் அதிக ஆற்றல் உள்ளதாம். உணவில் சேர்த்து கொண்டால் வெள்ளை அணுக்கள் அதிகரித்து உடல் வலு அதிகரிக்க கூடும். மேலும், உடலில் சேர்ந்துள்ள ஒட்டுண்ணிகளை இவை அழித்து விடும் ஆற்றல் கொண்டதாம்.

ஓமம்

ஓமம்

பலவித மருத்துவ குணங்கள் இந்த ஓமத்தில் ஒளிந்துள்ளன. தொற்றுகளினால் ஏற்பட கூடிய நோய்களை இந்த ஓமம் தடுத்து நிறுத்தும். இதிலுள்ள ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் வெள்ளை ரத்த அணுக்களை அதிகரித்து நோய்கள் ஏற்படாமல் பார்த்து கொள்கிறது.

MOST READ: தினமும் 1 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சாப்பிடுவதால் உடலில் ஏற்பட கூடிய மாற்றங்கள் என்னென்ன..?

பப்பாளி இலை

பப்பாளி இலை

பப்பாளி இலையில் வெள்ளை ரத்த அணுக்களை அதிகரிக்க கூடிய தன்மை நிறைந்துள்ளதாம். கை நிறைய பப்பாளி இலையை எடுத்து கொண்டு நன்கு அரைத்து கொள்ளவும். பிறகு இதனுடன் சிறிது நீர் சேர்த்து வடிகட்டி கொண்டு கொண்டு, 1 ஸ்பூன் அளவு குடிக்கலாம். இதனுடன் தேனும் சேர்த்து, கலந்து குடிக்கலாம்.

கிரீன் டீ

கிரீன் டீ

தினமும் வெறும் டீ அல்லது காபி குடிக்கும் பழக்கம் இன்னும் பலரிடம் அப்படியே தான் இருக்கிறது. இந்த பழக்கத்தில் சின்ன சின்ன மாற்றங்கள் செய்தாலே போதுமானது. வெறும் டீயிற்கு பதிலாக கிரீன் டீ குடித்து வந்தால் இவற்றில் உள்ள ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் வெள்ளை ரத்த அணுக்களை அதிகரித்து நோய் கிருமிகளை அழித்து விடும்.

பூண்டு

பூண்டு

எதிர்ப்பு சக்தி குறைவு உள்ளவர்களுக்கு இந்த எளிய மருந்து ஒன்றே போதும். அதாவது, பூண்டை உணவில் சேர்த்து கொண்டாலோ அல்லது தேனில் கலந்து சாப்பிட்டால் வெள்ளை ரத்த அணுக்கள் அதிகரிக்க கூடும். இவ்வாறு செய்து வந்தால் பூண்டில் உள்ள ஆயுர்வேத தன்மை உடல் முழுக்க நிரம்பி வெள்ளை அணுக்களை அதிக அளவில் உற்பத்தி செய்ய கூடும்.

இஞ்சி

இஞ்சி

நமது வீட்டில் இருக்க கூடிய மூலிகை தன்மை வாய்ந்த உணவுகளில் இந்த இஞ்சி தான் முதன்மையான இடத்தில் உள்ளது. நீரை கொதிக்க விட்டு அதில் ஒன்று துண்டு இஞ்சியை நசுக்கி போட்டு, 5 நிமிடம் கழித்து வடிகட்டி கொண்டு எலுமிச்சை சாறு, தேன் கலந்து குடிக்கலாம். இவ்வாறு தினமும் செய்து வந்தால் வெள்ளை ரத்த அணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

MOST READ: சித்தர்கள் அதிகம் பயன்படுத்திய மூலிகைகள் என்னென்ன தெரியுமா..?

உணவுகள் என்னென்ன..?

உணவுகள் என்னென்ன..?

வெள்ளை அணுக்களை உயர்த்த வைட்டமின் சி, ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் நிறைந்த மேற்சொன்ன மூலிகைகளை தவிர சில முக்கிய உணவுகளையும் சாப்பிட்டு வாருங்கள். குறிப்பாக முளைக்கீரை, கேரட், யோகர்ட், ப்ரோக்கோலி, ஒமேகா 3 அதிகம் நிறைந்த உணவுகள் போன்றவற்றை சாப்பிட்டு வந்தால் எளிதாக வெள்ளை ரத்த அணுக்களை அதிகரித்து நோய்கள் இன்றி நீண்ட ஆயுளுடன் வாழலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Herbs To Increase White Blood Cells

Here we listed some herbs to increase white blood cells.
Desktop Bottom Promotion